இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களின் முக்கியத்துவம் மிகவும் அதிகரித்துவிட்டது. சமூக ஊடகங்களின் பயன்பாடு இல்லாத வாழ்க்கை 20 வயதுக்கு குறைந்தவர்களுக்கு தெரியுமா என்ற கேள்விக்கு தெரியாது என்பதே பதிலாக இருக்கும்.
இந்த நிலையில், தற்போது வரை இலவசமாக இருந்த சேவைகள், கொஞ்சம் கொஞ்சமாக கட்டண முறைக்கு மாற்றப்படுகின்றன. கூகுளில் புகைப்படங்கள் சேமித்து வைக்கும் வசதியை உதாரணமாகச் சொல்லலாம்.
அதேபோல், ட்விட்டர் அதன் கட்டண சந்தா மாதிரியை எதிர்வரும் மாதங்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிவிட்டர் நிறுவனம் இப்போது ஒரு வருடமாக "ட்விட்டர் ப்ளூ" என்று பரவலாக அறியப்படும் நவீன மாடலில் பணியாற்றி வருகிறது, அது கட்டண சேவையாக இருக்கும்.
டிவிடர் ப்ளூவில் " Bookmarks Collections" என்ற சிறப்பம்சம் இருக்கும். இதன் மூலம் பயனர்கள் வெவ்வேறு இடங்களில் புக்மார்க் செய்ய முடியும் - இது ஒரு வகையான கோப்புறை அடிப்படையிலான சேமிப்பு மாதிரி (folder-based storage model) ஆகும்.
நிறுவனம் தனது கட்டண வாடிக்கையாளர்களுக்கு "ட்வீட்களை நீக்குவதற்கான" வாய்ப்பை வழங்க உள்ளது. அடிப்படையில், இது பயனர்கள் பிழைகள் அல்லது முரண்பாடுகளைக் கொண்ட ஒரு ட்வீட்டை விரைவாக நீக்க அனுமதிக்கும். இந்த தெரிவு, ட்வீட்டை இடுகையிட்ட உடனே சிறிது நேரம் வரையில் இருக்கும். இது தனிப்பயனாக்கக்கூடிய அம்சமாக இருக்கும்,
கூடுதலாக, அசல் ட்வீட், பயனர் பதில்கள், மேற்கோள் மறு ட்வீட் (original tweets, user replies, quote retweets) போன்ற அனைத்து விருப்பங்களும் எங்கு பயன்படுத்தப்படலாம் என்பதை பயனர்கள் தீர்மானிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
ட்விட்டர் சந்தா, அடுக்கு அடிப்படையில் (tier-based) இருக்கும், பயனர்கள் அவர்கள் செலுத்தும் கட்டணத்தின் அடிப்படையில் அம்சங்களை பெற முடியும்.
இந்த சேவை எப்போது தொடங்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, இன்னும் சோதனை கட்டத்தில் உள்ளது. கட்டண செயல்பாடு விளம்பரங்களை முற்றிலுமாக அகற்றுமா என்பதும் தெரியவில்லை.













