வெளிநாட்டு கம்பெனிகளுக்கு போட்டியாக உள்ளுர் வியாபாரிகளுடன் கைகோர்க்கும் அம்பானி!

SOCIAL SHARE
Pin It


ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி. 

ஆமாம் கடந்த மாதம் கொரோனா நோய் தாக்குதலால் உலக மக்கள் வீடுகளுக்குள் முடங்கியதால் உலக பொருளாதாரம்

வரலாறு காணாத பெரும் சரிவை சந்தித்து அதில் பெரும் பணக்காரர்கள் பலரின் சொத்து மதிப்பு குறைந்தது. 

அதில் முகேஷ் அம்பானியும் ஒருவர். 

இதற்கு காரணம் பெட்ரோல் டீசல் உள்ளிட்ட கச்சா எண்ணெய் பொருட்களின் தேவை குறைந்து போனதே, இதனால் ரிலையன்ஸ் பெட்ரோலியம் பங்கு மதிப்பு குறைந்து போனது. அதனால் சைனாவின் அலிபாபா குழுமத்தின் நிறுவனர் ஜாக் மா அம்பானியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார். 

இந்த சூழலில்தான் பேஸ்புக் நிறுவனத்தின் மார்க் ஜூகர்பெர்க் இந்த சந்தப்பத்தை பயன்படுத்தி அமபானியின் ஜியோ நிறுவனத்தில் 10 சதவிகித பங்குகளை 5,7 பில்லியன் டாலருக்கு அதாவது சுமார் 44,000 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார். 

இதன் மூலம் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 49.2 பில்லியன் டாலராக அதாவது 3,92,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் அம்பானி அலிபாபாவின் ஜாக் மாவை பின்னுக்கு தள்ளிவிட்டு மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். 

இது மட்டுமல்லாமல் பேஸ்புக்கின் இந்த முதலீட்டால் ஜியோ நிறுவன பங்குகளின் மதிப்பு 10 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

இந்த முதலிடு மூலம் வருங்காலத்தில் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு பேஸ்புக் பயன்படுத்த கட்டணமில்லாமல் இன்டர்நெட் சேவை வழங்க வாயப்புள்ளது. இதன் மூலம் இந்தியாவில் பேஸ்புக்கின் பயன்பாட்டை மறைமுகமாக அதிகப்படுத்தி அதன் மூலம் பேஸ்புக்கில் விளம்பரம் மற்றும் டேட்டா ‘ஹார்வெஸ்டிங் எனும் தகவல் திருட்டு போன்றவை மூலம் பெரும் வருவாய் ஈட்ட பேஸ்புக் திட்டமிடக்கூடும். 

இது மட்டுமல்லாமல் பேஸ்புக்கை ஜியோ நிறுவனம் கட்டணமில்லாமல் கொடுத்தால் பேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இதனால் அதிகரிக்கக் கூடும். ஆகவே நெட் நியூட்ராலிட்டி இல்லாமல் போய்விடும். 

அதாவது இன்டர்நெட்டில் மட்டும் தான் பெரும் நிறுவனங்களின் ஆதிக்கம் குறைவு. யார் வேண்டுமானாலும் வலைத்தளமோ அல்லது வேறு வேறு செயலியோ உருவாக்கலாம். அல்லது யுடியூப் போன்றவற்றில் சேனல்கள் ஆரம்பித்து அவரெவர்க்கென்று ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் இருப்பார்கள். 

இதன் மூலம் அனைவரது கருத்தும் பாரபட்சமின்றி  வெளிப்படும். தற்போது பேஸ்புக் ஜியோ ஓப்பனானாதல் தொலைக்காட்சி சேனல்களில் இருப்பது போன்று மோனோபோலிசேஷன் வர வாய்ப்புள்ளது. 

பேஸ்புக்கை பின்பற்றி அமேஷான், கூகுள் போன்ற நிறுவனங்களும் இதை போன்ற இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களில் முதலீடுகளை செய்தால் நெட் நியூட்ராலிட்டிக்கு பாதிப்பு வர வாய்ப்புள்ளது.

அமேசான் மற்றும் பிளிப்கார்ட்க்கு போட்டியாக ஜியோவும் மளிகை பொருட்களை டெலிவரி செய்யும் வியாபாரத்தை ஆரம்பித்துள்ளது. 

இதனிடையே ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் வாட்ஸப் மூலம் வீட்டிற்குத் தேவையான மளிகை சாமான்களை ஆர்டர் செய்து உங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து டெலிவரி செய்யும் வியாபாரத்தை ஜியோ மார்ட் என்கிற பெயரில் ஆரம்பித்துள்ளது ஜியோ நிறுவனம்.

88 50 00 80 00 என்ற இந்த எண்ணை உங்கள் ஸ்மார்ட்போனில் சேமித்து வைத்துக் கொண்டு வாட்ஸப்பில் hi என்ற மெசேஜ் கொடுத்தவுடன் நீங்கள் ஆர்டர் செய்வதற்கு உண்டான லிங்க் அனுப்பப்படும்.

அந்த லிங்க்கை பயன்படுத்தி நீங்கள் உங்கள் வீட்டிற்குத் தேவையான பொருட்களை ஆர்டர் செய்து கொள்ளலாம்.

தற்பொழுது இந்த சேவை நேவி மும்பை, தானே மற்றும் கல்யாண் பகுதிகளுக்கு மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. அதிவிரைவில் இந்தியா முழுக்க இந்த சேவை கிடைக்கும். 

jiomart lite's வெப்சைட்டில் உங்கள் தகவல்களை தற்பொழுதே ரிஜிஸ்டர் செய்து கொள்வதன் மூலம் ரூ. 3000 வரை சேமிக்கும் ஆஃபரையும் அளித்துள்ளது ஜியோ.

 

ARUNACHALAM