Editor's Choice

உருமாறிய கொரோனா வைரஸ், 'சூப்பர் செல்' வாயிலாக உடலின் நோய் எதிர்ப்பு, 'செல்'களை ஏமாற்றி, பாதிப்பை தீவிரப்படுத்துவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பிரிட்டன், பிர்மிங்ஹாம் பல்கலையில், வைரஸ் ஆய்வு துறை மூத்த பேராசிரியராக பணியாற்றி வரும் சனியா ஸ்டமடாக்கி, நம் உடலில் ஊடுருவும் வைரஸ் அணுக்கள், செல்களில் நுழைந்து, ஒரு தொழிற்சாலை போல, பல் மடங்கு பல்கி பெருகும். அதன்பின், செல்களை பிளந்து வெளியேறி, இதர செல்களுடன் இணைந்து, மீண்டும் பெருக்கத்தில் ஈடுபடும்.

இதனால் நோய் பாதிப்பு தீவிரமாகிறது. இதை சமாளிக்க, கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு தடுப்பூசி, வீரிய மருந்துகள் ஆகியவை வாயிலாக உடலில், நோய் எதிர்ப்பு திறன் செல்கள் உருவாக்கப் படுகின்றன. வலிமையான இந்த செல்கள், வைரஸ் செல்களுடன் இணைந்து, உடலில் புதிய வைரஸ் நுழைவதை தடுக்கின்றன. ஆனால், உருமாறிய கொரோனா வைரசுக்கு, நோய் எதிர்ப்பு திறன் அணுக்களையும் ஏமாற்றும் வலிமை உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடல் செல்களில் புகும் கொரோனா வைரஸ் அணுக்கள், பல்கி பெருகி, பிளக்காமல், பிற செல்களுடன் இணைந்து, 'சின்சிடியா' என்ற, 'சூப்பர் செல்' ஆக மாறுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. 'பேட்டா' வைரஸ்இது போன்ற சூப்பர் செல் தொழிற்சாலைகள், நோய் எதிர்ப்பு திறன் செல்களை ஏமாற்றி, வைரஸ்களை வேகமாக உற்பத்தி செய்கின்றன. ஆப்ரிக்க சுகாதார ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த அலெக்ஸ் சிகல் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து ஆய்வு செய்தது.

அதில் பிரிட்டனில் தோன்றிய, 'ஆல்பா' வைரஸ், உடலின் நோய் எதிர்ப்பு திறன் செல்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதும், ஆப்ரிக்காவில் உருவான, 'பேட்டா' வைரசில் தாக்கம் குறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது. அதனால், உடலில் புகுந்து, பிற செல்களுடன் பெருகும் வைரசை முழுக்க ஒழிப்பது கடினமான காரியம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதன் மற்றும் விலங்குகளுடன் வைரஸ்கள் வாழ்ந்து வருகின்றன.

அந்த அனுபவத்தில், அவை, உடலின் நோய் எதிர்ப்பு திறன் செல்களால் அடையாளம் காண முடியாதபடி, பலவிதமான தந்திரங்களை கையாளுகின்றன.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Editor's Choice

அதிகநேரம் பணியில் ஈடுபடுவதால் வருடத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இந்த எண்ணிக்கை கொரோனா ஊரடங்கில் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் எச்சரித்துள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் அதிகநேரம் பணியில் ஈடுபட்டதால் கடந்த 2016 ஆம் ஆண்டு இருதய மற்றும் பக்கவாத நோய்களால் பாதிக்கப்பட்ட 7,45,000 மக்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2000 ஆம் ஆண்டில் இருந்து 30 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் ஆரோக்கிய துறையின் இயக்குநர் மரியா நீரா கூறும்போது, “ வாரத்தில் 55 மணி நேரத்திற்கு அதிகமாக பணி செய்வது கடுமையான ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தும்” என்றார். மேலும் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளின் படி அதிகமாக பணி செய்வதால் உயிரிழந்ததில் 72 சதவீதம் பேர் நடுத்தர வயது மற்றும் அதற்கும் கீழானாவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இதில் சீனா, ஜப்பான் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. 194 நாடுகளில் உள்ள தகவல்களை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், வாரத்திற்கு 35 முதல் 40 மணி நேரம் உழைக்கும் மக்களோடு வாரத்திற்கு 55 மணி நேரம் உழைக்கும் மக்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, 55 மணி நேரம் உழைக்கும் மக்களுக்கு 35 சதவீதம் பக்கவாதம் வர வாய்ப்பிருப்பதாகவும் 17 சதவீதம் இருதய பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு 2000 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் நடத்தப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் அதிகமான நபர்கள் வீட்டிலிருந்து பணி செய்யும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அது சம்பந்தமாக தகவல் அளித்துள்ள உலக சுகாதார அமைப்பு 9 சதவீத மக்கள் அதிக மணி நேரம் உழைக்கிறார்கள் என்பதை தெரியப்படுத்தியுள்ளது.

Editor's Choice

சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்தது. இது பல்வேறு விதமாக உருமாறி 2வது, 3வது அலையாக சில நாடுகளில் வீரியமாகவும் பரவி வருகிறது. இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய வகை கொரோனா வைரஸ்களை காடுகளில் இருந்து சேகரித்துள்ளதாக அறிவித்துள்ளனர். வவ்வால்கள் மத்தியில் எத்தனை கொரோனா வகைகள் உள்ளன என்பது குறித்தும் அதில் எத்தனை வகைகள் மனிதர்களுக்குப் பரவும் அபாயம் உள்ளது என்பது குறித்தும் கண்டறிய இது உதவும் எனச் சீன ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜெர்னல் செல் இதழில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரையில், ‛வவ்வால்களில் இருந்து மொத்தம் 24 கொரோனா வைரஸ்களை நாங்கள் சேகரித்துள்ளோம். அதில் நான்கு கொரோனா வகைகள் தற்போது பரவும் கோவிட்-19 வைரசுக்கு ஒத்து இருந்தது,' என அதில் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2019 மே மாதம் முதல் 2020 நவம்பர் மாதம் வரை சீனாவின் சிறிய காடுகளில் வசிக்கும் வவ்வால்களிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. வவ்வால்களின் கழிவு மற்றும் வாயிலிருந்து எடுக்கப்பட்ட எச்சில்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

Editor's Choice

இன்றைய காலங்களில் தூக்கம் என்பது மனித உடலின் அடிப்படைத்தேவை என்பதையே மக்கள் மறந்து விட்டனர். அதன் விளைவுதான் இன்று இளைஞர்களிடையே நிலவும் மன சார்ந்தப் பிரச்னைகள். நாட்கணக்கில் இரவு நேரத் தூக்கத்தை தவிர்த்து வரும் மக்கள் ஒரு கட்டத்தில் நிம்மதியாக தூங்க வேண்டும் என்று நினைத்தாலும் அவர்களால் தூங்கமுடிவதில்லை. ஊரடங்கில் இந்தப் பிரச்னைகள் தனது அடுத்தக்கட்டப் பாய்ச்சலை நோக்கிச் சென்றிருக்கிறது.  

ஒருவருக்கு தூக்கமானது கெடும்போது, மீதமுள்ள அனைத்துப் பிரச்னைகளும் தானாக வந்து ஒட்டிக்கொள்ளும் அபாயம் அதிகம்.

சித்த மருத்துவமுறைப் படி பார்த்தோம் என்றால் தூக்கமானது கனவும் நனவும் இன்றி இருக்க வேண்டும். அதாவது மனதளவில் எந்தச் சஞ்சலமும் இன்றி இருக்க வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே அதனை நாம் நல்லத் தூக்கம் என்று அழைப்போம்.

1. சரியான நேரத்திற்கு தூக்கம் வராமை.

2. சிறிய சத்தம் கேட்டால் கூட எழுந்து விடுவது. அதன் பின்னர் தூக்கமின்றி அவதிப்படுவது.

3. கழிவுகளை வெளியேற்ற வரும் நபர்கள், அதன் பின்னர் தூக்கமின்றி அவதிப்படுவது.

4. கனவுகள் மூலமாக தூக்கமின்றி அவதிப்படுவது.

இந்தப் பிரச்னையை உணவின் மூலமாக அணுகும் முறைகள்

1. தூக்கமின்மைப் பிரச்னையால் அவதிப்படும் நபர்கள், தங்களது உணவை நான்கு அல்லது ஐந்து வேளையாக பிரித்துக் கொள்ள வேண்டும்.

2. அவர்கள் உண்ணும் உணவானது அதிக குளிர்ச்சியாகவோ அல்லது சூடாகவோ இருத்தல் கூடாது. மிதமான பதத்தில் இருக்க வேண்டும்.

3. இனிப்பு, புளிப்பு சுவைகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

4. துவர்ப்பு, காரம், கசப்புச் சுவைகளை குறைவாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

5. ஒரே நேரத்தில் வெவ்வேறு உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும்.

6. இரவு நேரத்தில் உறங்கச் செல்வதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னர், இரவு சாப்பாட்டை முடித்துக் கொள்ள வேண்டும்.

கை வைத்திய முறைகள்:

1. உணவிற்குப் பின் சிறிதளவு ஜாதிக்காய்ப் பொடியை வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.

2. ஜாதிக்காய்ப் பொடியை தேனில் குழைத்தும் சாப்பிடலாம்.

3. கசகசாவையும், பாதாமையும் ( 4 அல்லது 5) நீரில் ஊற வைத்து இரவு உணவுக்குப்பின் சாப்பிடலாம். பாதாமை உபயோகப்படுத்தும் போது, அதன் தோலை நீக்கி விட்டு பயன்படுத்த வேண்டும். இதனை பொடி போல் அரைத்தும் பயன்படுத்தலாம்.

4. அசைவ உணவுகளைப் உண்ணும் போதும், கசகசாவை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கீழ்கண்ட வழிமுறைகளைப் பயன்படுத்தலாம்

 1. மலச்சிக்கல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் - கடுக்காய்ப் பொடி அல்லது திரிபலா பொடியை இரவு உணவுக்குப் பின்னர் கால் டீஸ் பூன் அளவு எடுத்துக்கொண்டு அதனை ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.

2. நீரேற்றப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் - வசம்புபொடியை கால் டீஸ்பூன் தேனுடன் கலந்து குடிக்கலாம்.

3. மூட்டு, கை,கால் வலிப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் - நல்லெண்ணெய் மற்றும் கற்பூரத்தை சூடுபடுத்தி, உடலின் இணைப்புகளில் தேய்த்து கொள்ளலாம் .

Editor's Choice

கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் தேவையா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டி இருக்கலாம். இந்த தகவலை அளித்த, உலக சுகாதார நிறுவனம் (WHO) உலகம் முழுவதும் இது பற்றிய ஆராய்ச்சி நடந்து வருவதாகக் கூறியது. இந்த ஆராய்ச்சிகள் முடிவடைய சுமார் 1 வருடம் ஆகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, தடுப்பூசியின் செயல்திறன் 6 மாதங்களுக்கு நீடிக்கும். இந்த தடுப்பூசி பல ஆண்டுகளுக்கு நம் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். ஆனால் இது குறித்து இன்னும் கூடுதலான ஆராய்ச்சி தேவைப்படுகிறது. 

தடுப்பூசி வைரஸிலிருந்து 100% பாதுகாப்பை வழங்க முடியாது என்பதையும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே. பால் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், 'பூஸ்டர் டோஸ் குறித்த ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது. பூஸ்டர் டோஸ் தேவைப்படும் என்றால், அதைப் பற்றி மக்களுக்கு அறிவிக்கப்படும்' என்று கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் ஷாட் தேவைப்படக்கூடும் என்று அமெரிக்க தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் அந்தோனி ஃபவுசி கூறியபிறகு இந்த விவாதம் தொடங்கியது. ஃபவுசி, 'தடுப்பூசியிலிருந்து நமக்கு எல்லையற்ற காலத்திற்கு பாதுகாப்பு கிடைக்கலாம் என எனக்குத் தோன்றவில்லை. அப்படி நடக்காது. ஆகையால் நமக்கு பூஸ்டர் ஷாட் தேவைப்படும் என்று நான் நினைக்ககிறேன். தடுப்பூசி போட்ட பிறகு எத்தனை காலம் கழித்து பூஸ்டர் ஷாட் அளிகப்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம்" என்று கூறினார். 
பாரத் பயோடெக் பூஸ்டர் டோஸின் சோதனையைத் தொடங்கியது.

இந்த நாட்களில் கொரோனா தொற்றின் பல வித மாறுபாடுகள் வந்துகொண்டு இருக்கின்றன. இவை வேகமாக பரவி வருகின்றன. இந்த நிலையில் பழைய டோஸ்களால் உருவாகும் ஆண்டிபாடிக்கள் வேலை செய்யாமல் போகும் நிலை ஏற்படலாம். அந்த வேளையில் பிறழ்ந்த வைரஸை கட்டுப்படுத்த ஒரு பூஸ்டர் டோஸ் தேவைப்படுகிறது.

இதன் காரணமாக, கோவாசினின் மூன்றாவது பூஸ்டர் டோஸ் மீதான பரிசோதனையை பாரத் பயோடெக் செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளது. இந்த சோதனையில், ஒரு பூஸ்டர் டோஸ் கொண்டு பல ஆண்டுகளுக்கு நீட்டித்த நோயெதிர்ப்பை உருவாக்க முடியுமா என்று சோதிக்கப்படும்.

Editor's Choice

கோவாக்சின் இந்தியாவின் முதல் சொந்த கோவிட் தடுப்பூசியாகும். ஐதராபாத்தின் பாரத் பயோடெக் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்சி கவுன்சில் இணைந்து இத்தடுப்பூசியை உருவாக்கியது. இத்தடுப்பூசியை அமெரிக்காவில் பயன்படுத்த அந்நாட்டின் ஆக்குஜென் என்ற நிறுவனம் பாரத் பயோடெக்குடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. அவர்கள் எப்.டி.ஏ., எனப்படும் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிறுவனத்திடம், அவசரகால பயன்பாட்டிற்கு கோவாக்சினை அனுமதிக்கக் கோரி விண்ணப்பித்திருந்தனர். அந்த விண்ணப்பத்தை எப்.டி.ஏ., நிராகரித்துவிட்டது. கூடுதல் தகவல்கள் மற்றும் டேட்டாக்களுடன் முழு ஒப்புதலுக்கு விண்ணப்பிக்கும் படி கேட்டுள்ளனர்.

“உயிரியல் உரிம விண்ணப்பம் எனப்படும் முழு ஒப்புதலுக்கு விண்ணப்பிக்க எப்.டி.ஏ., பரிந்துரைத்துள்ளது. இதனால் கூடுதல் பரிசோதனைகளை நடத்தி விண்ணப்பிப்போம். கோவாக்சினை அமெரிக்காவிற்கு கொண்டு வருவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.”  என ஆக்குஜென் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆக்குஜென் நிறுவனம் கனடாவில் கோவாக்சினை விற்பனை செய்வதற்கான பிரத்யேக உரிமைகளையும் பாரத் பயோடெக்கிடம் பெற்றுள்ளது. கனடா சுகாதாரத் துறையிடமும் ஒப்புதல் பெற பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. ஒப்புதலுக்கான விண்ணப்பத்தில், வணிக ரீதியாக கோவாக்சின் பயன்பாட்டுக்கு வந்த ஒரு மாதத்தில், பாரத் பயோடெக்கிற்கு 73 கோடி ரூபாய் செலுத்த ஒப்புக்கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

பக்கம் 1 / 49