Editor's Choice

காராமணி அல்லது பயத்தங்காய் காய்கறி மிகச்சிறந்த உணவு.

வயிறு, கணையம் மற்றும் மண்ணீரல் தொடர்பான பிரச்னைகளைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. மேலும் சீரான குடல் இயக்கத்துக்கு உதவி, சிறுநீர் பாதை அடைப்பை சரிசெய்து, சிறுநீர் நோய்களையும் சரியாக்குகிறது.

காராமணியில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ், இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.

பயத்தங்காயில் உள்ள லிக்னின் என்னும் பொருள் சில வகையான புற்றுநோய், பக்கவாதம், ஹைப்பர் டென்ஷன் மற்றும் ஆஸ்டியோபொரோசிஸ் உள்ளிட்ட நோய்களில் இருந்து காக்கிறது.

கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து பயத்தங்காயில் அதிகமுள்ளது. இதை சாப்பிடுபவர்களுக்கு கூந்தல் சீக்கிரமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும்.

வயிற்றுப்புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் உண்டு.

வளரும் குழந்தைகளுக்கு மிகவு உகந்தது.

உணவைக் குறைத்து சக்தியையும் இழக்காமல் உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் காராமணியை காலை மற்றும் மதியம் எடுத்துகொள்ள வேண்டும்.

ஏனெனில் 1/2 கப் அளவு காரமணியில் 1 கிராம் கொழுப்பு உள்ளது.

காராமணியில் உள்ள துத்தநாக உப்பு, லெப்டின் என்ற இயக்குநீரை தாராளமாகச் சுரக்க வைக்கும். இந்த இயக்குநீர் இரத்தத்தில் நிறைய இருக்கும்போது மூளைக்கு `சாப்பிட்டது போதும்’ என்ற சமிக்ஞையைத் தந்துவிடும்.

இதில் நிறைந்துள்ள விட்டமின் கே, மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கும். குறிப்பாக இது எலும்புகளை வலுவோடு வைப்பதற்கு பெரிதும் உதவியாக உள்ளது.

lavonoids நிறைந்துள்ளதால் இதயம் சம்பந்தமான நோய்களை குணமாக்கும்.

பக்கவாதம்(stroke), உயர் இரத்த அழுத்தம்(hypertension), ஆஸ்டியோபோரோசிஸ்( osteoporosis) போன்ற நோய்களுக்கு தீர்வு அளிக்கும்.

முகச்சுருங்களை போக்கி தோல்களை மென்மையாக வைத்திருக்க உதவும், மேலும் முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.

நார்ச்சத்து இருப்பதால், இது இருதய நோய் ஏற்படுவதை தடுக்கும். மேலும் இதில் பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஜிங்க் நிறைந்துள்ளது.


 

Editor's Choice

மனிதர்களை பாதித்து வரும் கொரோனா தொற்று வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் பரவுவதை தடுக்கும் வகையில், ரஷ்யாவில் செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கி உள்ளது.

உலக நாடுகளை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மிரட்டி வரும் கொரோனா தொற்றுக்கு, உலக ஆராய்ச்சியாளர்கள் தடுப்பு மருந்தினை கண்டறிந்துள்ளனர். இதனை தற்போது பொதுமக்களுக்கு செலுத்தும் பணியில் அந்தந்த நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. மனிதர்களிடையே பரவி வந்த கொரோனா தொற்று, விலங்குகளுக்கும் பரவியது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் விலங்குகளுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதேநேரத்தில், விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவியதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை.

ரஷ்யாவில் தங்களுடைய செல்லப் பிராணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள மக்கள் ஆர்வமுடன் உள்ளனர். இதனை முன்னிட்டு ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷ்யாவின் கால்நடை கண்காணிப்புக் குழு, மார்ச் மாதத்தில், விலங்குகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், அவைகளுக்கும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளது. 
Editor's Choice

இஞ்சி சாப்பிடுவது மனிதர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இருப்பினும், இதை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும், 

இஞ்சியின் வேதியியல் கலவை மிகவும் தனித்துவமானது, இது எந்த ஊட்டச்சத்து நிபுணரையும் ஆச்சரியப்படுத்தும். இந்த வேரின் கலவையில் முக்கியமான காரணிகளில் ஒன்று, இது முற்றிலும் கொழுப்பு இல்லாதது.

  • புரதங்கள் - 0.75 கிராம்;
  • கொழுப்புகள் - 1.8 கிராம்;
  • கார்போஹைட்ரேட்டுகள் - 17.8 கிராம்

வேரில் இஞ்சி கொண்டிருக்கும் ஒரே மூலிகை தயாரிப்பு இஞ்சி மட்டுமே. இஞ்செரோல் என்ற வேதியியல் கலவை கலாச்சாரத்திற்கு ஒரு தனித்துவமான சுவையையும் வாசனையையும் தருகிறது.

  • எதிர்ப்பு அழற்சி
  • மயக்க மருந்து
  • வலி நிவாரணி
  • ஆண்டிடியாபெடிக்
  • மூளையின் செயல்திறனை மேம்படுத்துகிறது
  • உடலின் ஆற்றல் செயல்திறனை உறுதிப்படுத்துகிறது
  • கொழுப்பை எரிக்கிறது

கொழுப்பு-கரையக்கூடிய கூறுகள் - ஈ, கே; நீரில் கரையக்கூடியது - சி, பி 1 - பி 6, பி 9.

எந்தவொரு இஞ்சி வேரையும் அடிக்கடி உட்கொள்வது ஒரு நபரின் எதிர்வினை மற்றும் எண்களை துல்லியமாக கணக்கிடும் திறனை அதிகரிக்கிறது.

வெறும் வயிற்றில் இஞ்சி சாப்பிட முடியுமா?

வேரில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள் பல நோய்களைத் தடுக்கவும் குணப்படுத்தவும் உதவுகின்றன, அவற்றில் வயிறு மற்றும் கணையப் பிரச்சினைகள், சளி, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகின்றன.

எனினும் வெறும் வயிற்றில் இதை சாப்பிடுவது ஆரோக்கியமான நபருக்கு கூட பரிந்துரைக்கப்படவில்லை... இஞ்சி ஒரு கசப்பான கசப்பான சுவை தருகிறது என்பதைத் தவிர, கணைய சுரப்பிலும் அதிகரிப்பு உள்ளது. இரைப்பைக் குழாயின் கடுமையான எரிச்சல் இதற்குக் காரணம்.

எடை இழப்புக்கு, நீங்கள் காலையிலும் வெற்று வயிற்றிலும் ஒரு காபி தண்ணீர் அல்லது இஞ்சி தேநீர் குடிக்க வேண்டும், ஆனால் இதை நீங்கள் எச்சரிக்கையுடன் நடத்த வேண்டும்.

  • ஒரு நபருக்கு அதிக உடல் வெப்பநிலை இருந்தால்;
  • உயர் இரத்த அழுத்தத்தில் பிரச்சினைகள் உள்ளன;
  • வயிற்றுப் புண் வெளிப்பட்டது;
  • எந்த வடிவத்திலும் இரத்தப்போக்கு காணப்படுகிறது;
  • கல்லீரல் அல்லது பித்தப்பை நோய் உள்ளது.
  • இஞ்சி தேநீர்

    இந்த தனித்துவமான பானம் அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றால் வளப்படுத்தப்படுகிறது. இது உடல் கொழுப்பை எரிக்கும் செயல்பாட்டில் ஒரு சக்திவாய்ந்த முகவர். அத்தகைய தேநீர் காய்ச்சுவதற்கு, ஒரு சிறிய உலர்ந்த மசாலாவை ஒரு குவளையில் ஊற்றினால் போதும். அளவு உங்கள் சுவைக்கு மட்டுமே. தேயிலை எலுமிச்சை மற்றும் தேனைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது, இந்த பொருட்களிலிருந்து ஜாம் முன்கூட்டியே தயாரிக்கப்படுகிறது.

  • கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் போது;
  • தூக்கமின்மையால் பாதிக்கப்பட்ட மக்கள்;
  • ஒவ்வாமை பாதிக்கப்பட்டவர்கள்;
  • மூல நோய் கண்டறியும் போது;
  • இதய இஸ்கெமியா முன்னிலையில்;
  • வயிற்று நோய்களுடன்;
  • 3 வயது வரை குழந்தைகள் இஞ்சியை பயன்படுத்தக்கூடாது
Editor's Choice

வானிலை மாறும்போது, சருமம் வறண்டு போவதால், சிலருக்கு உள்ளங்கை அரிப்பு ஏற்படலாம். அதிக வியர்வை, பூஞ்சை அல்லது கிருமித் தொற்றுகளால் அரிப்பு ஏற்படலாம். சிலருக்கு, பயன்படுத்தும் சோப், டிடர்ஜென்ட்களில் உள்ள கெமிக்கல்கள்கூட அலர்ஜியை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. சோப்பை மாற்றினால், அரிப்பில் இருந்து விடுதலை கிடைக்கும்.

சிலருக்கு சிலவகை உணவுகள் உடலில் அலர்ஜியை ஏற்படுத்திவிடும். இவர்கள், அரிப்பை ஏற்படுத்தும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோய் இருந்தாலும் அரிதாகச் சிலருக்கு உள்ளங்கை அரிக்கக்கூடும். அரிப்பு தொடர்ந்து இருந்தால், சொறி, சிரங்கு, சொரியாசிஸ் போன்ற நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்.

தோல் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.

அடுத்தவர் பயன்படுத்தும் சோப்பு, துண்டைப் பயன்படுத்தக் கூடாது. வெளியில் சென்றுவிட்டு வந்தாலும், எதையேனும் தொட்டாலும், உடனடியாகக் கை, கால்களை சுத்தமாகக் கழுவுவது நல்லது.

யாருக்காவது சொறி, சிரங்கு பிரச்னை இருந்தால்கூட, கை குலுக்கும்போது, தொற்றுகள், கிருமிகள் பரவ வாய்ப்பு இருக்கிறது என்பதால், கைகுலுக்கிப் பேசுவதைத் தவிர்க்கலாம். எப்போதும் சருமத்தைச் சுகாதாரமாக வைத்திருப்பதன் மூலம், இதுபோன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கலாம். 

இதனிடையே உள்ளங்கை அரித்தால் பணம் கிடைக்கும் என்ற மூட நம்பிக்கை பலரிடம் உள்ளது. வலது உள்ளங்கை அரிக்கும் போது மக்கள் அதனை நல்ல செய்தி என்று நம்புவார்கள். வலது உள்ளங்கை அரிக்கும் போது அது ஒருவரின் மகிழ்ச்சி மற்றும் எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது. இதன் காரணம் உங்களை தேடி பணம் வரப்போகிறது என்பதன் அறிகுறி இதுவென கூறப்படுவதுதான். திடீரென உங்கள் கைக்கு பணம் வரும், லாட்டரியில் பணம் விழலாம், கீழே கிடக்கும் பணம் உங்கள் கண்களில் தட்டுப்படலாம், அல்லது வேறு பல வழிகளில் உங்களை பணம் தேடி வரும் என்று கூறப்படுகிறது.

இடது கை  அரிப்பது லட்சுமி தேவி உங்களை விட்டு செல்ல போகிறார் என்பதன் அறிகுறி என்று கூறப்படுகிறது. இது திடீரென ஏற்படப்போகும் நஷ்டம், பணம் திருடுபோதல், எதிர்பாராத பெரிய செலவு என எதனுடைய அறிகுறியாகவும் இருக்கலாம்.

Editor's Choice

கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை என மக்களை அச்சுறுத்தும் பூஞ்சைகளுக்கு நடுவில் நல்லது செய்யும் பூஞ்சைகளும் இருக்கத்தான் செய்கின்றன. கம்பளிப்பூஞ்சை உலகின் மிக விலையுயர்ந்த பூஞ்சை என கூறப்படுகிறது.

மலைகளில் காணப்படும் இந்த பூஞ்சையின் பெயர் கம்பளிப்பூச்சி பூஞ்சை (Caterpillar Fungus), 1 கிலோ கம்பளிப்பூச்சி பூஞ்சையின் விலை சுமார் 20-30 லட்சம் ஆகும். இந்தியாவில், இது முழு பூஞ்சை, யர்ஷகும்பா அல்லது இமயமலை வியக்ரா என்று அழைக்கப்படுகிறது.  

ஒரு குறிப்பிட்ட பூச்சி வகையைக் கொன்று அதன் மேல் வளர்கிறது. இதன் அறிவியல் பெயர் கார்டிசெப்ஸ் சினென்சிஸ் ஆகும். இந்த பூஞ்சைக்கு வெளிநாடுகளில் அதிக டிமாண்ட் உள்ளது. இது இந்தியாவைத் தவிர நேபாளத்திலும் சீனாவிலும் காணப்படுகிறது.

இந்த பூஞ்சை நேபாளம் மற்றும் சீனாவின் பல பகுதிகளில், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளது. இந்த பூஞ்சை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதால்  ரகசியமாக விற்கப்படுகிறது.  

சீனாவில், இந்த பூஞ்சை ஒரு பாலியல் தூண்டுதல் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இது தவிர, விளையாட்டு வீரர்கள் இதை ஸ்டீராய்டாக பயன்படுத்துகின்றனர். மக்கள் இதை தேநீர் மற்றும் சூப்பிலும் பயன்படுத்துகிறார்கள்.  

இந்த பூஞ்சை கிடைப்பது வேகமாக குறைந்து வருகிறது. இந்த வகை பூஞ்சைகள் கிடைப்பது சுமார் 30 சதவீதம் குறைந்த பிறகு, சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பு (IUCN) அதை 'சிவப்பு பட்டியலில்' சேர்த்துள்ளது.  

Editor's Choice
 நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு குணம் பெறலாம். இதோ உங்களுக்கான வீட்டு மருத்துவம் படித்து பயன்பெறுங்கள்.

1. நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.

சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

6. வாயு தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

7. வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

8. சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

9. மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

10. கண் எரிச்சல், உடல் சூடு

வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

11. வயிற்றுக் கடுப்பு

வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

12. பற் கூச்சம்

புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

13. வாய்ப் புண்

வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

14. தலைவலி

பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

15. வயிற்றுப் பொருமல்

வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

16. அஜீரணம்

ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.

ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

17. இடுப்புவலி

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

18. வியர்வை நாற்றம்

படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

19. உடம்புவலி

சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

20. ஆறாத புண்

விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

21. கண் நோய்கள்

பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

22. மலச்சிக்கல்

தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம்.

அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

23. கபம்

வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

24. நினைவாற்றல்

வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

25. சீதபேதி

சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

பக்கம் 6 / 49