Editor's Choice

சிலர் தினமும் மதியம் உணவு உட்கொள்ளும் போது, தயிரை   சாதத்துடன் சேர்த்து சாப்பிடாமல், தனியாக ஒரு பௌலில் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவார்கள். இது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. ஏனெனில் தயிரில் லாக்டிக் அமிலம் அதிகம் இருப்பதோடு, நல்ல பாக்டீரியாவான புரோபயோடிக்குகளும் ஏராளமாக நிறைந்துள்ளது.

* தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிடும் போது, உடலின் ஆற்றல் உடனடியாக அதிகரிக்கப்படும். குறிப்பாக கோடையில் இப்படி சாப்பிடுவதால், அதிக வேலையால் வியர்வையின் மூலம் இழந்த சத்துக்களை மீண்டும் பெற்று, சுறுசுறுப்பாக இருக்கலாம்.

* தயிரில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஏராளமான அளவில் உள்ளது. இவை எலும்புகள் மற்றும் பற்களை வலிமையாக்க தேவையான சத்துக்களாகும். ஒருவர் தயிருடன் சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால், அது ஆர்த்ரிடிஸைத் தடுக்க உதவி, பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

* தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் ஏராளமான அளவில் நிறைந்திருப்பதால், இதனை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், வெள்ளையணுக்களின் அளவை மேம்படுத்த உதவி, உடலை நோய்த்தொற்றுகளிடமிருந்து பாதுகாக்கும். எனவே நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நினைத்தால், தயிரை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

* தயிரில் உள்ள புரோபயோடிக்குகள் செரிமான மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவும். மேலும் தயிர் எளிதில் செரிமானமாகும். எனவே லாக்டோஸ் சகிப்புத்தன்மை கொண்டவர்கள் கூட இதை சாப்பிடலாம். ஏனெனில் இது நொதிக்கும் செயல்முறையின் போதே, லாக்டோஸை உடைத்துவிடுவதால், எவ்வித பிரச்சனையையும் ஏற்படுத்தாது.

* கார்டிசோல் என்னும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் தான், இடுப்பைச் சுற்றி அதிகப்படியான கொழுப்புக்கள் தேங்குகின்றன. தயிரில் உள்ள கால்சியம், இந்த கார்டிசோல் ஹார்மோனின் உற்பத்தியைக் குறைத்து, எடையைக் குறைக்க உவும். மேலும் தயிர் நீண்ட நேரம் பசி எடுக்காமலும் தடுக்கும். இதனால் கண்ட உணவுகளை உண்பது தடுக்கப்படும்.

* தயிரில் எளிதில் கரையக்கூடிய புரோட்டீன் உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும். அதிலும் க்ரீக் தயிரை சாப்பிடுவதால், இதய நோயின் அபாயம் குறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டுடன் இருப்பதாக ஆய்வுகளும் கூறுகின்றன. முக்கியமாக ப்ளேவர் சேர்க்காத தயிரைத் தான் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். ஆனால் சர்க்கரை சேர்க்காமல் தயிர் சாப்பிடுவதே சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.

Editor's Choice
உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் மிக எளிமையானதும், புதுமையானதுமான கொரோனா பரிசோதனை முறையை அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) நாக்பூர் - தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம் (NEERI) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
 
இதுதொடர்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் முறை எளிதாகவும், விரைவாகவும், சவுகரியமாகவும், சிக்கனமாகவும் உள்ளது.
 
இதில் 3 மணி நேரத்தில் முடிவை தெரிந்து கொள்ளலாம் என்பதால், கிராமங்கள் மற்றும் பழங்குடியின பகுதிளுக்கு இந்த பரிசோதனை பொருத்தமாக இருக்கும்.’
Editor's Choice

கோவிட் -19 (Covid-19) பரிசோதனையை எளிமைப்படுத்தும் முயற்சிகளுக்கு மத்தியில், சிங்கப்பூர் (Singapore) 1 நிமிடத்தில்  கொரோனா தொற்று உள்ளதாக என்பதை கண்டறியும் சாதனத்தின் அவசர கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கருவிக்கு 'ப்ரெஃபென்ஸ் கோ கோவிட் -19 ப்ரீத் டெஸ்ட் சிஸ்டம்' ( BreFence Go COVID breath test ) என்று பெயரிடப்பட்டுள்ளது, இது இந்திய வம்சாவளியை பேராசிரியரின் உதவியுடன் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (NUS) தயாரித்துள்ளது.

இது விமான நிலைய பரிசோதனைச் சாவடிகளில் பயன்படுத்தப்படும் இந்த சாதனம் சிங்கப்பூர் தேசிய பல்கலைகழகத்தை சேர்ந்த ப்ரீதோனிக்ஸ் (Breathonix) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. கோவிட் -19  தொற்றை மூச்சின் மூலம் சோதிக்க ஒப்புதல் பெற்ற முதல் சாதனம் இதுவாகும்.  இந்த நிறுவனம் இந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், இப்போது ப்ரீதோனிக்ஸ் சிங்கப்பூரின் சுகாதார அமைச்சகத்துடன் (MoH)  விமான நிலையங்களின் பரிசோதனை சாவடிகளில் பயன்படுத்துவது குறித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறபட்டுள்ளது. இந்த கருவியின் மூலம், நாட்டிற்கு உள்வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை எளிதாக மேற்கொள்ளலாம். இப்போது ராபிட் ஆன்டிஜென் பரிசோதனை மூலம் பயணிகள் இப்போது சோதிக்கப்படுகிறார்கள்.

இதில் ஊதினால் போதும், கொரோனா இருக்கிறதா இல்லையா என்பது உடனே தெரியும். இருப்பினும், இந்த பரிசோதனையுடன், கோவிட் -19 ராபிட் ஆன்டிஜென் பரிசோதனையும் மேற்கொள்ளப்படும். பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நபர் அதனுடன் இணைக்கப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் சாதனத்தில் ஊத வேண்டும். பரிசோதனையின் முடிவு ஒரு நிமிடத்திற்குள் கிடைக்கும். இந்த பரிசோதனையில் ஒரு நபர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டால், அதை உறுதிப்படுத்த RT-PCR முறையால் மீண்டும் பரிசோதிக்கப்படுவார்.

Editor's Choice

அதிகமாக நீராவி பிடித்தால், கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது,” என, பிரபல மருத்துவர் எச்சரித்து உள்ளார்.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் தான், கறுப்பு பூஞ்சை நோயால் அதிக அளவில் பாதிக்கப் படுகின்றனர். அவர்கள், மருத்துவமனைக்கு செல்லாமல், வீட்டில் இருந்தபடி மாத்திரை மருந்துகளை மட்டும் எடுத்து வருகின்றனர்.

அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். கறுப்பு பூஞ்சை பரவலுக்கு மூன்று காரணங்கள் உள்ளன. முதலாவது என்னவென்றால், மரமணு மாறிய கொரோனா வைரஸ்.

இரண்டாவது, மக்களில் பலரும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளாமல் இருப்பது. மூன்றாவது காரணம், மக்கள் வீட்டில் இருந்தபடி தொடர்ந்து நீராவி பிடிப்பது. நீராவி பிடித்தால் கொரோனாவில் இருந்து நாம் பாதுகாப்பாக இருக்கலாம் என, மக்கள் நினைக்கின்றனர்; அது முற்றிலும் தவறு. அதிகப்படியாக நீராவி பிடிப்பதால், மூக்கின் உட்புறம் உள்ள எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். கறுப்பு பூஞ்சை நோய்க்கிருமி காற்றில் கலந்து உள்ளது. இதை நம் மூக்கு தடுக்கும். ஆனால், நீராவி பிடிப்பதால் மூக்கின் உட்புறம் உள்ள எதிர்ப்பு திறன் குறைந்து விடும். இதை மக்கள் உணரவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Editor's Choice

உலகை ஆட்டி படைத்து வரும் கொரோனா, சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் தான் கொரோனா வைரஸ்  உருவாகியது என்பதற்கான ஆதாரம் புதிய ஆய்வு ஒன்றில் சிக்கியுள்ளது. வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியின் (Wuhan Institute of Virology) உயிர் பாதுகாப்பு நிலை -4 (Bio Safety Level 4 - B.S.L 4) ஆய்வகத்தில் கொரோனா வைரஸை சீன விஞ்ஞானிகள் தயார் செய்துள்ளனர். ஒரு புதிய ஆய்வில், விஞ்ஞானிகள் கண்டறிந்த வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது

வைரஸைத்  உருவாக்கிய பின், சீன விஞ்ஞானிகள் அதை ரிவர்ஸ் என்ஜினீயரிங் வெர்ஷன் மூலம் மாற்ற முயற்சித்தார்கள். இதன் வைரஸ் வெளவால்கள் மூலம் பரவியதாக காட்ட இவ்வாறு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. கொரோனா பரவல் எப்படி ஆரம்பித்தது என்பது தொடர்பான ஆய்வை பிரிட்டிஷ் பேராசிரியர் அங்கஸ் டால்க்லிஷ்  (Angus Dalgleish)  மற்றும் நார்வே விஞ்ஞானி டாக்டர் பிர்கர் சோரன்சென்  (Birger Sorensen) ஆகியோர் மேற்கொண்டதாக டெய்லி மெயிலில் வெளியான செய்தி கூறுகிறது.

ஒரு வருடத்திற்கும் மேலாக சீனாவில் வைரஸ்கள் குறித்த ரெட்ரோ இன்ஜினீயரிங் தொடர்பான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக விஞ்ஞானிகள் எழுதியுள்ளனர். ஆனால் கல்வியாளர்களும் முன்னணி பத்திரிகைகளும் அதை மறுத்துள்ளனர். பேராசிரியர் டால்லிஷ் லண்டனில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பல்கலைக்கழகத்தில் புற்றுநோயியல் பேராசிரியர். டாக்டர் சோரன்சென் ஒரு வைராலஜிஸ்ட்  என்பதோடு கொரோனாவின் தடுப்பூசியைத் தயாரிக்கும் இம்யூனர் என்ற நிறுவனத்தின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வில், வுஹான் ஆய்வகத்தில் தரவுகள் ஆதாரங்கள் வேண்டுமென்றே அழிக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. அதை மறைக்கவும் மறைந்து போக செய்யவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது என கூறப்படுகிறது. இது குறித்து குரல் எழுப்பிய விஞ்ஞானிகளை மவுனமாக்கியது அல்லது காணாமல் போகச் செய்தது.  தடுப்பூசி தயாரிக்க தாங்கள் இருவரும் கொரோனாவின் மாதிரிகளைப் ஆராயும் போது, ​​அவர்கள் வைரஸில் ஒரு 'சிறப்பு கைரேகை'  இருப்பதை கண்டுபிடித்தார்கள். இது ஆய்வகத்தில் வைரஸைச் சேதப்படுத்திய பின்னரே சாத்தியமாகும் என்று அவர் கூறுகிறார்.

Editor's Choice

வைரஸ் கிருமிகளின் தாக்கத்தை துளசி தண்ணீர், துாதுவளை ரசம், மிளகு குழம்பு சாப்பிடுவதன் மூலம் குறைக்கலாம்.

காய்ச்சல் வந்தால் 48 மணி நேரத்தில் சளி பரிசோதனை செய்வது நல்லது. தனிமைப்படுத்தி கொள்வது அவசியம். சிறிய வீட்டுக்குள் நான்கைந்து பேர் இருந்தால் தனியாக இருக்கமுடியாது. காற்றோட்டமான இடத்தில் இருக்க வேண்டும். மொட்டை மாடியில் காற்று வாங்கலாம். பாசிடிவ் என வந்தாலே தைரியத்தை இழந்து விடுகின்றனர். இதுதவறு. குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டாலும் மற்றவர்கள் உடனடியாக சளி பரிசோதனை செய்ய வேண்டும். அந்த காலத்திலும் இப்போதும் அம்மைநோய் வந்தால் தனிமைப்படுத்தி பாதுகாக்கின்றனர்.

வீட்டில் வேப்பிலை கட்டி கிருமி வராமல் தடுப்பர். அது போல தான் கொரோனாவும்.ஒரு சிலர் காய்ச்சல் வந்து மறுநாள் சரியானால் கொரோனாவாக இருக்காது என மற்றவர்களோடு கலந்து பழகி பரப்பி விடுகின்றனர். இப்போதெல்லாம் கை கொடுப்பதால் கையை தொடுவதால் மட்டுமே கொரோனா பரவுவதில்லை. பாதிக்கப்பட்ட நபர் இருமும் போதும், தும்மும் போதும் எளிதில் பரவுகிறது. எங்கேயும் மாஸ்க் அணியாமல் செல்லக்கூடாது. வீட்டில் ஒருவருக்கு கொரோனா வந்தால் எல்லோரும் வீட்டுக்குள்ளும் மாஸ்க் அணிய வேண்டும். கதவை பூட்டி வைக்கக் கூடாது. சுத்தமான காற்று அவசியம். இயற்கையான காற்று நோயை குணப்படுத்தும்.

அலோபதி மருந்துகளுடன் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் குடித்தால் கிருமி பரவ விடாமல் தடுக்கும். பசி, தாகம், சுவையின்மை, வாசனையின்மை, நீர்ச்சத்து பிரச்னைகளை குணப் படுத்தும். நிலவேம்பு குடிநீர் தினமும் ஒரு வேளை வீதம் 120 மில்லி ஒரு வாரம் சாப்பிடலாம். மாதந்தோறும் ஒரு வாரம் சாப்பிடலாம். வியாபாரிகள், வெளியில் மக்களோடு பழகுகிறவர்களாக இருந்தால் இரு வேளை சாப்பிடலாம். சளி இருந்தால் 3 நாட்கள் கபசுர குடிநீர் 60 மில்லி குடித்தால் போதும். நீர்ச்சத்து குறைவதை தடுக்க வெந்நீர் நிறைய குடிக்க வேண்டும். பழச்சாறு குடிக்கலாம். தொண்டை கரகரப்பாக இருந்தால் பழச்சாறுடன் மிளகுத்துாள் கலந்து கொள்ளலாம்.

மூக்கில் வாசனை வராதவர்கள் நொச்சி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆவி பிடிக்க வேண்டும். சிறிது ஓமம், கிராம்பு தனித்தனியாக வறுத்து காட்டன் துணியில் கொட்டை பாக்கு அளவு இரண்டையும் ஒன்றாக கட்டி அவ்வப்போது முகர்ந்து பார்க்க வேண்டும். இதன் மூலம் வாசனை நுகரும் தன்மை சீக்கிரமே திரும்பும். அதிமதுரம், ஆடாதோடை, மஞ்சள், இஞ்சி, சிற்றரத்தை, கிராம்பு, மிளகு, திப்பிலி, ஏலக்காய் ஆகியவை நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள். இவற்றை ஒன்றிரண்டு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்து சாப்பிடலாம். வேப்பம்பூ ரசம், நெல்லிக்காய் துவையல், மிளகு குழம்பும் அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.

தண்ணீரை கொதிக்க வைத்து இறக்கிய பின் அதில் கொஞ்சம் துளசி இலைகளை போட்டு மூடி வைத்து வெதுவெதுப்பாக குடித்து வரலாம். துாதுவளை இலைகளை பறித்து ரசம், சூப் போல செய்து சாப்பிடலாம். இதனால் தொண்டையில் வைரஸ் கிருமிகளின் வளர்ச்சியை ஆரம்பத்திலேயே தடுக்கலாம். 

பக்கம் 5 / 49