Editor's Choice

பொதுவாக உண்ணும் உணவு செரிமானமாவதற்கு இரைப்பையில் சுரக்கும் அமிலம் தான் உதவியாக உள்ளது. ஆனால் இந்த அமிலமானது அளவுக்கு அதிகமாக சுரக்கும் போது, அவை இரைப்பையை அரிக்க ஆரம்பித்து, வயிற்றில் எரிச்சலை உண்டாக்குகிறது. இவ்வாறு வயிற்றில் ஏற்படும் அதிகப்படியான எரிச்சலைத் தான் அசிடிட்டி (acidity) என்று சொல்வார்கள்.

இத்தகைய அசிடிட்டி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருப்பது, வறுத்த மற்றும் காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுவது, அதிகமாக புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்றவை குறிப்பிடத்தக்கவை. மேலும் காலை உணவை தவிர்ப்பது, வெறும் வயிற்றில் நீண்ட நேரம் இருப்பது, கொழுப்பு உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவது போன்றவையும் அசிடிட்டியை ஏற்படுத்தக்கூடியவையே.
 
இத்தகைய அசிடிட்டியை சில அறிகுறிகள் கொண்டு அறியலாம். அவை நெஞ்செரிச்சல், குமட்டல், வாந்தி, உணவு உண்ட பின் ஒரு மணி நேரத்தில் இருந்து நான்கு மணி நேரத்திற்குள் வயிற்றில் வலி அல்லது எரிச்சல் ஏற்படுவது, அடிக்கடி ஏப்பம், வாயில் கசப்பு சுவையை உணர்வது, அடிக்கடி பசி எடுத்தல் போன்றவை. ஆகவே இத்தகைய அறிகுறிகள் இருந்தால், அப்போது உடனே அதனை குணப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், அவை பெரும் பிரச்சனையை உண்டாக்கிவிடும். அதிலும் அசிடிட்டியை போக்குவதற்கு எங்கும் செல்ல வேண்டாம். அதனை சரிசெய்ய பல இயற்கை வைத்தியங்கள் உள்ளன. 

அசிடிட்டி' எனப்படும் வயிற்றில் ஏற்படும் அமில சுரப்பு பிரச்சனையால், அவதியுறுவோர் ஏராளம்!

குறிப்பாக உறைப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ட பின்னர் இத்தகையோருக்கு நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படுவது அதிகம்.

பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்கள் மற்றும் காஃபின் பொருட்களை அறவே தவிர்த்துவிட்டு, அதற்கு பதிலாக மூலிகை தேனீர் அருந்தலாம். மேலும் தினமும் வெதுவெதுப்பான வெந்நீர் ஒரு டம்ளர் அருந்தலாம்.

  • தினசரி உணவில் வாழைப்பழம், தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றை கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேண்டும். இளநீர் அருந்தினால் இன்னமும் நல்லது. அது அமிலசுரப்பு பிரச்சனையை தீர்க்கும்.

  • தினமும் ஒரு டம்ளர் பால் அருந்துவதும் நல்லதுதான். இரவு உணவை நீங்கள் தூங்கப்போவதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே முடித்துவிடுங்கள்.

  • ஒவ்வொரு உணவு இடைவேளைக்கு இடையேயும் நீண்ட இடைவெளி விடுவதும் அமில பிரச்சனைக்கு மற்றொரு காரணமாக அமைந்துவிடுகிறது. எனவே கொஞ்சமே என்றாலும் அந்தந்த நேரத்தில் உணவை எடுத்துக்கொள்ளுங்கள்.

  • ஊறுகாய், கார சட்னி வகைகள், வினிகர் போன்றவற்றை கண்ணால் பார்க்காமல் இருப்பதே உசிதம்.

  • புதினா இலையை கொதிக்கும் நீரில் போட்டு, அந்த நீரை உணவுக்கு பின்னர் அருந்தினாலும் நல்ல பலன் கிடைக்கும். கிராம்பு துண்டுகளை வாயில் போட்டு சப்பினாலும் குணம் கிடைக்கும்.

  • வெல்லம், எலுமிச்சை, வாழைப்பழம், பாதாம் பருப்பு, தயிர் ஆகியவையும் உடனடியாக பலன் தரக்கூடியதே. அளவுக்கு அதிகமான புகை பிடிப்பதும் மற்றும் மது அருந்துவதும் அசிடிட்டி பிரச்சனையை அதிகமாக்கிவிடும்.

  • சுவிங்கம் மெல்லுவதும் நல்லது. அதனால் சுரக்கும் அதிகப்படியான உமிழ் நீர் உணவுக் குழாயில் உள்ள உணவை நகர்த்தி சென்று நெஞ்செரிச்சல் ஏற்படுவதை தடுக்கும்.

  • இஞ்சியும் ஜீரணத்திற்கு உதவும் என்பதால், அதனை சாறாகவோ அல்லது பவுடராகவோ பயன்படுத்தலாம்.

  • மதிய உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் எலுமிச்சை நீரில் சர்க்கரை கலந்து குடிப்பதும் பலனளிக்ககூடியதே.

  • இவையெல்லாவற்றுக்கும் மேலாக முருங்கைக்காய், பீன்ஸ், பூசணி, முட்டைகோஸ், கேரட் மற்றும் பெரிய வெங்காயம் போன்றவற்றை அதிக அளவு எடுத்துக்கொள்வதும் அசிடிட்டி பிரச்சனையை எட்டி பார்க்காமல் செய்துவிடும்.

 

Editor's Choice
Editor's Choice

நான் தினமும் கோமியம்  குடிக்கிறேன். அதனால்தான் எனக்கு கொரோனா தொற்று வரவில்லை என பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்குர் கூறியுள்ள கருத்தை இணையவாசிகள் கிண்டலடித்து வருகின்றனர்.

போபாலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய பிரக்யா சிங் தாக்குர், நானும் பசுவின் சிறுநீரை தினமும் குடிக்கிறேன். அதனால்தான் நான் எந்த மருந்தையும் எடுத்துக்கொள்வதில்லை என்றும்  தற்போது வரை எனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை. அனைத்து மக்களும் நாட்டு மாடுகளை வைத்திருக்க வேண்டும். அனைவரும் அரசமரம், ஆலமரம், துளசி உள்ளிட்டவைகளை நட்டு வளர்க்க வேண்டும் என கூறினார்.

நீங்கள் வளர்க்கும் போது உங்களுக்கு அதிகப்படியான ஆக்சிஜன் தேவை இருக்காது. இந்த முறை போபாலில் ஒரு கோடி மரங்கள் நடப்படும். அதற்கு தேவையான தண்ணீர் வசதி தண்ணீர் டேங்குகள் மூலமாக வழங்கப்படும் என்றார். பிரக்யா சிங்கின் இந்த கருத்தை இணையவாசிகள் பலரும் கிண்டலடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Editor's Choice
 
Editor's Choice

இந்தியாவில் உலகின் மாபெரும் தடுப்பூசி திட்டம் கடந்த ஜனவரி 16-ந் தேதி தொடங்கியது. மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளையும் வழங்கி முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகளுக்கு செலுத்த வைக்கிறது.

இதுவரை இந்த திட்டத்துக்காக மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு 20 கோடியே 28 லட்சத்து 9 ஆயிரத்து 250 தடுப்பூசிகளை இலவசமாக வழங்கி உள்ளது. நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 18 கோடியே 29 லட்சத்து 26 ஆயிரத்து 460 ஆக உள்ளது.
 
இதற்கிடையில், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் பக்கவிளைவுகள் மற்றும் இறப்பு நேரிடுவதாக பலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
 
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் 10 லட்சம் பேரில் 0.61 சதவீதம் பேருக்கு மட்டுமே பக்கவிளைவுகள் ஏற்படுவதாக  தேசிய ஆய்வுக் குழு தகவல் தெரிவித்துள்ளது.
 
இது குறித்து நோய்த் தடுப்புக்கு பிந்தைய பக்கவிளைவுகளுக்கான தேசிய ஆய்வுக் குழு (Adverse Events Following Immunization - AEFI) வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டதில் ரத்த உறைதல், ரத்தக்கசிவு அரிதாகவே உள்ளது. மொத்தம் 753 மாவட்டங்களில் மேற்கொண்ட ஆய்வில் 10 லட்சம் பேரில் 0.61 சதவீதம் பேருக்கே பக்கவிளைவு ஏற்பட்டுள்ளது.
 
பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகள் மிக குறைவாகதான் உள்ளது. மேலும், கோவாக்சின் தடுப்பூசியால் ரத்த உறைதல், ரத்தக்கசிவு போன்ற பாதிப்புகள் ஏற்படவில்லை எனத் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Editor's Choice

ஒருவருக்குக் கிறுகிறுப்பு, தலைச்சுற்றல் வந்துவிட்டால், உடனே அது மூளை தொடர்பான நரம்புக் கோளாறு என்றுதான் பலரும் நினைக்கிறார்கள்,  பெரும்பாலான நேரங்களில் இந்தப் பிரச்சினைகளுக்குக் காதுதான் முக்கியக் காரணமாக இருக்கும். ஏனென்றால், கேட்பதற்கு மட்டுமல்ல காது! உடலைச் சமநிலைப்படுத்த உதவும் உறுப்புகளில் முக்கியமானதும் காதுதான்!

காதில் வெளிக்காது, நடுக்காது, உள்காது என்று மூன்று பகுதிகள் உள்ளன. வெளிக்காது ஒலி அலைகளை உள்வாங்கிக் காதுக்குள் கொண்டு செல்கிறது. நடுக்காதில் உள்ள செவிப்பறை அந்த ஒலி அலைகளை ஏற்றுக்கொள்ளும்போது அதிர்கிறது. இந்த அதிர்வுகள் செவிப்பறையை ஒட்டியுள்ள சுத்தி, பட்டடை, அங்கவடி எனும் மூன்று எலும்புகள் மூலம் உள்காதுக்குள் நுழைந்து, அங்கு நத்தை வடிவில் உள்ள ‘காக்ளியா'வை (Cochlea) அடைகின்றன.

அங்கு பெரிலிம்ப் (Perilymph), எண்டோலிம்ப் (Endolymph) என்று இரு வகைத் திரவங்கள் உள்ளன. இதில் எண்டோலிம்ப் திரவத்தின் மீது நடுக்காதின் அங்கவடி எலும்பு பிஸ்டன் போல் இயங்குவதால், இங்கேயும் அதிர்வுகள் உண்டாகின்றன. அப்போது இந்தத் திரவங்களில் மிதந்துகொண்டிருக்கும் இழை அணுக்கள் (Hair cells) தூண்டப்படுகின்றன. உடனே, அங்கு மின்னலைகள் உருவாகி, செவி நரம்பு வழியாக மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. பிறகுதான் நாம் கேட்பது பேச்சா, பாட்டா, இசையா, இரைச்சலா என்று வகை பிரித்துச் சொல்கிறது, மூளை.

உள்காதில், கேட்கும் திறனைத் தருகிற காக்ளியாவோடு உடலைச் சமநிலைப்படுத்துகிற லேப்ரிந்த் (Labyrinth) என்னும் பகுதியும் உள்ளது. லேப்ரிந்தின் ஒரு பக்கத்தில் காக்ளியாவும், இன்னொரு பக்கத்தில் அரைவட்டக் குழல்களும் (Semicircular canals) இருக்கின்றன.

மேலும் கீழும் உள்ள எலும்பு லேப்ரிந்தில் பெரிலிம்ப் திரவமும், நடுவில் உள்ள படல லேப்ரிந்தில் எண்டோலிம்ப் திரவமும் உள்ளன. நாம் நடக்கும்போது, எழுந்திருக்கும்போது, ஓடும்போது, தலையைத் திருப்பும்போது படல லேப்ரிந்தில் உள்ள எண்டோலிம்ப் திரவம் அசைகிறது. இந்த அசைவின் வேகம், விகிதம், திசை, பரப்பு ஆகியவற்றைக் கொண்டு அரைவட்டக்குழல்களில் வெவ்வேறு குறியீடுகள் உண்டாகும்.

இவற்றை இழை அணுக்கள் கிரகித்துச் செவிநரம்பின் வழியாக மூளைக்கு எடுத்துச் செல்லும். இந்தத் தகவல்களைக் கொண்டு நாம் நிற்கிறோமா, நடக்கிறோமா, தலையைத் திருப்புகிறோமா என்று நம் மூளை தெரிந்துகொள்ளும். அதற்கேற்ப மூளை செயல்பட்டு உடல் தசைகளுக்கு ஆணை பிறப்பித்து, உடலைச் சமநிலைப்படுத்துகிறது. இந்தச் சங்கிலிவினைச் செயல்பாட்டில் ஏதாவது குறை ஏற்படுமானால், காதிலிருந்து தவறான தகவல்கள் மூளைக்குச் செல்லும். அப்போது மூளை குழம்பிவிடும். இதனால்தான் தலைச்சுற்றல் ஏற்படுகிறது.

கிறுகிறுப்பு (Dizziness) என்பது மிதமான தலைச்சுற்றல். கிறுகிறுப்புக்கு அடுத்த நிலைதான் உண்மையான தலைச்சுற்றல். காதுப் பிரச்சினை காரணமாக உடல் சமநிலையை இழக்கும்போது, நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் தலை தனியாகச் சுற்றுவதுபோல் தோன்றும். அல்லது சுற்றியுள்ள பொருட்கள் சுற்றுவதுபோல் தோன்றும். இந்த வகைத் தலைச்சுற்றலை ஆங்கில மருத்துவத்தில் ‘வெர்டைகோ’ (Vertigo) என்கிறார்கள்.

இது முப்பது வயதுக்கு மேல் எவருக்கும் வரலாம் என்றாலும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் நூறு பேரில் பத்து பேருக்குக் கட்டாயம் உள்ளது. ஆண்களைவிட பெண்களுக்குத்தான் தலைச்சுற்றல் தொல்லை அதிகம் என்றாலும், இதனால் உயிருக்கு ஆபத்து ஒன்றும் இல்லை.

மிதமான வகை: இந்த வகை  தலைச்சுற்றல் உள்ளவர்களுக்குக் குமட்டலும் தலைச்சுற்றலும் சிறிது நேரம் இருக்கும். படுத்துக்கொண்டு சில மணி நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டால், இந்த அறிகுறிகள் தானாகவே மறைந்துவிடும்.

மத்திய வகை: இவர்களுக்குத் தலைச்சுற்றலோடு வாந்தியும் இருக்கும். படுத்து ஓய்வு எடுத்துக்கொண்டால் இவை சரியாகிவிடும்.

தீவிர வகை: இந்த வகைதான் மோசமானது. தலைச்சுற்றலும் அதிகமாக இருக்கும், வாந்தியும் மோசமாக இருக்கும். தலையை அசைத்தாலே இந்த இரண்டும் அதிகப்படும். நடந்தால் மயங்கிவிடுவோமோ என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும்.

உள்காதில் எண்டோலிம்ப் திரவம் அளவுக்கு அதிகமாகச் சேருவதால் காதுக்குள் அழுத்தம் அதிகரித்துத் தலைசுற்றல் வருவது ஒரு வகை. இது தூங்கும்போதுகூட வரும். இந்த வகை தலைசுற்றல் உடனே குறையாது; இரண்டு நாட்களுக்கு மேல்கூட நீடிக்கும். குமட்டலும் வாந்தியும் அதிகமாக இருக்கும். எப்போதும் படுக்கையிலேயே இருக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு இருக்கும். காதில் இரைச்சல் கேட்கும். காது மந்தமாகக் கேட்கும். இதற்கு ‘மினியர் நோய்’ (Meniere’s disease) என்று பெயர்.

சிலருக்கு ஏதாவது ஒரு பக்கமாகக் கழுத்தைத் திருப்பும்போது, மேல்நோக்கிப் பார்க்கும்போது, குனியும்போது, நிமிரும்போது தலை சுற்றும். இதற்கு ‘ஒரு திசை தலைச்சுற்றல்’ என்று பெயர். இதன் அறிகுறிகள் மினியர் நோய்க்கு எதிராக இருக்கும். குறிப்பாக, இந்த வகைத் தலைச்சுற்றலின்போது காதில் இரைச்சல் இருக்காது. காது கேட்பதில் பிரச்சினை இருக்காது. தலைசுற்றலுக்காகச் சிகிச்சை பெற வருகிறவர்களில், பெரும்போலோருக்கு இந்த வகை தலைசுற்றல்தான் முக்கியக் காரணமாக இருக்கும்.
 
பொதுவாகக் காதுப் பிரச்சினை காரணமாக 80 சதவீதம் பேருக்குத் தலைச்சுற்றல் ஏற்படுகிறது என்றால், மீதி 20 சதவீதம் பேருக்கு மற்றக் காரணங்களால் தலைச்சுற்றல் ஏற்படுகிறது. ஒற்றைத் தலைவலி, உயர் ரத்தஅழுத்தம், குறை ரத்தஅழுத்தம், மிகை ரத்தக்கொழுப்பு, ரத்தச் சோகை, ஊட்டச்சத்துக் குறைவு, கட்டுப்படாத நீரிழிவு நோய், தாழ் சர்க்கரை, கழுத்து எலும்பில் பிரச்சினை, தைராய்டு பிரச்சினை, கர்ப்பத்தின் ஆரம்பக் கட்டம், இதயத்துடிப்புக் கோளாறுகள், மருந்துகளின் பக்கவிளைவு, பார்வைக் கோளாறு, மன அழுத்தம், உறக்கமின்மை, மலத்தில் ரத்தம் போவது, தலைக்காயங்கள் என்று பல காரணங்களால் தலைச்சுற்றல் ஏற்படுவதுண்டு.

ஒருவருக்கு முதல்முறையாகத்  ஏற்படும்போது முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. அப்போதுதான் காரணம் தெரிந்து சிகிச்சை செய்துகொள்ளமுடியும். மேலும் தலைச்சுற்றல் என்பது பலருக்கும் மீண்டும் மீண்டும் வருகிற தொல்லை என்பதால், ஒருமுறை காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டால், அடுத்தமுறை இது தொல்லை தரும்போது பயப்படாமல் இருக்கலாம்.

பொதுவாக, தலைச்சுற்றல் ஏற்பட்ட நபருக்கு உட்கார்ந்த நிலையிலும் படுத்த நிலையிலும் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்படும். முழு ரத்தப் பரிசோதனை உதவக்கூடும். ஆடியோகிராம், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்ளிட்ட காதுக்கான அனைத்துப் பரிசோதனைகளும் தேவைப்படும். சில வேளைகளில் கழுத்தெலும்பு எக்ஸ்ரே, கண் பரிசோதனை, தைராய்டு பரிசோதனை மற்றும் இதயத்துக்கான பரிசோதனைகளும் தேவைப்படும்.

படுத்திருக்கும்போது கண்களைச் சுழற்றுதல், உட்கார்ந்துகொண்டு கழுத்துத் தசைகளுக்கும் தோள்பட்டைத் தசைகளுக்கும் பயிற்சி அளித்தல், தலையை முன்னும் பின்னும் வளைத்தல், பக்கவாட்டில் வளைத்தல், நடந்துகொண்டே பந்தைப் பிடித்தல் போன்ற பல பயிற்சிகள் இவ்வகை தலைச்சுற்றலைத் தடுக்க உதவுகின்றன.

 

பக்கம் 10 / 49