Editor's Choice

உணவு மற்றும் பானங்களில் சுவைக்காக மக்கள் சேர்த்து கொள்ளும் அதிகப்படியான உப்பு, அவர்களுக்கு ஆபத்தான இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்பட அதிக வாய்ப்பை ஏற்படுத்துகிறது என உலக சுகாதார அமைப்பு (WHO) குறிப்பிட்டுள்ளது. உலகின் பெரும்பாலான மக்கள் தாங்கள் பரிந்துரைத்த 5 கிராம் தினசரி உப்பு உட்கொள்ளல் அளவை மீறி இரட்டிப்பாக சேர்த்து கொள்வதாகவும், இதனால் ஒவ்வொரு ஆண்டும் 3 மில்லியன் மக்கள் இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றால் பாதிக்கப்படுவதாகவும் WHO கூறி உள்ளது.

சரியான உணவு கட்டுப்பாடுகள் இல்லாததால் ஆண்டுக்கு 1 கோடியே 10 லட்சம் பேர் உயிரிழப்பதில், குறிப்பாக உணவுகளில் அதிக சோடியம் குளோரைடு சேர்த்து கொள்ளும் விளைவுகளால் ஏற்படும் 30 லட்சம் மக்களின் இறப்புகளும் அடக்கம் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உப்பின் அளவு பரிந்துரைக்கப்பட்டதை விட அதிகமாக உடலில் சேரும் போது, உயர் ரத்த அழுத்தம், அதனை தொடர்ந்து இதய நோய் உள்ளிட்ட ஆபத்துகள் ஏற்பட வழியேற்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

மக்கள் உணவுகளில் உப்பு சேர்த்து கொள்வதை குறைப்பதற்கான கொள்கைகளை நாடுகளின் அதிகாரிகள் வகுக்க வேண்டும். தவிர உடலுக்கு ஆரோக்கியம் தரும் சரியான உணவுகளை தேர்வு செய்ய தேவையான விழிப்புணர்வை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று WHO இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார்.

"பதப்படுத்தப்பட்ட உணவில் சோடியம் சேர்க்கப்படும் அளவைக் குறைக்க தகுந்த நடவடிக்கை தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார். உணவில் உப்பு சேர்த்து கொள்வதை கட்டுப்படுத்துவதற்கான புதிய வழிகாட்டுதல்களை WHO வெளியிட்டுள்ளது.

அதன்படி 64 உணவு மற்றும் நொறுக்கு தீனிகளில் உப்பு எவ்வளவு இருக்கலாம் என்ற அளவை நிர்ணயித்து, சுமார் 194 உறுப்பு நாடுகளுக்கு இந்த வழிகாட்டு நெறிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் அனுப்பியுள்ளது. இந்த வரையறைகளின் படி. உதாரணமாக 100 கிராம் உருளை கிழங்கு சிப்ஸில் அதிகபட்சம் 500 மில்லி கிராம் உப்பு சேர்க்கலாம். பைஸ் மற்றும் பேஸ்ட்ரிகளில்120 மி.கி வரை மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் 360 மி.கி வரை உப்பை சேர்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகப்படியான சோடியம் கலந்த உணவுகளை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் உயர்ந்து, இதன் விளைவாக இதய நோய்களின் அபாயம் அதிகமாகிறது. உலகளவில் தொற்று நோய்கள் தவிர, அதிக இறப்புகளை ஏற்படுத்துவதாக இதய நோய்கள் உள்ளன. அதிக சோடியம் உட்கொள்வது உடல் பருமன், நாள்பட்ட சிறுநீரக நோய் மற்றும் இரைப்பை புற்றுநோயுடன் தொடர்புடையது என்றும் WHO தெரிவித்துள்ளது. எனவே அபாயங்களை தவிர்க்க அனைவரும் சராசரியாக நாளொன்றுக்கு 5 மில்லி கிராமுக்கு குறைவான உப்பை உணவில் சேர்த்து கொள்வதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

Editor's Choice

தண்ணீரில் கலந்து குடிக்கும் வகையில் பவுடர் வடிவில் கொரோனா நோயாளிகளுக்கான மருந்தை மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு கண்டுபிடித்துள்ளது.

கொரோனா சிகிச்சைக்கான மருந்து என்றால் இப்போதைக்கு ரெம்டெசிவிர் மட்டுமே பெரிதும் பயன்பாட்டில் உள்ளது. அதனால், அந்த மருந்துக்கு கடும் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு கொரோனாவுக்கு எதிராக புதிய மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. இது பவுடர் வடிவில் உள்ளது. இந்த மருந்தை தண்ணீரில் கலக்கிக் குடிக்கலாம். இந்த மருந்தை டி.ஆர்.டி.ஓ., அமைப்பு ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் அமைப்புடன் சேர்ந்து உருவாக்கியுள்ளது. இந்த மருந்துக்கு டிஆக்ஸி டி- குளுகோஸ் (2-deoxy-D-glucose (2-DG) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

கடந்த மே முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் இந்த மருந்து இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. அப்போது 110 கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்து வழங்கப்பட்டது. மருந்தை உட்கொண்ட நோயாளிகள் தொற்றிலிருந்து வேகமாகக் குணமடைவதும் தெரியவந்தது. பின்னர் அவர்கள் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது முடிவு நெகட்டிவ் என வந்துள்ளது. மூன்றாவது கட்ட பரிசோதனை தற்போது நாடு முழுவதும் 6 மருத்துவமனைகளில் நடந்துவருகிறது.

மேலும் இந்த மருந்து மருத்துவ ஆக்சிஜனை சார்ந்திருக்கும் நிலையை வெகுவாகக் குறைப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மருந்துக்கு மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பும் அவசர கால பயன்பாட்டின் அடிப்படையில் ஒப்புதல் அளித்துள்ளது. 'இந்த மருந்து சந்தைக்கு வந்தால் ரெம்டெசிவிரை மட்டுமே நம்பியிருக்கும் சூழல் மாறலாம். இது கொரோனா சிகிச்சையில் புதிய மைல்கல்லாக அமையும்' என, மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

 

Editor's Choice

ஒரு நல்ல குளிர்ச்சியான நீரில் குளிப்பது வெந்நீர் குளியலுடன் ஒப்பிடும்போது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆராய்ச்சியின் படி, குளிர்ந்த நீர் மீளுருவாக்கம் செய்யும் பண்புகளை (regenerative properties) கொண்டுள்ளது. பரபரப்பான வேலை நாள் அல்லது கடின பயிற்சிகளுக்கு பிறகு இது தசைகளை ரிலாக்ஸ் செய்ய மற்றும் தசை ரீஜெனரேஷனை அதிகரிக்கவும் உதவும்.

* பச்சை தண்ணீர் வெளிப்புற கால்களில் படும் போது, சருமத்தின் மேற்பரப்பில் ரத்த ஓட்டம் உடனடியாக கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் வெப்பமாக இருந்தால் உடல் வெப்பநிலை சட்டென்று குறைகிறது. மேலும் இந்த குளியல் சிறந்த உடல் வெப்பநிலையைப் பராமரிக்க, உங்கள் ஆழ்ந்த மைய திசுக்கள் உடல் முழுவதும் ரத்தத்தை வேகமாக சுற்றுவதன் மூலம் உதவுகிறது.

* உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஒரு தீர்வாக மாறும்

* மேலும், குளிர் நீர் குளியல் முடிந்த பின் உடல் அமைப்பை சூடாக வைத்திருக்க, உங்கள் உடல் சில கொழுப்பு செல்களை எரிக்கத் தொடங்குகிறது. பழுப்பு கொழுப்பு என்றும் அழைக்கப்படும் இந்த செல்கள் அவற்றின் முறிவின் விளைவாக வெப்பத்தை உருவாக்க முடியும். எனவே இந்த குளியல் எடையை குறைக்க உதவும். உடலில் இருந்து சில கூடுதல் கிலோ கிராம் குறைக்க நினைப்பவர்கள் அடிக்கடி பச்சை தண்ணீரில் குளிக்கலாம்.

குளிர்ந்த நீரில் குளிப்பது உங்கள் சருமத்திற்கு நன்மை பயக்கும் பல விளைவுகளை ஏற்படுத்துகிறது. மேலும் தலைமுடியின் தரத்தையும் மேம்படுத்துகிறது. குளிர்ந்த நீரில் குளிப்பது உடலின் மேற்பரப்பில் ரத்த ஓட்டத்தை இறுக்கமாக்குகிறது மற்றும் கட்டுப்படுத்துகிறது. தவிர சாதாரண நீரில் குளிப்பது நம் சருமத்திற்கு ஆரோக்கியமான பிரகாசத்தை அளிக்கிறது.

நம் தலைமுடியை வலுப்படுத்த முனைந்து, இதன் விளைவாக முடியின் ஒட்டு மொத்த தரமும் மேம்படுகிறது. சருமம் மற்றும் முடியின் தரம் மோசமடைவதற்கு ஒரு முக்கிய காரணம், சரும அடுக்கின் அழிவு. குளிர்ந்த நீரில் குளிப்பது சருமம் உலர்ந்து போவதைத் தடுக்கிறது.

நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் அல்லது குளிர், காய்ச்சல் அல்லது பிற உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்படும் போது பச்சை தண்ணீரில் குளிப்பது நல்ல யோசனையாக இருக்காது. குளிர்ந்த நீர் குளியல் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்த கூடும். எனவே உடல்நிலை சரியில்லாத போது நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு உங்கள் உடலுக்கு அதிக சிரமத்தை ஏற்படுத்துகிறது.

வெந்நீர் குளியல் நன்மைகள்:

* வெந்நீர் குளியல் தசைகளைத் தூண்டுவதன் மூலமும், நமது பாராசிம்பேடிக் நரம்பு மண்டலத்தை செயல்படுத்துவதன் மூலமும் உடலை நிதானப்படுத்த உதவுகிறது.

* நோய்வாய்ப்பட்டிருக்கும் சமயத்தில் வெந்நீரில் குளிப்பது ஒரு மருத்துவ முறையாக மாறுகிறது. குளிர் மற்றும்  இருமல் அறிகுறிகளைப் போக்க இது ஒரு இயற்கை தீர்வாகவும் கருதப்படுகிறது.

* காற்று பாதைகளைத் திறப்பதன் மூலமும், தடையை ஏற்படுத்தும் சளியிலிருந்து விடுபடுவதன் மூலமும், சுவாச அறிகுறிகளிலிருந்து நிவாரணம் அளிப்பதன் மூலமும் ஒரு சூடான நீர் குளியல் பயனுள்ளதாக இருக்கிறது.

* வெந்நீர் குளியல் உண்மையில் தோல் துளைகளை திறந்து அழுக்கு மற்றும் எண்ணெயை அகற்றுவதை எளிதாக்குகிறது. இருப்பினும், இது சருமத்தை மிகவும் வறண்டதாக மாற்றும். உங்கள் சருமம் சேதமடையாமல் இருக்க சூடான நீரில் குளித்த உடனேயே மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

* தசை இறுக்கத்தை போக்க மற்றும் அவற்றை தளர்த்த உதவுகிறது.

வெந்நீர் குளியல் தீமைகள்..

பச்சை தண்ணீரில் குளிப்பதுடன் ஒப்பிடும்போது வெந்நீரில் குளிப்பது அதிக தீமைகள் உள்ளன. பச்சை தண்ணீர் குளியல் மற்றும் வெந்நீர் தோலின் மேலடுக்கில் ஈரப்பதம் மற்றும் கெரட்டின் செல்களைத் தக்கவைக்க உதவும் சரும அடுக்கை, வெந்நீர் சேதப்படுத்துகிறது. அடிக்கடி வெந்நீரில் குளிப்பது சருமவறட்சி எரிச்சல் மற்றும் வீக்கத்திற்கு வழிவகுக்கிறது, இது இறுதியில் சருமத்தின் தரம் மற்றும் ஆரோக்கியத்தை மோசமடைய செய்கிறது. அதே போல வெந்நீர் குளியல் இதய ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல என்றும் குறிப்பிடப்படுகிறது.

Editor's Choice

அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி ஒரு வேலையில் அமர்ந்தவுடன் எழும் உணவு குறித்த சிந்தனையோ, பாலுறவு குறித்த சிந்தனையோ இன்ன பிற கவனச்சிதறல்களோ பெரும் சவால்தான். கனவுகள் கூட சில சமயம் தொந்தரவு செய்கின்றன.

காமத்தை வென்ற பட்டிணத்தார் கூட சதா நேரமும் அதனோடுதான் கட்டிப்புரண்டு மல்லுக்கட்டி இருக்கிறார். தியானத்தில் அமர்ந்து ”தன்னைத் தான் அறிந்த” நிலை குறித்து சித்தர் பெருமக்கள் பேசியது கூட குறைவுதான்..

“அண்டத்தைப் பிண்டத்தில் கண்டதையும், பிண்டத்தை அண்டத்தில் கண்டதையும்” குறித்து அவர்கள் “விண்டிலர்”. முகநூலும், ட்விட்டரும், வாட்சப்பும், நெட்ஃப்ளிக்சும், அமேஸான் பிரைமும்,  தொலைக்காட்சி அக்கப் போர்களும் நமது கவனத்தைக் குலைத்துப் போடுகின்றது என்றால்; அந்தக்கால துறவிகளின் தவத்தை சோறும், சதையும் ஆட்டிப் படைத்துள்ளன.

மனதின் அலைபாய்தலைக் குறித்து தீவிரமாக சிந்தித்த அந்தக்கால துறவியர் பெருமக்கள், அதற்கான காரணத்தை மூளைக்கு வெளியே தேடி அலைந்துள்ளனர். மேலை நாட்டு ஞானிகளுக்கும் கூட இதே சிக்கல்தான். கிறிஸ்தவ மெய்யியலின் தந்தை எனப் போற்றப்படும் ஜான் கேஸ்ஸியன்  இதைக் குறித்து எழுதியுள்ளார். “திடீர் குறுக்கீடுகளால் மனம் செலுத்தப்படுகின்றது” என்ற ஜான், அது “ஒரு குடிகாரனைப் போல் அலைந்து திரிகிறது” என்கிறார். நல்ல வேளையாக ஜானின் காலத்தில் திறன்பேசிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

கிறிஸ்துவுக்குப் பிந்தைய நூற்றாண்டுகளில் வந்த பாதிரிமார்கள் பெரும்பாலும் தனிமையில்தான் தங்கள் நேரத்தைக் கழித்தனர். ஜானின் காலத்துக்குப் பின்னர் மடாலயங்கள் தோன்றி வளரலாயிற்று. கிறிஸ்தவ துறவிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்கிற நடத்தை விதிகளும் உருவாக்கப்பட்டன.

ஏறத்தாழ அதே காலகட்டத்தில் பௌத்த சங்கங்களிடம் இருந்து பார்ப்பனியம் மடங்கள் எனும் வடிவத்தை களவாடிக் கொண்டதையும், அதே போன்ற ஒழுக்க நெறிகள், விதிமுறைகள் உருவாக்கிக் கொண்டதையும் இங்கே ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

மடாதிபதிகள் அல்லது சாமியார்கள் அல்லது துறவரம் பூண்டவர்கள் சதா காலமும் இறை நினைப்போடு வாழ வேண்டும். தியானத்தில் இருக்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் விசேடமான ஆற்றல்களைப் பெறுவார்கள் என்றும், உடல் மற்றும் உள்ளத்தின் பலவீனங்களை கடந்துவிடுவார்கள் என்றும் நம்பப்பட்டது.

இறை நினைப்பில் தங்களைத் தக்க வைத்துக் கொள்ள அவர்கள் பின்பற்றிய முறைகள் மிகவும் கடுமையானவை. தாங்கள் மிகவும் விரும்பிய அனைத்தையும் – குடும்பம், சொத்துக்கள், தொழில் – என அனைத்தையும் துறந்துள்ளனர். முடிந்தவரை அன்றாட வாழ்வியல் கடமைகளில் இருந்து தங்களை துண்டித்துக் கொண்டனர்.

ஆனால் உடல் என்று இருக்கும் வரை அதனுள் இருக்கும் இரசாயனங்கள் வேலை செய்து தானே தீரும்? மத்திய கால கிறிஸ்தவ துறவிகள் உடல் அதற்கே உரிய முறையில் உணவு, காமம் போன்றவற்றைத் தேடும் எனவும் அதன் மூலம் மனதைப் பின்னுக்கு இழுக்கும் எனவும் கருதினர்.

எனினும் அவர்கள் உடலை மறுக்கவில்லை; நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மடாலயங்கள் பரவிய சமயத்தில் பாதிரிகளும், சகோதரிகளும் குறைந்த உணவை உட்கொண்டதோடு திருமண பந்தத்தையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதே போல் கடுமையான உடல் உழைப்பையும் மேற்கொண்டனர்.

இதே காலகட்டத்தைச் சேர்ந்த இந்திய யோகிகளும் ஏறத்தாழ இதே வழிமுறைகளைப் பின்பற்றியுள்ளனர் என தனது “யோகா பாடி” எனும் நூலில் நிறுவியுள்ளார் மார்க் சிங்கிள்டன். குடும்ப வாழ்க்கையை, சொத்துக்கள், உறவுகள் என அனைத்தையும் துறந்து விட்டு காடு மலைகள் எனச் சுற்றியலைவது, மரத்தில் தலைகீழாய்த் தொங்குவது, ஆணிப் படுக்கையில் படுப்பது, ஒற்றைக் காலில் நாட்கணக்கில் நிற்பது என கடுமையான யோக சாதனைகளை முயற்சித்துப் பார்த்துள்ளனர்.

அனைத்து முயற்சிகளையும் உடல் தோற்கடித்த பின், சில கற்பனையான காட்சிகளில் மனதை லயிக்கச் செய்யும் முறைகளையும் பரிசோதித்துள்ளனர். மனதை அந்தக் காட்சிகளின் போக்கில் செலுத்துவது, அதனூடாக அதன் ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவது என ஏராளமான முறைகளைப் பரிசோதித்துள்ளனர்.

ஆனால், இத்தனை நூற்றாண்டுகளாக ஞானிகள் இகலோக தொந்தரவுகளில் இருந்து தப்பித்து பரலோக அனுபவத்தை அடையவும், புறநிலை இன்னல்களில் இருந்து தப்பித்து, அகநிலை இன்பத்தை அடையவும் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அத்தனையும் வியர்த்தமாகியுள்ளது.

எல்லா பெரிய சிக்கல்களுக்கும் இருப்பது போன்றே இதற்கும் எளிமையான தீர்வு ஒன்றுள்ளது. புறநிலை எதார்த்தங்களை அங்கீரிப்பதும், அதற்குள்ளேயே அதற்கான தீர்வைத் தேடுவதும்தான் அந்த எளிமையான தீர்வு.

ஓட ஓடத் துரத்துகிறது என்றால் ஏன் ஓட வேண்டும்? ட்விட்டரும் முகநூலும்  இன்ஸ்டாகிராமும் நம் கவனத்தை இழுக்கிறது என்றால், அஞ்சி சுருங்கிக் கொள்ளத் தேவையில்லை.

அவை ஏன் அவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன, நமது கவனச் சிதறலும்; நாம் செய்து கொண்டிருக்கும் நேரக் கொலையும், யாருக்குச் சாதகமாய் முடிகிறது என்பதை ஆராய்வது, மெய்நிகர் உலகின் மயக்கங்களில் இருந்து தெளிவடைவதற்கான துவக்கமாக இருக்கும்.

Editor's Choice

இந்தியர்கள் கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க தடுப்பூசி செலுத்துவதே நீண்டகால தீர்வு என அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி பவுசி தெரிவித்துள்ளார்.

 இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு தற்காலிக ஊரடங்கை பிறப்பிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி பவுசி அறிவுரைகளை வழங்கியிருந்தார்.

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை முடிவுக்குக் கொண்டுவர மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதுதான் நீண்டகாலத் தீர்வு என அந்தோனி பவுசி கூறியுள்ளார். உலகிலேயே அதிகமான தடுப்பூசி தயாரிக்கும் நாடு இந்தியாதான். இந்தியாவில் ஏராளமான வளங்கள் இருக்கின்றன, அதை வைத்து தயாரிக்க வேண்டும். உள்நாட்டு அளவில் மட்டும் தடுப்பூசி தயாரிக்க முடியாவிட்டால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து பயன்படுத்தலாம். இந்தியா விரைவாக தொற்றிலிருந்து மீள வேண்டும் என்ற அவசியம் காரணமாகவே மற்ற நாடுகள் தடுப்பூசிகளை நன்கொடையாக அளித்து வருகின்றன.

தடுப்பூசி தயாரிக்கும் மிகப்பெரிய நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை அதிகப்படுத்தி, லட்சக்கணக்கான டோஸ் மருந்துகளை இந்தியாவுக்கு வழங்கலாம். ஆக்சிஜன் சப்ளை மிகவும் சிக்கலானதாக மாறியுள்ளது. கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் இல்லாவிட்டால், மிகவும் கொடுமையானது. அதுதான் இந்தியாவில் நடந்து வருகிறது. இந்தியாவுக்கு தற்போது உடனடியாக படுக்கை வசதிகளை அதிகப்படுத்துதல், போதுமான அளவு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன், பிபிஇ ஆடைகள், மருந்துகள் உள்ளிட்டவை அவசியம் என அந்தோனி பவுசி கூறினார்.

 

 
Editor's Choice

கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது, மேலும் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் கொரோனாவின் மாறுபாட்டின் மூலக்கூறு படத்தை வெளியிட்டுள்ளது, இதுவே இரண்டாவது அலைக்கு காரணமாகும். இது B.1.1.7 COVID-19 என அழைக்கப்படுகிறது, இது கடந்த ஆண்டு டிசம்பரில் பிரிட்டனில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

கொரோனாவின் இந்த மாறுபாடு முந்தையதை விட மிக வேகமாக பரவுகிறது மற்றும் அதன் வடிவத்தை விரைவாக மாற்றுகிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுவே மக்களை மிக வேகமாகப் பாதிக்கக் ஒரு முக்கிய காரணமாகும். இந்த மாறுபாடு மனித உடலின் உயிரணுக்களில் மிக விரைவாக நுழைகிறது என்று பல்கலைக்கழக ஆராய்ச்சி வெளிப்படுத்தியது. 

இது தவிர, இந்த புதிய மாறுபாட்டின் காரணமாக, கொரோனா இந்தியா, பிரிட்டன் மற்றும் கனடா போன்ற நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. உலக சுகாதார அமைப்பும் கடந்த ஆண்டு கொரோனாவின் இந்த மாறுபாட்டைப் பற்றி வெளிப்படுத்தியதுடன், வைரஸுக்குள் பல பிறழ்வுகள் இருந்தன, அவை மிகவும் ஆபத்தானவை என்பதை நிரூபிக்கின்றன.

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, B.1.1.7 வகைகளில் மனித உயிரணுக்களில் நுழைந்து அவற்றைப் பாதிக்கும் பல்வேறு வகையான பிறழ்வுகள் உள்ளன. இது தவிர, இந்த மாறுபாடு பொதுவான நுண்ணோக்கியின் பிடியில் இல்லை, இதை Cryo-Electron Microscope மூலம் மட்டுமே காண முடியும்.

பக்கம் 12 / 49