Editor's Choice

ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பமாக இருக்கும்போது, தன் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுவார்கள். ஆனால், பிறப்பதற்கு முன்பே குழந்தையின் பாலினத்தை அறிவது என்பது சட்டப்படி குற்றமாகும். அந்த வகையில்  வயிற்றில் வளரும் குழந்தை என்ன குழந்தையாக இருக்கும் என்பதை நம்முடைய முன்னோர்கள் சில அறிகுறிகளை குறிப்பிட்டுள்ளார்கள். 

ஆண் குழந்தையாக இருந்தால்

> புளிப்பான உணவுகள் அல்லது உப்பான உணவுகளின் மீது நாட்டம் அதிகம் இருக்கும்.
> முகத்தில் பருக்கள்  அதிகம் வந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை
> காலைவேளையில் வாந்தி அல்லது குமட்டல் அறிகுறி ஏதும் இல்லாமல் இருந்தால். 
> கர்ப்பிணிகளின் வயிறு கீழே இறங்கி இருத்தால். 
> பாதங்கள் எப்போதும் மிகவும் குளிர்ச்சியுடன் இருக்கும்.
> கர்ப்பகாலத்தில் பெண்களின் சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும்.

பெண் குழந்தையாக இருந்தால்

> வயிறு உயரமாக தென்பட்டால்
> நடுவயிறு தென்பட்டால்
> வயிற்றின் வளரும் குழந்தையின் இதயத் துடிப்பு 140 க்கு மேல் இருந்தால் பெண் குழந்தை
> கர்ப்ப காலத்தில் அதிகமாக இனிப்பு சாப்பிட்டீங்கள் என்றால் அது பெண் குழந்தையாக இருக்கும்.
> பருக்கள் நிறைய வந்தாலே கருத்துப் போனாலோ பெண் குழந்தைகள் பிறக்கும் என்கின்றனர்.
> கர்ப்ப காலத்தில் பெண்களின் மனநிலை அதிகளவில் மாற்றமடைந்தால் பெண் குழந்தை என்கின்றனர். 

Editor's Choice

அரைக் கீரை பல விதமான மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு கீரை வகையாகும். இந்த கீரைகளின் இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் உடலில் இயற்கையை இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரிக்கிறது. தொற்று நோய்கள் சுலபத்தில் உடலை தாக்காதவாறு காக்கிறது. சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

காலை உணவுகளை தவிர்ப்பதாலும், நேரங்கடந்து சாப்பிடுவதாலும், அதிக காரம் உள்ள உணவுகளை உண்பதாலும் வயிற்றின் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்படுகிறது. இது உணவை செரிமானம் செய்வதிலும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அரைக் கீரையை குழம்பு, கூட்டு போன்ற பக்குவத்தில் சாப்பிடுவதால் குடல் புண்களை ஆற்றுகிறது. கடுமையான மலக்கட்டை இளக செய்து மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கிறது.

ஜுரம், காய்ச்சல் போன்றவற்றால் அடிக்கடி பாதிக்கப்படுபவர்களுக்கு உடல் சூடு அதிகமாகி பலவீனத்தை ஏற்படுத்தும். மேலும் கை, கால்களில் வலியையும் உண்டாகும். இந்த ஜுரம், காய்ச்சல் தீர்ந்ததும் உடலுக்கு மீண்டும் பழைய பலம் திரும்ப அரைக் கீரையை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் மனதிற்கும் தெம்பை ஏற்படுத்தும்.

பாதிக்கப்படுவதால் தான் மஞ்சள் காமாலை, ஹெப்பாடிட்டீஸ் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. மஞ்சள் காமாலை நோய் தாக்கியவர்கள், கல்லீரல் பாதிப்புகள் கொண்டவர்கள் ஏற்கனவே சாப்பிடும் மருந்துகளோடு அரைக் கீரையை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டாலே கல்லீரல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும்.

அளவில் நீரை குடிப்பதாலும், அதிகம் உப்புத்தன்மை கொண்ட உணவுகளை சாப்பிடுவதாலும் சிலருக்கு சிறுநீரகங்களில் உப்புகள் அதிகம் சேர்ந்து கற்கள் உருவாகும் நிலையை உண்டாக்குகிறது. அரைக் கீரையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாகியிருந்தால் அது கரையும். சிறுநீரை நன்கு பெருகி உடலில் சேர்ந்திருக்கும் நச்சுகளை எல்லாம் சிறுநீர் வழியாக வெளியேற்றும்.

திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் சில பெண்களுக்கு கருத்தரிக்க முடியாத நிலை இருக்கும். இத்தகைய பெண்கள் தங்கள் உணவில் வாரம் இரண்டு அல்லது மூன்று முறையாவது அரைக் கீரையை பக்குவம் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் அவர்களின் கருப்பை பலம் பெரும். அவற்றின் உள் தங்கியிருக்கும் நச்சுக்கள் எல்லாம் வெளியேறி சீக்கிரம் அப்பெண்களை கருத்தரிக்கும் நிலையை உண்டாக்கும்.

பல வகையான புற்று நோய்களில் வயிற்று புற்று நோயும் ஒன்று. இந்த புற்று நோய் வயிறு மட்டுமல்லாமல் அதனுடன் தொடர்புடைய குடல், கணையம் போன்றவற்றையும் பாதிக்கும் தன்மை கொண்டது. அரைக் கீரையை அதிகளவில் சாப்பிட்டு வருபவர்களுக்கு வயிற்றில் புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைகிறது. ஏற்கனவே புற்று நோய் பாதிப்புகள் உள்ளவர்களும் அரை கீரையை அதிகம் சாப்பிட வேண்டும்.

 இன்றைய காலத்தில் பெரும்பாலான ஆண்களுக்கு மனஅழுத்தம் அதிகமிருக்கிறது. இது அவர்களின் இனப்பெருக்க நரம்பு மண்டலங்களை பாதித்து ஆண்மை குறைவு மற்றும் மலட்டுத்தன்மை போன்ற குறைபாடுகளை ஏற்படுத்துகிறது. இப்படியான நிலையிலுள்ள ஆண்கள் அடிக்கடி அரை கீரையை தங்களின் உணவில் சேர்த்து கொள்வதால் ஆண்மை குறைவு விரைவில் நீங்கும்.

Editor's Choice

கிராம்பு ஒரு பூவின் பொட்டு இவை நாம் பயன் படுத்தும் பற்பசைகளில், சோப்புகள், அழகு சாதனப் பொருட்கள், நறுமணப் பொருட்கள் என்று எல்லாத் துறைகளிலும் பயன்படுகிறது. பல் வலி போகனுமா தம்மா துண்டு கிராம் பை வாயில் ஒதுக்கினால் போதும். ஆண்களுக்கு விந்து வெளியேறுவதில் பிரச்சனை இருந்தால் கூட கிராம்பை கொண்டு சரி செய்யலாம். இப்படி நிறைய நன்மைகளையும் கிராம்பு நமக்கு வழங்குகிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்களும் நறுமணப் பொருட்களாக சரும க்ரீம்களாக பயன்படுகின்றன.

கிராம்பு எண்ணெய்

விந்தணுக்கள் முன்கூட்டியே வெளியேறுவதை தடுக்க கிராம்பு எண்ணெய்யை ஆண்கள் உடலுறுவிற்கு முன்பு தடவலாம். இது பயனைத் தரும். உடலுறவுக்கு முன்னால் கிராம்பு எண்ணெயை ஆண்கள் தங்களுடைய பிறப்புறுப்பில் தடவி வருவது நிறைய நன்மைகளைத் தரும். குறிப்பாக, விந்து முந்துதல், விந்து நீர்த்துப் போதல் போன்ற பிரச்சினைகளைச் சரிசெய்ய நல்ல தீர்வாக இந்த கிராம்பு எண்ணெய் அமையும். விறைப்புத் தன்மைக் கோளாறு பிரச்சினைக்கும் இந்த கிராம்பு எண்ணெய் நல்ல தீர்வைத் தரும். அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதையும் தவிர்த்துவிடுவது நல்லது.

கிராம்பில் யூஜெனோல் என்ற பொருள் 70 - 90% உள்ளது. அசிடைல் யூஜெனோல், வெண்ணிலின், டானின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற பிற எண்ணெய் பொருட்கள் உள்ளன. இதனால் தான் இதை பற்பசைகளிலும் பல் சிகிச்சை அளிக்கும் போது அனஸ்தீசியா மருந்தாக கொடுக்கின்றனர். அதே மாதிரி இருமல், காய்ச்சல், சலதோஷத்தையும் போக்க கூடியது. 

​கல்லீரல் பாதுகாப்பு

கிராம்பில் அதிக ஆன்டி ஆக்ஸிடன்கள் இருப்பதால் கல்லீரலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற மாற்றத்தை குறைக்கிறது. இது மெட்டா பாலிக் வேலையை அதிகரித்து கல்லீரலில் கொழுப்புகள் தங்குவதை அதிகரிக்கிறது. டயாபெட்டீஸ் நோயை கட்டுப்பாட்டில் வைக்கிறது இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைத்து இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகாமல் தடுக்கிறது. இதனால் டயாபெட்டீஸ் நோயாளிகள் கிராம்பை அளவோடு உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

வயிறு ஆரோக்கியம்

வயிற்று போக்கு, குமட்டல், வாந்தி, சீரணமின்மை, வாயுத் தொல்லை, வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற நோய்களை சரி செய்து வயிறு, குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. நோயெதிப்பு சக்தியை அதிகரிக்கிறது இது இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து நோயெதிப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் எந்த நோய்க் கிருமிகளும் நம்மை அண்டாமல் காக்கிறது.

​வாய் மற்றும் பற்கள் ஆரோக்கியம்

இது ஒரு வலி நிவாணியாகவும் ஆன்டி செப்டிக் மருந்தாகவும் செயல்படுகிறது. ஈறு அழற்சி மற்றும் பீரியண்டோன்டிடிஸ் போன்ற பாதிப்புகளை குணப்படுத்த கிராம்பு உதவுகிறது. பல்வலி இருக்கும் போது இந்த கிராம்பை அந்த இடத்தில் அழுத்தி வைத்தால் வலி குறையும். கிராம்பு எண்ணெய் யும் பல் வலி போக்க சிறந்தது.

வாய் துர்நாற்றம் இருப்பவர்கள் கிராம்பை எடுத்துக் கொள்ளலாம். இதன் நறுமணம் வாய் துர்நாற்றத்தை போக்குவதால் டூத்பேஸ்ட் போன்றவற்றில் பயன்படுகிறது. இதிலுள்ள யூஜெனோல் அழற்சியால் ஏற்படும் வீக்கம் போன்ற எடிமா பாதிப்புகளை போக்குகின்றன. இது ஒரு வலி நிவாரணி மாதிரி செயல்படுகிறது.

தலைவலி தீர

யுனானி போன்ற பண்டைய மருத்துவத்தில் கிராம்பு தலைவலியை குணப்படுத்த பயன்படுகிறது. கிராம்பு எண்ணெய்யை தலையில் தடவுவது, பால், உப்பு போன்றவற்றில் கிராம்பு போட்டு குடிப்பது உங்க தலைவலியை போக்கும்.

Editor's Choice

கடந்த பல மணி நேரங்களாக உடல் நலமின்றி காத்துக் கிடக்கும் தங்களின் சொந்த பந்தங்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்குமாறு மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள்.

இறந்தவர்களை எரியூட்டும் தகன மையங்களோ பல்வேறு சடலங்களைச் சேர்த்து எரியூட்டிக் கொண்டிருக்கின்றன.

மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது,. தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் இடமில்லை என டெல்லியில் இருக்கும் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான சர் கங்கா ராம் மருத்துவமனை அறிவித்துள்ளது.

"எங்களிடம் அத்தனை அதிக ஆக்சிஜன் முனைகள் இல்லை. எத்தனை ஆக்சிஜன் முனைகள் இருக்கின்றனவோ அத்தனையிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றன. நோயாளிகள் ஆக்சிஜன் சிலிண்டர்களை தாங்களாகவே வாங்கிக் கொண்டு வருகிறார்கள், சிலர் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமலும் வருகிறார்கள். நாங்கள் அவர்களுக்கு உதவ விரும்புகிறோம். ஆனால் போதுமான படுக்கைகள் இல்லை போதுமான ஆக்சிஜன் முனைகள் இல்லை" என்கிறது மருத்துவமனை.

"எங்களின் அனைத்து தொலைபேசி எண்களும் அழைப்புகளால் திணறுகின்றன. மக்கள் தொடர்ந்து எங்கள் தொலைபேசி எண்களுக்கு அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவமனைக்கு வெளியே அத்தனை பேர் காத்துக் கிடக்கிறார்கள். வெளியே ஆம்புலன்ஸ் வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன, நோயாளிகள் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கு பிரச்சனை என்னவென்றால் அவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க இடமில்லை" என்கிறது மருத்துவமனை.

"உடல் நலம் தேறிய நோயாளிகளை எத்தனை விரைவாக வீட்டுக்கு அனுப்ப முடியுமோ அத்தனை விரைவாக டிஸ்சார்ஜ் செய்ய முயற்சிக்கிறோம். ஆனால் தற்போதைய நிலை வேறு விதமாக இருக்கிறது" என்கிறது மருத்துவமனை.

டெல்லி மற்றும் டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் 10 தனியார் மருத்துவமனைகளை நடத்தும் மேக்ஸ் ஹெல்த்கேர் மருத்துவமனைக் குழுமம், தங்களுக்கு உடனடியாக ஆக்சிஜன் விநியோகிக்க வேண்டுமென ட்விட்டர் மூலம் கோரிக்கை வைத்தது. தங்களின் இரண்டு மருத்துவமனைகளில் ஒரு மணி நேரத்திற்கும் குறைவான ஆக்ஸிஜன் மட்டுமே கையிருப்பு உள்ளதாக குறிப்பிட்டிருந்தது. இந்த ட்விட்டர் பதிவுக்கு பிறகு மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிஜன் வழங்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

குஜராத், உத்தரப் பிரதேசம், ஹரியாணா ஆகிய மூன்று மாநிலங்களும் இதே போன்ற நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் மற்றும் ஆக்சிஜன் விநியோகிக்க இந்திய விமானப்படை களத்தில் இறங்கியுள்ளது.

Editor's Choice

பெண்களைக் குறி வைத்துத் தாக்கும் நோய்களில் தைராய்டும் ஒன்று. இது நோய்க் கிருமிகளால் தாக்கப்படுவதில்லை அயோடின் குறைவே இதற்குக் காரணம்.

கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அயோடின் ஏற்ற இறக்கம் இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் தைராய்டு நோய் ஏற்படுகிறது....

தைராய்டு குறைபாடு காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போக நேரிடலாம், குறைந்த வயதிலேயே வயதுக்கு வருவதும் உண்டாகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இன்றுள்ள சூழ்நிலைக்கு 100 க்கு 90 பேருக்கு தைராய்டு பிரச்சினை உள்ளது. உடல் வெயிட் போடுகிறது என்று தெரிந்தவுடன் முதலில் தைராய்டு டெஸ்டு எடுத்து பார்த்துவிட்டு தைராய்டு இல்லையென்றால் வெயிட் குறைவதற்கு எந்த சிகிச்சை நல்லது? என்று தேர்வு செய்து வெயிட்டை குறைப்பது நல்லது. தைராய்டு டி.எஸ்.எச் அளவு அதிகமாக உள்ளது என்று தெரிந்தவுடன் தைராய்டு குறைய ட்ரீட்மெண்ட எடுக்க வேண்டும். டி.எஸ்.எச் அளவு ரத்தத்தில் அதிகமானால் ஹை தைராய்டு (அதிகமான தைராய்டு), கம்மியானால் லோ தைராய்டு உடலில் அயோடின் சத்து குறைந்தால் வீக்கம் வேறு வந்து விடும். சில சமயம் சிறு, சிறு கட்டிகள் தோன்றி கேன்சரா என்று பயம் ஏற்படும். கட்டிகள் என்ன என்பதை ஸ்கேன் மூலம் பார்த்து தெரிவுப்படுத்திக் கொள்ளலாம்.

தைராய்டு சுரப்பி குறைவாக இருந்தால் ஆரம்பத்தில் தெரிந்தோ, தெரியாமல் இருக்கும். முதல் மாற்றம் மாதவிலக்கில் மாற்றம் ஏற்படலாம். (அதிகமாக அல்லது குறைவாக) உடல் பருமன் அதிகமாகி விடும்.

இளம் பெண்களுக்கு கருமுட்டையில் நீர் கட்டிகள் இருக்கலாம். சில பெண்களுக்கு குழந்தை பிறப்புக்கு பிறகு தைராய்டு சுரப்பி குறைவாக சுரக்கும். டெலிவரிக்கு பிறகு உடல் குண்டாவது முகம் பருமனாகிவிடும். கைகளில் வீக்கம், கழுத்து பகுதியில் வீக்கம் ஏற்படும். அதிக களைப்பு, குளிர்ச்சியை தாங்க முடியாமல் தோன்றும்.

கை, கால்கள் உளைச்சல், மூட்டுவலி, ஞாபக மறதி, மனச்சோர்வு அதிகமாகும். சிலருக்கு குரல் மாறும். எச்சில் முழுங்கும் போது வலி ஏற்படும். சருமம் வறண்டு பொலிவு இழந்து காணப்படும். மற்ற நாளமில்லா சுரப்பிகளும் வேலை செய்யாமல் முடி வளர்ச்சி இல்லாமல் முடி கொத்து கொத்தாக கொட்டி சிலருக்கு வழுக்கையே வந்து விடும். கரு முட்டைகள் சரியாக வளர்ச்சியில்லாமல் உடல் பருமன் காரணமாக குழந்தை பிறப்பை தடுத்து விடும்.

டென்ஷன் காரணமாய் தைராய்டு பிரச்சினைகள் வருகிறதென சொல்கிறார்கள் சிலர். சில குழந்தைகள் பிறக்கும் போதே இந்தக் குறைபாட்டுடன் பிறப்பதுண்டு. ஆனாலும் இந்நோய் ஆண்களை விடப் பெண்களை 7 மடங்கு அதிகமாய் தாக்குகிறது. எனவே பெண்கள் இது விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகள் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்ப்பதோடு, உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.

தைராய்டு சுரப்பி, அதிகமாக சுரந்தாலும், கழுத்து வீக்கம், உடல் சூடு, படபடப்பு, வியர்வை அதிகமாகும். நாக்கு வறண்டு, குமட்டல், வாந்தி கூட வரும். சிலருக்கு குறை பிரசவம், கருச்சிதைவு போன்றவை உண்டாகும். சிலருக்கு கண்கள் பெரிதாக வெளியில் விழும் மாதிரி தோன்றும். பார்வை மங்கும். இந்த தைராய்டு பிரச்சினைக்கு வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டும் என்று பலர் நினைத்து கொள்கிறார்கள். இல்லவே இல்லை. சித்தா மருந்திலிருந்து 3லிருந்து 6மாதம் வரை அவரவர் அளவுக்கேற்ப மருந்து எடுத்துக் கொண்டால் மேல் சொன்ன வியாதிகளை அனைவரும் தவிர்க்கலாம்.

Editor's Choice

இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) உடன் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR), கோவிட் -19 தடுப்பூசி வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யத் தயாராகி வரும் நிலையில், இந்தியாவில் கோவிட் -19 தடுப்பூசி விரைவில் ட்ரோன்களால் மூலம் விநியோகிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் COVID-19  தடுப்பூசி வரும் மே 1 முதல் இந்தியா முழுவதும் தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த ஆய்வுக்கு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் விமான போக்குவரத்து இயக்குநரகம் ஒப்புதல் அளித்தன. கான்பூரில் உள்ள ICMR  மற்றும் IIT,  2021 ஆளில்லா விமான அமைப்பு விதிகளிலிருந்து, ஆய்வுக்கு நிபந்தனையுடன் கூடிய விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகம்  செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விலக்கு ஒரு வருட காலத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.

COVID-19 தடுப்பூசியை வழங்க ட்ரோன்களைப் பயன்படுத்துவதன் மூலம் தொலைதூரப் பகுதிகளில் தடுப்பூசியை தேவைப்படுபவர்களுக்கு விரைவாக கிடைக்கச் செய்யலாம்.

இருப்பினும், தற்போது ஆய்வு நடத்தப்பட்டு வரும் நிலையில், அதன் சாத்தியக்கூறுகளைப் பொறுத்து, இதனை செயல்படுத்த சிறிது காலம் ஆகக்கூடும்.

COVID-19 தடுப்பூசி விநியோகத்திற்கான ட்ரோன்களை பெங்களூரை தளமாகக் கொண்ட சிடிஸ்பேஸ் ரோபாட்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் (CDSpace Robotics Pvt Ltd.) மற்றும் பாரத் பயோடெக் (Bharat Biotech)  இணைந்து உருவாக்கி வருகிறது.

இந்தியாவில் ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்கு நிபந்தனை விலக்கு MoCA வழங்குவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னர், ரயில் விபத்து நடந்த இடங்களில் ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்கும், ரயில்வே சொத்துக்களின் பாதுகாப்பு பராமரிப்பதற்கும், மேற்கு மத்திய ரயில்வேக்கு (WCR)  நிபந்தனையுடன் கூடிய விலக்கு அளிக்கப்பட்டது.

 

பக்கம் 16 / 49