Editor's Choice
கொரோனா வைரஸ் பாதிப்பின் முதல் அலை நிறைவடைந்த நிலையில் பல நாடுகளில் வைரசின் இரண்டாவது அலை அதி வேகமாக பரவி வருகிறது.

உலகம் முழுவதும் 13 கோடியே 88 ஆயிரத்து 20 ஆயிரத்து 166 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 42 லட்சத்து 30 ஆயிரத்து 45 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 11 கோடியே 16 லட்சத்து 5 ஆயிரத்து 220 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் இதுவரை 29 லட்சத்து 84 ஆயிரத்து 901 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
இந்த நிலையில் அமெரிக்காவின்  கலிபோர்னியா மருத்துவ ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வு அறிக்கையில், தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள் கொரோனாவின் தீவிர பாதிப்புக்கு உள்ளாவதில்லை. மேலும், அவர்களில் பெரும்பாலானவர்கள் லேசான அறிகுறிகளுடன் குணமடைந்துள்ளனர். இறப்பும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது.
 
உடற்பயிற்சி மேற்கொள்வது மிக மிக அவசியம். உடல் அசைவுகள் இருக்கும் போதுதான் நுரையீரல் செயல்பாடு சிறப்பாக இருக்கும். நுரையீரல் செயல்பாடு சரியாக இருந்தால் கொரோனா வைரஸால் நுரையீரலில் தாக்குதல் ஏற்படுவது குறையும். நுரையீரலில் இருந்து கிருமிகள் வெளியேறும். அதனால், ஆரோக்கியமான உணவுடன் அன்றாட உடற்பயிற்சிகளையும் கைவிடாதீர்கள் என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Editor's Choice
  1. தொண்டை புண், கரகரப்பு (Sore throat)
  2. டான்சிலைட்டீஸ் (Tonsillitis)
  3. அடினாய்ட் அழற்சி (Inflammation of Adenoid)
  4. குரல் வளை பாதிப்புகள்
  5. குரல் நாண்கள் பாதிப்பு
  6. குறட்டை

தொண்டைபுண், கரகரப்பு, (தொண்டை கட்டு Sore throat) 

  • தொண்டையின் அழற்சி தொண்டை கரகரப்பை உண்டாக்கும் Pharyngitis - ன் முக்கால்வாசி நேரங்களில் டான்சிலைட்டீஸம் கூட வரும். பெரும்பாலும் வைரஸ் தாக்குதல் காரணமாகலாம். மீதி நேரங்களில் பாக்டீரியா, பூஞ்சனங்களால் ஏற்படும். சில நேரங்களில் சுற்றுப்புற சூழ்நிலை நச்சுகள், ரசாயன பொருட்கள் காரணமாகலாம்.
  • வைரஸ் தாக்குதலில் தொண்டையில் வலி ஏற்படலாம். சுரப்பிகளின் வீக்கமும், ஜுரமும் இருக்கும். ஹெர்பஸ் வைரஸ் தாக்கும் வாய்ப்புகள் ஏற்படும். அம்மை நோய்கள், சில நேரங்களில் தொண்டைப் புண்ணுடன் தொடங்கும்.
  • பாக்டீரியா தாக்குதல் ஏற்பட்டிருந்தால், சுரப்பிகளின் வீக்கம், சிவந்து போன தொண்டை, நல்ல ஜுரம், அதீத தசை – எலும்பு வலிகள் இருக்கும். இரண்டு சிக்கல்கள் ஏற்படக்கூடும். ஒன்று ரூமாடிக் ஜுரம் (Rheumatic fever) மற்றொன்று சிறுநீரக அழற்சி.
  • ஆயுர்வேதம் தொண்டை பாதிப்பு, தவறான உணவுப் பழக்கத்தால் உண்டானது என்கிறது. கபதோஷ பாதிப்புகள், ‘ஜில்’ என்று குளிர்ந்த உணவுகள், புளிப்புச் சுவை அதிகம் உள்ள உணவுகள் (புளி, அன்னாசி, தயிர், புளிப்பான மோர், அதிகமாக வறுக்கப்பட்ட உணவுகள் – இவை தொண்டையை பாதிக்கும்.
  • சாராயம், வேளைக்கு சாப்பிடாதது, விருத்தாஹாரங்கள் (ஒன்றுக்கு ஒன்று ஒவ்வாத உணவுகள் – உதாரணமாக மீனுடன் பால், வாழைப்பழத்துடன் தயிர்) இவையெல்லாம் தொண்டையை பாதிக்கும்.
  • புகையிலை (குட்கா போன்றவை) தொண்டை பாதிப்புககு ஓரு முக்கிய காரணம்.
    • தானியங்கள் – கோதுமை, பார்லி மக்காச்சோளம்
    • காய்கறி – வெண்டைக்காய், கத்தரிக்காய்
    • திரவியங்கள் - புடலங்காய், வெந்தயம், பூண்டு, மஞ்சள், இஞ்சி, வெங்காயம், பாகற்காய் முருங்கை இலைகள், பட்டாணி, கிழங்கு வகைகள், மிளகாய்
    • பருப்புகள் – பயத்தம் பருப்பு கொள்ளு
    • மாமிசம் வறுத்த சிக்கன், மட்டன் (கீமா) முயல் மாமிசம் செம்மறியாட்டு மாமிசம், மீன்
    • பழங்கள் தவிர்க்கவும் – உலர் திராட்சை, பேரீச்சம்பழம் எடுத்துக்கொள்ளலாம். அன்னாசி, நாவல் பழம், பலாபழம், திராட்சை- இதர புளிப்பான பழங்கள்,
    • பால் பால் சார்ந்த உணவுகள் – சூடான பசும் பால், நெய், ஆட்டுப்பால் தயிர், மோர்.
    • நீர் – வெதுவெதுப்பான நீர், துளசி, இலவங்கப்பட்டை, ஏலக்காய், மிளகு, சுக்கு சேர்ந்த மூலிகை நீர் தண்ணீர், ஃபிரிட்ஜில் வைத்த குளிர்ந்த நீர்
    • இதர – தேன், குங்குமப்பூ, தேஜ்பத்தா, இலவங்கம், எள், தனியா, சீரகம், பெருங்காயம், சர்க்கரையில் வறுத்த பொரித்த உணவுகள், அப்பளம், புளி, அக்ரூட், மசாலா உணவுகள், ஐஸ்கிரீம்.டான்சிலைடீஸ் Pharyngitis கூட வருவது டான்சிலைடீஸ். இரண்டும் கிட்டத்தட்ட ஒன்று என்று கூட கூறலாம். டான்சிலைடீஸ் பெரும்பாலும் சிறுவர்களை தாக்குகிறது. Pharynx எனும் தொண்டைப் பகுதியில் உள்ள டான்சில்களின் அழற்சி, தொற்று டான்சிலைட்டீஸ். இதை ஒரு பாதுகாப்பு நடவடிக்கை என்றே சொல்ல வேண்டும். டான்சில்கள் தொற்றுகளை தாங்கள் ஏற்றுக் கொண்டு, பெரிதாக பரவாமல் காக்கின்றன. பெரிதாக ஜலதோஷம், ஜுரம் ஏற்படும் முன் தொண்டை பாதிப்புகள் உண்டாவது டான்சில்கள் முதலில் செயல்படுவது தான் காரணம். முன்பெல்லாம் சிறுவர்களை அடிக்கடி  Tonsillitis  தாக்குவதை தவிர்க்க டான்சில்களை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து விடுவது வழக்கமாக இருந்தது. அதனால் எந்த வித பயனும் இல்லை. மாறாக டான்சில் இல்லாவிட்டாலும் தொற்றுகள் அதிகமாகின்றன என்பது தெரிய வந்தால் இப்போது டான்சில்களை எடுப்பதில்லை.

      அறிகுறிகள்

      கிட்டத்தட்ட புண்பட்ட தொண்டை போல் தான், தொண்டை வலி, குறிப்பாக உணவை முழுங்குவதில் கடினம், வலி. குளிர் சுரம், சிவந்து, வீங்கிய டான்சில்ஸ், சில நேரங்களில் காது வலி முதலியன

      ஸ்வர பேதம் (Hoarseness) (Laryngitis)

  • ஸ்வர பேதம் என்பது தொண்டை கரகரப்பு, பேச முடியாமல் போவதை குறிக்கும். குரல் வளைகள் தொற்று நோயில் பீடிக்கப்படுவதால் குரல் குழப்பு ஏற்படும்.

    குரல் பாதிப்பு (Laryn gitis) ஏற்பட காரணங்கள்

    • வைரஸ் (அ) பாக்டீரியா தொற்றால் ஏற்படலாம். இந்த தொற்று ஏற்பட ஜலதோஷம் காரணமாகலாம்.
    • புகை பிடித்தல், புகையிலை உபயோகம், மது அருந்துதல் முதலியன.
    • அளவுக்கு மீறி பேசுவது, கத்திப் பேசுவது, குரலை அதிகம் உபயோகிப்பது 
    • அமில எதுகலிப்பு – வயிற்றிலுள்ள அமிலம் மேலேறி உணவுக்குழாயை தாண்டி குரல் வளையை தாக்குதல்.
    • இந்த நிலை உள்ளவர்களுக்கு நெஞ்செரிச்சல் இல்லாமல் போகலாம். தொண்டை அடைத்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு, சளி தொண்டையில் தேங்கி நிற்பது போன்ற உணர்வுகள் இருக்கும்.
    • சுற்றுப்புற சூழ்நிலை மாசுகள் ஒவ்வாமை (Allergy) முதுமை முதலியன.
    • அறிகுறிகள்
      1. பேசுவதில் சிரமம், வலி, முழுங்குவதில் சிரமம், வலி, இருமல், ஜுரம் உண்டாகலாம். மலச்சிக்கல் ஏற்படலாம்.
      2. குரல் மாறிப் போதல்

      வீட்டு வைத்தியம்

      • புகைப்பதை நிறுத்தவும். காஃபின் (Caffeine) உள்ள காப்பி, தேநீர் போன்றவற்றை தவிர்க்கவும்.
      • தொண்டைக்கு (குரலுக்கு) ஒய்வு கொடுக்கவும்.
      • நீராவி பிடித்தல், இதற்கான வெந்நீரில் யூகலிப்டஸ் எண்ணெய், சில சொட்டுக்கள் சேர்க்கலாம்.

      ஆயுர்வேத அணுகுமுறை

      • வாத, பித்த, கப தோஷங்கள் தீவிரமடைந்தால் குரல் வளையில் தங்கி இந்த தோஷங்கள் குரலை கெடுக்கும். ஆறுவகை தொண்டை கரகரப்பு ஆயுர் வேதத்தில் சொல்லப்படுகிறது. வாதம், பித்தம், கபம் மூன்று தோஷமும் சேர்ந்த பாதிப்பு
      • வாததோஷம் – நோயாளிகள் வாயில் இந்துப்பு + எள் கலந்த கலவையை அடக்கிக் கொள்ள வேண்டும். வெல்லம், நெய் கலந்த அரிசி உணவை உண்ண வேண்டும். குடிப்பதற்கு வெது வெதுப்பான நீரை பயன்படுத்த வேண்டும்.
      • பித்த தோஷம் – நோயாளி வாயில் நெய்யையும் தேனையும் வைத்துக் கொள்ள வேண்டும். நெய் உண்ண வேண்டும். பிறகு பால் குடிக்க வேண்டும்.

      சிகிச்சை முறை

      1. உப்பு கலந்த சுடுநீரை வாயில் வைத்து கொப்பளிப்பது வழக்கமான முறை. இத்துடன் வேல மரப்பட்டையின் பொடியை சேர்த்துக் கொண்டால் இன்னும் நல்லது. ஒரு டீஸ்பூன் கஸ்தூரி வேலம் எண்ணெயை ஒரு கப் வெத வெதப்பான நீரில் கலந்து கொப்பளிக்கலாம்.
      2. ஒரு கப் சூடான பாலில் கருமிளகு பொடி, சர்க்கரை (தே வையானால்) சேர்த்து கலக்கி தினமும் இரு வேளை குடித்து வரவும்.
      3. சூடான ஒத்தடம் (தொண்டைக்கு) கொடுக்கலாம்.
      4. அதிமதுரப் பொடி, வசம்புப் பொடி ஒவ்வொரு தேக்கரண்டி எடுத்து தேனுடன் குழைத்து தினமும் 3 வேளை சாப்பிட்டு வரலாம்.
      5. துளசி சாற்றை 1/2 தேக்கரண்டி எடுத்து ஒரு தேக்கரண்டி தேனுடன் குழைத்து தினம் 3 (அ) 4 வேளை சாப்பிடலாம்.
      6. தாளிசாதி சூரணம் லவங்காதி வடீ போன்ற நல்ல மருந்துகள் ஆயுர் வேதத்தில் உள்ளன. கதிராதி வடீயை வாயில் வைத்து சப்பி சாப்பிட வேண்டும்.

      பத்தியம்

      1. இஞ்சி, கருமிளகு, உப்பு, பூண்டு, உலர்ந்த திராட்சை மற்றும் நெய் – ஸ்வரபேதத்திற்கு ஏற்றவைகள்.
      2. குளிர்ந்த பானங்கள், தயிர், கொழுப்புகளை தவிர்க்கவும்.
      3. கத்திப் பேச வேண்டாம்.
Editor's Choice

''கொரோனா தடுப்பூசிக்கு காப்புரிமை வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்' என, பின்தங்கிய நாடுகள், உலக வர்த்தக அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

பைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனகா, ஜான்சன் அண்டு ஜான்சன், பாரத் பயோடெக் உள்ளிட்ட பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரிக்கின்றன. எனினும், இந்நிறுவனங்களால், உலக நாடுகளுக்கு தேவையான, கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரிக்க முடியாத நிலை உள்ளது. அதனால், 'கொரோனா தடுப்பூசி மருந்திற்கான காப்புரிமை வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்' என, இந்தியா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள், உலக வர்த்தக அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளன. 'இதன் மூலம், மேலும் பல நிறுவனங்கள் தடுப்பூசி மருந்தை தயாரிக்க முடியும். இது, பின்தங்கிய, ஏழை நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கும் தாராளமாக தடுப்பூசி கிடைக்க உதவும்' என, இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே, இந்த விண்ணப்பத்தை ஏற்கக் கூடாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு நான்கு முதன்மை குடியரசு கட்சி செனட்டர்கள் அழுத்தம் கொடுத்துவருகின்றனர்.

மேலும் அமெரிக்க நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை ரத்து செய்வதன்மூலம் தாங்கள் பயனடையலாம் என்று பிற நாடுகள் நம்புகின்றன. ஆனால் காப்புரிமையை ரத்து செய்வதன் மூலம் கண்டுபிடிப்புகளுக்கான உத்வேகம் மட்டுப்படும். புதிய கண்டுபிடிப்புகளுக்கான முயற்சிகள் நிறுத்தப்படும் அபாயமும் உள்ளது” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது மீண்டும் கொரோனா அதிகரித்துள்ள நிலையிலும், கொரோனா தொடர்ந்து உருமாற்றம் பெற்றுவரும் நிலையிலும் தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்கான ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் தொடர்ந்து செயல்படுத் தப்பட வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் காப்புரிமை ரத்து செய்யப்பட்டு யாரும் உற்பத்தி செய்யலாம் என்ற நிலையை உண்டாக்கினால் நோய் காக்கும் தடுப்பூசிகளின் தரம் குறித்த அச்சமும் உண்டாகும். கொரோனா பரவலைத் தடுப்பதில் தொடர்ந்து அனைத்து நாடுகளுக்கும் உதவிகளை அமெரிக்கா மேற்கொண்டுவருகிறது. அப்படியிருக்க அமெரிக்க கண்டுபிடிப்புகளின் காப்புரிமையை ரத்து செய்வதை ஒப்புக்கொள்வது கொரோனா பரவலைத் தடுப்பதில் எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கே எதிரானதாக மாறிவிட வாய்ப்புள்ளது. எனவே இந்த கோரிக்கைக்கு அமெரிக்கா ஒப்புக்கொள்ளக் கூடாது என்று அவர்கள் அதிபர் ஜோ பைடனிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Editor's Choice

உலகம் முழுவதும் பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இவை அனைத்துமே இரண்டு தவணைகளாக வழங்கப்படக் கூடிய தடுப்பூசிகள். முதல் டோஸ் செலுத்தி, 4 வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ் தடுப்பூசியைச் செலுத்த வேண்டும்.

அதே சமயம் அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ளது மட்டும் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி ஆகும். இந்த தடுப்பூசி அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி போட்டுக் கொண்ட சிலருக்கு ரத்த உறைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இது தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது‌

இந்த நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி செலுத்துவதை நிறுத்தி வைக்கும்படி அமெரிக்கா பரிந்துரைத்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையம் ஆகிய இரு அமைப்புகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி போட்டுக் கொண்ட 6 பெண்களுக்கு ரத்த உறைவு ஏற்பட்டது குறித்து ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடியும் வரை ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை பயன்படுத்துவதை இடைநிறுத்தம் செய்ய பரிந்துரைக்கப்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Editor's Choice

எண்ணெய் இல்லாமல் சமையல் இல்லை என்பது ஒரு சாரார் இருக்க, `எண்ணெய்’ என்றதும் எட்டடி தள்ளி நிற்கும் சிலரையும் பார்க்க முடிகிறது. மருத்துவரின் பரிந்துரை இல்லாமலேயே சிலர் எண்ணெயை ஓரம்கட்டி வருகிறார்கள். இதய நோயில் தொடங்கி உடல் பருமன் வரை சமையலில் எண்ணெயைத்தான் முதலில் தவிர்க்கிறார்கள். அப்படியானால் எண்ணெய் தவிர்க்கவேண்டிய ஒன்றா, எந்த எண்ணெயை எப்படிப் பயன்படுத்துவது? சமைக்க, சமைத்த உணவில் சேர்த்துக்கொள்ள, சருமத்துக்கு... என எண்ணெய் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகிக்கிறது.

பொதுவாக, சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகள், கொட்டைகள், விதைகள், பழங்கள், தாவரங்கள் அல்லது தானியங்களிலிருந்து அவை பிரித்தெடுக்கப்பட்டு, நசுக்கி, அழுத்தம் கொடுக்கப்பட்டு அல்லது பதப்படுத்தப்படுகின்றன. நிறைவுற்ற கொழுப்பு, மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட அவற்றின் அதிக கொழுப்பு உள்ளடக்கத்தால் அவை வகைப்படுத்தப்படுகின்றன.

சமையல் எண்ணெய்களை ஆற்றலின் பெட்டகம் என்று சொல்லலாம். மிகவும் குறைந்த அளவில் அதிக வெப்ப ஆற்றலைத் தரக்கூடியது எண்ணெய். கொழுப்பில் கரையும் தன்மையுள்ள உயிர்ச்சத்துகளை ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு எடுத்துச் செல்லும் ஊடகமாகச் செயல்படுகிறது. உணவுக் குழாய், இரைப்பையில் உள்ள மென் திசுக்களைப் புற்றுநோயில் இருந்து பாதுகாக்கத் துணைபுரிகிறது.

நம்மில் பலர் எண்ணெயும், கொழுப்பும் வேறு வேறு என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை என்னவெனில், எண்ணெய் என்பது திட நிலையில் உள்ள கொழுப்பு. கொழுப்பு என்பது திட நிலையில் உள்ள எண்ணெய். கொழுப்பும், எண்ணெயும் புறத்தோற்றத்தில்தான் வித்தியாசப்படுகின்றனவே தவிர, வேதியியல் மூலக்கூறு அடிப்படையில் இரண்டும் ஒன்றுதான்.

பொதுவாக ஒரு மனிதனுக்குத் தினமும் தேவைப்படும் சக்தியானது 1800 கலோரிகள் என வைத்துக் கொள்வோம். இந்த மொத்தக் கலோரிகள் தேவையில் சுமார் 4 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் சமையல் எண்ணெயை பாதுகாப்பாக அன்றாடம் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது 72 கலோரிகள் அளவு வெப்பத்தைத் தரக்கூடிய சமையல் எண்ணெயைப் பயன்படுத்தலாம். கிராம் அளவில் கணக்கிட்டால் 9 கிராம் அளவு உள்ள எண்ணெய் போதும்.

இந்தியாவைப் பொருத்த மட்டில், ஒரு மாநிலத்தில் பரம்பரை பரம்பரையாக தேங்காய் எண்ணெயும், வடஇந்தியாவில் கடுகு எண்ணெய், மற்றொரு மாநிலத்தில் பாமாயில் என மாநிலத்திற்கு மாநிலம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வெவ்வேறாய் இருக்கிறது. இவை அனைத்தும் அந்தந்தச் சூழ்நிலை மற்றும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற மாதிரி மாறுபடும்.

இருப்பினும் சமீபகாலமாக தேங்காய் எண்ணெயும், கடுகு எண்ணெயும் மிகப் பிரபலம் அடைந்துள்ளது. பழந்தமிழர்களின் பாரம்பரிய எண்ணெய் எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய்தான்.அண்மையில் சூரியகாந்தி எண்ணெய், மக்காச்சோள எண்ணெய், தவிட்டு எண்ணெய், பருத்திகொட்டை எண்ணெய் போன்ற எண்ணெய்களையும் சமையலுக்குப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறோம். சமையல் எண்ணெயின் தன்மை, அதில் அடங்கியிருக்கும் ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.

ஒரு எண்ணெயில் எந்த அளவு ஹைட்ரஜன் அணுக்கள் உள்ளனவோ அதை அடிப்படையாகக் கொண்டு கொழுப்பு செறிவுற்ற (Saturated), கொழுப்பு செறிவற்ற (Unsatuarated) என இரண்டு பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். கொழுப்பு எந்தவிதமான சிதைவு மாற்றங்களும் இல்லாமல் கெட்டியான நிலையில் இருக்கும்.

வெண்ணெய், நெய், விலங்கினங்களின் கொழுப்பு வகைகள், தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்றவை செறிவுற்ற கொழுப்புக்கு உதாரணங்கள். இவற்றில் தேங்காய் எண்ணெயும், பாமாயிலும் திரவ நிலையில் இருந்தாலும், வேதியியல் அடிப்படையில் செயல்படும் போது மற்றவகையான செறிவுற்ற கொழுப்பு போலவே இருக்கும்.

இந்தக் கொழுப்பு வகையில் வருகிற சமையல் எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்தும்போது மிக்க கவனம் தேவை. ஏனென்றால், இவ்வகையான சமையல் எண்ணெய்கள் ஓரளவு நன்மை தந்தாலும், இவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் இதயம் மற்றும் இதயம் தொடர்புடைய ரத்தக் குழாய்களுக்குப் பலவகையான சிக்கல்களை காலப்போக்கில் ஏற்படுத்தக்கூடும்.

இவ்வகையான சமையல் எண்ணெய்கள் தோலுக்குத்தான் சிறந்தவை. இதயத்துக்கு அல்ல என்று சொல்வதுண்டு (Oil is good for the skin but bad for the heart). அளவுக்கு அதிகமாக தினசரி சமையலில் செறிவுற்ற எண்ணெயைப் பயன்படுத்துவதால் இதயத்தில் பலவகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக இதயத் தமனிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.

இவ்வகையான எண்ணெய் ரத்தக் குழாய்களில் கொலஸ்ட்ராலாக அளவுக்கு அதிகமாகச் சேர்ந்துவிடுகிறது. அளவுக்கு அதிகமாகப் படியும் கொலஸ்ட்ரால் இதயத் தமனிகளின் உள்விட்டத்தை முழுமையாக அடைப்பதால் இதயத்துக்குச் செல்லும் ரத்தமானது தடைபட்டு இதயத் தமனி நோய் ஏற்படுகிறது.

பெயருக்கு ஏற்றார்போல் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நம் உடலுக்கு இன்றியமையாதவையாக இருக்கின்றன. நம் உடலின் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் பல முக்கியமான பணிகளை நிறைவேற்றுவது இவைதான். ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நமது உடலில் உள்ள செல்களைப் பராமரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. மேலும் இவ்வகை அமிலங்கள், பிராஸ்டாகிளாண்டென் (Prosta Glanden) என்ற ஹார்மோன் சுரக்கத் துணைபுரிகிறது. ரத்த உறைவைத் தடுக்கவும் ரத்த அழுத்த அளவை சீராக வைத்துக் கொள்ளவும், நோய் தடுக்கும் ஆற்றல் அதிகமாக்கவும் இவை துணை புரிகின்றன. இதயத்தைப் பாதுகாப்பதிலும் ஒமேகா கொழுப்பு அமிலங்களுக்குப் பெரும் பங்கு உண்டு.

ஒமேகா கொழுப்பு அமிலங்களை தேவையான அளவில் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மை தரும் கொலஸ்ட்ரால் உற்பத்தியை கல்லீரல் அதிகமாக்குகிறது. நன்மைதரும் கொலஸ்ட்ரால் இதயத் தமனிகளின் உள் பகுதியில் படியும் கொழுப்புத் துகள்களை அகற்றி, ரத்தக் குழாய்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதால்தான் இவற்றை ரத்தக் குழாய்களைத் தூய்மைப்படுத்தும் துப்புரவாளர்கள் என்று குறிப்பிடுவதுண்டு. எனவே ரத்தத்தில் நன்மை தரும் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாவதால் இதயத் தமனி அடைப்புகளில் இருந்து இதயத்துக்குப் பாதுகாப்பு கிடைக்கிறது.

ஒமேகா 3 கொழுப்பு எண்ணெய்கள், மீன் வகை உணவுகளிலும், சோயா, மொச்சையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயிலும் மிக அதிகமாக உள்ளன. இதுபோல் ஒமேகா 6 கொழுப்பு எண்ணெய்கள், சூரியகாந்தி எண்ணெய், மக்காச்சோள எண்ணெய்  போன்றவற்றில் மிக  அதிகமாக உள்ளது. ஒரு தனி மனிதனின் அன்றாட எண்ணெய்த் தேவையில் பியூஃபா வகை கொழுப்பு, மூன்றில் ஒரு பங்கு என்ற அளவில் சேர்க்கப்பட வேண்டும்.

மியூஃபா வகை கொழுப்பு கடுகு எண்ணெயிலும், கடலை எண்ணெயிலும் அதிக அளவில் உள்ளது. எண்ணெயில் பல வகைகள் இருந்தாலும், இதயத்துக்கு ஏற்ற மிகச்சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெயைத்தான்   சொல்ல வேண்டும். உலக அளவில் மேலை நாடுகளில் இதயத்துக்கு ஏற்ற சிறந்த சமையல் எண்ணெயாக ஆலிவ் எண்ணெய்தான் கருதப்படுகிறது.

இந்த எண்ணெயைச் சமையலுக்குப் பயன்படுத்தும் மேலை நாடுகளில் இதய நோய்களின் தாக்கம் மிகமிகக்குறைவாக இருப்பதாக பலவகையான ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன. ஆனால் இதன் விலை மிகவும் அதிகமாக இருப்பதால் நம் நாட்டுச் சூழலுக்கு இந்த எண்ணெய் ஒத்துவருவதில்லை. மேலும் இதன் மணமானது நம்முடைய சுவைக்கு ஏற்றதாகவும் இல்லை.

நம் நாட்டில் பெரும்பாலும் பலவகையான சாலடுகள் தயாரிக்கத்தான் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. உலக அளவில் ஆலிவ் எண்ணெய் சிறந்ததாகக் கருதப்பட்டாலும் நம் நாட்டு மக்களின் சுவைக்கு ஏற்ப, நமது அன்றாடத் தேவைக்கு ஏற்ப, நமது சமையல் முறைக்கு ஏற்ப நமது உடல் நலத்துக்கு ஏற்ப, குறிப்பாக இதயத்தின் நலம் காக்கும் தன்மையுள்ள சிறந்த சமையல் எண்ணெய் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

எனவே நம் நாட்டில் பயன்படுத்தும் சிறந்த சமையல் எண்ணெய்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை அன்றாட சமையலுக்கு ஏற்றபடி கலவையாகப் பயன்படுத்துவதுதான் சரியான வழிமுறை.செறியுற்ற கொழுப்பு என்றும் பியூஃபா கொழுப்பு என்றும் மியூஃபா கொழுப்பு என்ற இந்த மூன்று வகையான கொழுப்பு வகைகளில் இருந்து இதயத்தைப் பாதுகாக்கக்கூடிய எண்ணெய்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை 1: 1 : 1 என்ற அளவில் தினசரி சமையலுக்கு அளவாகப் பயன்படுத்தினால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

அதாவது நல்லெண்ணெய் (எள் எண்ணெய்), சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய் இவற்றை இதயத்துக்கு ஏற்ற சிறந்த எண்ணெய்களாக நாம் தேர்வு செய்யலாம். இந்த எண்ணெய்களைத் தினசரி சமையலுக்கு மாறி மாறி தனித்தனியாக பயன்படுத்தலாம். அல்லது இந்த மூன்று எண்ணெய்களையும் 1: 1: 1:  என்ற சம அளவில் கலந்து தினமும் சமையலுக்குப் பயன்படுத்துவதால் இதயத்தின் நலனைப் பாதுகாக்க முடியும். சமையல் எண்ணெய்களைத் தேர்ந்தெடுக்கும்போது இன்னொரு விஷயத்தையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

நமது உடல் அமைப்பு அன்றாட உடல் உழைப்பு, நமது அன்றாட தேவை இவற்றை அடிப்படையாகக் கொண்டு எண்ணெயை அளவோடு பயன்படுத்தினால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். 

Editor's Choice
கிராமங்களில் காணப்படும் மூலிகைகள் எண்ணற்றவை அதில் மிகவும் குறிப்பிடத்தக்கது வல்லாரை.

வல்லாரை செடியின் இலையை நிழலில் உலர்த்தி நன்குப் பொடித்து, பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் குடித்தால் வயிற்றுப் பூச்சிகள் அழிந்துபோகும்.

வல்லாரை இலையை நன்கு சுத்தம் செய்து, அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து சட்னியாக அரைத்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் மூளைச் சோர்வை நீக்கி, ஞாபக மறதியைக் குணமாக்கும். ஆனால் வல்லாரைச் சட்னியில் புளியை அறவே தவிர்க்க வேண்டும். உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.

வல்லாரை இலையுடன் சம அளவு கீழாநெல்லி இலை சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நீர் எரிச்சல் தீரும்.

குழந்தைகளுக்குத் தினமும் 10 வல்லாரை இலைகளை பச்சையாக மென்று சாப்பிடக் கொடுத்தால் மூளை நரம்புகள் வலுப்பெறும். தொண்டையில் ஏற்படும் அவஸ்தைகள் குறையும்.

வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

வல்லாரைப் பொடியைக் கொண்டு பல் துலக்கினால் பல்லில் உள்ள கறைகளைப் போக்கும். பல் ஈறுகளைப் பலப்படுத்தும்.

இளைப்பு, இருமல், தொண்டைக்கட்டு போன்றவற்றை வல்லாரை போக்கும். காசநோயாளிகளுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும்.

வல்லாரை, கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் போன்றவற்றைப் போக்கி கண் நரம்புகளுக்கு நன்மை அளிக்கும்.

நீரிழிவு நோயாளிகள் வல்லாரைக் கீரை உண்பது நல்லது. இக்கீரை மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது.

யானைக்கால் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் வல்லாரை இலையை அரைத்துக் கட்டினால் நோயின் தாக்கம் குறையும். அதுபோல விரைவீக்கம், வாயு வீக்கம், கட்டிகளின் மீது பூசி வந்தால் குணம் கிட்டும்.

வல்லாரை இலையை முறைப்படி எண்ணெயாக்கி, தினமும் தலையில் தேய்த்து வந்தால் உடல் சூடு தணியும். உடல் எரிச்சல் நீங்கும்.

பக்கம் 20 / 49