Editor's Choice

பீட்ரூட்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கி உள்ளன. அதனை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

பீட்ரூட்டில் உள்ள பொருள்கள் தமனிச் சுவர்களை விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை சீராக்கும். எனவே அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பீட்ரூட்டை தினமும் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீராகும்.

இதில் பீட்டா சையனின், மற்றும் கரையக்கூடிய நார்ச்சட்த்துகள் அடங்கி உள்ளன. இவை செல்களுக்கு வலுவூட்டவும், இரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்புகளை கரைத்து நெஞ்சு வலி, பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.

 பீட்ரூட்டில் போலிக் அமிலம் அதிகமாக உள்ளது. இவை கர்ப்பிணிகளுக்கு தேவையான முக்கிய சத்தாகும். இதை தவிர பீட்ரூட்டில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் இரத்த சோகை ஏற்படாது.
 
தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸை குடித்தால் எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராது. மேலும் களைப்பு மற்றும் உடல் சோர்வு போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கிறது.

இதில் உள்ள சையனின்கள் புற்றுநோயை உண்டாக்கும் கட்டிகளின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தி புற்று நோய் வராமல் தடுக்கும்.

இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து மலச்சிக்கலை சரி செய்யும்.

பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், 
பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில்
பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த
டானிக். பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.

ல மாதங்களாக மலச்சிக்கலினால் துன்பப்படுபவர்களும், மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை தண்ணீருடன்
கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் அருந்த வேண்டும். பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில்
கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு இரண்டு பங்கு பீட்ரூட் ஜூசுடன் ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால் பிரச்னையிலிருந்து
விடுபடலாம். புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய்
பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட்.
Editor's Choice
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் அவசரகால நடவடிக்கைகளை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க பாராளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் வரை அவசரகால அதிகாரங்களை நீட்டிப்பதற்கு ஆதரவாக ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் ஒப்புதல் அளித்தது, மேலும் கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு விதிமுறைகளை படிப்படியாக தளர்த்துவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தையும் அவர்கள் அங்கீகரித்தனர்.
 
இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள குடிமக்கள் அனைவரும் இலவசமாக வாரத்திற்கு இரண்டு முறை கொரோனா தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் எதிர்காலத்தில் பள்ளிகள் மற்றும் பணியிடங்களில் அனைவருக்கும் ராபிட் விரைவுச் சோதனை செய்யப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. 
 
இதுதொடர்பாக அந்நாட்டு சுகாதாரத்துறை செயலாளர் கூறுகையில், “கொரோனா பெருந்தொற்று காரணமாக நாம் இழந்துவிட்ட பழைய வாழ்க்கை முறையை மீண்டும் பெறுவதற்கு தடுப்பூசி செலுத்திக்கொள்வது தான் சிறந்த வழி. பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும். தடுப்பூசி திட்டத்தில் நாங்கள் தொடர்ந்து நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளோம். அதனால் தற்போது இங்கிலாந்தில் உள்ள அனைவருக்கும் இலவச விரைவுச் சோதனை செய்வதற்கான வழிவகைகள் செய்துவருகிறோம். 10-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள், தங்கள் தொழிலாளர்களுக்கு விரைவுச் சோதனை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தலாம். மேலும் பள்ளிகளில் வழக்கமான சோதனைகள் தொடரும்” என்று அவர் தெரிவித்தார்.
 
முன்னதாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அங்கு இலவசமாக விரைவுச் சோதனை செய்யப்படுகிறது. மேலும் நாட்டில் இதுவரை 31.4 லட்சம் பேருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 
Editor's Choice

டெமென்ஷியா ப்ரேகாக்ஸ் (dementia Praecox) என்று ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட இந்நோய்க்கான அறிகுறிகள் மற்றும் இந்நோயின் நடத்தை எப்படி உண்டாகிறது என்று இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

பொதுவாக, நம் உடலில் உள்ள வேதிப்பொருட்களின் மாற்றங்களால்தான் பலருக்கு மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரும். சிலருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள் இருந்தால், மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரும். இன்னும் சிலருக்குப் பரம்பரைத் தன்மையில்கூட மனநோய்கள் வருவதுண்டு. ஆனால் இந்நோய் இந்தக் குறைபாடுகளால் வருவதாகத் தெரியவில்லை. ஆனால், இந்தக் குறைபாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து தாக்கும்போது, இப்படி நடந்துகொள்ள வாய்ப்புகள் அதிகம் என்று மட்டுமே ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அண்மையில் நடந்த ஆராய்ச்சிகளின்படி, அன்பு இல்லாத, பாசத்தைக் கொட்டி சீராட்டி வளர்க்கப்படாத பெற்றோர்களிடம் வளரும் குழந்தைகளுக்கு இந்தப் பாதிப்பு அதிகம் என்று கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இந்நோய்க்கான வேறு அறிகுறிகள்

  • பொதுவாக, காலத்திற்கும் இடத்திற்கும் பொருத்தமில்லாதபடி இவர்கள் நடந்துகொள்வார்கள்.
  • தங்களுக்குள் எதோ ஒரு குரல் கேட்பதாகவும், அதற்குக் கட்டுப்பட்டு நடப்பதாகவும் காட்டிக் கொள்வார்கள்.
  • ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசும்போது தெளிவான ஆதாரம் இல்லாமல் பேசுவார்கள். மடக்கிக் கேட்டால், பேச்சைத் துண்டித்துக் கொள்வார்கள். அடிக்கடி நீண்ட நேரம் மௌனத்தைக் கடைப்பிடிப்பார்கள்.
  • ஒரு சிலர் சகஜமாகப் பேசுவார்கள். தாங்கள் படும் துன்பத்தை முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம்கூட ஒளிவுமறைவு இன்றி சொல்லிக்கொண்டு இருப்பார்கள். ‘எல்லாரும் தன்னை ஒதுக்குகிறார்கள். புருஷன் தன்னை கொடுமைப்படுத்துகிறான்’ இப்படிப் பேச்சு இருக்கும்.
  • இந்நோயால் இன்னும் பாதிக்கப்பட்ட சிலர், பெரிய சந்தேகப் பேர்வழியாக இருப்பார்கள். கணவன் எந்த செயலைச் செய்தாலும் அதை சந்தேகப்பட்டுப் பேசி, சண்டையை வரவழைத்துக்கொண்டே இருப்பார்கள். ஆண்களைவிட பெண்கள்தான் இந்தப் பாதிப்புக்கு அதிகம் ஆட்படுகிறார்கள்.
  • அதீத கற்பனைப் பேச்சும், நடத்தையும்கூட இந்நோய்க்கு அறிகுறியாகச் சொல்லப்படுகிறது. ‘மீனம்பாக்கம் விமான நிலையம் இருக்கும் இடம் எங்களது. என் கொள்ளுத் தாத்தாதான் அதை தானமாகக் கொடுத்தார்’ என்பார்கள். எதாவது கல்யாண மண்டபத்தில் தரையைச் சுத்தம் செய்யும் வேலையில் இருப்பார்கள். ‘ஜனாதிபதி என் நெருங்கிய உறவினர்தான். ஏதோ என் போறாத காலம் இப்படி இருக்கேன்’ என்று புலம்புவார்கள்.
  • இவர்களின் பேச்சில் ஒழுங்கு இருக்கும். கட்டுக்கோப்பு இருக்கும். சில சமயம் நம்பும்படியாகவும் இருக்கும். ஆனால், அது மிகைப்படுத்தப்பட்ட கற்பனையாகவே இருக்கும். இதற்குக் காரணம் எதிராளியைவிட, அவரே கற்பனையை உண்மை என்று நம்புவதன் விளைவுதான்.
  • சில மருமகள்கள் தீக்குளிப்பதைச் சொல்கிறார்கள்.
  • மேலே சொல்லப்பட்ட நடவடிக்கைகள் அதிக அளவு ஒருவரிடத்தில் இருந்தால் அவரை டெமென்ஷியா ப்ரேகாக்ஸ் என்கிற மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்ற முடிவுக்கு வரலாம் என்கிறார்கள். இது ஒருவகையில் மனச்சிதைவு நோயை ஒட்டியதுதான். என்றாலும் அதற்குண்டான அறிகுறிகளை வைத்து இதுவும் இந்நோய்தான் என்ற முடிவுக்கு வரமுடியாது என்கிறார்கள் மருத்துவர்கள்.
  • இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை எளிதில் குணப்படுத்தி விடமுடியும் என்கிறார்கள். மனதளவில் ஆரோக்கிய மாற்றங்கள், உடலளவில் நல்ல உடற்பயிற்சி, அன்பான சுற்றுச்சூழல் இருந்தாலே இதை எளிதில் நிவர்த்தி செய்யமுடியும் என்கிறார்கள்.

வாக்கிங், ஜிம்

வாக்கிங் கட்டாயம் போகவேண்டும். குறைந்தது 30 முதல் 40 நிமிடங்கள் தொடர் வாக்கிங் அவசியம். வேகமாக நடக்கவேண்டுமே தவிர, ஓடக்கூடாது. இது முக்கியம். நடைப்பயிற்சிதான் உடலையும், மனதையும் ஒருமுகப்படுத்துவதாக அமையும். ஜிம்முக்குப் போவது ரொம்ப நல்லது.

நல்ல மூடுக்கு வர முயற்சித்தல்

சம்பந்தப்பட்டவரை நல்ல சந்தோஷமான மூடில் இருக்கும்படி செய்யவேண்டும். குடும்பத்தாரின் கனிவான பேச்சு, நண்பர்களின் வாழ்த்துக்கள், உறவினர்களின் பாராட்டுக்கள் அவர் நல்ல மூடுக்கு வர உதவக்கூடிய உத்திகள்.

ஒமேகா_3

இம்மனநிலையில் இருப்பவர்கள் ஒமேகா - 3 கொழுப்புள்ள மீன்களை உணவில் சேர்த்துக்கொண்டால், அதில் உள்ள அமிலம் மூளையில் உள்ள வேதிப்பொருட்களுடன் கலந்து நல்ல மூட் உருவாக உதவும் என்கிறார்கள். இதற்காக நீங்கள் உங்கள் மருத்துவரை ஒருமுறை கலந்தாலோசிக்க வேண்டும்.

மௌனமாக இருக்கவிடக் கூடாது

இத்தகைய மனநிலை பாதிப்பில் இருப்பவர்கள் அடிக்கடி நீண்ட நேரம் மௌனமாக இருப்பார்கள். உடன் இருப்பவர்கள்தான், அவர்களின் மௌனத்தைக் கலைக்க ஏதாவது செய்யவேண்டும். அவருக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர், பிடித்த நடிகர், நடிகை, அரசியல் தலைவர்கள் பற்றி அவர்களுடன் விவாதிக்கலாம். அவர்களுக்குச் சாதகமாகப் பேசுவது அவசியம்.

தனியறையில் தூங்கவிடக் கூடாது

இப்படிப்பட்டவர்களை தனியறையில் தூங்கவிடக் கூடாது. நம் அருகில் அம்மாவோ, தோழியோ இருக்கிறார்கள் என்ற நினைப்பே அவர்களை உறக்கத்தில் மற்ற சிந்தனைக்கு அழைத்துச் செல்லாது என்கிறார்கள். தூக்கத்தில் எழுந்து நடந்தால், அவர் எங்கே போகிறார் என்றுதான் பார்ப்போமே என்று அவரைப் பின்தொடர்வது போன்ற விபரீத விளையாட்டுக்களில் ஒருபோதும் இறங்கிவிடாதீர்கள்.

யோகா, தியானம்

மனதில்மாற்று எண்ணங்கள் உருவாகாமல் இருக்க முறையான யோகாவும், தியானமும் இவர்களுக்கு உதவும்.

பொழுதுபோக்கு

புதிதாக ஏதாவது பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடலாம். சுற்றுலா. வயலின், வீணை வாசிக்கக் கற்றுக்கொள்ளுதல், இப்படி பயனுள்ள பொழுதுபோக்காக இருந்தால் மூளைக்கும் வேலை கொடுத்ததாகும். மனதிற்கும் உற்சாகமாக இருக்கும். வேறு சிந்தனைகளை உருவாகவிடாமல் இவை தடுக்கும்.

Editor's Choice

வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயமாக இருந்தாலும், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்சினை பெரிதாகிவிடும். தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு, அண்ணம் ஆகிய பகுதிகளில் கடுகளவு தோன்றும் கொப்புளங்கள், குழிப்புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும்.

சாப்பிடும்போதும் பேசும்போதும் வலி அதிகமாகும். கழுத்தில் நெறிகட்டும், காய்ச்சல் வரும், உடல்வலி, தலைவலி எனத் தொல்லைகள் தொடரும்.

ஸ்ட்ரெஸ், மன அழுத்தம் பேக்டீரியா, புஞ்சனம், வைரஸ் இவற்றாலும் உண்டாகிறது. வைட்டமின் ‘பி’ சத்துக் குறைவாலும், இரைப்பை மற்றும் குடல் சார்ந்த நோய்களாலும் ஏற்படுகிறது. சிக்ரெட், பீடி புகைக்கும் பழக்கம் இருந்தாலும் வாய்ப்புண் ஏற்படும். வாய்ப்புண்கள் தொடர்ந்து நீண்ட நாட்கள் காணப்பட்டால் புற்று நோயாக மாறவும் சந்தர்ப்பங்கள் உண்டு. இதனால் உணவு விழுங்குவதில் சிரமம் ஏற்படும் வாயில் துர்நாற்ற்றம் ஏற்படும்.

ஆண்களைவிடப் பெண்களுக்கு, இந்த தொல்லை அதிகம். காரணம், பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில், ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. இதனால், வாய்ப்புண் வருகிறது.

ஜீரணக்கோளாறு மற்றும் மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். உடல் குளிர்ச்சியாக இருக்க அதிக அளவு தண்ணீர், இளநீர் மற்றும் பழங்களை எடுத்துக் கொள்ளவேண்டும். பற்கள் மற்றும் வாயினை சுத்தமாக பராமரிக்கவேண்டும். மனஅழுத்தம் ஏற்படாதவாறு தியானம், யோகா பயிற்சிகளை செய்யவேண்டும்.

நெல்லிக்காய் இலைகளை வேகவைத்த நீரில், அடிக்கடி வாய்க்கொப்பளித்து வர வாய்ப்புண் ஆறும். கடுக்காய், நெல்லிக்காய் தான்றிக்காய் சேர்ந்த திரிபலா சூரணத்தினால் வாய்க்கொப்பளிக்க புண் ஆறும்.

மணத்தக்காளி இலையினை வாயில் போட்டு மென்று சிறிதுநேரம் வாயிலே வைத்திருந்து விழுங்கலாம். முற்றின அதாவது கொப்பரை தேங்காயையும் பயன்படுத்தலாம். பாலில் சிறிது தேன் அல்லது பசு வெண்ணெய் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

Editor's Choice

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு உளவியல் அல்லது நரம்பியல் சார்ந்த பிரச்னைகள் உருவாவதாக தெரிய வந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கு முன்பே இதுபோன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடைந்தவர்களுக்கும் மீண்டும் உளவியல் மற்றும் நரம்பியல் சார்ந்த கோளாறுகள் ஏற்படுவதும் இதில் அடக்கம்.

ஆனால், கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலோ அல்லது அவசர சிகிச்சை பிரிவுகளிலோ அனுமதிக்கப்பட்டவர்களுக்கு இதைவிட அதிகமான அபாயம் உள்ளதாக மேலும் தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரஸ் நேரடியாக மூளையில் தாக்கத்தை செலுத்துவதும், பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதலான மன அழுத்தம் இருப்பதும் இதற்கான ஒருங்கிணைந்த காரணங்களாக உள்ளன.

இது தொடர்பான ஆய்வை மேற்கொண்ட பிரிட்டனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த ஐந்து லட்சம் நோயாளிகளின் மின்னணு மருத்துவ தரவை ஆய்வு செய்தனர். அப்போது கீழுள்ள காரணங்கள் உள்பட பொதுவான 14 உளவியல் மற்றும் நரம்பியல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்தனர்:

  • மூளை ரத்தக்கசிவு
  • பக்கவாதம்
  • பார்கின்சன்
  • குய்லின்-பார் நோய்க்குறி
  • மறதிநோய்
  • மனநோய்
  • மனநிலை கோளாறுகள்

இவற்றில் பதற்றம் மற்றும் மனநல கோளாறுகளே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் ஏற்படும் பிரச்னையாக உள்ளது. மேலும் இவை மிகவும் நோய்வாய்ப்பட்ட அல்லது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அனுபவம் சார்ந்த மன அழுத்தத்தினாலேயே ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் அறிந்துள்ளனர்.

இதை தவிர்த்து பக்கவாதம் மற்றும் மறதிநோய் போன்றவற்றிற்கு உடலில் வைரஸ் ஏற்படுத்தும் நேரடி தாக்கமோ, பொதுவாக தொற்றுகளுக்கு எதிராக உடல் ஆற்றும் எதிர்வினையோ காரணமாக இருக்கலாம்.

எனினும், கோவிட்-19 நோய்த்தொற்றானது பார்கின்சன் அல்லது குய்லின்-பார் நோய்க்குறியின் அபாயத்தை அதிகரிக்கும் காரணியாக இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

இது முன்னோட்ட ஆராய்ச்சி ஆக மேற்கொள்ளப்பட்டதால், இதில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு இணை நோய்கள் ஏற்பட்டதற்கு கொரோனாதான் காரணமா என்பதை ஆராய்ச்சியாளர்களால் உறுதிபட தெரிவிக்க முடியவில்லை. ஏனெனில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்கு பின்னர் பக்கவாதத்தாலோ, மனஅழுத்தத்தாலோ பாதிக்கப்பட்டதற்கு கொரோனா காரணமாக இல்லாமலும் இருக்கலாம்.

எனினும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கொண்ட குழுவை காய்ச்சல் மற்றும் மற்ற சுவாசம் சார்ந்த பிரச்னைகள் கொண்ட நோயாளிகளின் குழுக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்ததில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழுவினருக்கே மற்ற குழுவினரை விட மூளை சார்ந்த பிரச்னைகள் அதிகம் ஏற்படுவது தெரிய வந்துள்ளதாக இந்த ஆய்வை மேற்கொண்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மற்ற சுவாச நோய்த்தொற்றுகளைக் காட்டிலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் அல்லது நரம்பியல் கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்பு 16% அதிகம் என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி, கொரோனாவால் எந்தளவுக்கு ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தாரோ அந்தளவுக்கு அவர்களுக்கு மனநலம் அல்லது மூளை சார்ந்த பிரச்னைகளும் ஏற்படுவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Editor's Choice

இஞ்சி சமையலில் உணவின் சுவை மற்றும் மணத்தை அதிகரிக்க பயன்படுவது மட்டுமின்றி, சளி, இருமல், செரிமான பிரச்சனைகள், கர்ப்ப கால குமட்டல் போன்ற பல பிரச்சனைகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

இஞ்சியை சுத்தமாக நீரில் கழுவி, அதன் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து வடிகட்டி, பாதி எலுமிச்சை சாறு மற்று தேவையான அளவு தேன் கலந்தால், இஞ்சி ஜூஸ் தயார்.

இஞ்சியில் உள்ள ஆன்டி-டயாபடிக் தன்மை, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. எனவ சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஒரு டம்ளர் இஞ்சி ஜூஸைப் பருகி வந்தால், நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

இஞ்சி ஜூஸைக் குடித்து வந்தால், மூளையில் புரோட்டீன் அளவு அதிகரித்து, மூளையின் ஆரோக்கியம் மேம்படும். இப்படி புரோட்டீன் அளவு அதிகரித்தால், மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.

புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானால், இஞ்சியை ஜூஸ் செய்து குடித்து வாருங்கள். குறிப்பாக ஆண்கள் பருகினால், புரோஸ்டேட் புற்றுநோய் வராது.

இஞ்சி வயிற்றுப் பிரச்சனைகளான செரிமானமின்மை, பசியின்மை, வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல் போன்றவற்றில் இருந்து நிவாரணம் தருவதால், இஞ்சியைக் கொண்டு ஜூஸ் தயாரித்து அடிக்கடி பருகி வந்தால், இரைப்பைக் குடல் புற்றுநோய் வரும் அபாயம் குறைவதோடு, வராமலும் தடுக்கப்படும்.

இஞ்சி இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுவதோடு, உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவையும் குறைத்து, சீராக பராமரிக்க உதவும். இதனால் இதய ஆரோக்கியமும் மேம்படும்.

பக்கம் 22 / 49