Editor's Choice

சிலர் மது அருந்திய பின்னர் திடீரென ஆங்கிலத்தில் பேசத் தொடங்குவதை நீங்கள் பல திரைப்படங்களில் பார்த்திருக்க முடியும். அவர்கள் முழு நம்பிக்கையுடன் அச்சமின்றி ஆங்கிலத்தில் பேசத் தொடங்குகிறார்கள். அதன் பிறகு அவர்கள் ஒவ்வொரு கேள்விக்கும் ஆங்கிலத்திலும் பதிலளிக்க விரும்புகிறார்கள்.

ஆனால், அது அவர்களது இயல்பான குணாதிசயமாக இருக்காது. இது ஏன் நடக்கிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? உண்மையில், இந்த நடவடிக்கைக்கு பின்னால் ஒரு அறிவியல் காரணம் உள்ளது. இந்த கேள்விக்கான பதில் ஒரு ஆராய்ச்சியின் முடிவில் கிடைத்துள்ளது.  

'ஜர்னல் ஆஃப் சைக்கோஃபார்மகாலஜி' ('Journal of Psychopharmacology') என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, 1-2 பெக் ஆல்கஹால் எடுத்துக் கொண்ட பிறகு சிலரின் பதட்டம் குறைந்துவிடுகிறது. அவர்களின் தன்னம்பிக்கை அதிகரித்து பிற மொழியில் பேசத் தொடங்குகிறார்கள்.

வழக்கமாக அந்த மொழியில் பேச அவர்களுக்கு தயக்கம் இருந்திருக்கும். இந்தியாவை பொருத்த வரையில் மது அருந்திய பலரும் ஆங்கிலத்தில் பேச ஆரம்பிக்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சியின் படி, ஆல்கஹால் குடிப்பது மக்களின் நினைவகத்தையும் (Concentration Power) செறிவு சக்தியையும் பாதிக்கிறது. இந்த நேரத்தில், சிலரின் ஆளுமை (Personality) முற்றிலும் மாறுகிறது மற்றும் அவர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். இது நடந்தவுடன், அவர்களின் ஆழ்மனது இதுவரை நம்பிக்கை குறைவாக இருந்த விஷயங்களில் கவனம் செலுத்தத் தொடங்குகிறது. அவர்கள் தங்கள் உணர்வுடன் இருக்கும்போது செய்யத் தயங்குபவற்றை, குடிபோதையில் அச்சமின்றி செய்கிறார்கள்.

வேறொரு மொழியைப் பேசுவதைத் தவிர, மது அருந்திய பிறகு வேறு விஷயங்களைச் செய்யத் தொடங்குகிறார்கள். சாதாரண நேரத்தில் நடனம் ஆடுவது அல்லது பாடவோ தயங்கும் மக்கள், மது அருந்திய பிறகு, அதிக நம்பிக்கையுடன் அதை செய்கின்றனர். தயக்கத்தை உடைத்தெறிந்து மகிழ்ச்சி தரும் விஷயங்களை செய்கிறார்கள்.  

இனிமேல் யாராவது மது அருந்திய பிறகு ஆங்கிலம் பேசினாலோ அல்லது வித்தியாசமாக ஏதாவது செய்தாலோ அவரை கேலியும், கிண்டலும் செய்யவேண்டாம். பாவம் அது அவர்களின் உள்ளுணர்வை வெளிப்படுத்துவதற்கான உளவியல் ரீதியிலான செயல்பாடுகள் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.  

Editor's Choice

கொரோனா பரவல் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடித்தாலும், கொரோனா உருமாற்றம் பெற்று அதிதீவிரமாக பரவி வருகிறது. கடந்தாண்டு நவம்பர் முதல் இந்தியா உள்ளிட்ட பல நாட்டு பயணிகளுக்கு சீனா தடை விதித்தது.

இந்நிலையில், சீனாவின் தயாரிப்பு கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே சீனாவுக்குள் வர அனுமதிக்கப்படும் என சீன தூதரகங்கள் அறிவித்துள்ளன.

சீனத் தயாரிப்பு கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் இல்லை என்பதால் சீனாவில் படிக்கும் 23 ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதில் பலரும் சீனாவில் மருத்துவக் கல்லூரிகளில் பயில்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ‛பிற நாட்டு தடுப்பு மருந்துகளை பரஸ்பரம் அனுமதிக்கும் நடைமுறை வரும், ஆனால் அதற்குக் கொஞ்சம் காலமெடுக்கும்' என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த அறிவிப்பு மாணவர்களுக்குப் பொருந்துமா என்பதை சீனா விளக்கவில்லை.

Editor's Choice
மீன் மாத்திரை அல்லது மீன் எண்ணெய் மாத்திரை என்பது பண்ணாமீன் (Cod) என்ற வகை மீனிலிருந்து எடுக்கப்படுகிறது. இந்த பண்ணா வகை மீனின் கல்லீரலில் இருந்து எடுக்கப்படுகிற எண்ணெயிலிருந்தே மீன் மாத்திரை தயாரிக்கப்படுகிறது. அதனால் இதை Cod Liver Oil என்கிறோம். இதில் வைட்டமின் A, வைட்டமின் D மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமாக இருக்கிறது.
 
கண் பார்வைக்கு வைட்டமின் ஏ நல்லது என்பதை அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். வைட்டமின் D யானது உணவில் இருக்கும் கால்சியத்தை கிரகித்துக் கொள்வதற்கும், செல்களின் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவி செய்யும்.
 
Omega 3 fatty acid கொலஸ்ட்ராலைக் குறைக்கும். உடலில் தேங்கும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதன் மூலம் உடை எடையையும் குறைக்கும். காயம் ஏற்பட்டால் காயத்தை ஆற்றும் அருமருந்தாக இருக்கிறது. மேலும் பாக்டீரியா, வைரஸ் எதிர்ப்புத்தன்மைக்காகவும் மீன் மாத்திரை பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற காரணங்களாலேயே மீன் மாத்திரையை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

மீன் மாத்திரை சத்தான மாத்திரை என்றாலும் மருத்துவரின் பரிந்துரையின்றி உட்கொள்ளக் கூடாது. அதேபோல் ஒரு நாளைக்கு ஒன்றுதான் சாப்பிட வேண்டும். ஒன்றுக்கும் மேல் சாப்பிடுவதால் Vitamin A Toxicity என்ற பின்விளைவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.’’

Editor's Choice

வேகவைத்த முட்டைகளை சாப்பிட்ட பிறகு சில உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். முட்டையில் நிறைய புரதம் உள்ளது, இது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. முட்டைகளில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. முட்டையை சாப்பிடுவது எலும்புகளை வலிமையாக்குகிறது. அதனால், ஜிம் போகும் பழக்கம் உள்ள மக்கள் வேகவைத்த முட்டைகளை அதிகம் உட்கொள்கிறார்கள். ஏனெனில் இதை சாப்பிட்ட பிறகு உடலுக்கு உடற்பயிற்சி செய்ய போதுமான சக்தி கிடைக்கிறது.

வேகவைத்த முட்டை சாப்பிட்ட எலுமிச்சை சாப்பிட பலர் விரும்புகிறார்கள், முட்டை சாப்பிட்ட பிறகு அதை செய்யக்கூடாது. இதைச் செய்வதன் மூலம், நமது இரத்த நாளங்கள் பாதிக்கப்படும். இதன் காரணமாக உங்களுக்கு மாரடைப்பு ஏற்படக்கூடும்.

வேக வைத்த முட்டையை சாப்பிட்ட பிறகு வாழைப்பழத்தை ஒருபோதும் உட்கொள்ளக்கூடாது. இதனால் மலச்சிக்கல், வாயு மற்றும் குடல் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

முட்டை சாப்பிட்ட உடனேயே பன்னீர் உட்கொள்ளக்கூடாது, ஏனெனில் முட்டை மற்றும் பன்னீர் இரண்டிலும் புரதம் ஏராளமாக காணப்படுகிறது. நீங்கள் தேவைக்கு அதிகமாக புரதத்தை உட்கொள்ளும்போது, ​​அதை ஜீரணிப்பது மிகவும் கடினம்.

வேகவைத்த முட்டைகளை சாப்பிட்ட பிறகு ஒருபோதும் மீன் உட்கொள்ளக்கூடாது. வேகவைத்த முட்டைகளை சாப்பிட்ட பிறகு நீங்கள் மீன் சாப்பிட்டால், இது தோல் தொடர்பான ஒவ்வாமைகளையும் ஏற்படுத்தும்.

Editor's Choice

பகலில் பணியாற்றுபவர்களுடன் ஒப்பிடுகையில், தொடர்ந்து இரவுப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு குறிப்பிட்ட வகை கேன்சர் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது என அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது.

இரவு பணி மேற்கொள்பவர்களுக்கு 24 மணி இயற்கையான சீன்களின் இயக்கத்தில் தடையை ஏற்படுத்துகிறது. அவர்களின் 'டி.என்.ஏ'விலும் பாதிப்பை உருவாக்குகிறது.   எதிர்காலத்தில் இரவில் பணியாற்றுபவர்களுக்கு கேன்சர் வரும் அபாயமும் உள்ளது.

இரவினால் உணவு செரிமானக் குழாய் பாதிக்கப்பட்டு அல்சர் போன்ற பாதிப்புகளும், தூக்கமின்மையால் அவதிப்படுவதாக பலர் தெரிவிக்கின்றனர்.

மாறிவரும் உலகில் இரவு பணி என்பது கட்டாயமாகியுள்ள நிலையில், தொடர்ந்து இரவு நேர பணி செய்யாமல், பகல், இரவு என மாறி பணி செய்தால் ஓரளவு நோயை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இரவு பணி முடித்துவிட்டு காலையில் வயிறு நிறைய சாப்பிடுவதால் உடல் பருமனாகி அதன் மூலம் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது.

காலையில் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்துவிட்டு, அதன்பிறகு சிறிய குளியல் போட்டு, காலை நேர உணவை எடுத்துக் கொள்ளவேண்டும். இதன்மூலம் நோய் உபாதையிலிருந்து தப்பிக்கலாம்.

Editor's Choice

சிலருக்கு என்ன தான் முகத்திற்கு பராமரிப்பு கொடுத்து வந்தாலும், வாயைச் சுற்றியுள்ள பகுதி மட்டும் கருப்பாக இருக்கும். இதற்கு சருமத்தில் மெலனின் என்னும் நிறமியின் உற்பத்தி அதிகரிப்பதால் தான் இது நிகழ்கிறது. அதுமட்டுமின்றி, சில மருத்துவ நிலைமைகள், மருந்துகள் மற்றும் வாழ்க்கை முறை பழக்கம் உள்ளிட்ட வேறு சில காரணிகளும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

பொதுவாக இம்மாதிரியான சரும கருமைகளுக்கு சிகிச்சை தேவையில்லை. ஆனால் ஒருசில இயற்கை வழிகளின் மூலம் இந்த பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கலாம். கீழே வாயைச் சுற்றி இருக்கும் கருமையைப் போக்க உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

கடலை மாவுடன், சருமத்தில் உள்ள கருமையைப் போக்க உதவும் மஞ்சளை சேர்த்துப் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும். அதற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து, அதில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது பால் அல்லது நீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ளவும். பின் அந்த கலவையை வாயைச் சுற்றி தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
 
ஓட்ஸ் ஸ்கரப் ஓட்ஸ் ஒரு அற்புதமான உணவுப் பொருள் மட்டுமின்றி, அழகு பராமரிப்பு பொருளும் கூட. இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சருமத்திற்கு பொலிவான தோற்றத்தைத் தர உதவும். அதற்கு சிறிது ஓட்ஸ் பொடியுடன், ஆலிவ் ஆயில் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்மையாக தேய்க்க வேண்டும். பின் குளிர்ந்த நுரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், விரைவில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
 
பப்பாளியில் ப்ளீச்சிங் பண்புகள் உள்ளன. இது சருமத்தில் உள்ள கருமையைப் போக்க உதவி புரியும். ஆகவே உங்கள் வாயைச் சுற்றி கருமையாக இருந்தால், நன்கு கனிந்த பப்பாளியை மசித்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, கருமையாக இருக்கும் வாய் பகுதியைச் சுற்றி தடவி, 30 நிமிடங்கள் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
 
பப்பாளியைப் போன்றே உருளைக்கிழங்கிலும் ப்ளீச்சிங் பண்புகள் உள்ளன. இது சருமத்தில் உள்ள அதிகப்படியான நிறமிகளை நீக்க உதவும். இந்த வழி சென்சிடிவ் சருமத்தினருக்கும் மிகவும் நல்லது. அதற்கு உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி அரைத்து சாறு எடுத்து, முகத்தில் மற்றும் வாயைச் சுற்றி 20 நிமிடம் மசாஜ் செய்து, பின் நீரால் கழுவ வேண்டும்.
 
மஞ்சளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்திற்கு பளபளப்பையும், பொலிவையும் தருவதோடு, புத்துயிர் அளிக்கும். உங்களின் முகத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் கருமையாக இருந்தால், அப்பகுதியில் உள்ள மெலனின் அளவைக் குறைக்க மஞ்சள் உதவி புரியும். அதற்கு ஒரு பௌலில் மஞ்சள் தூளை எடுத்து, அதில் ரோஸ்வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, வாயைச் சுற்றி தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

 

பக்கம் 26 / 49