Editor's Choice

2050ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள்தொகையில் நான்கில் ஒருவர் செவிப்புலன் பிரச்சினையால் பாதிக்கப்படுவர் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

மாறிவரும் வாழ்க்கை முறை காரணமாக, புதுப்புது வியாதிகளுக்கு மனித சமூகம் இடம் கொடுத்து வருகிறது. கடந்த ஒரு வருடமாக கரோனாவினால் ஏற்பட்ட இழப்புகளை முழுமையாக ஈடு செய்ய முடியாமல் பெரும்பான்மையான உலக நாடுகள் தவித்து வருகின்றன. இந்த நிலையில் புதிய அறிக்கை ஒன்றை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “நமது வாழ்க்கை முறை தேர்வுகளால் 2050ஆம் ஆண்டுக்குள், உலக மக்கள்தொகையில் நான்கில் ஒருவர் செவிப்புலன் பிரச்சினையால் பாதிக்கப்படுவர். அடுத்த 30 ஆண்டுகளில் செவிப்புலன் சார்ந்த பிரச்சினைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். 700 மில்லியன் மக்கள் தீவிரமாக பாதிக்கப்படுவர். எனவே, பாதிக்கப்பட்டவர்களின் உடல்நலம் மற்றும் அவர்களது நல்வாழ்வைக் காக்கத் தவறினால், இதற்கு நாம் அளிக்கும் விலை உயர்ந்ததாக இருக்கும். மேலும், தகவல் தொடர்பு, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றிலிருந்து அவர்கள் விலக்கப்படுவதால் ஏற்படும் நிதி இழப்புகளும் அதிகமாக இருக்கும்.

மேலும், தற்போதைய சூழலில் செவிப்புலன் பிரச்சினை உள்ளவர்களில் கிட்டத்தட்ட 80 சதவீதம் பேர் வளர்ச்சி குறைந்த நாடுகளில் வசிப்பதால், பெரும்பாலானவர்களுக்குத் தேவையான உதவி கிடைப்பதில்லை.

சிறந்த வசதிகளைக் கொண்ட பணக்கார நாடுகளில் கூட, அவர்களுக்கான கவனிப்புகள் பெரும்பாலும் சீரற்றதாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளது.

Editor's Choice

அகத்திக் கீரை குளிர்ச்சி தரும் இயல்புடையது. உடலின் உள்ள அனைத்து விதமான ‘விஷங்களையும்’ முறிக்கக் கூடியது. அகம்+ தீ = அகத்தீ. உடலின் அதிகப்படியான பித்தத்தைக் குறைக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். உணவில் கலந்து கொடுக்கப்படும் விஷப்பொருள்களை முறிக்கும். அதிகளவு சாப்பிட்டால் வாயுப் பிரச்சனை உருவாகும்.

அகத்திக் கீரையின் தன்மை விஷநாசினி, குளிர்ச்சி உண்டாக்கி, மலமிளக்கி, புழு அகற்றி அகத்தில் உள்ள உஷ்ணத்தை குறைக்கும் அகத்திக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும். ஆனால், தினமும் சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் அரிப்புடன் கூடிய புண் மற்றும் வாயு அதிகமாகிவிடும். அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் இந்தக் கீரையை குறைவாகச் சாப்பிட வேண்டும். விஷங்களை மட்டுமல்லாமல், மருந்துகளையும் முறிக்கும் குணம் உள்ள அகத்திக் கீரையை, மருந்து எடுத்துக் கொள்ளும் காலங்களில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

அகத்திக் கீரையின் மருத்துவப் பயன்கள்  அகத்திக் கீரையுடன் சம அளவு தேங்காய் சேர்த்து அரைத்து சாறு எடுத்து, அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து, கரும்படை, தேமல், சொறி, சிரங்கு போன்றவற்றின் மீது பற்றுப்போட்டால் பூரண குணம் கிடைக்கும். அகத்திக் கீரை சாற்றில் (200 மி.லி) 50 கிராம் அதிமதுரத்தை பால் சேர்த்து அரைத்து, அத்துடன் நல்லெண்ணெய் (250 மி.லி) சேர்த்து, நன்கு கொதிக்க வைத்து தைலபதத்தில் இறக்கவும். இதைத் தினமும் அதிகாலையில் 5 மி.லி.(1ஸ்பூன்) அளவுக்கு சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப்புண், நாக்குப்புண், தொண்டைப்புண் குணமாகும். உதடு வெடிப்புக்கும் நிவாரணம் கிடைக்கும்.

அகத்திக் கீரைச் சாற்றில் கடல் சங்கை இழைத்து மருக்கள் மீது தடவினால் அவை உதிர்ந்து விழுந்துவிடும். அகத்திக் கீரை, மருதாணி இலை, மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துத் தடவினால், கால்களில் ஏற்படும் பித்த வெடிப்புகள் குணமாகும். அகத்திக் கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணி நேரம் வைத்திருந்து குளித்தால் உடல் உஷ்ணம் குறையும்.
இளநரை ஏற்படுவதையும் தடுக்கும்.
 
அகத்திக் கீரை, ஊறவைத்த வெந்தயம் இரண்டையும் சேர்த்து அரைத்து, அடைதட்டிக் காய வைக்கவும். பிறகு, அதை நல்லெண்ணெய்யில் சுடுவது போல் சுட்டு எடுத்து விட்டு, எண்ணெய்யை பத்திரப்படுத்தி வைத்து, தினமும் அதை உடலில் தடவிக் குளித்தால் உடல் மிணுமிணுக்கும், கண்களுக்கும் குளிர்ச்சி உண்டாக்கும். அகத்திக் கீரைச் சாற்றில், ஐந்து கடுக்காய்களை உடைத்துப் போட்டு கஷாயம் தயாரித்து, அதை வாய் அகன்ற பாத்திரத்தில் ஊற்றி சுமார் அரை மணி நேரம் ஆசனக் குளியல் செய்தால், மூலக்கிருமிகள், மூல எரிச்சல், மூலச் சூடு, இரத்த மூலம் போன்றவை முழுமையாகக் குணமாகும்.

அகத்திக் கீரைச் சாற்றில், ஐந்து கடுக்காய்களை உடைத்துப் போட்டு கஷாயம் தயாரித்து, அதை வாய் அகன்ற பாத்திரத்தில் ஊற்றி சுமார் அரை மணி நேரம் ஆசனக் குளியல் செய்தால், மூலக்கிருமிகள், மூல எரிச்சல், மூலச் சூடு, இரத்த மூலம் போன்றவை முழுமையாகக் குணமாகும். அகத்திக் கீரைச் சாற்றில் சிறிது உப்பு சேர்த்துக் குடித்தால் வாந்தி ஏற்பட்டு பித்த நீர் வெளியாகும். இதனால், உடலில் இருக்கும் அதிகப்படியான பித்தம் குறையும்.

அகத்திக் கீரையை அரைத்து ஆறாத, நாள்பட்ட உடல் காயங்கள் மீது தடவினால், அவை விரைவில் ஆறும். அகத்திக்கீரை சாற்றை மூக்கில் பிழிந்து விட்டால் அடிக்கடி உண்டாகும் காய்ச்சல் குணமாகும்.

அகத்திக் கீரை சில நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கின்றது. ஆனால் இவற்றை வீட்டில் அகத்திக் கீரைப் பொடி செய்வது  எப்படி என்று பார்களாம்.

நிழலில் உலர்த்திய அகத்திக் கீரை  அரை கிலோ, மிளகு 20 கிராம், சீரகம் 20 கிராம், மஞ்சள் 10 கிராம்.

மேற்கண்ட அனைத்துப் பொருள்களையும் ஒன்றாகக் கலந்து அரைத்துப் கொள்ளவும். இதில், தினமும் காலை  இரு வேளையும் 5 கிராம் (1 ஸ்பூன் ) அளவில் சாப்பிட்டால், உடல் சூடு, ஜீரணக் கோளாறுகள், கண் நோய்கள், பித்த நோய்கள் போன்ற அனைத்தும் விலகும்.
 

Editor's Choice

சிலருக்கு உணவுகள் சாப்பிடும் போது குறிப்பிட்ட ஒரு சில உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.  அதாவது சரும அலர்ஜி, தடிப்பு, உடல் ஊறல் எடுப்பது, அங்கங்கு சருமம் சிவந்து போதல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

இதற்கு நாம் சாப்பிடும்  உணவை உடல் நஞ்சாக புரிந்து கொள்வதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள். ஆகவே ரத்தத்தில் உள்ள நஞ்சை நீக்குவதன் மூலமாக இத்தகைய பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து ஒருசில வாரங்கள் இதனுடைய பாதிப்பை அதிகமாக  உணர்வார்கள். அவற்றிலிருந்து நாம் ஓரிரு நாட்களில் விடுபட  நமக்கு உதவக்கூடிய மூலிகைதான் வெற்றிலை மற்றும் மிளகு இந்த இரண்டையும் கசாயம் வைத்து குடிப்பதனால் இத்தகைய பிரச்சனையில் இருந்து நாம் இரண்டு நாட்களில் விடுபட வாய்ப்புண்டு.

Editor's Choice

'கொரோனாவுக்கு பிறகு டைப் 1 சர்க்கரை நோயால், பாதிக்கப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொரோனா நோய் மக்கள் மத்தியில் ஏற்படுத்திய அச்சம் ஒரு காரணம். ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் அதிகரித்துள்ளது. இதனால் உடலில் உள்ள ஹார்மோன் அளவு அதிகரித்து, வேறு பல நோய்கள் வர காரணமாகி உள்ளது. இதனால் மனதளவிலும், உடலளவிலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள் அதிகம் பாதித்துள்ளனர். இவர்கள் முறையாக மாத்திரைகள், ஊசி எடுத்து கொள்ளவில்லை. உணவு பழக்கமும் மாறி உள்ளது. கொரோனா தடுப்புக்காக எடுத்து கொண்ட மருந்து, மாத்திரைகள் கணையத்தை பாதித்து இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்குள், டைப் 1 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம். முன்பெல்லாம் இந்த அளவுக்கு குழந்தைகள் பாதிக்கப்படவில்லை. குறிப்பாக, கொரோனாவுக்கு பிறகு டைப் 1 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகரித்துள்ளனர். குழந்தைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். அரசு உடனே கவனித்து, தடுப்பு நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

குழந்தைகளை பொறுத்தவரை டைப் 1 சர்க்கரை அம்மா, அப்பாவிடம் இருந்து வருவதில்லை. உணவு காரணமாக இருக்கவும் வாய்ப்பில்லை. இது மரபணு மாற்றம் காரணமாகதான் வருகிறது. ஒரு வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் சீரியசாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலருக்கு தினமும் நான்கு வேளை வாழ்நாள் முழுவதும், இன்சுலின் ஊசி போட வேண்டிய நிலை உள்ளது. ஒருவேளை ஊசி போடவில்லை என்றால் கூட, டயாபடிக் கோமாவுக்கு போகும் நிலை உள்ளது. 
திருப்பூர், சேலம் பகுதியில் இந்த நோயால், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எப்போதும் இல்லாத அளவுக்கு, இப்போது இவ்வளவு குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், ஏதோ ஒன்று நம்மை சுற்றி நடந்து கொண்டு இருக்கிறது. இதை ஆய்வு செய்தால் மட்டுமே அறிய முடியும்.

சரக்கரை நோய் என்பது பழைய நோய். காலங்காலமாக மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். வயதானவர்களுக்கு மட்டும் வரும் ஒரு நோயாகதான் இது இருந்தது. கடந்த, 50 ஆண்டுகளாக குழந்தைகள் சர்க்கரையால் பாதிக்கப்படவில்லை. இந்த, 10 ஆண்டுகளாகதான் குழந்தைகளை சர்க்கரை நோய் தாக்குகிறது. இப்போது நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. நாம் சாப்பிடும் உணவு மற்றும் தண்ணீரில், விஷத்தன்மை ஏற்பட்டு இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும். 
 

Editor's Choice

முகமும் தோலும் பளபளப்பாக ஐஸ் கட்டி பயன்படுத்தலாம். ஐஸ் கட்டி பயன்படுத்தி தோலையும், முகத்தையும் வெண்மையாக்க முடியும். அது எப்படி என்பது பற்றி நாம் இப்போது பார்க்கலாம்.
 
உடனே முகத்தை பளபளப்பாக வைக்க வேண்டுமா? அப்போது ஒரு ஐஸ் கட்டி எடுத்து முகத்தில் சர்குலார்  மோசனில் நன்கு தேய்க்கவும், உங்க முகத்தில் உடனடி பலன் கிடைக்கும். நம் முகத்தை எவ்வளவு தான் அழகுபடுத்தினாலும் அடிக்கும் வெயிலுக்கு நம் முகத்தில் உள்ள மேக்அப் அனைத்தும் காணாமல் போய்விடுகிறது. உங்கள் மேக்அப் அழியாமல் இருக்க வேண்டும்? அப்போது ஒப்பனை
செய்வதற்கு முன் முகத்தில் ஐஸ் கட்டி வைத்து தேய்த்து  அதற்கு பின் ஒப்பனை செய்யவும்.

முகத்தில் ஐஸ் கட்டி வைப்பதனால் இரத்த ஓட்டம் நன்கு இருக்கும், அதனால்  மாசற்ற சருமத்தை பெறலாம். முகமும் பளபளக்கும். ஐஸ் கட்டி வைக்கும் போது, அவை நம்முடைய சரும துவாரங்கள்  வரை செல்கின்றது. அதனால் கரும்புள்ளிகள் மற்றும் முகபருக்களை நீங்குவதற்கும் இந்த ஐஸ் கட்டி பயன்படுகிறது.  உங்கள் சருமம் எண்ணெய் பசை உள்ளது என்றால், நீங்கள் நிச்சயமாக இதை
தினமும் செய்து வந்தால், நல்ல பலனை காணலாம். இதனால் எண்ணெய் பசை குறைகிறது. மிகவும் பளபளப்பான மெல்லிய அழகான சருமத்தை நிச்சயம் பெறலாம்.

உலர்ந்த சருமம் அதிகமானோரின் பிரச்சனையாக உள்ளது. அதிலும் பனிக்காலம் வந்துவிட்டால் சருமத்தில் அரிப்பு மற்றும் சருமம் உலர்ந்து போய்விடும். இதற்காக நாம் அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும். அழகு நிலையத்திற்கு போகாமல் எளிதில்  வீட்டிலேயே சரிசெய்யக்கூடிய குறிப்புகளை பற்றி பார்க்கலாம்.

பால் க்ரீம் மற்றும் தேன், ஒரு டேபிள் ஸ்பூன் பால் க்ரீம் உடன், ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் போட்டு 15 நிமிடம் ஊற விட்டு பின் சூடான நீரில் கழுவவும். இது ஒரு சிறந்த சரும மாய்ஸ்சரைசர், இதை செய்து வந்தால் அழகு நிலையத்தில் கிடைக்கும் பலனை விட நல்ல மாற்றத்தை காணலாம்.

சருமம் உலர்ந்து போகாமல் இருக்க ஒரு டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெயுடன் 2 டேபிள் ஸ்பூன் காய்க்காத பால் சேர்த்து ஒன்றாக கலந்து முகத்தில் தேய்த்து 15 நிமிடம் ஊற விட்டு சூடான  நீரில் கழுவவும்.

2 டேபிள் ஸ்பூன் நொறுக்கப்பட்ட ஸ்ட்ராபெரியுடன் ஒரு டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து உங்கள் முகத்தில் தேய்த்து 20 நிமிடம் உறவிட்டு கழுவவும். பின் உங்கள் முகம் தானாக ஜொலிக்க ஆரம்பிக்கும். 

 

Editor's Choice

கொடிபோல் இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் நினைக்கின்றோம். ஆனால் நம் வாழ்க்கை முறையின் காரணமாக நம்மால் அப்படி உடலை பராமரிக்க முடிவதில்லை. ஏன்னென்றால், நாம் உண்ணும் உணவு தான் காரணம். இனி நம் உணவு முறைகளை மாற்றி நம் உடலை கொடிப்போல் வைத்து கொள்வோம்.
 
நம் முன்னோர்கள் சிறுதானியங்களை உண்டு வாழ்ந்து வந்துள்ளனர், அதனால் தான் அவர்களுக்கு எந்த நோயும் வராமல் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்து வந்தனர். தினம் ஒரு சிறு தானியம் என்று சாப்பிட்டு வந்தால் உடல் எடை படிப்படியாக குறைவதை நீங்கள் உணர்வீர்கள்.

திணை, சாமை, வரகு,கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி இவை அவைத்துமே சிறு தானிய வகைகள் ஆகும். “ கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு” என்று மூதாதையர்கள் கூறியுள்ளனர். உடலின் உள்ள கொழுப்பினை நீக்க கொள்ளு மிகவும் உதவுகிறது.  வாரத்திற்கு ஒரு முறை கொள்ளை உணவில் சேர்த்து கொண்டால் உடல் எடை குறைந்து கொடி போன்று மாறிவிடலாம்.  

கொள்ளு ரசம்

தேவையான பொருட்கள்-

கொள்ளு                  =  1 கப்
காய்ந்த மிளகாய்     =  3
மல்லி                       = 1 டீஸ்பூன்
சீரகம்                        = 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்            = 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை        = 10 இலைகள்
பூண்டு                      = 3 பல்
கடுகு                        = தேவையான அளவு
எண்ணெய்               =  தேவையான அளவு

செய்முறை

கொள்ளை குக்கரில் 3 விசில் வரும் வரை வேக வைத்து கொள்ளவும். பின்பு வேகவைத்த கொள்ளு, காய்ந்த மிளகாய், மல்லி, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து அதனுடன் வெங்காயம், பூண்டு ஆகியவற்றை வதக்கி அரைத்து வைத்துள்ளவற்றை சேர்ந்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். பின் இறக்கினால் சுவையான சத்தான ரசம் தயார்.                                                                                       
                                                      
     

பக்கம் 30 / 49