Editor's Choice

உடலுறவு கொள்ளாமல் குழந்தை பிறப்பது சாத்தியமா? என்ற கேள்விக்கான பதில் இந்தோனேசியாவில் நிகழ்ந்துள்ளது..!

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா பகுதியின் சியாஜூர் (bizarre claim) பகுதியை சேர்ந்த 25 வயதுடைய பெண் சிதி சைனா. இவர், பிரார்த்தனையை முடித்துவிட்டு, வீட்டில் வந்து உட்கார்ந்துள்ளார். தரையில் முகத்தை கீழே சாய்த்தவாறு படுத்திருந்திருக்கிறார். அப்போது, திடீர் என ஒரு காற்று அவரின் பிறப்புறுப்பு (vagina) வழியாக சென்று அவரின் வயிற்றை நிரப்பியுள்ளது. சற்று நேரத்தில் அவரது வயிறு பெரியதாக ஆரம்பித்துள்ளது. 

இதையடுத்து, அடுத்த 15 ஆவது நிமிடத்தில் அவருக்கு ஒரு ஆரோக்கியமான பெண் குழந்தையும் பிறந்துள்ளது. அந்த குழந்தை 2.9 கிலோகிராம் எடை கொண்டது. இந்த கர்ப்பத்துக்கு காரணம் காற்று என்றும், உடலுறவு இல்லவே இல்லை என்றும் அடித்து சொல்கிறார் அந்த பெண். இந்த விஷயம் அந்த கிராமம் முழுவதும் பரவியதை அடுத்து காவல்துறைக்கு, விஷயம் போனது. சம்பந்தப்பட்ட பெண்ணை போலீசார் விசாரித்தனர். 

இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன் இவருக்கு விவாகரத்து ஆகியுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வேறு யார் மூலமாவது அந்த பெண் கர்ப்பமாகி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

உண்மை என்ன என்றால், இதை அறிவியலில் "cryptic pregnancy" என்று கூறுவார்கள். இந்த கருத்தரித்தலில் HCG என்ற ஹார்மோன் இல்லாததால், இயல்பாக இதை கருத்தரிப்பு கருவியால் கூட இதை கணிக்க முடியாது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஏன், அல்ட்ரா சவுண்ட் மூலம் கூட இந்த கர்ப்பத்தை கணிக்க இயலாது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இவர் 4 மாதங்களுக்கு முன் தனது கணவருடன் கண்டிப்பாக உடலுறவு கொண்டிருப்பார். அதன் மூலம் உருவானதுதான் இந்த குழந்தை. இப்படி கர்ப்பமான பெண்களுக்கு குழந்தை பிறக்க இருக்கும் சில மணி நேரங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பது அவர்களுக்கு தெரியவரும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது போன்ற சம்பவங்கள் வெளிநாடுகளில் நடப்பது இயல்புதான். இவர்களுக்கு, குழந்தை பிறக்க 10 முதல் 14 மாதங்கள் வரை ஆகலாம் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றது. 

Editor's Choice

கருவேலம் ஒரு கெட்டியான மரம்  ஆகும். தமிழகத்தில் தரிசு நிலங்களிலும், கடற்கரை பகுதிகளிலும் அதிக அளவில் வளர்ந்து காணபடுகிறது. கருவேரலத்தின் மலர்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்த மலர்கள் ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் பூக்க தொடங்கும். விதிகை வட்டமாக
இருக்கும் வெள்ளாடுகள் கருவேல மரத்தின் காய்களை விரும்பி உண்ணும்.

கருவேலத்தின் மருத்துவ பயன்கள்

உடலில் ஏற்பட கூடிய புண்களின் மீது கருவேல மரத்தின் இலையை அரைத்து கட்டி வந்தால் புண்கள் விரைவில் ஆறி விடும். கருவேல மரத்தின் தளிர் இலையை அரைத்து மோரில் கலக்கி குடித்து வந்தால் சீத பேதி குணமடையும் கருவேல மரத்தின் பட்டையை கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் வாய் புண், வாய் துர்நாற்றம் மற்றும் பல் ஆடுதல் ஆகியவை சரியாகும். விஷம் அருந்தியவர்களுக்கு கருவேலம் மரத்தின் தளிர் இலையை தயிர் விட்டு அரைத்து பசும் பாலில் கலந்து கொடுத்தால், உடம்பில் விஷம் இறங்காது, உயிர் பிழைத்து விடுவார்கள்.

சில பெண்களுக்கு, மாதவிடாய் முடிந்த பிறகும் வெள்ளைபடும். இதன் காரணமாக தாங்க முடியாத வலி மற்றும் உடலில் பலவீனமும் ஏற்படும். அதற்கு கருவேல மரத்தின் பிசினை காலையில் 5 கிராம் தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் வெள்ளைபடுதல் நின்றுவிடும்.
 
கருவேல மர குச்சி அல்லது பட்டையை கொண்டு பல் துலக்கி வருவதன் மூலம் காலம் முழுவதும் பல் பிரச்சனை வராது.

Editor's Choice

வெறும் வாயில பச்சரிசி தின்னுறியா? உன் கல்யாணத்தில் மழை பெய்யும் பாரு என்று கூறும் வழக்கு மொழியைக் கேட்டிருப்போம். சுவர் ஓரமாக உட்கார்ந்து கொண்டு சுவற்றுக் காரையை உடைத்து ரசித்து சாப்பிடும் குழந்தையையும், திருட்டுத்தனமாக திருநீரை ரசித்து சாப்பிடும் மகனிரையும் நாம் பார்த்திருப்போம். யார் இவர்கள்? என்ன ஆயிற்று இவர்களுக்கு? இரும்புச் சத்து குறைவால் ஏற்படும் ரத்தசோகைதான் இந்த வேடிக்கைக்கு காரணம்.

‘கேன்சர்’ முதல் வாய்க்குள் நுழையாத ‘ஏதோ ஃபீலியா’ வரை அச்சமும் சக்கரையும் படும் நாம், பல சமயம் அலட்சியமாக இருந்து விடுவது இரத்த சோகை விஷயத்தில் தான்.

வெளிறிய கண்கள், நா, நகம் மற்றும் உள்ளங்கை, அதைப்பான (குளுப்பையான) முகம், படபடப்புடன் இதயம் துடிப்பு (மருத்துவ துறையில் இதை ‘குதிரை ஓட்டம் போன்ற துடிப்பு’ என்பர்) போன்ற குறிகளுடன், நடந்தால் மூச்சு இறைப்பு, ஆயாசம், சோர்வு, ஒரு வேலையிலும் பிடிப்பு இல்லாமல் வெறுப்பு போன்றவையே சோகையின் குணங்கள். ஆனால் இவை எல்லாம் இரத்தத்தில்
இரும்புச்சத்து மற்றும் சிவப்பு அணுக்கள் அதிக அளவு குறைந்த பின்னர்தான் தெரிய வரும். லேசான சோகையில், பெரும்பாலும் எந்த குணங்களும் தெரிவதில்லை.

ஆணைக் காட்டில் பெண்ணுக்கு இரத்தசோகை தொந்தரவு அதிகம் வரும் வாய்ப்பு உண்டு. மாதவிடாயில் ஏற்படும் இழப்பு, குழந்தை உண்டாகி இருக்கும் போது, என பெண்களுக்கான பிரத்யேக  பணியிலேயே அதிக இரும்புச் சத்து இழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். மாதவிடாயில் அதிக இரத்தப் போக்கு அல்லது மாதவிடாயில் ரத்தமே போகாது. இருப்பது என இரண்டுக்குமே
சோகை ஒரு காரணம். மாதவிடாய் கோளாறுகள் பலவற்றுக்கும் சோகையே முதல் காரணம்.

இவை தவிர, சரியான உணவு இல்லாமை, அக்கறை இல்லாத ஊட்டச்சத்து குறைந்த உணவு இவையே இரத்தசோகைக்கு மிக முக்கியக் காரணங்கள், மூல நோயில் ஏற்படும் இரத்த இழப்பு, சிறுநீரகநோய்கள் ஈரல் நோய்கள், வயிற்றுப் பூச்சிகள், சில புற்று நோய்கள் என பிற நோய்களிலும் இரத்தசோகை ஏள்படக்கூடும். முதலில், இரத்தசோகை என்னும் அனீமியா உள்ளதா என்பதை மருத்துவர் உதவியுடன் தெளிவாக அறிந்து கொள்வது முக்கியக் கடமை. சிவப்பு அணுக்களில் உள்ள செல்களுக்கு
ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் முக்கிய பணியைச் செய்கிறது. சரியான இரும்புச் சத்து இல்லை எனில், சோர்வும் சோம்பலும் என தொந்தரவுகள் ஒவ்வொன்றாக தொடங்கிவிடும்.

கீரையைப் பொறுத்தமட்டில் சங்கடப்பட வைக்கும் விஷயம், சந்தைக்கு வரும் கீரைகளை தெளிக்கப்படும் கொடிய நச்சுத்தன்மையுள்ள பூச்சிக் கொல்லிகள் தான். வாய்ப்புள்ள ஒவ்வொருவரும், சிறி சிறு தொட்டிகளில் ‘கிச்சன் கார்டன்’ என கீரைகளை வீட்டில் வளர்த்து அன்றாடம் பறிப்பது மிகமிக நல்லது. வீட்டு கிச்சன் கழிவுகளும், இயற்கை உரங்களும் , வேப்பெண்ணைய் தூவலும் பாதுகாப்பாக உங்கள் கீரைகளைக் கூடுதல் சத்துடன் உருவாக்கிவிடும். இரும்புச் சத்து மிகக் குறைவாக உள்ள
பட்சத்தில், சத்து மாத்திரைகள் மிகவும் அவசியமானது. உங்கள்  குடும்ப மருத்துவர் பரிந்துரைக்கும் சரியான சத்து மாத்திரையை எடுப்பது அவசியம். கருவுற்ற மற்றும் பாலூட்டும் காலங்களில் இரும்புச் சத்து மாத்திரைகள் அவசியமாகவே தேவைப்படுகிறன. சித்த மருந்துகளில் உடலின் பித்தத்தைச் சீராக்கி, இரும்புச் சத்தை அளித்திடும் மூலிகை மருந்துகள் நிறையவே உண்டு.

இரும்புச் சத்து மருத்துகள், வயிற்று எரிச்சல், குடல் புண்கள், மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்துவது உண்டு. இரத்தசோகைக்கு அளிக்கப்படும் சித்த மூலிகை மருந்துகளின் சிறப்பே, மலத்தையும் எளிதாகக் கழிக்கவைத்து. குடல் புண்ணையும் ஆற்றக்கூடியது என்பது தான். அனீமியா, மூலம், அதிக மாதவிடாய் ரத்தப்போக்கு போன்ற பிற நோய் வந்திருந்தால் அதற்கான சிகிச்சை முக்கியம். வெறும் சத்து மாத்திரை போதாது.
 
ஆறு மாதங்களுக்கு ஒரு முறையேனும் ஒவ்வொருவரும் தம் இரத்தத்தில் உள்ள இரும்பின் அளவை அறிந்து கொள்ள வேண்டும்.

Editor's Choice

உப்பு நமது அன்றாட வாழ்வில் குறிப்பிட்ட அளவு பயன்படுத்தப்படுகிறது. உப்பில்லா பண்டம் குப்பையில்  என்பார்கள். மனித உடலுக்கு ஒரு நாள் தேவையான உப்பின் அளவு 1 கிராம். தினசரி நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் காய்கறி போன்றவற்றின் மூலமே உடலுக்கு தேவையான உப்பின்
அளவு கிடைத்து விடும் என்பதால் மேற்கொண்டு அதிக உப்பினை சேர்க்க வேண்டியதில்லை.

அதிக உப்பு உடலின் என்ன விளைவு தரும்?

அதிக உப்பு சேர்க்கப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வரவும். உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இதயம் சார்ந்த பல பிரச்சனைகளை தோற்றுவிக்கும். ஒரு சிலருக்கு உடலில் தங்கியிருக்கும் சோடியம் உப்பை வெளியேற்ற இயலாத காரணத்தால், தேங்கிய உப்பானது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. மேலும் உப்பு இரத்த குழாய்களில் உட்புறத்தில் சிறிது சிறிதாக படிந்து உடல் முழுமையாக ஓடமுடியாமல் தடை செய்துவிடும். உடலில் இருந்து உப்பு வியர்வையாகவும், சிறுநீராகவும் வெளியேறும். மகோதரம் போன்ற வியாதிகளில் உப்பு குடலின் வெளியே சவ்வுகளிடம்
தேங்கிவிடும். இம்மாதிரி குழாய்களில் உப்பை முழுவதுமாக சேர்க்க  உப்பில்லா வைத்தியம் மகோதரம் மற்றும் வேறு காரணங்களாலும் பயனிக்கும். அதிகளவு சிறுநீர் கழிக்க நேரிடுவதால் சிறுநீரகம் பாதிக்கப்படும். இந்த பாதிப்பை உப்பு அதிகமாக்கும். இதற்கு உப்பை குறைப்பது சிறந்ததாகும்.

உடல் அரிப்பு, படை, அக்கி போன்ற சருமம் சார்ந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உப்பு சேர்ப்பதை
தவிர்க்க வேண்டும். உப்பில்லாத உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதால், தெளிவான மனநிலை ஏற்படும். வியர்வை தோன்றாது. உடல் அசதியை குறைக்கும். உப்பை அறவே குறைக்க முடியாதவர்கள் இந்துப்பை சேர்த்துக்கொள்ளலாம். உப்பு சேர்க்காமல் தொடர்ச்சியாக பழகி வருபவர்கள் பால், மோர் மற்றும் இவை சார்ந்த சாதம் போன்றவற்றை சாப்பிடலாம்.

நாம் உண்ணும் உணவில் புளி சேர்ப்பதற்கு காரணம் அரிசி, துவரை, உளுந்து போன்றவை செரிமானமாக உதவுகிறது. குடலில் வாயுவையும், மலத்தையும் தேங்காமல் வெளியேற்ற புளி உதவுகிறது. எலுமிச்சை, நார்தங்காய் போன்றவைகளும் புளிப்புக்காக உணவில் சேர்க்கப்படுகின்றது.

அதிகளவில் புளியை சேர்ப்பதால் மனிதனுக்கு ஏற்படும் தீமைகள் என்ன?

இரைப்பை நோய்கள் ஏற்படும் வயிற்றில் புண், செரிமான குறைபாடுகள், நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படுகின்றன. மேலும், சரும வியாதிகளும் ஏற்படலாம். எனவே புளி, எலுமிச்சை பழம், தக்காளி, புளித்த மோர் இவற்றை உணவில் தவிர்ப்பது நல்லது. பழுத்த புளியை ஒரு வருடங்கள் ஜாடியில் வைத்திருந்து உபயோகிக்கும்போது அனலில் இட்டு வாட்டிய பின்பு உபயோகிக்கவும்
இதனால் புளியால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். பத்திய உணவுகளுக்காக, புளி பதப்படுத்தப்பட்டு உபயோகமாகிறது.

Editor's Choice

பழுப்பு நிற அரிசி என்னும் கைக்குத்தல் அரிசியானது சுத்திகரிக்கப்படாத  அரிசியாகும்.  வெள்ளை அரிசியை விட பழுப்பு நிற அதிகளவு நியூட்ரியேஷன் உள்ளது. அதற்கு காரணம், பழுப்பு அரிசி நேரடியாக நெல்லில் இருந்தே, நமக்கு கிடைக்கின்றது. பழுப்பு நிற அரிசி சாப்பிடுவதற்கு கடினமாக இருந்தாலும், இதில் அதிகளவு ஆரோக்கியம் நிறைந்துள்ளது. பழுப்பு நிற அரிசியினால் நமது
உடலிற்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.

பழுப்பு நிற அரிசியின் நன்மைகள்,

நீரழிவு   நோயாளிக்கு பழுப்பு நிற அரிசி மிகவும் நல்லது. இது இன்சுலின் அளவை கட்டுப்படுத்தி, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து, சீராக வைக்க உதவுகிறது. பழுப்பு நிற அரிசியில் அதிகளவு ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இது நமது உடலின் உள்ள செல்கள், ப்ரீ ராடிக்களால் சேதமடையாமல் பாதுகாக்கிறது.

பழுப்பு நிற அரிசியில் அதிகளவு மெக்னீஷியம் நிறைந்துள்ளது. இது எலும்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. உடல் எடையை குறைந்து சீராக வைக்கவும், ஒபேசிட்டியில் இருந்து தப்பிக்கவும் பழுப்பு நிற அரிசி பெரிதும் உதவுகிறது. முளைத்த பழுப்பு நிற அரிசியை சாப்பிட்டால் வயதான பின் வரும் மறதி நோயான அல்சிமர் நோயை தடுக்கலாம். பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பழுப்பு அரிசி மிகவும் நல்லது, மனம் அலைபாய்வதினால் ஏற்படும் மன அழுத்தம் குறையும். இதில் உள்ள அமினே அமிலங்களான குளுட்டமைன், கிளிசரின், காமா அமினோபியட்ரிக் அமிலம் போன்றவை நமது மூளையில் செரோடோனின் ஹார்மோனை சுரக்கச்செய்து மன அழுத்தத்தை குறைக்கிறது.
அனிஸ்சிட்டி போன்ற பிரச்சனையும் நீங்குகிறது.

பழுப்பு அரிசியில் நார்சத்து அதிகளவில் இருப்பதால், இது மலச்சிக்கலை தடுத்து, குடலின் இயக்கத்தை ஆரோக்கியமாக வைக்கின்றது. மேலும் பழுப்பு அரிசி உண்பதால் இதய நோய் ஏற்படுவதையும் குறைக்கலாம், என்று ஒரு ஆரோய்ச்சியில் கூறப்பட்டுள்ளது. பழுப்பு அரிசியில் வைட்டமின் சி, தவிர அனைத்து வைட்டமின் சத்துக்களும் அடங்கியுள்ளது. ஆனால், வெள்ளை அரிசியில் இவ்வித சத்துக்கள் ஏதும் இல்லை.  100 கிராம் பழுப்பு அரிசியில் 6.7 கிராம் புரதச்சத்து நிறைந்துள்ளது. ஆனால் வெள்ளை அரிசியில் 0.7 கிராம் மட்டுமே உள்ளது. பழுப்பு அரிசியில் உள்ள ஹீமோகுளோபின் அளவை சீராக வைக்க இரும்புச்சத்து மிகவும் அவசியமானதாகும். இந்த இரும்புச்சத்து பழுப்பு அரிசியில் 3.2 கிராமும், வெள்ளை அரிசியில் 0.7 கிராமும் உள்ளது.

நல்ல கொழுப்புகள் வெள்ளை அரிசியை விட பழுப்பு அரிசியில் 50 சதவிகிதம் அதிகமாக நிறைந்துள்ளது. இந்த நல்ல கொழுப்புகள் உடலின் செரிமானத்தை கட்டுப்படுத்தி, உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது. சர்க்கரை நோய் மற்றும் கல்லீரலில் கொழுப்பு உள்ளவர்களுக்கு பழுப்பு அரிசி மிகவும் சிறந்ததாகும். இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை பாதிக்கும் கிளைசெமிக் இண்டெக்ஸ்
பழுப்பு அரிசியில் குறைவாக உள்ளது. வெள்ளை அரிசி பாலிஷ் செய்யப்படுவதால், அதிலுள்ள சத்துக்கள் அனைத்தும்  வெளியேறி கிளைசெமிக் இண்டெக்ஸ் அளவு அதிகரிக்கிறது.

Editor's Choice

மருதாணி பொதுவாக வெப்பத் தன்மையும் துவர்ப்புச் சுவையும் கொண்டது. மருதாணி இலை பித்தத்தை அதிகமாக்கும்; இலைகள் கை, கால்களில் தோன்றும் சேற்றுப் பண்கள், அழுக்குப்படை, கட்டி, பித்த வெடிப்புகள் ஆகியவற்றை குணமாக்கும்.

மருதாணி வேர், நோய் நீக்கி உடலைத் தேற்றும்; மருதாணி பூக்களைச் சேகரித்து உலர்த்தி தலையணை போல் செய்து படுத்து வர நல்ல தூக்கம் உண்டாவதுடன், தலைப் பேன்களும் குறையும்.

மருதாணி புதர்ச்செடியாகவோ, குறுமரமாகவோ காணப்படும்.மருதாணி மலர்கள், சிறியவை. வெண்மை, இள மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு நிறமானவை. மணம் கொண்டவை. பெரிய நுனிக் கொத்துகளில் தொகுப்பாகக் காணப்படும்.

மருதாணி பழங்கள் சிறியவை. பட்டாணி அளவில் பல விதைகளுடன் காணப்படும். அழகுக்காகவும், அதன் மருத்துவ உபயோகங்களுக்காகவும் வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன.

மருதோன்றி, ஐனாஇலை, ஐவனம், அழவணம் ஆகிய பெயர்களும் மருதாணி தாவரத்திற்கு உண்டு. மருதாணி இலை, பூ, விதை, வேர் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.

மருதோன்றி இலைகளை மைய அரைத்து அடை போன்று தட்டையாகத் தட்டி நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். இதனை தேவையான அளவு தேங்காய் எண்ணெயில் போட்டு 21 நாள்கள் வெயிலில் வைத்து பின்னர் வடிகட்டி பத்திரப் படுத்த வேண்டும். இந்த எண்ணெயைத் தலையில் தடவி வரவேண்டும். இதனால் இளநரை மாறுவதுடன் கண்கள் குளிர்ச்சி அடையும். நல்ல தூக்கம்
உண்டாகும்.

6 தேக்கரண்டி அளவு புதிதாக சேகரித்த மருதாணி இலைச் சாற்றை வெறும் வயிற்றில் காலை வேளைகளில் குடிக்க வேண்டும். 10 நாள்கள் வரை இவ்வாறு செய்ய பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுதல் குணமாக்கும்.

மருதாணி இலைகளுடன் சிறிதளவு பாக்கு சேர்த்து அம்மியில் அரைத்து இரவில் கை, கால் நகங்களின் மீது வைத்து, காய்ந்த பின்னர் உறங்கி காலையில் கழுவ வேண்டும். இவ்வாறு 15 நாள்களுக்கு ஒரு முறை செய்து வர நகம் சொத்தையாவது அழுக்குடன் பளபளப்பு இல்லாமல் இருப்பது ஆகிய பிரச்சனைகள் தீரும். மேலும் நகம் தொடர்பாக ஏற்படும் எந்த நோயானாலும் தடுக்கப்படும்.

மருதாணி இலையை அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பூச கொப்புளங்கள் தீக்காயங்கள் குணமாகும்.

சிறிதளவு மருதாணிக் கொழுந்தை நீரில் இட்டு ஊற வைக்க வேண்டும். 1 மணி நேரம் ஊறிய பின்னர் இந்த நீரைக் கொதிக்க வைத்து கஷாயம் செய்து கொள்ள வேண்டும். இந்த கஷாயத்தால் வாய் கொப்பளிக்க வாய்ப்புண் மற்றும் தொண்டைப்புண் தீரும்.

மருதாணி இலைகளை அரைத்து பாதங்களில் வைத்துக் கட்டுவது சிறந்த முறையாக பாரம்பரிய மருத்துவத்தில் இன்றும் இருந்து வருகின்றது.

மருதாணி விதை எண்ணெயை உடலில் தடவ உடல் எரிச்சல் குணமாகும். மருதாணி இலைகளை அரைத்து பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும்.

மருதாணி இலை மற்றும் மலர்கள் குஷ்ட நோய்க்கு மருந்தாகப் பயன்படுகின்றன. இந்த தகவல்கள் மருத்துவ ஆய்வுகள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளன.

பக்கம் 32 / 49