கருவேலம் ஒரு கெட்டியான மரம் ஆகும். தமிழகத்தில் தரிசு நிலங்களிலும், கடற்கரை பகுதிகளிலும் அதிக அளவில் வளர்ந்து காணபடுகிறது. கருவேரலத்தின் மலர்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்த மலர்கள் ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் பூக்க தொடங்கும். விதிகை வட்டமாக
இருக்கும் வெள்ளாடுகள் கருவேல மரத்தின் காய்களை விரும்பி உண்ணும்.
கருவேலத்தின் மருத்துவ பயன்கள்
உடலில் ஏற்பட கூடிய புண்களின் மீது கருவேல மரத்தின் இலையை அரைத்து கட்டி வந்தால் புண்கள் விரைவில் ஆறி விடும். கருவேல மரத்தின் தளிர் இலையை அரைத்து மோரில் கலக்கி குடித்து வந்தால் சீத பேதி குணமடையும் கருவேல மரத்தின் பட்டையை கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் வாய் புண், வாய் துர்நாற்றம் மற்றும் பல் ஆடுதல் ஆகியவை சரியாகும். விஷம் அருந்தியவர்களுக்கு கருவேலம் மரத்தின் தளிர் இலையை தயிர் விட்டு அரைத்து பசும் பாலில் கலந்து கொடுத்தால், உடம்பில் விஷம் இறங்காது, உயிர் பிழைத்து விடுவார்கள்.
சில பெண்களுக்கு, மாதவிடாய் முடிந்த பிறகும் வெள்ளைபடும். இதன் காரணமாக தாங்க முடியாத வலி மற்றும் உடலில் பலவீனமும் ஏற்படும். அதற்கு கருவேல மரத்தின் பிசினை காலையில் 5 கிராம் தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் வெள்ளைபடுதல் நின்றுவிடும்.
கருவேல மர குச்சி அல்லது பட்டையை கொண்டு பல் துலக்கி வருவதன் மூலம் காலம் முழுவதும் பல் பிரச்சனை வராது.













