Editor's Choice

கர்ப்பப்பையானது இடுப்புப் பகுதிக்குள் தசைகள், திசுக்கள் மற்றும் தசைநார்களுடன் இணைந்து இருக்கும். கர்ப்பப்பை அது இருக்க வேண்டிய இடத்திலிருந்து இறங்கி, வெஜைனல் பாதைக்கு வரும் நிலையைத்தான் கர்ப்பப்பை இறக்கம் அல்லது மடி இறக்கம் என்று சொல்கிறோம். ஆங்கிலத்தில் இதற்கு யூட்ரோவெஜைனல் புரோலாப்ஸ் (Uterovaginal prolapse) என்று பெயர்.

* கர்ப்பப்பையை சப்போர்ட் செய்கிற தசைகள், திசுக்கள் மற்றும் தசைநார்கள் பலமிழப்பதால்.

* முதுமை, உடல் பருமன் காரணமாக.

* மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் திசுக்களின் இழப்பு மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு குறைவதால்.

* ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச பாதிப்பு களால் ஏற்படும் தொடர் இருமல் மற்றும் தொடர் மலச்சிக்கலால்.

கர்ப்பப்பை இறங்கிவருவதால், அடிப்பகுதி யில் இழுப்பது போன்ற உணர்விருப்பதாகச் சிலர் சொல்வதுண்டு.

மிக முக்கியமாக பீரியட்ஸ் பாதையின் வழியே ஏதோ துருத்திக்கொண்டு வெளியே வர இருப்பதுபோல உணர்வதாகச் சொல்வார்கள். குட்டி பந்தின் மேல் அமர்ந்திருப்பது போன்ற உணர்வு இருக்கும்.

கர்ப்பப்பை கீழே இறங்குவதால் சிறுநீர்ப் பையும் மலப்பையும்கூட சேர்ந்து கீழே இறங்கும். இதனால் சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாத உணர்வும், முழுமையாக சிறுநீர் கழிக்காதது போன்ற உணர்வும், இருமி னாலோ, தும்மினாலோ சிறுநீர் கசிவது, மலம் கழிப்பதில் அசௌகர்யம் போன்ற வற்றையும் உணரலாம். அடி முதுகில் வலி இருக்கலாம்.

சில நேரம் தாம்பத்திய உறவில் அசௌகர்யம் இருப்பதாக மருத்துவரைப் பார்க்க வருவார்கள். அப்போதுதான் கர்ப்பப்பை இறக்கம் இருப்பதே தெரியவரும்.

கர்ப்பப்பை இறக்கம் எந்த வயதிலும் வரலாம். பெரும் பாலும் சுகப்பிரசவத்தில் குழந்தை பெறுவோருக்கு பிறப்புறுப்புப் பாதையி லுள்ள தசைகளும் திசுக்களும் பாதிக்கப்படும். 20, 30 வயதில் அந்த பாதிப்பின் விளைவு தெரியாது. மெனோபாஸ் நெருங்கும்போதுதான் தெரியவரும். வயதாக ஆக ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு குறைந்து, தசைகளின் சப்போர்ட் தளரும். அந்த நிலையில் அறிகுறிகளை அதிகம் உணர்வார்கள்.
 
கர்ப்பப்பை கீழே இறங்கி வந்து பக்கவாட்டில் உரசி, புண்ணாகி, ரத்தம் கசியலாம்.

கர்ப்பப்பையோடு சேர்த்து சிறுநீர்ப்பையும் இறங்கி, சிறுநீர் தேக்கத்தால் கிட்னி இன்ஃபெக்‌ஷனும், சிறுநீர்ப் பை இன்ஃபெக்‌ஷனும் வர லாம். மலம் கழிக்க முடியாத தாலும் சில பிரச்னைகள் வரலாம்.

* கர்ப்பப்பை கீழே இறங்கி பக்கவாட்டில் உரசி, ரத்தப் போக்கு ஏற்படும்போதும், நடப்பதோ, உட்கார்வதோ கூட சிரமமாக மாறும் போதும்.

* சிறுநீர், மலம் கழிப்பதில் பிரச்னை இருந்தால்...

* அடி முதுகு வலி அதிகரித்தால்...

மருத்துவப் பரிசோதனையில் கர்ப்பப்பை கீழே இறங்கியிருப்பதை மருத்துவர்களால் உறுதிசெய்ய முடியும். ஸ்கேன் தேவையில்லை.
 
சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்றவர்களுக்கு பிறப்புறுப்புத் தசைகள் மற்றும் இடுப்பெலும்புப் பகுதியைச் சுற்றியுள்ள தசைகளை டைட்டாக்க சில பயிற்சிகள் உள்ளன. இந்தப் பயிற்சிகளை ‘பெல்விக் ஃப்ளோர் எக்சர்சைஸ்’ அல்லது ‘கெகல் எக்சர்சைஸ்’ என்கிறோம். பிரசவத்துக்குப் பிறகு, மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இந்தப் பயிற்சிகளைச் செய்யத் தொடங் கினால், பின்னாளில் கர்ப்பப்பை கீழே இறங்குவதைத் தவிர்க்கலாம். ஏற்கெனவே கீழிறங்கிய கர்ப்பப்பையை இந்தப் பயிற்சிகளின் மூலம் மேலும் தீவிரமாகாமல் தடுக்கலாமே தவிர, கீழே இறங்கியதை பழைய நிலைக்கு மாற்ற முடியாது.

சிறுநீர் கழிக்கும்போது அதை நிறுத்த முனைய அந்தப் பகுதியை டைட் ஆக்குவது போன்ற பயிற்சிதான் இது. மருத்துவரிடம் முறையாகக் கேட்டுத் தெரிந்துகொண்டதும் வீட்டில், பணியிடத்தில் என எப்போது வேண்டு மானாலும் இதைச் செய்யலாம்.

கர்ப்பப்பை இறக்கத்தை சரிசெய்யவென மருந்துகள் ஏதும் கிடையாது. இறங்கிய கர்ப்பப்பை தொந்தரவு கொடுக்கும்போது அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டியிருக்கும். கீழே இறங்கிய கர்ப்பப்பையை மேலே உயர்த்தி வைத்துத் தைக்க வேண்டும். இறக்கத்தின் நிலை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து அறுவைசிகிச்சை தேவையா என்பது முடிவு செய்யப்படும்.

`ரிங் பெசரி' (Ring Pessary) என்ற வளையத்தைப் பொருத்துவதன் மூலமும் பிரச்னை தீவிரமடையாமல் தடுக்கலாம். அதை மருத்துவரிடம்தான் பொருத்திக் கொள்ள வேண்டும். மூன்று மாதங்களுக்கொரு முறை எடுத்து இன்ஃபெக்‌ஷன் இருக்கிறதா என்று பார்த்து மறுபடி பொருத்திக்கொள்ள வேண்டும். அறுவை சிகிச்சை வேண்டாம் என்றால் இது ஒரு ஆப்ஷன்.

பிரசவமானதும் இடுப்புப் பகுதியைப் பலப்படுத்தும் பயிற்சிகளைச் செய்வதன் மூலம் கர்ப்பப்பையைச் சுற்றியுள்ள தசைகளை வலுவாக்கலாம்.

நிறைய தண்ணீர் குடிப்பது. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது, மலமிளக்கிகள் பயன்படுத்துவது போன்றவை மூலம் மலச்சிக்கல் பாதிப்பிலிருந்து மீள்வதோடு, கர்ப்பப்பை இறக்கத்தையும் தவிர்க்கலாம்.

தீவிர இருமல் பிரச்னைக்கு முறையான சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும். எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும்.

தண்ணீர் பக்கெட் போன்ற எடை அதிகமான பொருள்களைத் தூக்குபவர்களுக்கு பிரச்னை தீவிரமாகலாம். எடை தூக்குவதைத் தவிர்க்கவே முடியாது என்பவர்கள், முன்பக்கம் குனிந்து தூக்காமல், உட்கார்ந்தபடி உடலை வைத்து பிறகு, எடையைத் தூக்குவதுதான் சரியான முறை.

சிறுநீர்ப்பை இறக்கம்

சிறுநீர்ப்பை அதன் இடத்திலிருந்து நகர்ந்து வந்தால் அதை ‘சிஸ்டோசியெல்’ (Cystocele) அதாவது சிறுநீர்ப்பை இறக்கம் என்கிறோம். சுகப்பிரசவத்துக்குப் பிறகு, சிறுநீர்ப்பை இறக்கம் இருக்கும். சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீர் முழுவதுமாக வெளியேறாத உணர்வு, இருமினால், தும்மினால் ஏற்படும் சிறுநீர்க் கசிவு போன்றவை இதன் அறிகுறிகள். கர்ப்பப்பை அதன் இடத்திலேயே இருந்து, சிறுநீர்ப்பை மட்டும் இறங்கியிருந்தால் அதை மட்டும் தனியே அறுவைசிகிச்சையில் சரிசெய்ய முடியும்.

Editor's Choice

அமெரிக்காவை சேர்ந்த 22 வயதான, ஜோ டிமியோ (Joe DiMeo),க்கு வாகனம் ஓட்டுவது, குறிப்பாக கார் ஓட்டுவது மிகவும் பிடித்த பொழுது போக்காக இருந்தது.

வாழ்க்கையை திருப்பி போட்ட அந்த சம்பவம் ஜூலை 14, 2018 அன்று நேரிட்டது.  தனது இரவு-ஷிப்ட் வேலையில் இருந்து வீட்டிற்கு வந்த டிமியோவின் கார் விபத்துக்குள்ளானது. கார் உருண்டு சென்று அவரது உடலில் 80%  பகுதியில் தீவிரமான தீக்காயங்கள் ஏற்பட்டது. அவரது முகமும், கைகளும் சிதைந்து போனது.

அமெரிக்காவின் (America) நியூ ஜெர்சியிலுள்ள லிவிங்ஸ்டனில் உள்ள செயிண்ட் பர்னபாஸ் மருத்துவ மையத்தில், தீக்காயங்களுக்கான சிகிச்சை பிரிவில் நான்கு மாதங்கள் செலவிட்டார். அவர் அப்போது கோமா நிலையில் இருந்தார், மேலும் சுமார் 20 முறை ப்ளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்ட போதிலும், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இருக்கவில்லை.

பின்னர் டிமியோ 2019 மார்ச்சில் என்.யு.யு லாங்கோன் ஹெல்த் நிறுவனத்தில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவின் தலைவரான டாக்டர் எட்வர்டோ ரோட்ரிகஸ் (Dr Eduardo Rodriguez)  என்பவரிடம் சிகிச்சை பெறத் தொடங்கினார்  அவர் ஏற்கனவே மூன்று வெற்றிகரமான முக மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார்.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி, டாக்டர் ரோட்ரிக்ஸ் உடன் 140 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள், செவிலியர்கள் மற்றும் பிற ஊழியர்களைக் கொண்ட ஒரு குழு 23 மணி நேர அறுவை சிகிச்சை செய்து,  டிமியோவுக்கு ஒரு புதிய முகத்தையும் ஜோடி கைகளையும் கொடுத்தது.

அவர் இன்னும் சிகிச்சையில் இருக்கிறார் என்றாலும், மிகவும் புத்துணர்ச்சியுடன் காணப்படுகிறார். மருத்துவ உலகில் இது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

Editor's Choice

மனநல பிரச்னைகள் குறித்து அதிகம் பயமுறுத்தாத, தெளிவான வீடியோக்களே கட்டியை உலகின் மூலைமுடுக்கெங்கும் கொண்டு சேர்த்திருக்கின்றன.

‘எப்படிச் செயல்பட்டால் குறிக் கோளை அடைய முடியும் என்பதற் கான சாத்தியக்கூறுகள் பற்றி எந்நேரமும் சிந்தித்துக்கொண்டிரு. கனவு காண். அந்தக் கனவே உன்னை உந்தும்’

- உளவியலின் தந்தை சிக்மண்ட் ஃபிராய்டின் இந்த உளவியல் தத்துவத்தை முன்னிலைப்படுத்துகிறார் கட்டி மார்ட்டின் (Kati Mortin). அமெரிக்காவைச் சேர்ந்த கட்டி, உரிமம் பெற்ற உளவியல் ஆலோசகர்.

சமையல், ஃபேஷன், செலிபிரிட்டி என வழக்கமான யூடியூப் சேனல்கள் மத்தியில் அதிகம் பேசப்படாத ஆனால், பயனுள்ள ஆஃப் பீட் சேனல் வரிசையில் இடம் பிடிக்கிறது உளவியலுக்கான இவரது சேனல்.

தன் பெயரிலேயே யூடியூப் சேனலைத் தொடங்கி கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். நீரிழிவு இருப்பதையோ இதயநோய் இருப்பதையோ வெளியே சொல்லத் தயங்காதவர்கள், மனநல பிரச்னை இருப்பதை மட்டும் வெளியில் சொல்ல விரும்புவதில்லை. சமூகம் தங்களைக் கேலிப்பொருளாகப் பார்க்கும் என்ற பயம்தான் இதற்கு காரணம்.

இந்தத் தயக்கத்தையும் இறுக்கத்தையும் உடைக்க வேண்டும். மனநல பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதே கட்டியின் எண்ணமாக இருந்தது. யூடியூப் ஆரம்பிப்பது அவர் லிஸ்ட்டிலேயே இருக்கவில்லை.

“என் கணவர் ஒரு கருத்தரங்கைப் படம் பிடிப்பதற்காகப் போயிருந்தார். அங்கே யூடியூப் சேனல்கள் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றிருக்கிறது. வீட்டுக்கு வந்ததும், ‘மனநலம் பற்றிய புரிந்துணர்வு மக்களுக்கு ஏற்படுவதில்லை என்று புலம்பிக்கொண்டே இருக்கிறாயே, ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்து ஏன் அதைப் புரிய வைக்கக் கூடாது. வீடியோ எடுப்பதற்கு நான் உதவுகிறேன்’ என்றார்.

‘கேமரா முன்னால் என்னால் பேச முடியாது’ என்றேன். சில மாதங்கள் கழித்து நாம் ஏன் முயற்சி செய்யக் கூடாது என்று தோன்றியது” என்பவர், தயக்கத்தை உடைத்த தால் இதுவரை 1,186 வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார். சப்ஸ்கிரைபர்ஸ் எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கும் மேல்.

போபியாக்கள், மனநல குறைபாடுகள், பாலியல் வன்முறை, மன அழுத்தம், பதற்றம் பற்றிய ஆலோசனை வீடியோக்களுடன் மனநலம் சம்பந்தப்பட்ட திரைப்படங்கள், ஓடிடி சீரிஸ் ரெவ்யூ, மனநல பிரச்னைகளிலிருந்து மீண்டவர்களின் பேட்டிகள் என வெரைட்டி காட்டுகிறார்.

மனநல பிரச்னைகள் குறித்து அதிகம் பயமுறுத்தாத, தெளிவான வீடியோக்களே கட்டியை உலகின் மூலைமுடுக்கெங்கும் கொண்டு சேர்த்திருக்கின்றன.

“தனக்கு மனநல பிரச்னை இருக்கிறது. இதற்கு ஒரு மருத்துவரையோ நிபுணரையோ அணுக வேண்டும் என்ற உந்துதலைக் கொடுக்க வேண்டும் என்பதுதான் என் நோக்கம். சீரியஸாகப் பேசுகிறேன் என்று பயமுறுத்துவதில்லை. என்னுடைய வீடியோக்களுக்கு அதிகம் லைக்ஸ் வாங்குவதில் ஆர்வமில்லை. வீடியோக்களைப் பார்ப்பதன் மூலம் மனநல பிரச்னையுள்ள ஒருவர், நிபுணரிடம் சென்றால் அதுதான் என்னுடைய வெற்றி” என்கிறார் கட்டி.

இவரின் யூடியூப் வீடியோக்கள் உலகம் முழுவதுமுள்ளவர்களால் பார்க்கப் படுகின்றன. இதனால் இவர் செலிபிரிட்டி யாகவும் அறியப்படுகிறார். இவர் எழுதிய ‘ஆர் யூ ஓ.கே - உங்கள் மனநல பராமரிப்புக்கான வழிகாட்டி’ என்ற புத்தகமும் மிகவும் பிரபலம்.

“என் வீடியோக்களைப் பார்ப்பவர்கள் தங்களுடைய அனுபவங்களை கமென்ட்களாகப் பதிவு செய்வதற்கு ஊக்கப்படுத்துகிறேன். மனநல பிரச்னை உடையவர்களுக்கு அவற்றைப் பார்க்கும்போது இவை யெல்லாம் மனிதர்களுக்கு வரும் சாதாரண பிரச்னைகளே என்ற உணர்வைக் கொடுக்கும். நாம் அனைவருமே அவ்வப்போது மனநலம் தொடர்பான பிரச்னை களுக்கு உள்ளாகிறவர்கள் தானே” எனும் கட்டி, யூடியூப் தொடங்க விரும்புபவர் களுக்கும் உளவியல் ஆலோசனைகள் தருகிறார்.

“நீங்கள் ஒரு விஷயத்தைச் செய்ய விரும்பும்போது பல கேள்விகளும் கவலைகளும் எழும். கவலைப்படாமல் செயலைத் தொடங்கி அதன் பின்னால் ஓடத் தொடங்கி விட்டால், வெகு சீக்கிரமே அது உங்கள் வசமாகிவிடும்”

- உளவியலில் உற்சாகம் கூட்டுகிறார் கட்டி மார்ட்டின்.

Editor's Choice

குழந்தை பிறப்பு முதல் வயதானவர்கள் வரை தற்போது நாப்கின்களை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

குழந்தைகள் பிறந்தவுடனேயே டயாபர் மாட்டி விடுவதால் குழங்களைகளுக்கு சரும அலர்ஜி, புண் உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுகின்றன.

பெரியவர்களுக்கு இயற்கை உபாதையை அடக்க முடியாததால் அவர்களும் டயாபரை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

பெண்கள் மாதவிடாய் காலத்தில் சானிட்டரை நாப்கின்கள் பயன்படுத்துகின்றனர். இவை அனைத்தும் உடம்புக்கு கேடாய் முடிவதோடு மண்ணுக்கும் கேடாய் முடிவடைகிறது.

ஒரு குழந்தை பூப்பெய்தது முதல், 'மெனோபாஸ்' எனப்படும் நிரந்தர மாதவிடாய் விலக்கு காலத்தை அடையும் வரை, 120 கிலோ சானிட்டரி நாப்கின்கள் போன்ற பொருட்களை பயன்படுத்துகிறார். அந்த பொருட்கள் மண்ணில் மக்க, நுாற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகும். அப்படியொரு ஆபத்து இருக்கிறது என்பதை அறியாமலேயே நம் பெண்கள், விதவிதமான ரசாயன பொருட்களால் ஆன சானிட்டரி நாப்கின்கள் மற்றும் பேடுகளை அணிகின்றனர். அவற்றில் இருக்கும் ரசாயன பொருட்கள் மற்றும் செயற்கை மணமூட்டிகள், உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பவை.

உடனடியாக அவை தெரியாவிட்டாலும், கண்டிப்பாக தீங்கிழைப்பவை. அதற்கு மாற்றாக மீண்டும் சலவை செய்து, சுத்தப்படுத்தி பயன்படுத்தத் தக்க, முழுதும் இயற்கை மற்றும் மறுசுழற்சி பொருட்களால் ஆன, சானிட்டரி நாப்கின்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. இந்த நாப்கினை பயன்படுத்தி, அதை அவிழ்த்து, எங்களின் விசேஷமான உறையில் வைத்து, பையில் எடுத்து வைத்து, வீட்டுக்கு கொண்டு வந்து விடலாம்.அதன் பின், அதை சுத்தப்படுத்தி, உலர வைத்து, மீண்டும் அணிந்து கொள்ளலாம். அந்த சானிட்டரி நாப்கின் மற்றும் பேடில் இருப்பது, உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காத, நல்ல தரமான பருத்தியால் ஆன பொருட்கள். அதுபோல, பயன்படுத்தியவற்றை வைத்து எடுத்து வர பயன்படுத்தும் உறையும், மிகவும் தடிமனானது; வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதை அதிகபட்சம், ஒரு சில ஆண்டுகள் பயன்படுத்தலாம். அதன்பின், அதற்கென உள்ள விசேஷமான உறையில் வைத்து, குப்பை தொட்டியில் போட்டு விட வேண்டும்.
குப்பை அள்ளுபவர்கள் மற்றும் அவற்றை கையாளுபவர்கள் எளிதாக அவற்றை கண்டறியும் வகையில், சிகப்பு நிற பொட்டு போன்ற வடிவத்தை பெரியதாக அந்த உறையில் அச்சடித்துள்ளோம்.இதனால் பிற குப்பையிலிருந்து, அந்த குப்பையை தனித்து அகற்றி, பாதுகாப்பாக அழிக்க முடியும்.

இதேபோல் சிலிக்கானால் ஆன 'சானிட்டரி கப்'பும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை திரும்பத் திரும்ப பயன்படுத்திக் கொள்ளலாம்!

 
Editor's Choice

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி நிதி ஆண்டு 2019-20-ல் நம் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொகையில் 3.6% சுகாதார பராமரிப்புக்கென செலவிடப்பட்டுள்ளது. இந்தச் சதவிகிதம் குறையாமல் உயர்ந்துகொண்டேதான் போகப்போகிறது.

இப்போதுதான் பலர் மனதில் இந்த அபாய சங்கின் ஒலி கேட்கத் தொடங்கி இருக்கிறது. பல குடும்பங்களில் வருமான வரி விலக்குகளை முன் வைத்து மட்டுமே மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் பார்க்கப்பட்டும், எடுக்கப்பட்டும் வந்திருக்கின்றன. ஆனால், இந்தப் பெருந்தொற்று பலருக்குக் காப்பீடுகளின் அவசியத்தை உணர்த்திவிட்டது.

பல நேரத்தில், எதிர்பாராமல் வரும் ஒரு நோய் நம் தினசரி வாழ்க்கையை மாற்றி அமைத்துவிடுகிறது. ஒரு புறம், இனி வராத மாதச் சம்பளம், மறுபுறம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் மருத்துவச் செலவுகள். இவை பலருக்கு காப்பீட்டின் அவசியத்தைப் புரிய வைக்கத் தொடங்கி இருக்கின்றன.

காப்பீடுகள் அவசியம்தான். ஆனால், அவற்றில் உள்ள பல சட்ட விதிக்கூறுகள் நாம் எந்தக் காரணத்தை முன் வைத்து காப்பீட்டைச் செய்தோமோ அதை நிறைவேற்ற வழி இல்லாமல் செய்திடும். இந்த வகையில் நீரிழிவு நோய் பற்றிய சில விஷயங்களைப் பார்ப்போம்.

நீரிழிவு நோய், காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சில வருடங்களுக்கு முன் வரை இல்லாமல் இருந்தது. இதன் காரணமாக, இந்த நோயின் தொடர்ச்சியாக வரக்கூடிய கிட்னி பாதிப்பு, பார்வைக் கோளாறு மற்றும் கால் சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்குக் காப்பீட்டுத்தொகை கிடைக்காமலிருந்தது.

ஆனால், தற்போது இரண்டு வகை நீரிழிவு நோய்களுக்கும் (Type 1 and Type 2) காப்பீடுகள் கொடுக்கப்படுகின்றன. இது பலருக்கு வரம். காரணம் 2016-ம் ஆண்டு முதல் 2019 -ம் ஆண்டு வரையில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 120% அதிகரித்துள்ளது. இவர்களுக்கான செலவு எப்படி இருக்கும் என்பதையும் கவனிப்போம்.

சர்க்கரைநோய் சம்பந்தப்பட்ட எந்த வகை பாதிப்பு வந்தாலும், அதற்கான மருத்துவ செலவு பல லட்சங்கள் வரை போகலாம்.

மருத்துவமனை செலவு ஒரு முறை செலவுதான். ஆனால், இவர்கள் மாதம்தோறும் எடுத்துக்கொள்ளும் இந்த நோய்க்கான மருந்து, சோதனை, இன்சுலின், தனி வகை உணவுத் திட்டம் என்ற வகையில் ஆகக்கூடிய செலவு ரூ. 3,000 முதல் ரூ. 5,000 வரை.

இதை மனதில் வைத்துப் பார்க்கும்போது, இந்த நோய் இப்போது பரவலாக அனைத்து சமூகத்தின் அடுக்குகளிலும் பரவி வருவதால் ஒரு சாமானியனின் மாதச் சம்பளத்தில் குடும்பத்தில் ஒருவருக்கு வந்தால்கூட, பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆகவே காப்பீடு அவசியமாகிப்போகிறது.

இப்போது திட்டங்களுக்கு வருவோம். காப்பீடுகள் இரண்டு வகைப்படும். சாதாரண காப்பீடு மற்றும் சிறப்புக் காப்பீடு. இரண்டுக்குமான வித்தியாசம், சிறப்புத் திட்டங்களின் மாத காப்பீட்டுத்தொகை அதாவது பிரீமியம் மிக அதிகமாக இருக்கும். அடுத்தது, மொத்த காப்பீட்டுத்தொகையில் ஏதோ ஒரு வருடம் ஆஸ்பத்திரிக்காக நாம் செலவு செய்துவிட்டால், அந்தத் தொகை கழிக்கப்பட்டுவிடும். உதாரணத்துக்கு நாம் ஒரு லட்சம் காப்பீட்டுத்தொகை திட்டம் எடுத்திருந்தால், அதில் ஆஸ்பத்திரி செலவு ரூ. 50,000 கொடுத்துவிட்டால், இனி வரும் வருடங்களுக்கு நம் காப்பீட்டுத்தொகை ஒட்டுமொத்த வரம்பு ரூ.50,000 ஆக குறைக்கப்பட்டுவிடும். தவிர இதற்கு No Claim போனஸ் தொகையும் கிடையாது.

நீரிழிவு நோய் சில வருடங்களாகத்தான் காப்பீட்டுக் கொடையின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை முதலிலேயே பார்த்தோம். அது அனுமதிக்கப்படும்போது அவை இந்தச் சிறப்புக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. இதனால் சர்க்கரை நோயையும் காப்பீட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று விரும்புவோர் மிக அதிக பிரீமியம் கட்ட வேண்டியுள்ளது.

இந்த நிலை இன்றும் தொடர்கிறது. ஆனால், இதைத்தவிர நாம் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான ஒரு விதி, காப்பீடு எடுக்கப்பட்ட உடனேயே நாம் தொகை பெறுவதற்கு தகுதி பெறுவதில்லை. இந்தக் காத்திருப்புக் காலம், நிறுவனத்துக்கு நிறுவனம் மற்றும் நோய்க்கு நோய் மாறுபடுகிறது.

உதாரணம் கண்புரை, மூலநோய், விரைவீக்கம் போன்ற சிகிச்சைகளுக்கு இரண்டு வருட காத்திருப்புக் காலம் உள்ளது.

பிரீமியம் தொகை வருடா வருடம் வயது அதிகரிக்கும்போது அதிகரிக்காமல் இருக்குமா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சாதாரணமாக உங்கள் வயதுக்குச் சாதா காப்பீடுகளுக்கான பிரீமியம் தொகையில் 25% அதிகமாக இந்த நீரிழிவு காப்பீட்டுக்குச் செலுத்த தேவை இருக்கும்.

மிக முக்கியமாகக் கவனத்தில் கொள்ளத் தேவையானது, நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் group insurance health cover எடுக்க முடியுமானால், அதில் உங்கள் பெற்றோரையும் இணைத்து விடுங்கள். இப்படி ஃபேமிலி திட்டம் எடுக்கும்போது, காப்பீடு முதல் நாளிலிருந்தே பெறுவதற்குத் தகுதிபெறுகிறது. அதனால் நீரிழிவுக்கான காத்திருப்புக் காலம் இருக்காது.

இதைத் தவிர, சில நிறுவனங்கள் sub limits மற்றும் co-pay விதிகளைச் செயல்படுத்துகிறார்கள். உதாரணமாக, ரெலிகேர் நிறுவன காப்பீடுகளில் நமக்கு ஆகும் செலவில் 20% நாம் செலுத்த வேண்டும், இதுதான் co-pay. காப்பீட்டாளர் 71 வயதைக் கடந்த உடன் இந்த சதவிகிதம் 10% உயர்த்தப்படும். அதே போல், மருந்துகளுக்கான உயர்ந்த பட்ச அளவு, ஆஸ்பத்திரி அறைகளுக்கான அளவு என்பதையும் இந்த நிறுவனங்கள் விதிகளாக அமைத்திருக்கின்றன. இவைதான் சப் லிமிட்ஸ். இவற்றைப் பற்றியும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

ஒன்றை மட்டும் மனதில் கொள்ளுங்கள். சம்பாதிக்கத் தொடங்கிய உடனேயே உங்கள் மாத வருமானத்தில் 5-10% ஹெல்த் ஃபண்டுக்காகச் சேமிக்கத் தொடங்குங்கள். நீரிழிவு நோய் இப்போதெல்லாம் வயது பார்த்து வருவதில்லை. அதே போல் குடும்ப வரலாறு பற்றியும் கவலைகொள்வதில்லை. நீரிழிவு நோய் நம் நிதிச்சுமையை அதிகரிக்கச் செய்யும் ஒன்று என்பதை மறந்துவிட வேண்டாம்.

Editor's Choice

கம்ப்யூட்டர் முன்பு அதிகம் வேலை செய்பவர்கள், உடல்நலத்தில் அக்கறை எடுத்து கொள்வதற்கான சில டிப்ஸ்கள் இங்கே பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

முதலில் அதிக நேரம் கம்ப்யூட்டரை பார்ப்பவர்கள் கண்கள் மேல் கவனம் செலுத்த வேண்டும். மிக பக்கத்தில் இருந்து கம்ப்யூட்டர் திரையில் வெளிச்சத்தினை பார்ப்பதால், கண்கள் பாதிப்படைய நிறைய வாய்ப்பிருக்கிறது. இதனால் 15 நிமிடத்திற்கு ஒருமுறை கண்களுக்கு ஒய்வு கொடுப்பது நல்லது.
 
அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு இது சாத்தியப்படாது. இதற்கும் வழி இருக்கிறது. உள்ளங்கையை கண்கள் மேல் வைத்து ஒரு இரண்டு நிமிடம் ஒய்வு கொடுக்கலாம். இது ஓரளவு கண்களை பாதிப்பில் இருந்து காப்பாற்றும்.
 
தொடர்ந்து கம்ப்யூட்டர் முன்பு வேலை செய்யும் நபர்கள், பத்து நிமிடத்திற்கொருமுறை கைகளையும், உடலையும் நீட்டி மடக்கி சிறிய உடற்பயிற்சி செய்து கொள்வது மிக நல்லது. கணினியின் முன் அமர்ந்து டைப் செய்கையில் உடலை நேர்கோட்டில் வைத்திருப்பது மிக அவசியமான ஒன்று. இதனால் முதுகுத்தண்டு நேராக இருக்கும்.
 
இது போல் செய்வதால் உடல் வலி அதிகம் வருவதை குறைக்கலாம். பாதங்களை தரை மீது சமமாக வைத்திருப்பது இன்னும் சிறந்தது. உடலின் அனைத்து பலமும் பாதத்தின் மேல் இருப்பதால், பாதத்தினை சமநிலையில் வைத்து கொள்ள வேண்டும்.
 
டைப் செய்யும் போது முழங்கைகள், இடையின் பக்கத்தில் வைத்திருப்பது கைகளுக்கு சிறப்பாக சப்போர்ட் கொடுக்கும். இதனால் சரியான முறையில் அமர்ந்து டைப் செய்ய முடியும். அதோடு தோள்பட்டை வலியினையும் எளிதாக குறைக்க முடியும். கம்ப்யூட்டர் திரையின் வெளிச்சத்தினை குறைத்து வைத்து கொள்வது மிக அவசியமான ஒன்றாகும். இதனால் கண்களை எளிதாக பாதுகாக்கலாம். 

பக்கம் 35 / 49