Editor's Choice

யோனக்ஸ் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி வருகிற 12-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை பாங்காக்கில் நடக்கிறது.  இதற்காக இந்திய பாட்மிண்டன் அணியினர் தாய்லாந்து சென்றுள்ளனர். தாய்லாந்து ஓபன் போட்டி இன்று முதல் 17-ம் தேதி வரையிலும், டொயோட்டா தாய்லாந்து ஓபன் 19-ம் தேதி முதல் 24-ம் தேதி வரையிலும், பாட்மிண்டன் வேர்ல்ட் டூர் ஃபைனல் 27-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையிலும் நடக்கிறது.

இதில் பங்கேற்க இந்திய வீராங்கனை சாய்னா நேவால், அனுராக் காஷ்யப், ஹெச்.எஸ். பிரனாய், கிடம்பி ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து, அஸ்வினி பொன்னப்பா, சவுரப் வர்மா, சிராக் ஷெட்டி உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.
 
தாய்லாந்து ஒபன் பேட்மிண்டன் தொடரில் இருந்து இந்திய வீராங்கனை பிவி சிந்து முதல் ஆட்டத்திலேயே வெளியேறினார்.
 
முதல் போட்டியில் டென்மார்க்கின் மியா பிளிச்பெல்டும் இந்திய வீராங்கனை பிவி சிந்துவும் மோதினர்.முதல் சுற்றில் 21க்கு 16 என்ற செட் கணக்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிவி சிந்து, அடுத்த இரண்டு சுற்றுகளில் 24-க்கு 26, 13க்கு 21 என்ற செட் கணக்கில் பின்னடைவை சந்தித்து தோல்வியடைந்தார். 
 
இதனிடையே, சாய்னா நேவாலுக்கு கொரோனா பரிசோதனை முடிவு நெகடிவ் என வந்ததால் அவர் ஆட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
Editor's Choice

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 4 டெஸ்ட் கொண்ட தொடரில், அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதில் 2வது இன்னிங்சில் 36 ரன்னில் சுருண்டது பெரும் விமர்சனத்திற்குள்ளானது. இந்நிலையில் மெல்போர்னில் நடந்த 2வது டெஸ்ட்டில் இந்தியா அதே 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பதிலடி கொடுத்தது. 1-1 என தொடர் சமனில் இருக்க 3வது டெஸ்ட் சிட்னியில் நாளை தொடங்குகிறது. கோஹ்லி இல்லாத நிலையில் ரகானே மெல்போர்னில் சதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டார். ஜடேஜா அரைசதம் அடித்து வலு சேர்த்தார்.

ரோகித்சர்மா வருகை பேட்டிங்கில் வலு சேர்க்கிறது.  முதல் டெஸ்ட்டிலேயே சிராஜ் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். உமேஷ் யாதவ் காயத்தால் விலகிய நிலையில், சைனி, தாகூர் அல்லது தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் சேர்க்கபடலாம். நடராஜன் யார்க்கர் சிறப்பாக வீசினாலும் 130 கி.மீட்டர் வேகம் தான் உள்ளது. இதனால் சைனி அல்லது தாகூருக்கே அதிக வாய்ப்பு உள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுழலுக்கு சாதகமாக இருக்கும் ஒரே மைதானம் சிட்னி தான். இங்கு ஆஸ்திரேலிய அணி 108 டெஸ்டில் விளையாடி 60ல் வெற்றியும், 28ல் தோல்வியும், 20ல் டிராவும் கண்டுள்ளது. இந்தியா 12 டெஸ்ட்டில் ஆடி ஒரு வெற்றி, 5 தோல்வி, 6 டிரா கண்டுள்ளது. இந்தியாவின் ஒரே வெற்றி 1978ல் ஆண்டு பிஷன்சிங்பேடி கேப்டனாக இருந்தபோது கிடைத்தது. அதன்பின் 42 ஆண்டுகளாக இங்கு இந்தியா  வென்றதில்லை. 2004ம் ஆண்டு இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 705 ரன் குவித்து டிக்ளேர் செய்தது தான் அதிகபட்சம். ஆஸ்திரேலியா 2012ல் 4 விக்கெட் இழப்பிற்கு 659 ரன் குவித்து டிக்ளேர் செய்தது தான் அதிகம்.

இதனிடையே சிட்னியில் நாளை நடைபெறும் ஆஸி.க்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்டில் நடராஜன் இடம்பெறவில்லை. ரஹானே தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் ரோஹித், கில், விஹாரி, பந்த் ஆகியோர் இடம் பெறவில்லை. பந்து வீச்சாளர்களாக புஜாரா, அஸ்வின், ஐடேஜா, சிராஜ், சைனி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வாலுக்கும் இந்திய அணியில் இடம் பெறவில்லை.

Editor's Choice
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி வருகிற 12-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை பாங்காக்கில் நடக்கிறது.  இதற்காக இந்திய பாட்மிண்டன் அணியினர் தாய்லாந்து சென்றுள்ளனர். தாய்லாந்து ஓபன் போட்டி இன்று முதல் 17-ம் தேதி வரையிலும், டொயோட்டா தாய்லாந்து ஓபன் 19-ம் தேதி முதல் 24-ம் தேதி வரையிலும், பாட்மிண்டன் வேர்ல்ட் டூர் ஃபைனல் 27-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையிலும் நடக்கிறது.
 
இதில் பங்கேற்க இந்திய வீராங்கனை சாய்னா நேவால், அனுராக் காஷ்யப், எச்.எஸ். பிரனாய், கிடம்பி ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து, அஸ்வினி பொன்னப்பா, சவுரப் வர்மா, சிராக் ஷெட்டி உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.
 
இந்திய பேட்மிண்டன் வீரர்கள் சாய்னா நேவால், எச்.எஸ்.பிரனாய்க்கு இன்று காலை கொரோனா உறுதியானது. இதனிடையே பிரனாய்க்கு கொரோனா இல்லை என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதனால் தாய்லாந்து ஒபன் போட்டியில் கலந்து கொள்ள அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
 
சாய்னா தரப்பில் அறிக்கை எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
Editor's Choice

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி மெல்போர்னில் ஒரு உணவகத்துக்கு சென்ற ரோகித், கில், பன்ட், பிரித்வி, சைனி ஆகியோர் விதிமுறைகளை மீறி உள்ளரங்குக்கு சென்று சாப்பிட்டனர். மேலும், ரசிகர் ஒருவருடன் கை குலுக்கி செல்பி எடுத்துக்கொண்ட வீரர்கள், அவர்களுக்கான உணவுக் கட்டணத்தை அந்த ரசிகரே செலுத்தியதாக தகவல் வெளியானது. இந்த சம்பவத்தை அடுத்து ரோகித் உட்பட 5 வீரர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டதுடன் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், ஜன. 7ம் தேதி தொடங்கும் 3வது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் நேற்று தனி விமானத்தில் சிட்னி புறப்பட்டனர்.

தனிமைப்படுத்தப்பட்ட வீரர்களும் மற்ற வீரர்களுடன் இணைந்து பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். குயின்ஸ்லேண்ட் மாகாணத்தில் குவாரன்டைன் விதிமுறைகள் கடுமையாக கடைப்பிடிக்கப்படுவதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள இந்திய அணி, பிரிஸ்பேனில் 15ம் தேதி தொடங்க உள்ள 4வது டெஸ்டில் விளையாடத் தயங்குவதாக தகவல் வெளியானது. இதனால் கடைசி டெஸ்ட் போட்டியும் சிட்னிக்கு மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், ஆஸி. கிரிக்கெட் வாரியம் அதை மறுத்துள்ளது.

Editor's Choice

கோஹ்லி, அனுஷ்கா சர்மா ஜோடிக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் வீராட் கோஹ்லியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். கர்ப்பமாக இருந்த அனுஷ்காவுக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதற்காக, ஆஸ்திரேலியா சென்ற கோஹ்லி, முதல் டெஸ்ட் முடிந்த பின் இந்தியா திரும்பினார்.

கோஹ்லி இன்று வெளியிட்டுள்ள செய்தியில்,  மதியம் எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். உங்களது அன்பு, பிரார்த்தனை, வாழ்த்துக்கள் என அனைத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அனுஷ்கா, குழந்தை இருவரும் நலமாக உள்ளனர். எங்கள் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் துவங்கியுள்ளதாக உணர்கிறோம். இந்த நேரத்தில் எங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கு எல்லோரும் மரியாதை தருவீர்கள் என நம்புகிறோம். என விராட் தெரிவித்துள்ளார்.

Editor's Choice

ஆஸ்திரேியாவுக்குச் சென்றுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவல் இருப்பதால், இரு அணி வீரர்களும் பயோ-பபுள் பாதுகாப்பில் இருக்கின்றனர். இதனால் அணியின் குழுவைத் தவிர வெளியே தனியாக எங்கும் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பயோபபுள் சூழலை மீறி எங்காவது சென்றுவிட்டால், அணிக்குள் கொரோனா பரவல் தொற்று ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், வீரர்கள் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் புத்தாண்டு தினத்தன்று இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா, ரிஷப்பந்த், பிரித்விஷா, நவ்தீப் ஷைனி, ஷூப்மான் கில் ஆகிய 5 பேர் பயோ பபுள் சூழலை மீறி ஒரு ஹோட்டலுக்குச் சென்று உணவு சாப்பிட்டு புத்தாண்டைக் கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையால் ரோகித் சர்மா, ஷிப்மன் கில், ரிஷப் பந்த், பிருத்வி ஷா, நவ்தீப் சைனி ஆகிய வீரர்கள் தனிமைப்படுத்தி நடவடிக்கை மேற்கூள்ளப்பட்டுள்ளது. கொரோனா விதிகளை மீறிய 5 வீரர்கள் குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா, பிசிசிஐ விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே ஜன.7-ம் தேதி ஆஸி. அணியுடன் 3-வது கிரிக்கெட் டெஸ்டில் இந்திய அணி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

பக்கம் 39 / 49