Editor's Choice

சீனாவின் வூஹானிலுள்ள ஆய்வகத்திலிருந்து கொரோனா பரவியிருக்க வாய்ப்பில்லை என்று உலக சுகாதார அமைப்பின் நிபுணா் குழு தெரிவித்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் இருந்த கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவியது. இதனால், உலகில் இதுவரை 10 கோடியே 74 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 23.5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே கொரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்தில் இருந்து பரவியதாக அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன. இதனையடுத்து கொரோனா வைரசின் தோற்றம் குறித்து கண்டறிய உலக சுகாதார அமைப்பால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு சீனாவின் வூஹான் நகரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

கொரோனா வைரஸ், வூஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு, தற்செயலாக அங்கிருந்து வெளியேறி பொதுமக்களுக்குப் பரவியிருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. அந்த வைரஸ் எவ்வாறு உருவானது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக இன்னும் அதிகமான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது என உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

Editor's Choice
சிலருக்கு கூந்தல் எப்போதுமே வறட்சியுடன் காணப்படும். அவர்கள் அவ்வப்போது கழுவிய நீரைக் கொண்டு கூந்தலை அலசி, சிறிது நேரம் ஊறவைத்து, பின்  சுத்தமான குளிர்ந்த நீரில் கூந்தலை அலச வேண்டும். இதனால் கூந்தலின் மென்மைத்தன்மை அதிகரிக்கும். மேலும் முடியின் இயற்கை நிறமும் பாதுகாக்கப்படும்.
 
அரிசி கழுவிய நீரைக் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்கும். அத்துடன், சருமத்துளைகளும் அடைக்கப்படும்.  இதற்கு பஞ்சினை அரிசி கழுவிய நீரில் நனைத்து, பின் அதனைக் கொண்டு முகத்தை துடைத்து எடுக்க வேண்டும்.
 
அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியாக சரும செல்களுக்குள் செல்வதால், சருமம் எப்போதும் ஆரோக்கியமாகவும் பொலிவோடும்  இருக்கும். எனவே தினமும் ஒவ்வொரு முறை முகத்தைக் அரிசி கழுவிய நீரினால் கழுவ வேண்டியது அவசியம்.
 
அரிசி கழுவிய நீரில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை துரிதமாகச் செயல்பட்டு நமக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை வராமல் தடுக்கிறது. மேலும் ஆய்வுகளிலும் அரிசி கழுவிய நீரானது கூந்தலின் எலாஸ்டிசிட்டியை அதிகரித்து, அதனால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
Editor's Choice
தினமும் காலையில் சீரகத்துடன் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் பல நன்மைகளை பெறலாம். பல காலமாகவே நம்முடைய பாரம்பரிய மருந்துகளில் சீரகம்  பயன்படுத்தப்படுகிறது. 
 
சீரகத்தை தவறாமல் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சீரகம் உங்கள் உடலில் உள்ள செரிமான நொதிகளின் செயல்பாட்டை அதிகரிப்பதன்  மூலம் உங்கள் செரிமானத்திற்கு உதவும்.
 
சீரகத்தை கொதிக்கும் நீரில் போட்டு கஷாயம் செய்து கர்ப்பிணிகளுக்கு கொடுத்து வருவது நல்லது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சீரகத்தை லேசாக  வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். 
 
சீரகத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ஒரு டீஸ்பூன் சீரகத்தில் சுமார் 1.4 மில்லி கிராம் இரும்புச்சத்து இருக்கும். ஜீரகம் நீரிழிவு நோயை கட்டுக்குள்  வைப்பதற்கும் உதவும்.
 
சீரகம் உடலிலிருந்து கெட்ட கொழுப்பை அகற்ற பயன்படுகிறது. சீரகத்தை சாப்பிடுவது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவும். சீரகம் உடலில் உள்ள  கெட்ட கொழுப்பை குறைப்பதற்கும், எடையை குறைப்பதற்கும் உதவுகிறது. உடல் எடையை குறைப்பதற்கு சீரகத்தை தாராளமாக பயன்படுத்தலாம்.
 
சீரகத்தை அப்படியே சாப்பிடுவதன் மூலமோ, அல்லது சீரகத் தண்ணீரை தினமும் குடிப்பதன் மூலமாகவோ உடலிலிருந்து கொழுப்பை குறைக்க முடியும்.
Editor's Choice

பெண்கள் எப்போதுமே தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவேண்டும். ஆரோக்கியமில்லாவிட்டால் தூக்கம் பாதிப்பதோடு, உடல் நலம் சீர்கெடுவதற்கும் அது காரணமாகிவிடும்.

தூக்கம் ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவானதுதான். எந்த பாகுபாடும் இல்லாமல் இருவருமே தினமும் இரவில் 8 மணி நேரம் ஆழ்ந்து தூங்கவேண்டும் என்பதுதான் நியதி. ஆனால் உடல் அமைப்பும், குடும்ப சூழலும் பெண்களை போதுமான அளவில் தூங்க அனுமதிப்பதில்லை.

‘பெண்கள் பின் தூங்கி முன்எழவேண்டும்’ என்ற நியதி ஏற்கனவே இருந்துகொண்டிருந்தது. பழைய காலத்தில் அவர்களுக்கு பெருமளவு வெளிவேலைகள் இருந்ததில்லை. ஆனால் இப்போது பெண்கள் வீட்டு நிர்வாகத்தையும் கவனித்துக்கொண்டு, வெளியே அலுவலக வேலைகளுக்கும் செல்கிறார்கள். ஆனாலும், பின் தூங்கி முன் எழ வேண்டியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் பெண்களுக்கு பாலினரீதியாக இருக்கும் சில கடமைகளும் அவர்களின் தூக்கத்தை குறைக்கும் காரணியாக அமைந்துவிடுகிறது. அதாவது மாதவிடாய் காலம் மற்றும் கர்ப்பக்காலம், பிரசவ காலம், பெற்றெடுத்த குழந்தையை பாலூட்டி வளர்க்கும் காலம், மெனோபாஸ் போன்றவைகளில் அவர்கள் தூங்கும் நேரம் வெகுவாக குறைந்துபோகிறது.

மாதவிலக்குக்கு முந்தைய சில நாட்களிலும், மாதவிலக்கு நாட்களிலும் பெண்களின் உடலில் ஹார்மோன்களின் சுரப்பில் மாற்றங்கள் ஏற்படுகிறது. அப்போது தொடர்ச்சியாக சில நாட்கள் அவர்களது தூக்கம் பாதிக்கப்படும். குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் மாதவிலக்குக்கு முந்தைய சில நாட்களில் தூக்கமின்றி அவதிப்படுவார்கள். மாதவிலக்கு நாட்களில் ஏற்படும் மனச்சோர்வும், உடல்சோர்வும் தூக்கத்திற்கு இடையூறாக அமைந்துவிடுகிறது.

கர்ப்பிணியாகும் காலகட்டத்திலும் அவர்களது தூக்கத்தில் நெருக்கடி ஏற்படுகிறது. கருவுற்ற மூன்றாவது மாதத்தில் இருந்து இந்த பிரச்சினை உருவாகும். அது ஒன்பதாவது மாதம் வரை நீடிக்கும். அப்போது கருப்பையின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்வதால் மல்லாந்த நிலையில் கர்ப்பிணிகளால் தூங்கமுடியாது. கர்ப்பப்பை கொடுக்கும் அழுத்தத்தினால் சிலருக்கு ரத்த ஓட்டமும் பாதிக்கக்கூடும்.

அதனால் அவர்கள் வலது பக்கமாக ஒருக்களித்து படுக்கவேண்டும். அந்த நிலைக்கு அவர்கள் இயல்பாக மாறிய பின்புதான் நன்றாக தூங்கமுடியும். சிலருக்கு வழக்கமாக தூக்கத்தில் கால் தசைகளை இழுத்துப்பிடிக்கும் பாதிப்பு இருந்துகொண்டிருக்கும். அப்படிப்பட்ட பெண்கள் கர்ப்பகாலத்திலும் அதுபோன்ற அவஸ்தைக்கு உள்ளானால் அவர்களது தூக்கம் வெகுவாக பாதிக்கப்படும். கர்ப்பிணிகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருந்தாலும் தூக்கமின்றி அவதிப்படுவார்கள்.

பெண்கள் எப்போதுமே தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவேண்டும். ஆரோக்கியமில்லாவிட்டால் தூக்கம் பாதிப்பதோடு, உடல் நலம் சீர்கெடுவதற்கும் அது காரணமாகிவிடும். நிறைய பெண்கள் நாள்பட்ட மூட்டு வலி, நுரையீரல் தொடர்பான நோய்கள், சர்க்கரை நோய் போன்றவைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் நோய்த்தன்மையால் தொடர்ச்சியாக ஆழ்ந்து தூங்கமுடியாமல் தவிப்பார்கள்.

பெண்கள் தங்கள் வாழ்க்கையில் மெனோபாஸ் காலகட்டத்தில்தான் தூக்கமின்மையால் அதிகம் அவதிப்படுகிறார்கள். அப்போது உடலில் அதிகமாக சூடு தாக்கும். அடிக்கடி தூங்கவேண்டும் என்பதுபோல் தோன்றும். ஆனால் தொடர்ந்து ஆழ்ந்து தூங்கமுடியாமல் இடைஇடையே விழிப்பு வந்து தொந்தரவு தரும். அப்போது அவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் இருப்பதுபோல் தோன்றும். மனதில் நிம்மதி இருக்காது. அலைபாயும். பல்வேறு விதமாக மனஉளைச்சல் ஏற்படுவதால் தூக்கமின்றி தவிப்பார்கள்.

பெண்கள் நன்றாக தூங்கவேண்டுமானால் முதலில் மனதை அமைதியாக்கவேண்டும். தசைகளை நெகிழவைக்கும் பயிற்சிகளை செய்து உடல் இறுக்கத்தை குறைக்கவேண்டும். இரவு நேரங்களில் அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. தூங்க செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு இரவு உணவை சாப்பிட்டுவிடவேண்டும். மசாலாக்கள் அதிகம் இல்லாத எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும்.

 
Editor's Choice

''தினமும் 20 நிமிடம் ஒதுக்கி யோகா செய்தால், சர்க்கரை நோய் உட்பட, 95 சதவீத நோய்கள் வராமல் தடுக்க முடியும்,'' என்கிறது இயற்கை நலமருத்துவம்.

சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைப்பதற்கென, ஆசனங்கள் உள்ளன. வஜ்ராசனம், அர்ச்ச மச்சேந்தராசனம், சக்கராசனம், பத்மாசனம், பட்சிமோத்தாசனம் இப்படி பல ஆசனங்கள் உள்ளன. இந்த ஆசனங்களை, முறையாக பயிற்சி எடுத்த பின் செய்ய வேண்டும்.

எல்லா ஆசனங்களையும் செய்ய முடியவில்லை என்றால், மூன்று ஆசனங்கள் செய்தால் போதும். தினமும் 20 நிமிடம் ஒதுக்கினால் போதும். அதே போல், மூச்சு பயிற்சி செய்யலாம். இதன் மூலம் உடலுக்கு முழுமையாக ஆக்சிஜன் கிடைக்கும். மூச்சு குழாய்களும், நுரையீரலும் சுத்தமாவதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

உடல் எடையை குறைக்க, சர்வங்காசனம் செய்யலாம். பொதுவாக யோகா பயிற்சி செய்தாலே, உடல் எடை குறைய துவங்கி விடும். உணவு கட்டுப்பாடு வந்து விடும். இந்த ஆசனங்கள் செய்யும் போது, வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்.

நமது வேலைகளை, திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். எதை முதலில் செய்ய வேண்டும் என்பதை, முடிவு செய்து கொண்டு, வேலை துவங்கினால் டென்ஷன் இருக்காது. மன அழுத்தம் உள்ளவர்கள், அழுத்தம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஹார்டு ஒர்க்கை, ஸ்மார்ட் ஒர்க்காக மாற்றி செய்ய பழகி கொள்ள வேண்டும்.

மன அழுத்தம் வர, மன குழப்பம் முக்கிய காரணம். நம் வாழ்க்கை முறை, உணவு முறை, வேலை செய்யும் இடத்தின் சூழல் இவை மூன்றும்தான், மன குழப்பத்தை உருவாக்குகிறது. இதை தவிர்க்க, தியானம் செய்வது அவசியம். மன அழுத்தத்துக்கு மருந்து, தியானம்தான்.

உண்மைதான். ஒரு நாளைக்கு குறைந்தது ஏழு மணி நேரம் தூங்க வேண்டும். பிரச்னை இல்லாமல் வாழ்க்கை இல்லை. அதற்கான தீர்வை பற்றி யோசிக்காமல், பிரச்னையை பற்றி மட்டுமே யோசிப்பதால், தூக்கம் கெடுகிறது. தூக்கம் சரியாக இல்லை என்றால், பல பிரச்னைகள் வரும்.

மன சிக்கலும், மலச்சிக்கலும் இருக்கவே கூடாது. மலச்சிக்கல்உள்ளவர்களுக்கு துாக்கம் வராது. தினமும் யோகா செய்தால், துாக்கமின்மை உட்பட, 95 சதவீத நோய்கள் வராமல் தடுக்கலாம்.

Editor's Choice

நடிகர் சூர்யா கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், குணமடைந்ததாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம்.

அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும் என்று பதிவிட்டுள்ளார்.

பக்கம் 34 / 49