வூஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவவில்லை: நிபுணர் குழு

SOCIAL SHARE
Pin It

சீனாவின் வூஹானிலுள்ள ஆய்வகத்திலிருந்து கொரோனா பரவியிருக்க வாய்ப்பில்லை என்று உலக சுகாதார அமைப்பின் நிபுணா் குழு தெரிவித்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் இருந்த கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவியது. இதனால், உலகில் இதுவரை 10 கோடியே 74 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 23.5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே கொரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்தில் இருந்து பரவியதாக அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன. இதனையடுத்து கொரோனா வைரசின் தோற்றம் குறித்து கண்டறிய உலக சுகாதார அமைப்பால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு சீனாவின் வூஹான் நகரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

கொரோனா வைரஸ், வூஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு, தற்செயலாக அங்கிருந்து வெளியேறி பொதுமக்களுக்குப் பரவியிருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. அந்த வைரஸ் எவ்வாறு உருவானது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக இன்னும் அதிகமான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது என உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

ARUNACHALAM