Editor's Choice

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ. 200 அபராத தொகையாக வசூல் செய்தார்.

மகாராஷ்டிரா, கேரள மாநிலங்களை போன்று தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று அதிகரிக்க கூடாது என்பதற்காக எச்சரிக்கை மணி ஒளித்திருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள் 72 மணி நேரத்துக்கு முன்பாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டு இருக்க வேண்டும் என்றும் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னையில் கோவிட் கண்காணிப்பு மையங்கள் 4,000 படுக்கைகளுடன் தயார் நிலையில் உள்ளதாகவும், மற்ற மாவட்டங்களில் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் சுகாதார செயலாளர் கூறினார்.

Editor's Choice

கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் உடம்பில், நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாக உருவாகி இருக்கும். ஆனால் அது நிரந்தரமில்லை; தற்போது கொரோனா இரண்டாம் அலை என்றெல்லாம் வரும் நிலையில், மீண்ட உடனே போட்டுக் கொள்ளாமல், சிறிது தாமதமாக போட்டுக்கொள்ள வேண்டும்.

கொரோனா சிகிச்சை பெறுபவர்கள், கடுமையான பிற தொற்றுகளால் பாதிக்கப்பட்டவர்கள், சர்க்கரை, ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், 18 வயதுக்கு குறைந்தவர்கள், கர்ப்பிணிகள், பாலுாட்டும் பெண்களுக்கு தடுப்பூசி போடப்படுவதில்லை. 45 முதல் 59 வரையுள்ள சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், பாதிப்புகள் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்யும் மருத்துவ சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். தடுப்பூசியால் எவ்வித பிரச்னையும் இல்லை. ஆனாலும், பிற இணை நோய்களால் ஏற்படும் பாதிப்பு, தடுப்பூசியால் தான் ஏற்பட்டது என்ற தேவையற்ற சிக்கல்கள் எழும். இதனால்தான், இணை நோய்கள் கட்டுப்பாட்டில் உள்ளதற்கான மருத்துவ சான்றிதழ் பெறப்படுகிறது; இதனால் அச்சம் கொள்ளத்தேவையில்லை.

முதல் டோஸ் போட்டு, 29 நாட்கள் கழித்து எப்போது வேண்டுமானலும் இரண்டாம் டோஸ் போட்டுக்கொள்ளலாம். நோய் எதிர்ப்பு சக்தி, 45 நாட்களுக்கு பிறகே உடலில் உருவாகும்.

தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் மாஸ்க், சமூக இடைவெளி என்பது அனைவருக்கும் கட்டாயம். இப்பாதிப்பில் இருந்து முழுமையாக, நாம் அனைவரும் மீள, அரசின் விதிமுறைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

தடுப்பூசியால் எவ்வித பாதிப்பும் ஒருவருக்கும் ஏற்படவில்லை. தேவையற்ற மூடநம்பிக்கைகளை, கருத்துக்களை புறக்கணித்து தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். சாதாரணமாக காய்ச்சல், அசதி போன்ற பக்கவிளைவுகள் வரவாய்ப்புள்ளது. இது, அனைத்து தடுப்பூசிகளுக்கும் பொருந்தும் என்பதால், பயம் கொள்ள தேவையில்லை.

அலர்ஜி என்பது யாருக்கு ஏற்படும்; எதற்கு ஏற்படுகிறது என்பதை கணிக்க இயலாது. பிற மருந்துகளுக்கு அலர்ஜி உள்ளவர்கள், தடுப்பூசி போடக்கூடாது என்பது கிடையாது. குறிப்பிட்ட ஏதேனும் அலர்ஜி உள்ளவர்கள், தடுப்பூசி எடுத்துக் கொள்வதற்கு முன்பு மருத்துவர்களுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம். கொரோனா தடுப்பூசியால் எந்த பிரச்னையும் ஏற்படாது.

Editor's Choice

நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானி கொரோனா பரிசோதனைக்கான ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளார். இது பழைய முறையை விட முற்றிலும் மாறுபட்டதாகவும் மிகவும் வேகமான முறையாகவும் உள்ளது. கொரோனா தொற்று பரிசோதனையை புதிய வழியில் செய்துகொள்ள, நீங்கள் ஒரு அறையில் சத்தமாக கத்த வேண்டும் அல்லது பாட வேண்டும். இப்படி செய்தாலே உங்கள் பரிசோதனை முடிந்து விடும். உங்கள் மூக்கு மற்றும் வாயிலிருந்து மாதிரிகள் எடுக்க வேண்டிய அவசியமில்லை.

ஸ்க்ரீமிங் கோவிட் டெஸ்டின் புதிய மற்றும் எளிதான முறையைக் கண்டுபிடித்த விஞ்ஞானியின் பெயர் பீட்டர் வான் வெயிஸ். பீட்டரின் கூற்றுப்படி, கொரோனா வைரஸ் பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நபர், ஏர்லாக் செய்யப்பட்ட கேபினில் கத்த வேண்டும் அல்லது பாட வேண்டும். ஒரு தொழில்துறை காற்று சுத்திகரிப்பு கருவி, வாயிலிருந்து வரும் துகள்களை சேகரிக்கும். இது கொரோனா வைரஸை சோதிக்க பயன்படும்.

"ஒரு நபர் நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருந்தால், அவர் கூச்சலிடும்போது, அவர் வாயிலிருந்து 10,000 துகள்கள் வெளிவரும். இந்த துகள்களிலிருந்து கொரோனா வைரஸ் பரிசோதனை நடைபெறும். விஞ்ஞானி பீட்டர் தனது பரிசோதனை பூத்தை, நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள கொரோனா சோதனை மையத்திற்கு அருகே அமைத்துள்ளார். அங்கு மக்கள் கூச்சலிட்டோ அல்லது பாடல்களை பாடியோ கொரோனா பரிசோதனை செய்துகொள்கிறார்கள்.

இந்த புதிய வழியில் கொரோனா பரிசோதனை செய்துகொண்ட ஒருவர் இந்த முறை மிகவும் எளிதானதாக உள்ளது என்று கூறினார். இதில் வலியும் இல்லை. யாரும் நம்மை பார்க்காத போது கத்துவது இன்னும் நன்றாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். கொரோனா சோதனையில் தனக்கு தொற்று இல்லை என தெரிய வந்ததாவும் அவர் மேலும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

விஞ்ஞானி பீட்டர் கூறுகையில், இந்த கொரோனா பரிசோதனை செய்ய 3 நிமிடங்களே ஆகும் என்றார். பரிசோதனை செய்தவரின் மாதிரியில் கொரோனா வைரஸ்  உள்ளதா இல்லையா என்பது நானோமீட்டர் ஸ்கேல் சைசிங் கருவியின் உதவியுடன் செய்யப்படுகின்றது.

Editor's Choice

நமக்கு தண்டுக்கீரையை பற்றி நிறையவே தெரிந்திருக்கும். ஆனால் தண்டுக் கீரை விதைகள் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா. இது பார்ப்பதற்கு வெள்ளை நிறத்தில் தானியங்கள் போன்று காணப்படும். இதை அமர்நாத் என்று அழைக்கின்றனர். ஏராளமான ஊட்டச்சத்துக்களையும் நன்மைகளையும் உள்ளடக்கியது தான் இந்த தண்டுக் கீரை விதைகள். இதில் அதிக புரதச்சத்துக்கள் காணப்படுகிறது. இது அன்றாட நோய்களுக்கு தீர்வளிக்க உதவுகிறது.

அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் என பல சத்துக்கள் காணப்படுகிறது. இதில் அதிகப்படியான நார்ச்சத்துக்கள் இருப்பது நம் செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. இது கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்த உதவுகிறது. இது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த வழி வகுக்கிறது.

இந்த தானியம் உங்க கூந்தலை வலிமைப்படுத்தி கூந்தல் உதிராமல் காக்க உதவுகிறது. இந்த தானியத்தை கடைந்து பாலெடுக்கும் பாலில் அதிகமான அளவு கால்சியம் காணப்படுகிறது. எனவே இது  எலும்பு ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இந்த தானியத்தில் உள்ள விட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், விட்டமின் ஏ கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இது போக இந்த தானியம் எடை இழப்புக்கு உதவுதல், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துதல், தசை வளர்ச்சியை அதிகரித்தல், செலியாக் நோயைத் தடுப்பது போன்ற பல நோய்களுக்கு தீர்வளிக்கிறது.

அமர்நாத் தானியம் இந்தியாவில் பழமையாக சாகுபடி செய்யப்பட்ட தானியம் ஆகும். இதன் தோற்றம் 8000 ஆண்களுக்கு முன்பு இருந்தே காணப்படுகிறது. இந்த தானியம் ஊட்டச்சத்துக்களின் வளமான ஆதாரமாகும். அமராந்த் தாவரத்தின் தானியங்கள், இலைகள் மற்றும் தாவரங்களின் பிற பாகங்கள் என அனைத்தும் நம் உடலுக்கு நன்மை பயக்கும்.1970 களில் இந்த ஆலை மீண்டும் சாகுபடிக்கு கொண்டு வரப்பட்டது. 100 கிராமுக்கு அமராந்தின் ஊட்டச்சத்து மதிப்பு அமரந்த் தானியத்தில் பல வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதத்தின் சிறந்த மூலங்களாக உள்ளன.

அமராந்த் தானியங்களின் ஊட்டச்சத்து மதிப்புகளின் படி இதில் நார்ச்சத்துக்கள் அதிகளவில் இருப்பது நம் செரிமான அமைப்புக்கு நன்மை பயக்கும். இது இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. வீக்கம், மலச்சிக்கல், தசைப்பிடிப்பு மற்றும் பல நோய்களிலிருந்து பாதுகாக்க அமராந்த் தானியம் உதவுகிறது. இந்த உணவில் உள்ள நார்ச்சத்துகள் இரைப்பை புண்கள் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்ற கடுமையான நிலைமைகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது இது உடலில் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கும் திறனை கொண்டுள்ளது. ஊட்டச்சத்துக்களை உடம்பு நன்றாக உறிஞ்ச உதவுகிறது.

அமர்நாத் தானியத்தில் அதிகளவு லைசின் என்பது காணப்படுகிறது. அமர்நாத் தானியத்தில் முழுமையான புரதம் காணப்படுகிறது. இவையிரண்டும் நம் உடல் மெட்டா பாலிசத்தை மேம்படுத்த உதவுகிறது. லைசின் உடலுக்கு ஒரு முக்கியமான அமினோ புரதம் ஆகும். இது உடலில் பயன்படுத்தக்கூடிய புரதங்களை உருவாக்குவதில் மிகவும் நன்மை பயக்கிறது. இது மேம்பட்ட வளர்சிதை மாற்றத்தையும் உடலில் முழுமையான வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.

அமர்நாத் தானியத்தில் பொட்டாசியம் அதிகளவு இருப்பது இரத்த நாளங்கள் தளர்வாக இருப்பதை உறுதி செய்கிறது. இது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. பொட்டாசியத்தின் வாசோடைலேஷன் பண்புகள் இரத்த நாளங்கள் மற்றும் தமனிகள் மீதான அழுத்தத்தை குறைக்கிறது. இது இதய நோய் களுக்கான வாய்ப்பை குறைக்கிறது.

விட்டமின் சி அடங்கிய அமர்நாத் தானியங்கள் நம்முடைய நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. இது நோயெதிர்ப்பு சக்திக்கு காரணமான இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. உடலில் கொலாஜன் உற்பத்தி செய்வதில் அதன் பங்களிப்பை தருகிறது. வைட்டமின் சி செல்களை சரிசெய்வதற்கும், விரைவாக குணப்படுத்துவதற்கும் நன்மை பயக்கும்.

இந்த தானியத்தில் விட்டமின் ஏ சத்து காணப்படுவதால் கண் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இதில் பீட்டா கரோட்டீன் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் இருப்பதால் கண் புரையை தடுக்க உதவுகிறது. கண்களில் ஏற்படும் மாகுலர் சிதைவை கொடுக்கிறது.

Editor's Choice

பொருளாதார வசதி உள்ள குழந்தைகள், அதிக உடல் எடையுடன் இருப்பர் என்று நினைப்பது தவறு.

நடுத்தர, வறுமைக் கோட்டில் உள்ள குழந்தைகளும், உடல் பருமனோடு இருக்கின்றனர். காரணம், 'பெப்சி, கோக், கேக், பிஸ்கட், லேஸ், குர்குரே' போன்ற, அதிக கலோரி உள்ளவை, மிகக் குறைந்த விலையில், பெட்டிக் கடைகளிலும் கிடைப்பது தான்!

பதினைந்து ஆண்டுகளுக்கு முன், ஒல்லியாக, ஊட்டச்சத்து குறைபாடுடன் குழந்தைகளை அழைத்து வருவது, இயல்பான ஒன்று.தற்போது, அப்படியே மாறி, 'அதிக உடல் எடையை எப்படி கட்டுப்படுத்துவது?' என்று கேட்கின்றனர்.ஒரே நாளில் பிரச்னையை தீர்த்து விட முடியாது. தொடர்ந்து எடுக்கும் முயற்சிகளால் மட்டுமே, குழந்தை ஆரோக்கியமாக மாற முடியும்.

அதிலும், 'ஆன்லைன்' வகுப்புகள் மட்டுமே நடக்கும் தற்போதைய நிலையில், பிரச்னை மேலும் தீவிரமாகி உள்ளது. சரியான உடல் எடையுடன் தான் இருக்கிறோமா, தினசரி சாப்பிடும் உணவு முறை சரியானது தானா. எந்த உணவில் என்ன சத்துக்கள் உள்ளன, என்று அறிந்து கொள்ள, நவீன ஆலோசனை மையம் துவக்கி உள்ளோம்.

உடல் எடையை குறைக்க, உடனே அறுவை சிகிச்சை செய்வது கூடாது. எடைகூடியதற்கான காரணம் என்ன என்று தெரிந்து, அதை தவிர்க்க வேண்டும். அடுத்து, உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி என்று, தினசரி வாழ்க்கையில் ஒழுங்கு முறையை பின்பற்றி, இதில் எல்லாம் பலன் இல்லை என்றால் மட்டுமே, அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

உடல் பருமன், ஊட்டச்சத்து, உணவு முறை குறித்து, இந்த மாத இறுதி வரை இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Editor's Choice

உலக மக்கள் தொகையில் 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்குத்தான் கொரோனாவுக்கு எதிரான ‘ஆன்டிபாடி’ எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிக மக்கள் நெரிசல் மிகுந்த நகர்ப்புறங்களில், சில இடங்களில் 50 முதல் 60 சதவீதம் பேருக்கு கொரோனா வந்துள்ளது. அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் உருவாகி உள்ளது.

ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதற்கு தடுப்பூசி போடுவதுதான் ஒரே வழி. தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள், கொரோனாவால் ஏற்படும் மரணம், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் நிலை ஆகியவற்றில் இருந்து நல்ல பாதுகாப்பை அளிக்கின்றன.

அதே சமயத்தில், அறிகுறி இல்லாத கொரோனா பாதிப்பு, லேசான பாதிப்பு ஆகியவற்றுக்கு எதிராக தடுப்பூசி உறுதியுடன் செயல்படுவது பற்றி ஆய்வு நடந்து வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

பக்கம் 29 / 49