Editor's Choice

நமது இந்திய நாட்டில் விளைகின்ற மருத்துவ மூலிகை வகைகள் அளவிற்கு உலகின் மற்ற நாடுகளில் விளைகின்ற மருத்துவ மூலிகைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவானது ஆகும். இதில் பல மூலிகைகள் நமது வீட்டு தோட்டங்களில் அவற்றின் மகத்துவம் என்ன என்பதை அறியாமலே பலரும் வளர்த்து வருகின்றனர். அப்படி பலராலும் அவர்களின்  வீடுகளில் வளர்க்கப்படும் ஒரு மூலிகையாக “கற்பூரவள்ளி” செடி இருக்கிறது. இக்கற்பூரவள்ளி செடியின் மேலும் பல மகத்துவங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கற்பூரவள்ளி பயன்கள் சுவாச பிரச்சனைகள் மழை மற்றும் குளிர்காலங்களில் வயது பேதமின்றி அனைவருக்கும் சளி, ஜலதோஷம் ஏற்பட்டு மூக்கடைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல், தொண்டைக்கட்டு போன்றவை ஏற்படுகின்றது. கற்பூரவள்ளி செடிகளின் இலைகளை நன்றாக கசக்கி பிழிந்து, அந்த இலையின் சில துளிகளை மூக்கில் விட்டு உறிஞ்ச மூக்கடைப்பு மற்றும் சைனஸ் தொந்தரவுகள் நீங்கும். அந்த இல்லை சொட்டுகளை தொண்டையில் படுமாறு அருந்த தொண்டைக்கட்டு, வறட்டு இருமல், சளி தொந்தரவுகள் ஆகியவை நீங்கும்.
 
தோல் நமது உடலின் மேற்பரப்பான தோலில் சில நுண்கிருமி தொற்றால் படை, சொறி, அரிப்பு போன்றவை ஏற்படுகின்றன. கற்பூரவள்ளி இலைகளை சிறிது பறித்து, நனவு கசக்கி அந்த இலைகளின் துளிகளை பாதிக்கப்பட்ட தோல் பகுதிகளில் விட்டு வந்தால் விரைவில் குணமாகும். சில பூச்சிகள் கடிப்பதால் தோலில் இருக்கும் அப்பூச்சியின் நஞ்சையும், தோலில் ஏற்பட்டிருக்கும் வீக்கத்தையும் போக்குவதற்கு மேற்கூறப்பட்ட வழிமுறையை பின்பற்றலாம்.

ஆஸ்டியோபொராஸிஸ் என்பது உடலில் இருக்கும் எலும்புகள் மற்றும் மூட்டு பகுதிகளை பாதிக்கும் ஒரு நோயாகும்.  இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு எலும்புகள், மூட்டுகள் தேய்மானம் அடையவும் செய்கிறது. கற்பூரவள்ளி இலைகளில் எலும்புகள், மூட்டுகளின் நலத்தை மேம்படுத்தும் ஒமேகா 6 என்கிற வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இந்த இலைகளை  கொண்டு செய்யப்பட்ட தைலத்தை மூட்டுகள், எலும்பு பகுதிகளில் தேய்த்து வருவது இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
சிறந்த நிவாரணம் அளிக்கும்.

கற்பூரவள்ளி செடிகளின் இலைகளின் வாசத்தை அடிக்கடி சுவாசிப்பவர்களுக்கு, அந்த இலைகளில் இருக்கும் ரசாயன பொருட்கள் நரம்பு மண்டலங்களை அமைதிப்படுத்தி, மன அழுத்தம், படபடப்பு தன்மை போன்றவற்றை போக்குகிறது. கற்பூரவள்ளி செடிகளின் இலைகள் சிறுநீரை அதிகம் பெருக்கும் தன்மை கொண்டது. இது சிறுநீரகங்களில் அதிகளவில் சேரும் உப்புகளை கரைத்து சிறுநீரகங்களின் நலனை காக்கிறது. சிலருக்கு சில வகையான உணவுகள் அதிகளவிலும், நேரங்கடந்து சாப்பிடும் போதும் அஜீரண பிரச்சனை ஏற்படுகிறது.

நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னையும் உருவாகிறது. இப்படிபட்ட சமயங்களில் கற்பூரவள்ளி செடியின் இலை சாற்றின் சில துளிகளை உள்ளுக்கு அருந்தினால் அஜீரண கோளாறுகள் நீங்கும். நெஞ்செரிச்சல் உணர்வும் போகும்.

Editor's Choice
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் முறையாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பின் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு பரவி மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். 
 
தற்போது படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதற்கிடையில் கொரோனாவிற்கு எதிராக பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்திருப்பதால் மக்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.
 
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மரபணு மாற்றம் அடைந்த கொரோனா, முன்பிருந்த வைரசை விட 70 சதவீதம் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்தனர். இதனால் அந்நாட்டில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
மரபணு மாற்றம் அடைந்துள்ள கொரோனா வைரசுக்கு எதிராக தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பு மருந்துகள் பலன் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்னொரு வகையில் 3-வது முறையாக கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து இருக்கிறது.
 
இந்த புதிய வகை கொரோனா வைரஸ் பிரேசில் நாட்டின் மனஸ் பகுதியில் கண்டறியப்பட்டு இருக்கிறது. அந்நாட்டில் ஏற்கனவே வைரஸ் பாதிப்பு அதிகளவில் இருந்து வருகிறது. தற்போது வைரஸ் மரபணு மாற்றம் அடைந்துள்ளதால் 3-வது அலை தாக்கக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
 கொரோனா பாதிப்பில் இங்கிலாந்து தற்போது 5-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 13,308 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து அங்கு கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 40,27,106 ஆக உயர்ந்துள்ளது.  
 
கொரோனா தொற்று பாதிப்பால் 621 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அங்கு பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 908 ஆக உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 21.25 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
Editor's Choice

சிறு நகரம் முதல் மாநகரம் வரை பெருகி வருவது மக்கள் தொகை மட்டுமல்ல, வாகனங்களும் தான். இரண்டு சக்கர வாகனம் முதல் பஸ்,  லாரி, டிரக் வண்டிகள் என்று பலவித வாகனங்கள் சாலையை ஆக்ரமித்து வருகின்றன. ஒருவருக்கு ஒருவர் தனது பணி புரியும் இடத்தை, வேக வேகமாக அடைந்து விட வேண்டும் என்று போட்டி போட்டுக் கொண்டு வாகனத்தில் செல்வது ஒரு பக்கம்.

மது அருந்தி விட்டு வாகனங்களில் பயணிப்பவர்களும் இருக்கிறார்கள். வயதான முதியவர்கள் மட்டுமன்றி வளரும் குழந்தைகள் கூட காலை முதல் இரவு தூங்கும் வரை படிப்பு படிப்பென்று இருப்பதால் உடற்பயிற்சியே இல்லாமல் உடலில் எலும்புக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் இன்றி எதிர்பாராத விதமாக எலும்பு முறிவு எளிதாக ஏற்பட்டு விடுகிறது. அதிக உயிர் இழப்புகள், சாலை விபத்துக்கள் என்பதுடன் எலும்பு முறிவும் அதிகமாகிக் கொண்டே வரும் ஒரு உடல்  சார்ந்த பிரச்சனையாகி விட்டது.
 
எலும்பு முறிவு ஏற்படாமலிருக்க சத்தான உணவுகள் உட்கொள்வதும் கவனக் குறைவு இல்லாத வண்ணம் நடந்து கொள்வதும் அவசியமானது. எலும்பு முறிவு ஏற்பட்டால் ஆயுர்வேதத்தில் குணப்படுத்த பல மூலிகைகள் இருந்தாலும் எலும்பொட்டி என்ற மூலிகையை பெரும்பாலான மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.

இதன் அறிவியல் பெயர் ஓர்மோகார்பம் கொசின் சைனிஸ். தாவரக் குடும்பம் ஃபபசியே. இது எங்கு காணப்படுகிறது?

தாய்வான், இந்தியா, ஜப்பான், மலேசியா, பசிபிக் தீவுகள், பிலிப்பைன்ஸ், இலங்கை, தாய்லாந்து, சீனா மற்றும் வியட்னாமில் காணப்படுகிறது.

விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. எலும்பொட்டிச்  செடி வகையைச் சேர்ந்தது. வளம் உள்ள மண்ணில் எளிதாக, நன்றாக வளரும். அதிக வெயில், அதிக குளிர் இல்லாத மிதமான சீதோஷ்ண நிலையில் வளரும். இச்செடி எலும்பு முறிவை குணமாக்கும் என்பது ஆரம்ப காலத்தில் ஒரு சிலர் மட்டும் தெரிந்து வைத்த ரகசியமாகவே வைத்திருந்தார்கள். ஆறு அடி முதல் ஒன்பது அடி வரை உயரமாக வளரும். இச்செடி எப்பொழுதும் பச்சைப் பசேல் என்று இருக்கும். இலையானது எதிர் அடுக்குகளாக  காணப்படுவதுடன், அதில் 17 இணுக்குகள் இருக்கும். இலையானது 1.5 செ.மீ முதல் 2.5 செ.மீ வரை நீளம் இருக்கிறது. இலைகள் முதிர்ந்தால், கருப்பாகிவிடும்.

அது போல தண்டுகள் முதிர்ந்தால் கெட்டியாகி விடும். பூக்கள் மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் காணப்படும். பூக்கள் வாடினால் பசை போன்று இருக்கும். இதில் கால்சியம் அதிகம் காணப்படுகிறது. விதைகள் முட்டை வடிவத்தில், பிரவுன் நிறத்தில் இருக்கும். இதிலிருந்து எண்ணெய் தயாரிக்கப் படுகிறது. எலும்பொட்டி மூலிகை மாதம் ஓரிரு முறை 5 கிராம் அளவு எடுத்து சூடான பால் கலந்து அருந்தி வர உடல் வலிமை பெறும். எலும்புகள் வலுவுடன் உறுதியாக அமையும்.

இதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, தண்ணீர் விட்டு நன்கு சுண்டும் அளவுக்கு வேக வைத்து சாறை வடிகட்டி, அதில் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து பாட்டிலில் வைத்துக்கொண்டு எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில், இரண்டு லேசான மூங்கில் தப்பையில் வெள்ளைத் துணி சுத்தி கட்டுப் போடுவார்கள். பின்னர் அதன் மீது இந்த மருந்தை நனைத்துக் கொண்டிருப்பார்கள். இவ்வாறு செய்து வர, ஒரு சில மாதங்களில் அடிபட்ட இடம் குணம் பெறும்.

உடல் பருமன் உள்ளவர்களுக்கு எலும்புகளின் ஆரோக்கியம் பாதிப்படைந்து இருக்கும்.

Editor's Choice

ஒலியின் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கும் சிகிச்சை சமீப காலமாகப் பிரபலமாகி வருகிறது.

மனது பாரமாக இருக்கும்போது நல்ல இசையைக் கேட்டால் கொஞ்சம் இதமாவதை உணர்ந்திருக்கிறீர்களா?

இயற்கைச் சூழலில் பறவைகள் எழுப்பும் ஒலியும் அருவி நீரின் சத்தமும் ஒருவித உற்சாகத்தைக் கொடுப்பதை அனுபவித்திருக்கிறீர்களா?

ஒலிக்கும் மனநலனுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அதன் அடிப்படையில்தான் ஒலி சிகிச்சை என்றே ஒன்று பின்பற்றப்படுகிறது. ஒலியின் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கும் சிகிச்சை சமீப காலமாகப் பிரபலமாகி வருகிறது.

``இந்த சவுண்டு தெரபி தியானம் மாதிரி செயல்படுகிறது. இது உங்கள் கிளர்ச்சியுற்ற நரம்புகளை அமைதிப்படுத்தி உணர்வுகளைக் கட்டுப்படுத்துகிறது. உடம்பு வலிக்கு வெதுவெதுப்பான குளியல் எடுத்துக்கொள்வது போல இந்த சவுண்ட் பாத் மன வலிக்கு இதமாக மாறுகிறது. இசைக்கருவிகள், இசை ஊடகங்களைப் பயன்படுத்தி மனதுக்கும் உடலுக்கும் முழுமையான நிம்மதியைத் தர உதவுகிறது. இதில் இசைக் கிண்ணங்கள் மற்றும் கோங் எனப்படும் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. சவுண்ட் பாத் எனப்படும் ஒலிக் குளியல் மன அழுத்தத்தை அதன் வேரிலிருந்து நீக்க உதவியாக இருக்கும்.

சவுண்ட் பாத் எடுத்துக்கொள்ள எந்த வித விதிகளும் இல்லை. சாதாரணமாக நீங்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டோ, படுத்துக்கொண்டோ நிதானமாக கண்களை மூடிக்கொண்டு அறையில் வெளிப்படும் ஒலிகள் மற்றும் இசையை காதால் கேட்டு ரசிக்க வேண்டும். சில நேரங்களில் அறையில் இனிமையான ஒலிகளை அறிமுகப்படுத்த ஃபோர்க்ஸ், கோங்ஸ், படிக கிண்ணங்கள் மற்றும் சைம்ஸ் போன்ற கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. சில மருத்துவ சிகிச்சையாளர்கள் தங்கள் சொந்தக் குரலில் இசையை எழுப்பிக்கூட இந்தச் சிகிச்சையை மேற்கொள்கின்றனர்.

இந்த இசைக் குளியலில் நீங்கள் மனதார நனையும்போது, உங்கள் உணர்வுகள் யாவும் உங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. இசைத்தட்டுகள், ஸ்பீக்கர், கோங்ஸ் மற்றும் பிற கருவிகளின் பயன்பாட்டின் மூலம், உருவாக்கப்பட்ட அதிர்வுகள் உங்களைச் சுற்றிலும் மன அமைதி, சமநிலை மற்றும் தளர்வு உணர்வைத் தருகின்றன. இதனால் மன ரீதியான பிரச்னைகளைக் குணப்படுத்துவதற்கான சூழல்களும் மேம்படுகின்றன.

இது உடலைப் படிப்படியாகத் தியான நிலைக்குக் கொண்டு செல்கிறது. இப்படி இசை தியானம் செய்யும்போது தூக்கப் பிரச்னை, நினைவாற்றல் மற்றும் செரிமானத்தைப் பாதிக்கும் பிற தூண்டுதல்களைச் சமநிலைப்படுத்தி, நீண்ட கால நோய்கள் நம்மை ஆட்கொள்ளாமல், மன அழுத்தத்தைப் போக்குகிறது. இதயம் மற்றும் சுவாசத்தின் வேகத்தை நிதானப்படுத்தி உடலில் ஒரு சமநிலையை உருவாக்குகிறது.

இது உங்கள் எண்ணங்களில் கலந்துள்ள நச்சுகளை வெளியேற்றவும், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நீங்கள் தளர்வாக இருக்க உதவும். நரம்பு மண்டலத்தை மீட்டெடுப்பதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், வலிகளைச் சமாளிக்கவும் பயன்படுகிறது. எனவே, மன அழுத்தம் மற்றும் பதற்றம் நிறைந்த காலத்தில் இது போன்ற இசைக் குளியல் எடுப்பது சிறந்தது.

 

Editor's Choice
சிலருக்கு கைகளில் உள்ள இயற்கை எண்ணெய்கள் வறட்சியடைந்து, சொறிப்பிடித்தது போன்று காணப்படும். இதனை கிரீம்களை விட இயற்கை மூலம் எளிதில் நீக்கலாம்.
ஆலிவ் ஆயிலை தினமும் இரவில் படுக்கும் போது கை, கால்களுக்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், சருமத்திற்கு வேண்டிய ஈரப்பசை கிடைத்து, கை, கால்களில் உள்ள வறட்சி நீங்கும்.
 
* மில்க் க்ரீம் ஓர் சிறந்த மாய்ஸ்சுரைசர். மில்க் க்ரீம் கொண்டு தினமும் மசாஜ் செய்து வாருங்கள். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, புதிய செரும செல்கள் உருவாக வழிவகுக்கும்.
 
குளிர்காலத்தில் தயிரை தினமும் கை, கால்களுக்கு தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, சருமத்தின் ஈரப்பசை தக்க வைக்கப்படும்.
 
* கண்ட க்ரீம் மாய்ஸ்சுரைசர்களை கை, கால்களுக்கு தேய்ப்பதற்கு பதிலாக, தினமும் இரவில் படுக்கும் முன் தேங்காய் எண்ணெய்யை கை, கால்களுக்கு தடவி  வந்தால், கைகளில் ஏற்படும் வறட்சியைத் தடுக்கலாம்.
Editor's Choice

நன்மை விளைவிக்கும் பாக்டீரியா `பழைய சாதத்தில்' அதிகம் இருக்கின்றன. இரிட்டபுள் பவல் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து பழைய சாதத்தைச் சாப்பிட்டுவரும் பட்சத்தில் இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட முடியும்.

இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம் (IBS - Irritable bowel syndrome)' என்பது நமக்கு ஏற்படும் ஒருவித `ஃபங்ஷனல் டிஸ்ஆர்டர் (Functional disorder)'. அதாவது ஏதேனும் ஒரு நோய்க் கிருமியாலோ, சத்துக் குறைவாலோ ஏற்படுவதில்லை. சொல்லப்போனால் இது நோயே அல்ல. நம் எண்ணங்களால் வயிற்றில் ஏற்படும் ஒருவித பிரச்னை. குடலின் செயல்பாடுகளைத் தானியங்கி நரம்பு மண்டலம் கட்டுப்படுத்துகிறது. உணர்ச்சிவசப்படுதல், மனச் சோர்வுடன் இருத்தல், பதற்றமடைதல் போன்ற உணர்வுகளுக்குச் சிலரின் குடல் வெகுவாக எதிர்விளைவுகளை உண்டாக்கும். இதன் காரணமாக, வயிற்றில் வலி, உப்புசம், மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஆகியவை ஏற்படும். இதையே `இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்' என்று குறிப்பிடுவார்கள்.

``நம் குடலில் லாக்டோபேசிலஸ் (Lactobacillus), ஈ.கோலை (E.coli) போன்ற நன்மை விளைவிக்கும் சில பாக்டீரியா உயிர்வாழ்கின்றன. இவை உணவு செரித்தல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் போன்ற செயல்பாடுகளை ஊக்கப் படுத்துகின்றன. மேலும், நம் மூளையில் ஏற்படும் உணர்வு மாற்றங்களால் குடலில் ஏற்படும் எதிர்விளைவுகளைக் குறைத்து `இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்' வராமலும் தடுக்கின்றன. நம் குடலில் வாழும் இந்த நல்ல நுண்ணுயிரிகள் குறையும்போது செரிமான பிரச்னை, மலச்சிக்கல், வயிறு உப்புசம், இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.இந்த நன்மை விளைவிக்கும் பாக்டீரியா `பழைய சாதத்தில்' அதிகம் இருக்கின்றன. இரிட்டபுள் பவல் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து பழைய சாதத்தைச் சாப்பிட்டுவரும் பட்சத்தில் இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட முடியும். தற்போது இந்த சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருவோர்க்குத் தினமும் பழைய சாதத்தைச் சாப்பிடச் சொல்லி அவர்களைத் தொடர்ந்து பரிசோதித்து வருகிறோம். அடுத்தகட்டமாக, இரிட்டபுள் பவல் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட 600 நபர்கள் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த ஆய்வுக்குத் தேவைப்படும் நுண்ணோக்கி மற்றும் சில மருத்துவ உபகரணங்களைத் தற்போது தயார் செய்து வருகிறோம்" என்கிறார் மருத்துவர். .

``நம்மிடையே பல தலைமுறைகளாக வழக்கத்தில் இருக்கும் உணவுதான் பழைய சாதம். எளிய உணவுதான். ஆனால், இதிலுள்ள சத்துகள் ஏராளம். பழைய சாதம் எடுத்துக்கொள்கிறேன் என்ற பெயரில் சிலர், காலையில் வடிக்கும் சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து மதியம் சாப்பிடுவார்கள். இதுபோல் எடுத்துக்கொள்வதால் அதிக பயன் எதுவும் கிடைக்காது.

நாம் தண்ணீர் ஊற்றிவைக்கும் சாதம் நொதித்தலுக்கு (Fermentation) உட்பட வேண்டும். அதற்குக் குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும். வடித்த சாதத்தை மண் பானையில் தண்ணீர் ஊற்றி நொதிக்க வைக்க வேண்டும். பானையை முழுவதுமாக மூடிவிடாமல் சிறிது காற்றோட்டம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். சாதம் நொதிக்க வெயில் காலத்தில் 8-10 மணிநேரமும், மழைக்காலத்தில் 10-12 மணிநேரமும் எடுத்துக்கொள்ளும். சிலர் பழைய சாதத்தை எவர்சில்வர் பாத்திரத்தில் வைத்திருப்பார்கள். ஆனால் இதற்கு மண்பாண்டமே சிறந்தது.

மண் பானையில் நொதிக்க வைத்த பழைய சாதத்தைச் சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து கிடைக்கிறது. மேலும் நொதித்தலுக்கு உட்பட்ட சோற்றில் லாக்டோபேசிலஸ் உள்ளிட்ட உடலுக்கு நன்மை விளைவிக்கும் நுண்ணுயிரிகள் நிறைந்துள்ளது. தவிர இதில் வைட்டமின்கள், நார்ச்சத்துகள், அமினோ அமிலங்கள், தாது உப்புகள் உள்ளிட்ட சத்துகளும் உள்ளன.

இத்துணை சத்துகள் நிறைந்த பழைய சாதம் நமக்கு மட்டுமல்லாமல், நம் குடலில் வாழும் நன்மை விளைவிக்கும் நுண்ணுயிரிகளுக்கும் சிறந்த உணவாக (Culture medium) உள்ளது. உடலுக்கு நன்மை விளைவிக்கக் கூடிய லட்சக்கணக்கான நுண்ணுயிரிகள் நம் குடலில் வாழ்கின்றன. இந்த நுண்ணுயிரிகள் உடல் ஆரோக்கியத்தோடு சேர்த்து மனதின் செயல்திறனையும் நிர்ணயிக்கக் கூடியவையாக உள்ளன. அதனால் உடலில் இவற்றின் எண்ணிக்கை குறையும்போது இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம், செரிமான பிரச்னை உள்ளிட்ட உடல் மற்றும் மனம் சார்ந்த பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். நம் வயிற்றில் வாழும் நல்ல நுண்ணுயிரிகள் குறைவதற்கு முக்கிய காரணம் நாம் உட்கொள்ளும் துரித உணவுகள். அதிக உப்பு, காரம், எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவுகள் இந்த நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையைக் குறைக்கின்றன.

ஆனால், பழைய சாதம் நம் வயிற்றில் வாழும் நுண்ணுயிரிகளுக்குச் சிறந்த உணவாக இருந்து அவற்றின் எண்ணிக்கையைப் பெருக்குகிறது. தினமும் காலையில் 7 - 8.30 மணிக்குள் காலை உணவாகப் பழைய சாதத்தை எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும்" என்கிறார் சித்த மருத்துவர்,

பக்கம் 33 / 49