Editor's Choice

இன்றைக்குக் காணப்படுகின்ற பதற்றமும், பாதுகாப்பின்மையும், இந்த அளவுக்கான மன அழுத்தமும் பல நிலைகளிலும் இருப்பதற்கு உடல்கள் குழப்பமடைந்திருப்பது முக்கியமான காரணங்களுள் ஒன்றாக இருக்கிறது.

காதலில் இருப்பது என்பதற்கும் காதலில் வீழ்வது என்பதற்கும் வேறுபாடு இருக்கிறதா? எப்போதும் எனது முந்தைய உறவில் இணக்கமின்மை ஏற்படுகின்ற காரணத்தால், நான் தொடர்ந்து புதிய உறவைத் தேடுகிறேன்.

இதற்கு பதிலளித்த சத்குரு நீங்கள் அடிக்கடி புதிய நபர்களுடன் இப்படி காதலில் விழுந்துகொண்டே இருந்தால் சிறிது காலம் கழித்து, உங்களுக்கு உலகத்தில் யாரையுமே பிடிக்காமல் போய்விடும்.

பலருடனும் இணையும் விளையாட்டை நீங்கள் தொடர்ந்துகொண்டே இருந்தால், சிறிது காலத்திற்குப் பிறகு, நீங்கள் உணர்ச்சியற்று மரத்துப் போய்விடுகிறீர்கள். நீங்கள் யாரையும் விரும்புவதில்லை. இதற்கு ருனானுபந்தம் என்பது காரணமாக இருக்கிறது.

ருனானுபந்தம் என்பது கர்மவினையின் ஒரு குறிப்பிட்ட அம்சம். அது கர்மவினையின் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பாக உள்ளது. மனிதர்களிடையே எந்த வகையில் தொடர்பு ஏற்பட்டாலும் அங்கெல்லாம் சிறிதளவு ருனானுபந்தம் உருவாகிறது. குறிப்பாக, இரண்டு உடல்கள் இணையும்பொழுது, ருனானுபந்தம் அதிக ஆழமாக ஏற்படுகிறது. அது உடலில் உண்டாகும் ஒருவிதமான பதிவு. உடல், தனக்கு நிகழ்ந்துள்ள ஒவ்வொன்றைப் பற்றியும் ஒரு பதிவு வைத்திருக்கிறது. ஒரு உடல், இன்னொரு உடலுடன் நெருக்கமான தொடர்பு வைத்துக் கொண்டால், பிறகு அந்த குறிப்பிட்ட சக்தியை தனக்குள் பதிவு செய்துகொள்கிறது.

உடல் அவற்றை நினைவில் வைத்துக்கொள்ளும் காரணத்தால், பல பேருடன் உடலளவில் கூடும்போது, மெல்ல காலப்போக்கில் உடல் குழப்பத்திற்கு உள்ளாகிறது. அந்தக் குழப்பம் எண்ணற்ற வெவ்வேறு வழிகளில் உங்கள் வாழ்க்கையில் விளைவுகள் ஏற்படுத்தும். உங்கள் மனமும் குழம்பிவிடுகிறது. ஆனால் எப்படியோ ஒருவாறு அதனுடன் நீங்கள் வாழ்கிறீர்கள். உடல் குழப்பம் அடைகிறதென்றால், அப்போது நீங்கள் ஆழமான தொந்தரவுக்கு உள்ளாகிறீர்கள்.

சிறிது காலம் கழிந்தபிறகு நீங்கள் பைத்தியமாவதற்கு வேறு எந்தக் காரணமும் உங்களுக்குத் தேவையில்லை. உடலே குழப்பத்தில் இருக்கும் காரணத்தினால் வேறு எந்தக் காரணமும் இல்லாமல், மக்கள் பைத்தியநிலைக்குப் போகிறார்கள்.

உடலளவில் பலருடன் உறவு கொள்ளும்போது, இந்த உடல் குழப்பமடைவது ஒரு விஷயம். மற்றொன்று, நீங்கள் உண்ணும் உணவு. சிறிது பணம் வந்துவிட்டாலே, மக்கள் தங்களது ஒருவேளை உணவிலேயே எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட வேண்டும் என்று எண்ணுகின்றனர். ஆசாரமான மக்கள், ஒருவேளை உணவில் இரண்டு அல்லது மூன்றுவிதமான உணவுக்கு மேல் ஒருபோதும் சாப்பிடவில்லை. மேலும் அந்த மூன்றுவித உணவுகளும் எப்போதும் ஒன்றுக்கொன்று இணையாகவே இருந்தன. ஒன்றுக்கொன்று பொருத்தமற்ற உணவாக அவை இருந்ததில்லை. நம் வீடுகளில் இருந்த மூத்தவர்கள் உடலை நன்கு புரிந்தவர்களாக இருந்தனர். ஒரு குறிப்பிட்ட காய் சமைக்கப்படும்போது, அதை எப்படி, எந்த சுவையில், எந்தப் பொருட்களுடன், சமைக்க வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். இந்தக் காயைச் சமைக்கும்போது, அதற்கு மாறுபட்ட வேறொரு உணவை அன்று சமைக்கமாட்டார்கள். ஏனெனில் பாரம்பரியமாகவே, இதையும் அதையும் இணைத்தால், உடல் குழப்பமடையும் என்பதை நாம் புரிந்திருந்தோம். உங்களது உடல் குழப்பமடைந்துவிட்டது என்றால், பல வழிகளிலும் நீங்கள் கட்டுப்பாட்டை மீறிய நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். இந்தப் புரிதல் எப்போதும் இங்கே இருந்தது.

உடல்தன்மையில் ஒருவிதமான குழப்பத்தை உருவாக்கி, காலப்போக்கில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இருபெரும் விஷயங்கள் - மக்களின் முறையற்ற உணவுப் பழக்கங்கள் மற்றும் பாகுபாடற்ற உடல் உறவுகள். “நான் பாவம் இழைத்துவிட்டேனா? இது எனக்கு ஒரு தண்டனையா?” அந்த நிலையில் நிகழ்வதல்ல இது. ஆனால் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பின்விளைவு இருக்கிறது. இது ஏதோ ஒழுக்கம் தொடர்பானதல்ல, இது ஒருவிதமான பிரபஞ்ச வழிமுறை. உங்கள் மனம் மூலம் நீங்கள் குறிப்பிட்ட விஷயங்களைச் செய்தால், குறிப்பிட்ட பின்விளைவுகள் நேரும். உங்களது உடலினால் சில விஷயங்களைச் செய்தால், வேறு குறிப்பிட்ட சில பின்விளைவுகள் நிகழும்.

இத்தகைய விஷயங்கள் ஆழமாக புரிந்துகொள்ளப்பட்டது, அதனால் அதைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட முறையில் வாழ்க்கை கட்டமைக்கப்பட்டது. இப்போது சுதந்திரத்தின் பெயரால், எல்லாவற்றையும் அழித்துவிட்டுப் பிறகு துன்பப்படுகிறோம். இது வாழ்வதற்கான முறையல்ல என்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு, ஒருவேளை நாம் உணருவோம்.

Editor's Choice

வளர்ந்து வரும் இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனையான யாஷாஸ்வினி சிங் தேஸ்வால், 2019ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றார்; தற்போது இந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதற்கான முனைப்புடன் இருக்கிறார்.

முன்னாள் ஜூனியர் உலக சாம்பியனான தேஸ்வால், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்ற பல துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் வெற்றி கண்டுள்ளார். இருப்பினும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச ஐஎஸ்எஸ்எஃப் போட்டியில் அவர் குறிப்பிடத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்தினார் அதுவே அவருக்கு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பையும் பெற்று தந்தது.

இந்தோ திபெத் எல்லை காவல் படையில் மூத்த அதிகாரியாக இருந்த தேஸ்வாலின் தந்தை எஸ்எஸ். தேஸ்வால், 2010 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிக்கு யாஷாஸ்வினியை அழைத்து சென்றபோது அவருக்கு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஆர்வம் ஏற்பட்டது.

அதன்பிறகு சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் வீரரும், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியுமான டிஎஸ்.திலன் மேற்பார்வையில் தீவிரமாக துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டார் தேஸ்வால்.

2014ஆம் ஆண்டு புனேயில் நடைபெற்ற 58ஆவது தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பல்வேறு பிரிவில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார் அவர். அப்போதிலிருந்து அவர் பல தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்று வருகிறார். அதில் 2017ஆம் ஆண்டு ஜூனியர் சாம்பியன் பட்டமும் அடங்கும்.

யாஷஸ்வினியின் குடும்பம் அவரின் பயிற்சி மற்றும் போக்குவரத்திற்கு மிகுந்த உறுதினையாக இருந்து வருகிறது. இருப்பினும் இந்தியாவில் துப்பாக்கிச் சுடும் வீரர்கள் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர் என்கிறார் அவர்.

படிப்பு மற்றும் விளையாட்டு இரண்டிலும் கவனம் செலுத்துவதே தனது மிகப்பெரிய சவால் என்கிறார் யாஷஸ்வினி. விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டே தேர்விலும் கவனம் செலுத்தி வருகிறார் அவர்.

துப்பாக்கிச் சூட்டில் தொடர்ந்து பிரகாசித்த யாஷஸ்வினி 2017ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் படைத்த உலக சாதனையின் மூலம் புகழ் வெளிச்சம் பெற்றார்.

இருப்பினும் 2019ஆம் ஆண்டு பிரேசிலில் நடந்த ஐஎஸ்எஸ்எஃப் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதே அவரது மிகப்பெரிய சாதனையாக உள்ளது இதுவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அவருக்கு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இடம் பெறும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தது.

போதிய அதரவு வழங்கினால் எந்த பெண்ணும் தனது முழு பலத்தை காட்ட முடியும் என்பதை மீண்டும் நிரூபிக்கிறார் யாஷாஸ்வினி.

 ஒவ்வொரு முயற்சியிலும் தன்னுடன் துணை நின்ற தனது குடும்பத்திற்கு தான் மிகுந்த நன்றிக் கடன் பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் அவர்.

இந்தியாவில் குடும்பங்களின் ஆதரவை பெண்கள் போதுமான அளவு பெருவதில்லை என்று கூறும் யாஷாஸ்வினி, விளையாட்டுத்துறையில் பெண்கள் அதிகம் சாதிக்க வேண்டும் என்றால் மனநிலையில் மாற்றம் வேண்டும் என்கிறார்.

 

Editor's Choice

தமிழகத்தைச் சேர்ந்த சந்தியா ரங்கநாதன், சாதாரண குழந்தைப்பருவத்தை கொண்டவர். அரசால் நடத்தப்படும் விடுதியில் படித்து முன்னேறிய அவர், மிகவும் இளம் வயதில், கால்பந்தாட்டத்தில் சேர்ந்ததோடு, நாட்டிற்காக பல பதக்கங்களையும் வென்றுள்ளார்.

தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் மே 20ஆம் தேதி, 1998இல் பிறந்தார் சந்தியா. பெற்றோர் இருவரும் பிரிந்துவிட்டதால், அரசால் நடத்தப்படும் விடுதியில், மிகவும் இளம் வயதிலேயே சேர்ந்துவிட்டார்.

அவரின் தந்தையும் இல்லாத சூழலில், தனி ஒருவராக, சந்தியாவின் தேவைகளை தாயாரால் பூர்த்தி செய்ய முடியவில்லை.

அரசினர் விடுதியில், தன்னைவிட பெரியவர்கள் கால்பந்தாட்டம் ஆடுவதைப்பார்த்து வியந்து போனார் சந்தியா. அந்த சீனியர்கள், விளையாட்டிற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வந்தனர்.

அவர்களை பின்பற்ற விரும்பிய சந்தியா, தானும் பல்வேறு இடங்களுக்கு சென்று விளையாடவேண்டும், அந்த இடங்களையெல்லாம் பார்க்க வேண்டும் என்று விரும்பினார்.

ஆறாம் வகுப்பு படித்து வந்த சந்தியாவிற்கு இதுவே ஒரு பெரிய ஊக்க சக்தியாக இருந்தது.

அவரின் விளையாட்டு பயணத்தின் தொடக்க நிலை, மிகவும் கடினமாக இருந்தது, அவருக்கான தேவைகளில் பற்றாக்குறை இருந்தது. கடலூர் மாவட்டத்தில், சிறப்பான முறையில் கால்பந்து விளையாட சமமான மைதானம் இல்லை. ஆனாலும், அவரையும், அவரின் விளையாட்டுத் திறனையும் சேர்த்து பெற்றோர் போல ஊக்குவித்த சிறந்த பயிற்சியாளர்களால், இந்த குறை சந்தியாவிற்கு தெரியவே இல்லை. இதற்காக, ஒரு சராசரி குழந்தைபோல, பெற்றோருடன் சந்தியா வாழவில்லை என்று அர்த்தம் ஆகாது.

அவ்வப்போது, அவரின் தாயார், சந்தியாவை விடுதியில் வந்து பார்த்துவிட்டுப் போவார். ஆனாலும், இது சாதாரணமான தாய்-மகள் உறவாக அமையவில்லை.

உடன் படிக்கும் பலர் அனுபவிக்கும் இயல்பான சில விஷயங்கள் தனக்கு கிடைக்கவில்லையே என்று சந்தியா வருத்தம் கொண்டார். அத்தகைய சூழலில், கால்பந்து மட்டுமே அவருக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக இருந்தது. மீதம் இருந்த நேரம் முழுவதுமே படிப்பிலேயே சென்றது. பிறகு, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில், வணிகத்தில் முதுகலைப்பட்டம் படிக்க சென்றார்.

தற்போது அவர், கடலூரில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் சமூக சேவையில் முதுகலைபட்டம் பயின்று வருகிறார்.

திருவள்ளுவர் பல்கலைக்கழக பயிற்சியாளர் எஸ். மாரியப்பன் இவருக்கு நல்ல பயிற்சி அளித்து உருவாக்கினார். அதுபோல, கடலூரில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு அகாடமியும், சந்தியா ஒரு சிறந்த வீராஙகனையாக உருவாக பெரும் பங்கு வகித்தது.

தனது கவனத்தால், பயிற்சியாளர்களின் ஊக்குவிப்பாலும், ஆரம்பம் முதலே சந்தியா, மைதானத்தில் அனைவரின் கவனத்தையும் பெற ஆரம்பித்தார்.

2019ஆம் ஆண்டு இந்திய மகளிர் லீக்கில், மிகவும் திறன்வாய்ந்த வீராங்கனை என்ற பட்டத்தை அவர் பெற்றார். திறமையான விளையாட்டு மற்றும் உடனடியான அங்கீகாரம், அந்த இளம் வீராங்கனையின் தன்னம்பிக்கைக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்தது.

மின்னல்போல விளையாடும் சந்தியா, நேபாளத்தின் தலைநகர் காத்மண்டூவில் நடந்த, எஸ். ஏ. எஃப். எஃப் மகளிர் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவிற்காக விளையாடினார். இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது மட்டுமின்றி, அதிக கோல்கள் எடுத்த வீராங்கனைகள் பட்டியலில் சந்தியாவும் இடம்பெற்றிருந்தார்.

அவருக்கு மிகவும் அதிர்ஷ்டமான இடமாக நேபாளம் மாறியது. 13ஆவது ஆசிய விளையாட்டுப்போட்டிகள் அங்கு நடந்தபோது, இரண்டு கோல்கள் அடித்த சந்தியா, இந்தியா சாம்பியன்ஷிப் பட்டம் வெல்லவும் காரணமாகினார்.

2019ஆம் ஆண்டு வெற்றிக்குப் பின்பு, 2020இல் அடியெடுத்து வைத்த சந்தியா, இந்திய மகளிர் லீக்கில் நான்காம் இடம் வகிக்கும் வீராங்கனை என்ற பெயருடன் ஆண்டைத்தொடங்கினார்.

விளையாட்டு வீராங்கனைகளுக்கு பொருளாதார பாதுகாப்பு என்பது முக்கியமான ஒரு விஷயமாகிறது என்கிறார் சந்தியா. வாழ்வாதாரம் என்ற ஒரு விஷயம்தான் பல வீராங்கனைகள் விளையாட்டுத்துறையை முழுநேரமாக எடுத்து விளையாட தடைக்கல்லாக உள்ளது என்கிறார் அவர்.

பெண்கள் அதிக எண்ணிக்கையில் விளையாட்டுத்துறையை தேர்வு செய்து வெற்றிகொள்ள, வருங்காலத்தில் அவர்களுக்கு பொது அல்லது தனியார் துறையில் வேலைவாய்ப்பு உள்ளது என்ற உறுதியான நிலை உருவாகவேண்டும் என்கிறார் சந்தியா.

Editor's Choice

ஐபிஎல் 2020 நடந்து முடிந்த சூட்டோடு சூடாக, இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது.

ஒரு நாள் போட்டி தொடரில் தொடங்கி டெஸ்ட் போட்டிகளில் முடிந்தது ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான போட்டிகள்.

ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டி தொடரிலும், இந்தியா டி20 மற்றும் டெஸ்ட் போட்டி தொடர்களிலும் வெற்றியைப் பதிவு செய்தன.

ஆஸ்திரேலியாவின் அனுபவமிக்க வீரர்களைக் கொண்ட அணியை, இந்தியாவின் இளம்படை அற்புதமாக எதிர்கொண்டது என கிரிக்கெட் உலகமே பாராட்டியது.

மீண்டும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறது.

முதல் டெஸ்ட் - சென்னையில் பிப்ரவரி 05-ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. பிப்ரவரி 09-ம் தேதி நிறைவடைகிறது.

இரண்டாவது டெஸ்ட் - சென்னையில் பிப்ரவரி 13-ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. பிப்ரவரி 17-ம் தேதி நிறைவடைகிறது.

மூன்றாவது டெஸ்ட் - அஹமதாபாத்தில் பிப்ரவரி 24-ம் தேதி மதியம் 2.30 மணிக்குத் தொடங்கிறது. இது இரவு பகல் பிங்க் பந்து போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 28-ம் தேதி நிறைவடைகிறது.

நான்காவது டெஸ்ட் - அஹமதாபாத்தில் மார்ச் 04-ம் தேதி காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது. மார்ச் 08-ம் தேதி நிறைவடைகிறது.

இந்தியா vs இங்கிலாந்து டி20 போட்டிகள்:

அனைத்து போட்டிகளும் அஹமதாபாத்தில் நடக்கவிருக்கின்றன.

முதல் டி20 - மார்ச் 12-ம் தேதி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது

இரண்டாவது டி20 - மார்ச் 14-ம் தேதி இரவு 7 மணி

மூன்றாவது டி20 - மார்ச் 16-ம் தேதி இரவு 7 மணி

நான்காவது டி20 - மார்ச் 18-ம் தேதி இரவு 7 மணி

ஐந்தாவது டி20 - மார்ச் 20-ம் தேதி இரவு 7 மணி

இந்தியா vs இங்கிலாந்து ஒருநாள் போட்டிகள்:

அனைத்து போட்டிகளும் புனேவில் நடக்கவிருக்கின்றன. எல்லாமே பகலிரவுப் போட்டிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல் ஒரு நாள் போட்டி - மார்ச் 23-ம் தேதி மதியம் 1.30 மணிக்கு தொடங்கிறது.

இரண்டாவது ஒரு நாள் போட்டி - மார்ச் 26-ம் தேதி மதியம் 1.30 மணிக்கு தொடங்கிறது.

மூன்றாவது ஒரு நாள் போட்டி - மார்ச் 28-ம் தேதி மதியம் 1.30 மணிக்கு தொடங்கிறது.

Editor's Choice

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது.

இதில் 28ம் தேதி நடந்த 74-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.-ஐதராபாத் எப்.சி. அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. பெங்களூரு அணியில் கேப்டன் சுனில் சேத்ரி 9-வது நிமிடத்திலும், லியோன் அகுஸ்டின் 61-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்த சீசனில் சுனில் சேத்ரி அடித்த 5-வது கோல் இதுவாகும். 2 கோல்கள் முன்னிலை பெற்றதால் இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றியை ருசிக்கும் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் ஐதராபாத் அணியின் கேப்டன் அரிடேன் சந்தனா 86-வது நிமிடத்திலும், பிரான் சன்டஜா 90-வது நிமிடத்திலும் அதிரடியாக பதில் கோல் திருப்பி அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார்கள். இந்த தொடரில் அரிடேன் சந்தனா அடித்த 7-வது கோல் இதுவாகும்.

29ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா-ஈஸ்ட் பெங்கால் அணிகள் சந்திக்கின்றன.

Editor's Choice

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவராக உள்ளார். 48 வயதான கங்குலிக்கு இன்று மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த 2-ம் தேதி சவுரவ் கங்குலிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு  ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
சவுரவ் கங்குலிற்கு ஆபத்தில்லை என்றும் அடுத்த இரண்டு மணி நேரத்தில் குணமடைவார் என்றும் kU;jJ மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பக்கம் 36 / 49