Editor's Choice

கால்பந்து பிரபலம் மரடோனாவிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அண்மையில் மாரடைப்பால் இவர் உயிரிழந்தார். மரடோனாவிற்கு மரணத்திற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில்,  மரடோனாவுக்காக தமிழ்நாட்டில் வித்தியாசமான முறையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.  ராமநாதபுரத்தில் பேக்கரி ஒன்றில் 60 கிலோ சர்க்கரை மற்றும் 270 முட்டைகளைப் பயன்படுத்தி ஆறு அடி உயர கேக் சிலை உருவாக்கி மரடோனாவுக்கு மரியாதை செலுத்தியிருக்கின்றனர்.  

தமிழ்நாட்டில் உள்ள ஒரு பேக்கரி, கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனாவின் (Diego Maradona) அளவிலான கேக் சிலையை உருவாக்கி, மறைந்த அர்ஜென்டினா வீரரை கெளரவிக்கும் சாதனை செய்துள்ளது. இந்த சாதனை நான்கு நாட்களில் செய்யப்பட்டுள்ளது.

பேக்கரியின் ஊழியர் சதீஷ் ரங்கநாதன் செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ-யிடம் இந்த சாதனையைப் பற்றி பேசினார். “ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் (christmas) மற்றும் புத்தாண்டு (New Year) கொண்டாட்டங்களின் போது, பிரபலங்களின் கேக் சிலைகளை உருவாக்கி அவற்றை பொதும்க்களின் பார்வைக்கு வைப்போம். கடந்த சில ஆண்டுகளில் நாங்கள் இளையராஜா, அப்துல் கலாம், பாரதியார் என பலருக்கு கேக் சிலைகளை வைத்திருக்கிறோம்” என்று பேக்கரி பணியாளர் தெரிவித்தார்.

"கடந்த மாதம் இறந்த கால்பந்து வீரர் மரடோனாவுக்கு மரியாதை செலுத்துவதற்காக மட்டும் இந்த கேக் (Cake) சிலையை நாங்கள் உருவாக்கவில்லை. இளைஞர்கள் தங்கள் மொபைல் போன் மற்றும் கணினியில் விளையாடுவதற்கு பதிலாக களத்தில் இறங்கி உண்மையில் விளையாடுவதை வலியுறுத்துவதற்கும் இந்த சந்தர்ப்பத்தை நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம். விளையாடுவதால் உடல் ஆரோக்கியம் மற்றும் மன நலம் மேம்படும்” என்று பேக்கரி ஊழியர் கூறுகிறார்.

அர்ஜென்டினாவின் ஒரு சிறிய நகரத்தில் பிறந்த மரடோனா தனது முயற்சியால் கால்பந்தில் பிரகாசித்தார் என்பதை சுட்டிக் காட்டும் சதீஷ் ரங்கநாதன், இந்திய வீரர் டெண்டுல்கர் (Tendulkar) கிரிக்கெட்டுக்காகவும், 100 மீட்டர் ஓட்டத்திற்கு உசேன் போல்ட் (Usain Bolt) மற்றும் குத்துச்சண்டைக்கு மைக் டைசன் (Mike Tyson) நினைவுகூரப்பட்டதைப் போலவே மரடோனா கால்பந்து விளையாட்டின் ஜாம்பவனாக என்றென்றும் நினைவுகூரப்படுவார் என்றும் பேக்கரியில் பணிபுரியும் சதீஷ் கூறுகிறார்.

Editor's Choice

2021-ம் ஆண்டில்  ஜல்லிக்கட்டு நடத்த கீழ்க்கண்ட கட்டுப்பாடுகள் மற்றும் நிலையான வழிகாட்டு  நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது

* ஜல்லிக்கடட்டு, மஞ்சிவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300  நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.

* எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த  அனுமதிக்கப்படுகிறது.

*திறந்த வெளியின் அளவிற்கேற்ப சமூக இடைவெளியை  கடைபிடிக்கும் வகையில் அதிகப்பட்சம் 50 சதவிகித அளவிற்கு மிகாமல்  பார்வையாளர்கள் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது.

* பார்வையாளர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்க வேண்டும்.

* ஜல்லிக்கட்டு நிகழச்சியில் மாடுபிடி வீரர்களாக பங்கேற்பவர்கள் அரசால்  அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை கூட்டத்தில் கொரோனா தொற்று இல்லை என சான்று  பெற்றிருக்க வேண்டும்.

* பார்வையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதும் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதும்  கட்டாயமாக்கப்படுகிறது.

* காளை உரிமையாளர் மற்றும் உதவியாளருக்கு மாவட்ட நிர்வாகத்தின் அடையாள  அட்டை வழங்கப்படும். அடையாள அட்டை இல்லாத நபர்கள் நிகழ்ச்சி நடைபெறும்  வளாகத்திற்குள் நுழைய அனுமதியில்லை.

* காளை உரிமையாளர் மற்றும் உதவியாளர் கொரோனா தொற்று இல்லை என சான்று  பெற்றிருக்க வேண்டும்.

* ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு நிகழ்ச்சி நடைபெறும் 7 நாட்களுக்கு முன்  மாவட்ட நிர்வாகத்தின் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். அடையாள  அட்டை இல்லாத வீரர்கள் நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைய  அனுமதியில்லை.

* ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள் கொரோனா தொற்று இல்லை என சான்று  நிகழ்ச்சி நடைபெறும் இரண்டு நாட்களுக்கு முன்பு பெறப்பட்டவர் மட்டுமே  அனுமதிக்கப்படுவார்கள்.

* ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மேற்பார்வை செய்யும் அனைத்துத்துறை அலுவலர்களும்  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் கொரோனா தொற்று இல்லை என சான்று  பெற்றிருக்க வேண்டும்.

* அனைத்துத்துறை அலுவலர்களும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் அரசினால்  அறிவுறுத்தப்பட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Editor's Choice
ஐசிசி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி20 மற்றும் ஒருநாள் போட்டி கிரிக்கெட்டின் கனவு அணியில் கேப்டனாக தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இந்த 10 ஆண்டுகளில் சிறந்த  டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரோஹித் சர்மா, விராட் கோலி, டோனி (கேப்டன்), பும்ரா உள்ளிட்ட  4 இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். மேலும், கிறிஸ் கெயில், ஆரோன் பிஞ்ச், டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல், பொல்லார்ட், ராஷித் கான், மலிங்கா உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.
மூன்று விதமான போட்டிகளுக்கும் இந்திய வீரர்களே கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டி 20, ஒரு நாள் போட்டிகளில் டோனி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் டெஸ்ட் போட்டி கோலி கேப்படனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐசிசி கனவு அணியில் மூன்று விதமான போட்டிகளிலும் இடம்பெற்றுள்ள ஒரே வீரர் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நாள் மற்றும் டி20அணியின் கேப்டனாக டோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மூன்று அணியிலும் விராட் கோலி இடம் பிடித்தார். டி20 அணியில் 4 பேரும், ஒரு நாள் அணியில் 3 பேரும், டெஸ்ட் அணியில் 2 பேரும் இடம் பிடித்துள்ளனர்.

ஐசிசியின் ஒரு நாள் போட்டி அணி அறிவிப்பு

ஒரு நாள் போட்டிகளில் கடந்த 10 ஆண்டுக்கான சிறந்த அணியில் இந்திய வீரர்கள் 3 பேர் இடம் பெற்றுள்ளனர். டோனி (கேப்டன்) , விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ரோஹித் சர்மா, வார்னர், கோலி, டிவில்லியர்ஸ், ஷாகிப் உல் ஹசன், டோனி (கேப்டன்), ஸ்டோக்ஸ், ஸ்டார்க், பெல்ட், இம்ரான் தாஹிர், மலிங்கா இடம் பெற்றுள்ளனர்.


Editor's Choice


கொரோனா பீதி காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட அமெரிக்காவின் பிரபல ‘தேசிய கூடைப்பந்து சங்க(என்பிஏ)’ போட்டிகள் செவ்வாய்கிழமை மீண்டும் தொடங்கியது. அண்மையில் நடைப்பெற்ற போட்டி ஒன்றில் சுயாஷ் மேத்தா புதிய நடுவராக அறிமுகமானார். அவர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர். இப்படி இந்தியாவை சேர்ந்தவர் ஒருவர் என்பிஏ போட்டிகளில் நடுவராக பணியாற்றுவது இதுவே முதல்முறையாகும். அமெரிக்க மாநிலமான மேரிலேண்டில் உள்ள பால்டிமோர் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். என்பிஏ-ஜி லீக் தொடர்களில் நடுவராக இருந்த சுயாஷ், தேசிய அளவிலான போட்டி நடுவராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

Editor's Choice
ஒவ்வொரு ஆசனத்திற்கு ஒருவகையான பலன் உறுதியாக கிடைக்கும். அந்த வகையில் நவுகாசனம் சிறுகுடல் பெருங்குடலுக்கு சக்தியை தருகிறது. மேலும் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கிறது. இந்த ஆசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

முதலில் கைகளைப் பக்கவாட்டில் வைத்தபடி மல்லாந்து படுத்துக்கொள்ளவும். கால்களைச் சற்று அகலமாக வைத்துக்கொண்டு, கைகளை உடம்பில் இருந்து சற்று தள்ளி வைத்துக்கொள்ள வேண்டும். மூச்சை பொறுமையாக இழுத்து, பொறுமையாக விட வேண்டும். பிறகு இரு கால்களையும் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். கைகளையும் உடம்போடு சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். வயிற்று பகுதியில் உள்ள மூச்சை நன்றாக இழுத்து விட்டுக்கொள்ள வேண்டும். பின்னர், சுவாசத்தை நன்றாக உள் இழுத்தவாறு இரு கால்களையும் பொறுமையாகத் தூக்க வேண்டும். கால்களைச் சற்று உயர்த்தியதும், இரு கைகளையும் தொடைக்கு அடியில் வைத்துக்கொண்டு, பிறகு பொறுமையாக தலையை நேராகக் கொண்டுவர வேண்டும்.

சுமார் 10 எண்ணிக்கை வரை, நவுகாசன நிலையிலேயே இருக்கலாம். அதே நிலையிலேயே சிறிதுநேரம் இருக்கும்போது, வயிற்றில் ஒருவித அதிர்வை உணரலாம். பிறகு, மெதுவாக தலையை இறக்கிப் பிறகு, கை, கால்களையும் இறக்கவும்.

நவுகாசனம் செய்வதால் வயிறு, இடுப்பு, தொடைப் பகுதிகள் வலுவடையும். வயிறு மற்றும் இடுப்பில் உள்ள தேவையற்ற சதைகள் குறையும். வெர்டிகோ, முதுகுவலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்க வேண்டும். இளம் பருவத்திலேயே குழந்தைகளுக்கு யோகாப் பயிற்சிகளை அளித்தால், தேவையற்ற விஷயங்களில் நாட்டம் செலுத்தாமல், கல்வியில் கவனம் செலுத்துவார்கள். எந்த வயதிலும் அவர்கள் உடல், மனம், உணர்வுகளை அலைபாய விடாமல் கட்டுக்குள் வைத்திருப்பார்கள். இது வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு உதவும்.

Editor's Choice

சுமார் 2.35 மணி நேரம் பனிக்கட்டிகள் நிறைந்த கண்ணாடி பெட்டிக்குள் கழுத்து வரை புதையுண்டு உலக சாதனை படைத்த பிரஞ்சு வீரர்!!

 

பிரெஞ்சு வீரர் ரோமெய்ன் வாண்டெண்டோர்ப் கடந்த சனிக்கிழமையன்று அதிக நேரம் ஐஸ் க்யூப்ஸில் மூழ்கி உலக சாதனை படைத்தார், குழந்தை பருவ புற்றுநோய்களுக்கான பணத்தை திரட்டுவதற்கான இத்தகைய கடுமையான சவாலை அவர் மேற்கொண்டார். சுமார் 2.35 மணி நேரம் பனிக்கட்டிகள் நிறைந்த கண்ணாடி பெட்டிக்குள் கழுத்து வரை புதையுண்டு பிரஞ்சு வீரர் உலக சாதனை படைத்தார்.

பக்கம் 40 / 49