Editor's Choice

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தின் சார்பில், பட்டதாரி மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கான பயிற்சி நடத்தப்பட உள்ளது.

5 நாள் பயிற்சி (5 day training)

ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் இறுதி ஆண்டு பட்டதாரி மாணவர்கள், பட்டதாரிகள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்று பயனடையலாம். இதில் வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பற்றிய அனைத்து தகவல்களும் பயிற்றுவிக்கப்படுகிறது.

இப்பயிற்சி வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் வரும் அக்டோபர் 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடத்தப்படுகிறது.

பயிற்சி கட்டணம் (Fees)

நபர் ஒன்றுக்கு ரூபாய் 10,000 + GST ரூ.1800 ஆக மொத்தம்11,800 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

20 நபர்கள் (20 Persons)

பதிவுக்கு குறைந்த எண்ணிக்கையிலான இடங்களே (20 நபர்கள்) உள்ளன.

மேலும் முன்பதிவுக்கு
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். / இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சலிலும், 0422-6611310 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Editor's Choice

வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அறுவடைக்குப்பின் சார்பு பொருள்களை மதிப்பு கூட்டும் இயந்திரங்கள் பரவலாக்கம் திட்டத்தின் கீழ் 2020 -21 ஆம் வருடத்திற்கு கருவிகள் தனியாருக்கு பொதுப்பிரிவினருக்கு 50% மற்றும் SC/ST பிரிவினருக்கு 60 % சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

அந்தந்த பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரவும், தொழிற்சாலை பெருக்கத்தை அதிகப்படுத்தும் நோக்கில் விளைபொருள்களுக்கு அதிகமான விலை கிடைக்கும் நோக்கிலும் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் உள்ள கருவியை மொத்த விலை கொடுத்து வாக்கிய பின்னரே மானியம் வேண்டி அரசிடம் விண்ணப்பிக்க முடியும், அதை தொடர்ந்து மானிய தொகை கணக்கிடப்பட்டு அந்த தனிநபரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

எண்ணெய் பிழியும் இயந்திரங்கள் (மர மற்றும் உலோகத்திலான உருளைகள்)

மொத்த விலை ரூ.2,00,600 (5 மாடல்கள்) 

  • பொதுப்பிரிவினருக்கு ரூ.1,00,300

  • SC/ST பிரிவினருக்கு ரூ.1,20,360

தென்னை மட்டை தோலுரிக்கும் உரிக்கும் இயந்திரம்

மொத்த விலை ரூ.1,40,000

  • பொதுப்பிரிவினருக்கு ரூ.60,000

  • SC/ST பிரிவினருக்கு ரூ.75,000

ராகி சுத்தம் செய்து கல் நீக்கும் இயந்திரம்

மொத்த விலை ரூ.65,100, ரூ.82,950 (2 மாடல்கள்)

  • பொதுப்பிரிவினருக்கு ரூ.26,040, ரூ.33,180

  • SC/ST பிரிவினருக்கு ரூ.32,550, ரூ.41,475

மாவு அரைக்கும் இயந்திரம்

மொத்த விலை ரூ.47,250, ரூ.58,880, ரூ.89,250, ரூ.64,310 (4 மாடல்கள்)

  • பொதுப்பிரிவினருக்கு ரூ.23,625, ரூ.29,400, ரூ.44,625, ரூ.32,155

  • SC/ST பிரிவினருக்கு ரூ.28,350, ரூ.35,280, ரூ.44,625, ரூ.38,586

கால்நடை தீவனம் தயாரிக்கும் இயந்திரம்

மொத்தவிலை ரூ.76,650

  • பொதுப்பிரிவினருக்கு ரூ.38,325

  • SC/ST பிரிவினருக்கு ரூ.45,990

விண்ணப்பிப்பு மற்றும் தேவைப்படும் ஆவணங்கள் 

மேற்கண்ட இயந்திரங்கள் விரும்பும் நபர்கள் அருகில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை கீழ்கண்ட சான்றுகளுடன் அணுகவும்

  • ஆதார் கார்டு

  • வங்கி முதல் பக்க நகல்

  • பாஸ்போர்ட் போட்டோ

  • சிட்டா அடங்கல்

  • மும்முனை மின்சார வசதியுடன் கூடிய 10 அடி நீளம் 10 அடி அகலம் உள்ள இடம்.

Editor's Choice

சொட்டுநீர் பாசனம் (Drip irrigation)

விவசாயத்தை மேம்படுத்தவும், குறைந்த தண்ணீரில் வேளாண்மை செய்யவும், சொட்டு நீர் பாசனம் அமைக்க ஊக்கப்படுத்தப்படுகிறது. சிறு குறு விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைத்தால், 100 சதவீதமும், மற்ற விவசாயிகளுக்கு, 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது.

ஏற்கனவே சொட்டு நீர் பாசனம் அமைத்து, ஏழு ஆண்டுகள் கடந்திருந்தால், உபகரணங்கள் மாற்றிக் கொள்ள, மீண்டும் மானியம் வழங்கப்படுகிறது.

தேவைப்படும் ஆவணங்கள் (Documents)

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள்,

  • சிட்டா, அடங்கல்

  • நில வரைபடம்

  • ஆதார் அட்டை நகல்

  • ரேஷன் கார்டு நகல்

  •  2 புகைப்படம்

ஆகியவற்றுடன் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம் என, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுசிந்திரா தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு, 90952 46221, 97892 62163, 80723 99817 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

பெரியநாயக்கன் பாளையம்

இதேபோல், பெரியநாயக்கன்பாளையம் வட்டார தோட்டக்கலை துறையினர், தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் சார்பில், பல்வேறு மானிய திட்டங்களை அறிவித்து உள்ளனர்.

பழம், காய்கறி விற்கும் தள்ளுவண்டி, பேக் ஹவுஸ் எனப்படும் காய்கறி தரம் பிரிக்கும் அறை, நிரந்தர மண்புழு கூடம், பிளாஸ்டிக் மூடாக்கு, கோகோ சாகுபடி, நீர்தேக்கும் குட்டை, மிளகாய் பயிர், மலர், சம்பங்கி, பப்பாளி, திசு வாழை, ஒட்டு காய்கறி, முருங்கை காய்கறி சாகுபடி, இயற்கை முறையில் சாகுபடி, தேனீப் பெட்டிகள் அமைக்க பல்வேறு மானியங்கள் வழங்கப்படுகின்றன.

இது தவிர, தோட்டக்கலைப் பயிர்களில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க, மானியங்கள் வழங்கப்படுகின்றன. மானியங்களைப் பெற, போட்டோ, ஆதார் நகல், ரேஷன் கார்டு நகல், நிலவரைபடம், சிறு, குறு விவசாயி சான்று ஆகியவற்றுடன் உடனடியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

இத்தகவலை, பெரியநாயக்கன்பாளையம் தோட்டக்கலை உதவி இயக்குனர் சிவகுமாரன், தோட்டக்கலை அலுவலர் நவநீதா, உதவி தோட்டக்கலை அலுவலர் சக்திவேல் ஆகியோர் தெரிவித்தனர்.

Editor's Choice

கிராமங்களைப் பொருத்தவரை, விவசாயம் கைகொடுக்காத நேரத்தில், ஆடு வளர்ப்பு அதிகளவில் பலன் தருகிறது. பொருளதார ரீதியில் பின்தங்கிய மக்கள் ஆடு வளர்ப்பை முன்னெடுக்கும்பட்சத்தில், அவர்களது முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு இலவச ஆட்டுக் கொட்டகை அமைத்துத் தருகிறது.

இத்திட்டம் கடந்த 2014ம் ஆண்டு முதல் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆட்டுக்கொட்டகையைப் பெற விரும்புவோர், ஊரக வேலைவாய்ப்பு ஊறுதித் திட்ட அட்டை வைத்திருக்க வேண்டியது அவசியம்.

இத்திட்டத்தில் பயன்பெற சுயஉதவிக் குழுக்களையோ, பஞ்சாயத்து கிளார்க், கால்நடை மருத்துவரையோ அல்லது நேரடியாகத் திட்டங்கள் தொடர்பான வட்டார வளர்ச்சி அலுவலரையோ, ஆடு வளர்க்க விரும்புவோர் அணுக வேண்டும். அங்கு அவர்கள் அளிக்கும் விண்ணப்பத்தில் உங்கள் விபரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

தகுதி (Qualification)

  • ஏற்கனவே ஆடு வளர்த்துவருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

  • அதே நேரத்தில் ஆடு வளர்க்க ஆசைப்படும் அனைவருமே விண்ணப்பிக்கலாம்.

தேவைப்படும் ஆவணங்கள்

  • சொந்தமாக நிலம் வேண்டும்

  • நிலத்திற்கான பட்டா

  • கம்பூட்டர் சிட்டா

  • அடங்கல்

  • ஆதார் அட்டை

  • வாக்காளர் அடையாள அட்டை


பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, விவசாயிகளிடம் இருந்து கால்நடை துறையினர் வாங்கி, மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைப்பர். பின்னர், அந்த விண்ணப்பங்கள், அந்தந்த ஒன்றிய அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பங்களுடன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலர், ஆவின் மற்றும் கால்நடை துறை ஆய்வாளர் ஆகியோர் கொண்ட குழு, விண்ணப்பித்த விவசாயிகள் இருக்கும் இடத்திற்கு சென்று, கால்நடைகள் வளர்த்து வருகிறார்களா, வீட்டருகே கொட்டகை அமைக்க போதிய சொந்த நிலம் உள்ளதா? என, ஆய்வு செய்யும். பின்னர், தகுதியானவர்களின் பட்டியலை தயாரித்து, திட்ட அலுவலர் மூலம், ஆட்சியருக்கு அனுப்பி, நிர்வாக அனுமதி பெறப்படும்.

கொட்டகை அமைக்கும் பணியில், நுாறு நாள் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவர். கொட்டகை அமைக்கும் பணியை, வட்டார வளர்ச்சி அலுவலர் மேற்பார்வையிடுவார். பணிகள் முடிந்தபின், சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் கொட்டகை ஒப்படைக்கப்படும். விண்ணப்பித்த ஓரிரு மாதங்களிலேயேக் கொட்டகை அமைத்துத் தரப்படும்.

கொட்டகையை அதிகாரிகள் திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்வார்கள். அப்போது இந்தக் கொட்டகை வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டால், அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும்.

Editor's Choice
விவசாய மின் இணைப்புப் பெறும் நடைமுறையை மிகவும் எளிமையாக்கி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
தமிழகத்தில் விவசாய மின் இணைப்பு பெறுவது மற்றும் இடம் மாற்றுவதில் ஏராளமான சிரமங்கள் இருந்ததால், நடைமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் என விவசாய அமைப்புகள் கோரி வந்தன. இதனை ஏற்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 
விவசாய மின் இணைப்பு பெறுதல்
 
விவசாய மின் இணைப்புப் பெறும் விவசாயிக்கு குறைந்தது அரை ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்.
 
கிராம அலுவலரால் வழங்கப்படும் கிணறு மற்றும் நிலத்தின் உரிமைச் சான்றுடன் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த சான்றும் தேவையில்லை.
 
கிணற்றில் கூட்டு சொந்தக்காரர்கள் இருந்தால் அவர்களின் ஒப்புதல் கடிதம் அல்லது ஈட்டுறுதி பத்திரம் (இண்டெமினிட்டி பாண்டு) இணைக்க வேண்டும்.
 
ஒரே சர்வே நம்பரில் அல்லது உட்பிரிவு சர்வே நம்பரில் ஒருவருக்கு இரண்டு கிணறுகள் இருந்தால், அவர் பெயரில் ஒவ்வொரு கிணற்றுக்கும் தனித்தனி மின் இணைப்பு அனுமதிக்கப்படும்.
 
விண்ணப்பங்களின் அடிப்படையில், உரிய முறை வரும்போது கடிதம் அனுப்பப்படும். அப்போது பெயர், சர்வே எண்ணில் எந்த மாறுதலும் இல்லை என்று உறுதி செய்வதற்காக, 90 நாள் அறிவிப்பு கடிதம், விண்ணப்பதாரருக்கு அனுப்பப்படும்.
 
உறுதிக்கடிதம் கிடைத்ததும் மூன்று பிரிவுகளில் வரிசைக்கிரமமாக பதிவு செய்யப்படும்.
 
முதல் பிரிவில் மின்தொடர் விஸ்தரிப்பு, மேம்பாடு மற்றும் மின்மாற்றி மாற்றம் எதுவும் தேவைப்படாத மின் இணைப்பு, இரண்டாம் பிரிவில் மின்தொடர் விஸ்தரிப்பு, மேம்பாடு உள்ளடக்கிய மின் இணைப்பு, மூன்றாம் பிரிவில் மின் தொடர் விஸ்தரிப்பு மேம்பாடு மற்றும் மின் மாற்றி மாற்றம், புதிய மின் மாற்றி அமைப்பை உள்ளடக்கிய மின் இணைப்பு என்ற அடிப்படையில் இந்த விண்ணப்பங்கள் பதிவு செய்துகொள்ளப்படும்.
 
மோட்டார் பம்ப் செட், கெப்பாசிட்டர் பொருத்தி மின் இணைப்புப் பெறத்தயார் என்ற கடிதம் விண்ணப்பதாரரிடம் இருந்து பெற்ற மூன்று நாட்களுக்குள் மின் இணைப்பு தரப்படும்.
 
மின் இணைப்பை இடமாற்றம் செய்தல்
 
மின் இணைப்பை தமிழகத்தின் எந்தப் பகுதிக்கும் மாற்ற அனுமதிக்கப்படும். அதற்குரிய செலவை மனுதாரர் ஏற்கவேண்டும்.
 
மின் இணைப்பு கொடுத்த தேதியிலிருந்து ஓராண்டு கழிந்த பின்பே இடம் மாற்றம் அனுமதிக்கப்படும். புதிய இடத்திற்கான விண்ணப்பம், இடம் மாற்றம் செய்யக்கோரும் கடிதத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
 
ஒருவருக்கு மட்டும் சொந்தமான கிணற்றில் அவருடைய பெயரிலுள்ள மின் இணைப்பை வேறு இடத்தில் உள்ள அவருக்கு மட்டும் சொந்தமான அல்லது கூட்டாகச் சொந்தமான கிணற்றுக்கு மாற்றம் செய்து கொள்ளலாம்.
 
அதேபோன்று, கூட்டாக சொந்தமான கிணற்றில் ஒருவர் பெயரிலுள்ள மின் இணைப்பையும் வேறு இடத்திலுள்ள அவருக்கு மட்டும் சொந்தமான அல்லது கூட்டாகச் சொந்தமான கிணற்றுக்கும் மாற்றம் செய்து கொள்ளலாம்.
 
மின் இணைப்பு உள்ள இடத்தில், தற்போது கிணறு இல்லை என்றாலும் மின் இணைப்பை இடம் மாற்ற அனுமதிக்கப்படும்.
 
 இதேபோல், சேஞ்ச் ஓவர் சுவிட்ச் அனுமதி பெறுவதற்கான நடைமுறைகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் உடனடியாக நடைமுறைக்கு வருவதால் லட்சக்கணக்கான விவசாயிகள் பயன் பெறுவர்.
Editor's Choice

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழிலில் முனைவதின் மூலம் வேலை வாய்ப்பினை உருவாக்க தமிழக அரசு UYEGP (Unemployed Youth Employment Generation Programme படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பெருக்கத் திட்டம் என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. தொழில் தொடங்க விருப்பமுள்ள இளைஞர்கள் தங்கள் தொழிலுக்கு தேவையான முதலீட்டினை (Capital) இத்திட்டத்தின் மூலம் பெறலாம்.

இத்திட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் (Unemployed Youth) தொழில் தொடங்குவதற்காக 25% சதவீதம் (அதிகபட்ச மானியம் ரூ.1,25,000) மானியத்துடன் (Subsidy) ரூபாய் 10 இலட்சம் வரை கடன் (Loan) வழங்கப்படுகிறது.

UYEGP (Unemployed Youth Employment Generation Programme) திட்டத்தின் நோக்கம் (Objectives):

படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் முனைவதின் மூலம் வேலை வாய்ப்பினை பெருக்குவது.

தொழிலின் திட்ட மதிப்பு (Project Value):

  • உற்பத்தி சார்ந்த நிறுவனமாக (Manufacturing Enterprises) இருந்தால் அதன் திட்ட மதிப்பு (Project Value) 10 இலட்சத்திற்குள் இருந்தால் UYEGP திட்டதில் விண்ணபிக்கலாம்.
  • சேவை சார்ந்த நிறுவனமாக (Service Enterprises) இருந்தால் அதன் திட்ட மதிப்பு (Project Value) 3 இலட்சத்திற்குள் இருந்தால் UYEGP திட்டதில் விண்ணபிக்கலாம்.
  • வியாபாரம் சார்ந்த (Trading- Shop, Only sales Activity) நிறுவனமாக இருந்தால் அதன் திட்ட மதிப்பு (Project Value) 1 இலட்சத்திற்குள் இருந்தால் UYEGP திட்டதில் விண்ணபிக்கலாம்.

அரசு மூலதன மானியம் (Subsidies):

தொழிலின் திட்ட மதிப்பில் அதிகபட்சம் 25% சதவீதத்தை (அதிகபட்ச மானியம் ரூ.1,25,000) மானியமாக (Subsidy) அரசு அளிக்கிறது.

தொழில் முனைவோர் சொந்த முதலீடு (Entrepreneur Contribution of Capital Investment) :

  • பொதுப்பிரிவினராக இருந்தால் தொழிலின் திட்ட மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 10 % விழுக்காட்டை தங்களுடைய சொந்த முதலீடாகத் (Owner Capital Investment) தொழிலில் செலுத்த வேண்டும்.
  • சிறப்புப் பிரிவினராக இருந்தால் தொழிலின் திட்ட மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 5 % விழுக்காட்டை தங்களுடைய சொந்த முதலீடாகத் (Owner Capital Investment) தொழிலில் செலுத்த வேண்டும்.

வயது வரம்பு (Age Limit):

விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் தேதி அன்று 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினரை சார்ந்தவராக இருப்பின் 35 வயதிற்கு உட்பட்டவராகவும், சிறப்புப் பிரிவினரைச் சார்ந்தவராக இருப்பின் 45 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

சிறப்புப் பிரிவினர் :

மகளிர், ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், முன்னாள் இராணுவத்தினர், திருநங்கையர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் போன்றவர்கள் இத்திட்டத்தில் சிறப்பு பிரிவினர் ஆவர்.

கடனுதவி அளிக்கும் நிறுவனங்கள் (Loan Granting Institution):

UYEGP இத்திட்டத்தில் தேர்ந்தேடுக்கப்படுபவர்கள் வங்கிகள் (Banks) மூலம் கடனுதவி பெற பரிந்துரைக்கப்படுவர்.

குடும்ப ஆண்டு வருமான வரம்பு (Family Income):

UYEGP ( Unemployed Youth Employment Generation Programme) திட்டத்திற்கு விண்ணப்பிப்பவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 1,50,000-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கவேண்டிய அரசு அலுவலகங்கள் :

இத்திட்டத்தில் கடன் பெற கீழ்க்கண்ட இணையப் பக்கத்தில் விண்ணபிக்க வேண்டும். விண்ணப்பம் பூர்த்தி செய்து பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை அப்லோடு செய்ய வேண்டும். விண்ணப்பப்பித்தவுடன் உங்களுக்கு உறுதி சான்று (ACKNOWLEDGEMENT) கிடைக்கும் அதனை பிரிண்ட் எடுத்து மாவட்ட தொழில் மையத்தில் தேவையான ஆவணங்களுடன் சமர்பிக்க வேண்டும்.
http://www.msmeonline.tn.gov.in/uyegp/application_without_upload.php

படித்த வேலையில்லா இளைஞர்கள் தொழில் தொடங்க UYEGP (Unemployed Youth Employment Generation Programme) திட்டத்தின் மூலம் நிதியுதவி பெற மாவட்ட தொழில் மையங்கள் (DIC-DISTRICT INDUSTRIES CENTER) அணுகி விண்ணபிக்கலாம். மாவட்ட தொழில் மையங்கள் தமிழ்நாட்டிலுள்ள எல்லா மாவட்டங்களிலும் அமைந்துள்ளது.

தேர்வு செய்யும் முறை ( Selection Process) :

UYEGP (Unemployed Youth Employment Generation Programme) திட்டத்தின் பயனாளிகளை மாவட்ட தொழில் மையம் (DIC-DISTRICT INDUSTRIES CENTER) தேர்ந்தெடுக்கிறது. மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் மற்றும் வங்கி மேலாளர் இணைந்த குழு தேர்வு செய்து தேர்வு பெற்றவர்களின் விண்ணப்பங்களை உங்கள் அருகாமையில் உள்ள வங்கிகளுக்கு பரிந்துரை செய்வார்கள்.

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரருக்கு தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (EDI-ENTREPRENEUR DEVELOPMENT INSTITUTE) மூலம் ஒரு வார கால தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி (EDP-ENTREPRENEUR DEVELOPMENT PROGRAME) வழங்கப்படும். பின்னர் UYEGP திட்டத்தில் தேர்ந்தேடுக்கப்பட்டவர்கள் தொழில் தொடங்க நிதியுதவி பெற வங்கிகள் (Banks) மூலமாக கடனுதவி பெற வழிவகைச் செய்யப்படுகிறது.

இதற்கு முன் மத்திய/ மாநில அரசு சார்ந்த நிதி நிறுவனங்களில் கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் இருந்தாலோ அல்லது இதர மத்திய/ மாநில அரசு மூலம் செயல்படுத்தப்படும் ஏதாவது ஒரு திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று இருந்தாலோ UYEGP திட்டத்தில் கடன் பெற இயலாது.

விண்ணப்பத்தில் இணைக்கபட வேண்டிய முக்கிய ஆவணங்கள்:

நீங்கள் இந்த மாவட்டத்தில் தான் மூன்று வருடத்திற்கு மேலாக தங்கி உள்ளேன் என்பதற்கான சான்று 20ரூபாய் பத்திர பேப்பரில் நோட்டரி பப்ளிக் முத்திரையிட்டு விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

  1. ஆன்லைனில் விண்ணபித்த விண்ணப்ப படிவம் (இரண்டு நகல்) Application Form (2 Copies)
  2. எட்டாம் வகுப்பு தேர்ச்சி சான்று (8th Pass TC)
  3. ரேசன் கார்டு (Ration Card). ரேசன் கார்டு இல்லாதவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் (VAO) சான்று பெற்று இணைக்க வேண்டும்.
  4. சாதி சான்றிதல் (Community Certificate)
  5. திட்ட அறிக்கை (Project Report)
  6. விலைப்பட்டியல் (Performa Invoice) - இயந்திரங்கள் (Machinery) மற்றும் மூலப்பொருள் (Raw Materials) வங்குவதற்கான டின் நம்பருடன் (TIN Number) கூடிய பில்.
  7. நோட்டரி பப்ளிக் படிவம் (Notary Public)

வங்கி மேலாளரிடம் முன்னரே உங்கள் தொழில் திட்டம் பற்றி பேசியிருந்தால் அவரின் அனுமதிக்கான வங்கி முத்திரை விண்ணப்பத்தில் இணைத்தால் தேர்வு குழு நீங்கள் விரும்பும் வங்கியிடமே கடன் பெற பரிந்துரை செய்யும்.

மேல்கண்ட அனைத்து ஆவணங்களையும் விண்ணப்பத்துடன் இணைத்து மாவட்ட தொழில் மையத்தில் (DIC) சமர்பிக்கவும்

பக்கம் 44 / 49