Editor's Choice
விவசாயம் பொய்த்துப்போகும் காலங்களில், விவசாயிகள் தங்கள் வருமானத்தைப் பெருக்குவதற்காக, கிராமப்புறங்களில், ஆடு, மாடு, கோழி வளர்த்து வருகின்றனர். இதன்மூலம் பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது.
 
இதற்காக பல்வேறு திட்டங்களை மத்திய-மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. அப்படியொரு திட்டம் தான் இலவச மாட்டுக்கொட்டகைத் திட்டம்.
 
இத்திட்டம் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
இதில் 2, 3,5,9 மாடுகள் என பல்வேறு பிரிவுகள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம் பயன்பெற ஊரக வேலைவாய்ப்பு ஊறுதித் திட்ட அட்டை வைத்திருக்க வேண்டியது அவசியம்.
 
இதன் படி பயன்பெற சுயஉதவிக் குழுக்களையோ, பஞ்சாயத்து கிளார்க், கால்நடை மருத்துவரையோ அல்லது நேரடியாகத் திட்டங்கள் தொடர்பான வட்டார வளர்ச்சி அலுவலரையோ (Scheme BDO)ஆவின் பால் சங்கத்தையோ விவசாயிகள் அல்லது மாடு வளர்க்க விரும்புவோர் அணுக வேண்டும்.
 
கொட்டகை வகைகள் (Shed varieties)
 
இரண்டு மாடுக் கொட்டகை 98 ஆயிரம் ரூபாய் செலவிலும், 3 மாடுகளைக் கொண்ட கொட்டகை 1,20,000ரூபாய் செலிவிலும் அமைத்துத்ததரப்படுகிறது.
 
இதுபோல் கொட்டகை அமைக்க அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
 
தகுதி
 
ஏற்கனவே மாடு வளர்த்துவருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
 
ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் விநியோகம் செய்பவர்களுக்கும் முன்னுரிமை அறிக்கப்படும்.
 
இதைத்தவிர மாடு வளர்க்க ஆசைப்படும் அனைவருமே விண்ணப்பிக்கலாம்.
 
தேவைப்படும் ஆவணங்கள்
 
சொந்தமாக நிலம் வேண்டும்
 
சாப்கார்டு ஏற்கனவே போட்டதாக இருக்க வேண்டும்.
 
ஆதார் அட்டை
 
வாக்காளர் அடையாள அட்டை
 
கம்ப்யூட்டர் சிட்டா
Editor's Choice
மரியாதைக்குரிய பாரத பிரதமர் திரு . நரேந்திர மோடி அவர்கள் அறிவித்த திட்டத்தின்படி சாலையோர வியாபாரிகளுக்கு ரூ 10000 கடனுதவி பெறுவதற்கான வழிமுறைகள்.
 
வியாபாரிகள் வசிக்கும் பகுதியில் உள்ள பஞ்சாயத்து அல்லது மாநகராட்சிக்கு சென்று தனது ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்களை சமர்ப்பித்து அந்தப்பகுதியில் வியாபாரம் செய்வதற்கான சான்றிதழை முதலில் பெறவேண்டும் !
 
பிறகு ஆதார் அட்டை , குடும்ப அட்டை , பஞ்சாயத்து or மாநகராட்சி அளித்த அட்டை இம்மூன்றையும் இணைத்து இணையத்தில் இதற்கான சிறுவியாபாரிகள் கடன் திட்டத்தளத்தில் ( Portal ) இதை பதிவேற்றம் செய்யவேண்டும் !
 
பதிவேற்றம் செய்யும்போது நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்களோ அந்த வங்கியை விரும்பும் வங்கி ( Preferred Bank ) என்ற இடத்தில் பூர்த்தி செய்யவேண்டும் !
 
அவ்வாறு பூர்த்தி செய்துவிட்டால் ஒரு வாரத்திற்குள் அந்த வங்கியின் மூலமாக ரூபாய் 10,000 / - உங்களது கணக்கில் வரவு வைக்கப்படும் . இந்தக்கடனுக்கு 08 % வட்டி எனினும் 07 % வட்டியை மத்திய அரசு மானியமாக வழங்கும் !
 
இதை மாதம் 1000 / - வீதம் 10 மாதத்திற்குள் சரியாக திருப்பிச் செலுத்த வேண்டும்.
Editor's Choice

கயிறு தொழில் அதிக தொழிலாளர்களை கொண்டதும் ஏற்றுமதி செய்யத்தக்கதும், பாரம்பரியமிக்கதுமான  விவசாயம் சார்ந்த குடிசைத் தொழிலாகும். தேங்காய் நார் சார்ந்த தொழிலின் மூலமாக கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கப் பெற்று வருகிறது. கயிறு தொழிலில் கேரளா மாநிலத்திற்கு அடுத்தப்படியாக தமிழகம் உள்ளது. ஆனாலும் பழுப்பு நிற நார் உற்பத்தியில் நாட்டிலேயே  தமிழகம் முதன் இடத்தில் உள்ளது.

மத்திய அரசின் கயிறு வாரியம் (COIR BOARD) கயிறு தொழிலின் மேம்பாட்டிற்கு, ‘காயர் உத்யமி யோஜனா’ (COIR UDYAMI YOJANA) என்ற கயிறு தொழில் முனைவோர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் நோக்கம்:

  • கிராமப்புற தொழில்முனைவோரை உருவாக்குதல்.
  • பெண்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல்.
  • தேங்காய் மட்டை கொண்டு வருமானத்தை பெருக்குதல்.
  • நவீனத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் தேங்காய் நார் தொழிலை நவீனப்படுத்துதல்.
  • தேங்காய் நார் சார்ந்த பொருட்களின் உற்பத்தி மற்றும் செயல்முறை தொழில்நுட்பத்தை புதுப்பித்தல் மூலம் உற்பத்தித் திறன், தரம் போன்றவற்றை மேம்படுத்துவது.
  • தேங்காய் மட்டையை பயன்படுத்தி தேங்காய் நார் மற்றும் தேங்காய் நார் பொருட்களின் உற்பத்தியை அதிகபடுத்துவது.
  • கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து தென்னை நார் சார்ந்த தொழிலில் ஈர்ப்பது.

 தொழிலின் திட்ட மதிப்பு:

தொழிலுக்கான திட்ட மதிப்பு அதிகபட்சமாக ரூ.10 இலட்சத்திற்குள் இருந்தால் காயர் உத்யமி யோஜனா (COIR UDYAMI YOJANA) திட்டத்தில் விண்ணபிக்கலாம். இந்த திட்டத்தில் நடைமுறை மூலதனத்தையும் (working capital) பெறலாம். இந்த நடைமுறை மூலதனம் தொழிலுக்கான திட்ட மதிப்பில் 25%-க்குள் இருக்க வேண்டும்.

 அரசு மூலதன மானியம்:

  • காயர் உத்யமி யோஜனா (COIR UDYAMI YOJANA) திட்டத்தில் அரசு மூலம் வழங்கப்படும் மானியம் (Subsidy) தொழிலின் திட்ட மதிப்பில் 40% சதவீதம் ஆகும். அதிகபட்சமாக ரூ.4 இலட்சம் வரை வழங்கப்படும்.
  • தொழில் முனைவோர் சொந்த முதலீடு
  • தொழிலின் திட்ட மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 5% விழுக்காட்டை பயனாளிகள் தொழிலில் முதலீடு செய்ய வேண்டும்.
  • வங்கிக் கடன்
  • வங்கி பயனாளிகளுக்கு அதிகபட்சமாக தொழிலின் திட்ட மதிப்பீட்டில் 55% சதவிதத்தை வங்கி கடனாக வழங்கும்.

பயனாளிகளின் தகுதிகள்:

  • 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.
  • காயர் உத்யமி யோஜனா விண்ணபிக்க எந்த வித வருமான வரம்பும் கிடையாது.
  • தென்னை நார் சம்மந்தமான பொருட்கள் உற்பத்தி செய்யபவர்களுக்கு மட்டும் காயர் உத்யமி யோஜனா திட்டம் பொருந்தும்.
  • தனிநபர்கள், சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புடன் கூடிய நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள் காயர் உத்யமி யோஜனா திட்டத்தின் கீழ் உதவி பெறலாம்.
  • விண்ணப்பிக்க வேண்டிய அரசு அலுவலகங்கள்
  • காயர் உத்யமி யோஜனா திட்டத்தின் மூலம் நிதியுதவி பெற கயிறு வாரியம் மற்றும் அதன் பிராந்திய அலுவலகங்களில் விண்ணபிக்கலாம்.

கடனுதவி அளிக்கும் நிறுவனங்கள்:

காயர் உத்யமி யோஜனா திட்டத்தில் தேர்ந்தேடுக்கப்படுபவர்கள் வங்கிகள் (Banks) மூலம் கடனுதவி பெற பரிந்துரைக்கப்படுவர்.

காயர் உத்யமி யோஜனா (COIR UDYAMI YOJANA) திட்டத்திற்கான விண்ணப்பங்களை இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 பிற தகுதிகள்:

சாதி சான்றிதழ் – சாதி சார்ந்த தொழில் சிறப்பு பிரிவினற்கான கடன் வசதி பெரும் போது.

கடன்:

  • கட்டிடம் மற்றும் எந்திரங்களின் மதிப்பிற்கு மட்டும் தரப்படும்.
  • ஒரு சுழற்சி மூலதன கடன் பெறலாம். அது மொத்த திட்ட மதிப்பில் 25% மிகாமல் இருக்க வேண்டும். இந்த நடைமுறை மூலதனத்தை வங்கிகள் தொழில் ஆரம்ப காலங்களில் கொடுக்கலாம். இதற்கு எந்தவித மானியமும் கிடையாது. நடைமுறை மூலதனம் வங்கிகளின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டது.
  • நிலம் கட்டிடம் பெற்று உள்ளவர்களுக்கு எந்திர மதிப்பே திட்டத்தின் மதிப்பாக எடுத்துக் கொள்ளப்படும்.
  • ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கே இந்த திட்டம் செயல்படும்.
  • இந்த திட்டத்தை செயல்படுத்துவது கயிறு வாரியம். இதன் தலைமையகம் கொச்சியில் உள்ளது மேலும் மாநிலங்களில் உள்ள கிளை நிலையங்களையும் அணுகலாம். மாவட்ட தொழில் மையங்களும் இதற்கு உதவிகள் செய்யும்.

கடன் பெற பயனாளிகள் வங்கியில் சென்று கடன் பெறுவதற்கான அனுமதி பெற்று இருத்தல் அவசியம். பயனாளிகள் குறிப்பிடும் வங்கிகளுக்கு இந்த மானிய உதவி அளிக்கப்படும்.

வங்கிகள் இந்த விண்ணப்பங்களை பெற்ற பின் 60 நாட்களுக்குள் வாரியத்திடம் இந்த திட்டத்தில் கடன் பெற தகுதியானவரா மற்றும் தகுதியற்ற நிலை ஏற்பட்டால் அதற்கான காரணத்துடன் பதில் அளிக்க வேண்டும்.

வங்கிகள் திட்ட மதிப்பில் 95% கடன் அளிக்க வேண்டும். பயனாளிகள் 5% கொண்டு வர வேண்டும். இதற்கான வட்டி வங்கிகளின் திட்டங்களுக்கு உட்பட்டது. திரும்ப செலுத்தும் காலம் 7 ஆண்டுகள் வரை இருக்கலாம்.

இந்த கடன் முழுவதும் மத்திய அரசின் கிரிடிட் கேரண்டி டிரஸ்ட் பண்ட் திட்டத்தில் வருவதால் வங்கிகள் எந்தவித சொத்து பிணையம் தனிநபர் உத்திரவாதம் கேட்க கூடாது.

முதலில் விண்ணப்பிக்கும் பயனாளிக்கே முன்னுரிமை அளிக்கப்படும். இதில் தொழில் முனைவோருக்கான பயிற்சி பெறுதல் அவசியம். இப்பயிற்சியினை தொழில் ஆரம்பிக்கும் முன்போ அல்லது கடன் பெற்ற உடனையோ பெற்று கொள்ளலாம்.

பயனாளிகளின் விண்ணப்பங்களை கயிறு வாரியத்தின் அதிகாரி சரி பார்த்து அதை போர்டு உறுப்பினர்களுக்கு அளிப்பார். அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் இந்த விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு போர்டு சிபாரிசு செய்யும்.

 பயனாளிகள் மானியம் பெற என்ன செய்ய வேண்டும்?

பயனாளிகள் கடன் உறுதி செய்யபட்ட உடன் வங்கிகள் பயனாளிகளின் திட்ட அறிக்கையை ஆய்வு செய்து அவர்களுக்கு அளிக்க வேண்டிய மானியத்தை கணக்கிட்டு வாரியத்திடம் அளிக்க வேண்டும். வாரியம் இந்த மானியத்தை எல்லா நடைமுறைகள் சரியாக இருப்பின் 30 நாட்களுக்குள் வங்கிக்கு பயனாளியின் மானியத் தொகையை அளிக்கும்.

வங்கிகள் மானியத் தொகையை பெற்று 30 நாட்களுக்குள் பயனாளிக்கு கடன் வழங்க வேண்டும். மானியங்கள் அதிகமாக பெறப்பட்டு இருந்தால் கடன் தொகை பெற்ற பின் அதிகமான மானியத் தொகையை திரும்ப தர வேண்டும்.

இந்த திட்டம் கடன் பெற்று 6 மாதத்திற்குள் முடிவு பெற்று இறுத்தல் அவசியம்.

பயனாளியிடம் விண்ணப்பங்கள் பெற்ற பின் இந்த விண்ணப்பங்களின் நிலை பற்றி வாரியத்தின் இணையத்தளத்தில் பதிவேற்றப்படும். இ-டிராக்கிங் சிஸ்டம் மூலம் உங்கள் விண்ணப்பங்களை நீங்கள் கண்காணிக்கலாம்.

பயனாளிகள் தங்கள் பங்குத் தொகையினை 30 நாட்களுக்குள் வங்கிகளுக்கு செலுத்த வேண்டும்.

விண்ணப்பங்களுடன் இணைக்கபட வேண்டிய இணைப்புகள்:

  • முழுவதும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்
  • தொழில் துவங்க இருக்கும் இடத்தின் பத்திர நகல்
  • உங்களுக்கு கயிறு தொழில் தெரியும் என்பதற்கான அனுபவ சான்று
  • கயிறு வாரியத்திடம் பெற்ற பயிற்சி சான்று
  • எந்திரங்களின் விலைபட்டியல்
  • கட்டிடத்தின் வரைபடம் மற்றும் அதன் மதிப்பிடு
  • திட்ட அறிக்கை
  • எஸ்சி/ எஸ்.டி என்றால் அதற்கான ஜாதி சான்றிதல்
  • ஏதாவது வங்கியின் பரிந்துரை கடிதம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி உங்கள் ஏரியாவை பொறுத்து தேர்வு செய்யவும். தமிழகத்தில் விண்ணபிக்க,

COIR BOARD REGIONAL OFFICE

DOOR NO.103, VALLALAR STREET

 VENKATESHA COLONY, POLLACHI-642001

TEL/FAX: 04259-222450.

இந்த திட்டத்தில் இப்போது ஆன்லைனிலும் விண்ணபிக்கலாம். அதற்கான இணையதள முகவரி http://www.coirservices.gov.in/frm_login.aspx

Editor's Choice
சிறு தொழில் மூலம் சுய வேலை வாய்ப்பை கிராமப்புறங்களிலும், நகர்புறங்களிலும் உருவாக்கும் நோக்கத்தில் பிரதம மந்திரி ரோஸ்கார் யோஜனா மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் ஆகிய இரண்டையும் இணைத்து 2008ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்ட திட்டம்தான் பிரதமரின் வேலை உருவாக்கத் திட்டம் (PMEGP). இத்திட்டத்தின் கீழ் தொழில்முனைவோர், கிராமப்புற/ நகர்ப்புறங்களில் வசிக்கும் வேலையில்லாதவர்களை ஒருங்கிணைத்து முடிந்த வரை அவர்களது இடத்திலேயே சுய வேலைவாய்ப்பை மத்திய அரசு உருவாக்கித் தருகிறது.
 
இத்திட்டத்தின் கீழ் ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்த வாகனம் வாங்க அவர்கள் கடன் வாங்க முடியும். 30 சதவீத மானியத்துடன் ரூ.5 லட்சம் வரையில் தனிநபருக்கான கடனுதவி வழங்கப்படுகிறது. பயணிகள் ஆட்டோ வாங்குவதற்கு இத்திட்டத்தின் கீழ் நீங்கள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் பயன்கள் குறித்துப் பெரும்பாலானோருக்குத் தெரியாததால் இதில் விண்ணப்பிக்க முடியாமல் போகிறது. இத்திட்டத்தின் கீழ் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களும், கிராமப்புற மக்களும் அதிகம் பயன்பெற முடியும்.
 
இத்திட்டத்தின் கீழ் ஆட்டோ கடன் பெறுவதற்கு குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், கல்வி சான்று, ஓட்டுநர் உரிமம், கொட்டேஷன், திட்ட அறிக்கை, ஆவணங்கள் அவசியம். ஓட்டுநர்களுக்கு பேட்ஜ் அவசியம். குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு http://www.kviconline.gov.in/pmegpeportal/jsp/pmegponline.jsp என்ற முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
 
தேவையான ஆவணங்கள்:
 
1. குடும்ப அட்டை
2. வாக்காளர் அட்டை
3. ஆதார் அட்டை
4. இரண்டு புகைப்படம்
5. சாதி சான்று
6. வருமான சான்று ( குடும்ப ஆண்டு
வருமானம் ரூ. 1 லட்சத்திற்கு
மிகாமல் இருக்க வேண்டும்)
7. கல்வி சான்று
8. ஓட்டுநர் உரிமம். பேட்ஜ் அவசியம்
(இது வாகன கடனுக்கு மட்டும்
தேவை)
9. கொட்டேஷன்
10. திட்ட அறிக்கை
11.தேசியமயமான வங்கி கணக்கு எண்
Editor's Choice

விவாசயத்தொழிலை லாபகரமானதாக மாற்ற மத்திய -மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன.

அதிலும் குறிப்பாக 2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, தற்போதைய விவசாய வணிகத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்தை மத்திய அரசு தயாரித்துள்ளது. இதில் நீங்களும் விவசாயம் அல்லது அதைச் சார்ந்த துறைகளில் வர்த்தகம் செய்ய விரும்புகிறீர்களா? 

புதிய திட்டம் (New Scheme)

இந்தத் திட்டத்தின் பெயர் Agriclinic and Agribusiness Centres Scheme (AC&ABC). இதன்படி விவசாயி, விவசாயத்துடன் இணைந்த ஒருவர் அல்லது அதில் சேர விரும்பும் ஒருவர், புதிதாக விவசாய வர்த்தக வணிகத்தை தொடங்க விரும்பினால் ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம். இந்தக் கடன் அக்ரி கிளினிக் (Agri Clinic) மற்றும் அக்ரி வணிக மைய திட்டம் (Agri Business center scheme) மூலம் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் கடன் பெற நினைப்பவர்களுக்கு 45 நாட்கள் பயிற்சி வகுப்பு தேவைப்படும். அதன் பின்னர் நீங்கள் தகுதியுடையவர்கள் எனக் கண்டறியப்பட்டால் நபாரட் வங்கி (NABARD வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி) கடன் வழங்கும்.

திட்டத்தின் குறிக்கோள்கள் (Scheme Objectives)

வேளாண் பட்டதாரி, முதுகலை அல்லது டிப்ளோமா படிப்பை முடித்த ஒருவர் விவசாயம் தொடர்பான வர்த்தக வணிகங்களைச் செய்ய உதவுவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். இதன் மூலம் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், அந்த பகுதியின் விவசாயிகளின் நிலையையும் முன்னேற்றம் அடையச் செய்ய முடியும் என அரசு நம்புகிறது.

விண்ணப்பிப்பது எப்படி? (How to Apply)

விவசாய வணிகம் தொடர்பான பயிற்சிக்கு ஒரு கல்லூரியை தேர்வு செய்ய வேண்டும். அந்த பயிர்சி மையங்கள் அனைத்தும் தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனம் (MANAG - National Agricultural Extension Management Institute) அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். இந்த நிறுவனம் மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது

கடன் தொகையும் & மானியமும்! (Loan And Subsidy)

பயிற்சி முடிந்ததும், விவசாயம் அல்லது அதைச் சேர்ந்த ஒரு தொழிலைத் தொடங்க விண்ணப்பதாரர்களுக்கு நபார்டில் (NABARD Bank) இருந்து கடன் வாங்க முழு உதவி வழங்கப்படும். வேளாண் தொழிலைத் தொடங்க, விண்ணப்பதாரர்களுக்கு (தொழில் முனைவோர்) ரூ .20 லட்சம் வரையிலும், ஐந்து நபர்கள் அடங்கிய குழுவுக்கு ரூ .1 கோடி வரையிலும் கடன் வழங்கப்படுகிறது.

இதில் கூடுதலாக, பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு 36% மானியமும், பிற்படுத்தப்பட்ட பிரிவின், பழங்குடி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு 44% மானியமும் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் குறித்து மேலும் தகவல்களைப் பெற வேளாண் வணிகம் குறித்த கூடுதல் தகவலுக்கு,  1800-425-1556, 9951851556 கட்டணமில்லா எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

 

Editor's Choice

நாட்டிலுள்ள விவசாயிகள் உட்பட அனைத்து ஏழை, எளிய மக்களையும் வங்கிச் சேவைக்குள் கொண்டுவரும் நோக்கத்தில் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டது. பிரதமர் மோடியால் 2014ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தின் கீழ் வங்கியில் கணக்கு இல்லாத சுமார் 7 கோடி குடும்பத்தினருக்கு வங்கிக் கணக்கு தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் ஒரு லட்சம் ரூபாய்க்கான காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகளோடு, மத்திய - மாநில அரசுகளின் மானிய நிதியுதவிகள் இந்த ஜன் தன் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கும் கிஷான் கடன் அட்டைகளும் வழங்கப்படுகின்றன.

ஓவர் டிராஃப்ட் முறையில் ரூ.5000!

இந்த ஜன் தன் வங்கிக் கணக்கில் பணமே இல்லை என்றால் கூட நீங்கள் ரூ.5,000 வரையில் ஓவர் டிராஃப்ட் (Overdraft) முறையில் பணம் எடுக்க முடியும். ஆனால் அதற்கு சில விதிமுறைகள் உள்ளன.

உங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே இந்த வசதியை உங்களால் பெற முடியும்.

முதல் ஆறு மாதங்களுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகையை சரியாக கடைபிடிக்க வேண்டும்

இந்த வங்கிக் கணக்குக்கு டெபிட் கார்டு வாங்கியிருக்க வேண்டும்.

அடிக்கடி பணப் பரிவர்த்தனையும் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

யாருக்கு இந்த ஜன் தன் வங்கிக் கணக்கு? - Who is Eligible for Jan dhan account

10 வயது குழந்தைக்குக் கூட இத்திட்டத்தின் கீழ் எளிதாக வங்கிக் கணக்கு திறக்க முடியும். ஜன் தன் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு திறப்பதற்கு ஆதார், பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், பேன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, 100 நாள் வேலைத் திட்ட அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்கள் தேவைப்படும். உங்களுக்கு அருகில் உள்ள வங்கிக் கிளைக்குச் சென்று நீங்கள் மிகச் சுலபமாக இத்திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு தொடங்கி பயன்பெற முடியும்.

சமீபகாலமாக, எரிவாயு மானியம், குடும்ப உறுப்பினர் அட்டை மானியம் உள்ளிட்ட பல்வேறு மத்திய-மாநில அரசு நலத்திட்ட உதவிகள் நேரடியாகவே இந்த வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இடைத்தரகர்களின் மோசடி, முறைகேடு போன்ற பிரச்சினைகள் தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பக்கம் 42 / 49