Editor's Choice

பாகிஸ்தான் - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கராச்சியில் தொடங்கியது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணி 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் இன்று கராச்சியிலும், 2வது டெஸ்ட் பிப்.4ம் தேதி ராவல்பிண்டியிலும் தொடங்குகின்றன. தொடர்ந்து 3 டி20 போட்டிகள் பிப்.11, 13, 14 தேதிகளில் பகலிரவு ஆட்டங்களாக லாகூரில் மட்டும் நடக்கும். போட்டிகள் பூட்டிய அரங்கில் ரசிகர்கள் இல்லாமல் நடைபெற உள்ளன. இன்று கராச்சியில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பை தொடரின் ஒரு பகுதியாகும். ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப் பட்டியலில் தென் ஆப்ரிக்கா 5வது இடத்திலும், பாகிஸ்தான் 6வது இடத்திலும் உள்ளன.

இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்ட போதிலும், இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே உள்ளது தென் ஆப்ரிக்கா 13 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 2007ல் நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்கா வென்றது. அதன் பிறகு இப்போதுதான் தென் ஆப்ரிக்கா பாகிஸ்தானில் விளையாடுகிறது. அங்கு இதுவரை விளையாடிய 3 டெஸ்ட் தொடர்களில் 2 தொடரை தென் ஆப்ரிக்கா வென்றுள்ளது. அது மட்டுமல்ல இந்த 2 அணிகளும் இதுவரை 12 தொடர்களில் ஆடியுள்ளன. அவற்றில் 7 தொடர்களை தென் ஆப்ரிக்காவும், ஒரு தொடரை பாகிஸ்தானும் கைப்பற்ற, மீதி 3 தொடர்கள் டிராவில் முடிந்தன.

இரு அணிகளும் விளையாடிய 26 டெஸ்ட்களில் தென் ஆப்ரிக்கா 15, பாகிஸ்தான் 4 வெற்றி கண்ட நிலையில், மீதி 7 டெஸ்ட் டிராவில் முடிந்தன. சமீபத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-0 என ஒயிட் வாஷ் வெற்றி பெற்றது தென் ஆப்ரிக்க வீரர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. அதே சமயம், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கிலும்,  இங்கிலாந்துக்கு எதிராக 0-1 என்ற கணக்கிலும் தோற்ற பாகிஸ்தான், சொந்த மண்ணில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் உள்ளூரில் ஆடிய 2 டெஸ்ட் தொடர்களில் ஒன்றில் கூட பாகிஸ்தான் தோற்கவில்லை. வங்கதேசம், இலங்கைக்கு எதிரான அந்த டெஸ்ட் தொடர்களை தலா 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியள்ளது. அது அந்த அணிக்கு சாதகமான அம்சமாகும்.

Editor's Choice

பிறந்த குழந்தையை பார்ப்பதை விட நாட்டிற்காக விளையாடியதை பெருமையாக பார்க்கிறேன் என தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கூறியுள்ளார்.

ஐ.பி.எல்., போட்டிகளில் விளையாடியது, சர்வதேச போட்டிகளில் விளையாட உதவியாக இருந்தது. ஆஸி.,யில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என நினைத்தேன். ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. முதல் ஒருநாள் போட்டியில் விக்கெட் எடுத்தது கனவு போல் இருந்தது. சக வீரர், பயிற்சியாளர்கள் அனைவரும் ஆதரவு அளித்தனர். அறிமுக வீரர் என கருதாமல் அணியினர் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினர்.பிறந்த குழந்தையை பார்ப்பதை விட நாட்டிற்காக விளையாடியதை பெருமையாக நினைக்கிறேன்.

ஆஸி.,யில் வெற்றி கோப்பையை கையில் ஏந்திய தருணம் மகிழ்ச்சியாக இருந்தது. நான் மட்டுமின்றி, அணியில் உள்ள அனைவரும் ஒன்றாக இணைந்து விளையாடியதால் தான் வெற்றி கைவசமானது. ஒற்றை சிந்தனையுடன் கடினமாகவும் உண்மையாகவும் உழைத்தால் வெற்றி கிடைக்கும் என்பதற்கு நானே சாட்சியாக உள்ளேன். கடின உழைப்பு நிச்சயம் பலன் கொடுக்கும் என்பது தான் அனைவருக்கும் நான் கூற வரும்புவது. இந்தியாவுக்காக மேலும் பல போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதே எனது இலக்கு. இவ்வாறு அவர் கூறினார்.

Editor's Choice

கொரோனாவால் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவுமே நடக்கவில்லை. கிட்டத்தட்ட 10 மாத இடைவெளிக்குப்பிறகு சென்னையில் இருந்துதான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கயிருக்கின்றன.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் விளையாடிவருகிறது. இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் நாளையோடு முடிவடைய இருக்கும் நிலையில், இலங்கையில் இருந்து நேரடியாக சென்னை வருகிறது இங்கிலாந்து அணி. டெஸ்ட் அணி முழுக்க இலங்கையில் இருந்தும், டி20, ஒருநாள் போட்டிகளுக்கான வீரர்கள் இங்கிலாந்தில் இருந்தும் வர இருக்கிறார்கள். புதன்கிழமைக்குள் இங்கிலாந்து அணி முழுமையாகச் சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் கிரிக்கெட் வீரர்கள் லீலா பேலஸ் ஹோட்டலில் தங்கவைக்கப்பட இருக்கிறார்கள். கொரோனா அச்சம் காரணமாக விதிமீறல்கள் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதில் இருநாட்டு கிரிக்கெட் போர்டுகளும் மிகவும் கவனமாக இருக்கின்றன. அதனால் லீலா பேலஸ் ஹோட்டலில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

இதற்கிடையே பிப்ரவரி 5-ம் தேதி முதல் டெஸ்ட்டும், பிப்ரவரி 13-ம் தேதி இரண்டாவது டெஸ்ட்டும் சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த இரண்டு டெஸ்ட்டுக்கும், பார்வையாளர்கள், செய்தியாளர்கள், தன்னார்வலர்கள் என யாருக்கும் அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையில், இங்கிலாந்துக்கு எதிராக காலேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் மீடியா அனுமதிக்கப்படவில்லை. இது சர்ச்சையாக இரண்டாவது டெஸ்ட்டில் செய்தியாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் சென்னை டெஸ்ட்டிலும் செய்தியாளர்கள், தன்னார்வலர்கள், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பின் முக்கிய உறுப்பினர்களுக்கு டெஸ்ட் போட்டியை நேரில் காணும் வாய்ப்பு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஆனால், முடிவு பிசிசிஐ கையில் இல்லை. இங்கிலாந்து கிரிக்கெட் போர்டுதான் இறுதி முடிவுகளை எடுப்பதாகச் சொல்கிறார்கள்.

சென்னையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்து, மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகள் அஹமதாபாத்தில் நடைபெற இருக்கிறது. அடுத்தபடியாக அங்கேயே 5 டி20 போட்டிகளும் நடைபெற இருக்கின்றன. இறுதியாக இங்கிலாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் புனேவில் நடைபெற இருக்கின்றன.

Editor's Choice

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர், நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதுவும் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளது தான் மிக சிறப்பு. அவரது தமிழ் கேட்பதற்கு வேறுமாதிரி இருந்தாலும் அவரது ஸ்போர்ட்மேன்ஷிப்பை பலர் பாராட்டி வருகின்றனர்.

அந்த வீடியோவில் ``வாழ்த்துக்கள் நட்டு.. வாழ்த்துக்கள்...’’ என்று தமிழில் பேசிய டேவிட் வார்னர் நீங்கள் ஒரு லெஜண்ட் என்று வெகுவாக பாராட்டி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெகுவாக வைரலாகி வருகிறது.

ஷார்னர் வெளியிட்டுள்ள வீடியோவில் நடராஜன் வியப்புக்குரிய வீரர். பணிவானவர். உண்மையிலேயே ஒரு ஜென்டில்மேன். 2020-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நம்ப முடியாத அளவுக்கு அவரது பந்து வீச்சு இருந்ததை பார்த்தோம். அதைத் தொடர்ந்து வலைபயிற்சி பவுலராக ஆஸ்திரேலியாவுக்கு பயணித்தார். தனக்கு முதல் குழந்தை பிறந்ததை கூட பார்க்க செல்லாமல் தியாகம் செய்தார். அதன் பிறகு மூன்று வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டிலும் கால்பதிக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்ன ஒரு மகத்தான சாதனை. அவரை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். என்ன செய்ய வேண்டும், சூழ்நிலைக்கு தக்கபடி எப்படி பவுலிங் செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். கடந்த முறை இறுதிகட்ட பந்துவீச்சில் நேர்த்தியாக செயல்பட்டார். இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியிலும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறார் என்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சேலம் சின்னப்பம்பட்டி வந்த நடராஜனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட நிலையில் நெகடிவ் என வந்துள்ளது.

இதனிடையே, நடராஜன் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு மகிந்திரா நிறுவனம் கார் பரிசளிப்பதாக அறிவித்துள்ளது.

Editor's Choice
டோயோட்டா தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக் நகரில் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது. இதில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் யாரும் அரைஇறுதியை தாண்டவில்லை. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் (ஸ்பெயின்) 21-19, 21-17 என்ற நேர் செட் கணக்கில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை தாய் ஜூ யிங்கை  தோற்கடித்து பட்டத்தை வென்றார். 
 
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) 21-11, 21-7 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் ஹான்ஸ் கிறிஸ்டியன் சோல்பெர்க்கை வீழ்த்தி மீண்டும் பட்டத்தை வென்றார். அடுத்ததாக உலக டூர் இறுதி சுற்று போட்டி இதே பாங்காக்கில் நாளை மறுதினம் தொடங்குகிறது.

அரைஇறுதியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 18-21, 18-21 என்ற நேர் செட்டில் ஆரோன் சியா- சோ வூய் யிக் (மலேசியா) இணையிடம் தோற்றது. இதே போல் கலப்பு இரட்டையரிலும் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதன் அரைஇறுதியில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- அஸ்வினி பொன்னப்பா ஜோடி 20-22, 21-18, 12-21 என்ற செட் கணக்கில் போராடி தாய்லாந்தின் டேச்சாபோல்-சப்சிரீ இணையிடம் வீழ்ந்தது.

 

Editor's Choice

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 13வது சீசன் 'கொரோனா' காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்சில்  நடத்தப்பட்டது. இந்த ஆண்டு நடக்கவுள்ள 14வது ஐ.பி.எல்., சீசன் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் இந்தியாவில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதற்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடக்கவுள்ளது.

இது, வரும் பிப். 18ல் நடத்தப்படும் என்று பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கு தயாராகும் வகையில், 8 அணிகள் சார்பில் தக்கவைத்துக் கொண்ட, விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. வரும் பிப். 4ம் தேதிக்குள் வீரர்களை 'டிரேடு' முறையில் மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் வீரர்களுக்கான 'மினி' ஏலம் நடத்தப்படும்.ஆனால் இதற்கான இடம் இன்னும் முடிவாகவில்லை.''

பக்கம் 37 / 49