இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 13வது சீசன் 'கொரோனா' காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு நடக்கவுள்ள 14வது ஐ.பி.எல்., சீசன் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் இந்தியாவில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதற்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடக்கவுள்ளது.
இது, வரும் பிப். 18ல் நடத்தப்படும் என்று பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கு தயாராகும் வகையில், 8 அணிகள் சார்பில் தக்கவைத்துக் கொண்ட, விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. வரும் பிப். 4ம் தேதிக்குள் வீரர்களை 'டிரேடு' முறையில் மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் வீரர்களுக்கான 'மினி' ஏலம் நடத்தப்படும்.ஆனால் இதற்கான இடம் இன்னும் முடிவாகவில்லை.''













