Editor's Choice

ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் சக சிஎஸ்கே வீரர்கள் பாதுகாப்பாக வீடு திரும்பிய பிறகே நான் விமானத்தில் ஏறுவேன் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடும் கட்டுப்பாடுகளுடன் போட்டி நடத்தப்பட்டு வந்தது. வீரர்களுக்கு 3 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கடந்த 24 நாட்களில் 29 லீக் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் வேறு வழியின்றி ஐபிஎல் தொடரை பிசிசிஐ நிர்வாகம் ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படும் நடப்பு ஐபிஎல் தொடர் மீண்டும் எப்போது தொடங்கும் என்ற அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் சக சிஎஸ்கே வீரர்கள் பாதுகாப்பாக வீடு திரும்பிய பிறகே நான் விமானத்தில் ஏறுவேன் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி தெரிவித்துள்ளார். இதனால்தான் தோனி உலகின் மரியாதைக்குரிய கிரிக்கெட் வீரராகக் கருதப்படுகிறார். இந்த முறை தன் அணியின் சக வெளிநாட்டு, உள்நாட்டு வீரர்கள் பாதுகாப்பாக தங்கள் ஊர் போய் சேர்ந்த பிறகே தான் விமானத்தில் கால்பதிப்பேன் என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனடையே, ஐபிஎல் போட்டி நடத்துவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இந்தியாவில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை நடத்த ஏற்பாடு செய்தது தவறு இல்லை. ஏனெனில் அதற்கு முன் இங்கிலாந்து தொடரை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். கடந்த முறை போல் இந்த முறையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த விவாதிக்கப்பட்டது. ஆனால் பிப்ரவரியில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இல்லை. அதன்பின் 3 வாரம் வேகமாக பரவி விட்டது. மீண்டும் ஐபிஎல்லை நடத்துவது பற்றி விரைவில் அறிவிப்போம். யுஏஇயில் நடத்தப்படுமா என்பது பற்றி எதுவும் சொல்ல முடியாது, என்றார்.

Editor's Choice

இந்திய அணி வீரர் நடராஜன் உண்மையில் சிறந்த பந்துவீச்சாளர்தான். கடைசி ஓவரில் அதை நிரூபித்துவிட்டார் என்று இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் சாம் கரன் தெரிவித்தார். புனேவில் நேற்று நடந்த இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 48.2 ஓவர்களில் 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

330 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் சேர்த்து 7 ரன்களில் தோல்வி அடைந்தது. ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 200 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், அணியைச் சரிவிலிருந்து மீட்டு வெற்றியை நோக்கி சாம் கரன்தான் அழைத்துச் சென்றார். 95 ரன்கள் சேர்த்து இறுதிவரை சாம் கரன் ஆட்டமிழக்காமல் இருந்து, ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். இதில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், நடராஜன் வீசினார்.

இந்த ஓவரில் நடராஜன் வீசிய துல்லியமான யார்க்கர்கள், லைன் லென்த் பந்துவீச்சால் சாம் கரனால் பவுண்டரி மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் கடைசிவரை போராடியும் 7 ரன்களில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது.

ஆனால், இந்த ஆட்டத்தில் நான் விளையாடியது எனக்கு மிகப்பெரிய அனுபவமாக அமைந்தது. நீண்டகாலமாக இங்கிலாந்து அணிக்கு என்னால் பங்களிப்பு ஏதும் அளிக்க முடியவில்லை. இந்தப் போட்டியில் வென்று கொடுக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், தோற்றுவிட்டோம். அதனால்தான் ஒவ்வொரு பந்தையும் நான் மிகவும் நிதானமாகக் கையாண்டேன். பந்தைச் சமாளித்து ஆடுவதற்குக் கடினமாக இருந்தது. நடராஜன் கடைசி ஓவரில் சிறப்பாகப் பந்து வீசினார். உண்மையில், தான் சிறந்த பந்துவீச்சாளர் என்பதைக் கடைசி ஓவரில் நிரூபித்துவிட்டார் நடராஜன் என சாம்கரன் புகழாரம் சூட்டியுள்ளார்.

Editor's Choice

கொரோனா தொற்றால் தற்போது இந்தியாவில் நிலைமை தீவிரமாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சைமன் டவுல் (Simon Doull)  இந்திய மக்களுக்காக மிகவும் உணர்ச்சிகரமான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சைமன் டவுல் ஐபிஎல் 2021  இன் ஒரு பகுதியாக இருந்தார். ஐ.பி.எல் இன் வர்ணனைக் குழுவில் சைமன் இடம்பெற்றிருந்தார். ஐ.பி.எல் ஒத்திவைக்கப்பட்ட பின்னர், சைமன் தனது நாட்டுக்கு திரும்பியுள்ளார்.

இந்த கடினமான நேரத்தில் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சைமன் ட்விட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"அன்பான இந்தியா, உங்களிடமிருந்து இத்தனை ஆண்டுகளில் எனக்கு ஏராளமான அன்பு கிடைத்துள்ளது. இந்த கடினமான நேரத்தில் உங்களை விட்டு அங்கிருந்து வெளியேறியதற்கு வருந்துகிறேன். இந்த நோயுடன் போராடுபவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த பிரார்த்தனை. பாதுகாப்பாக இருக்க உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். உங்களை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்" என்று எழுதியுள்ளார்.

 

Editor's Choice
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 3 நிலைகளிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது.  இதில், இரு அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி தொடரில், ஐ.பி.எல். போட்டிகளுக்கான டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் இடது தோளில் காயம் ஏற்பட்டது.
 
இதனையடுத்து போட்டி தொடரில் இருந்து அவர் விலகினார்.  அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.  இதனால் அடுத்து நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிகளிலும் அவர் பங்கேற்கவில்லை.
 
இதனால் காலியாக உள்ள டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் பதவிக்கு யாரை தேர்வு செய்வது என ஆலோசிக்கப்பட்டது.  இதன் முடிவில், துணை கேப்டன் ரிஷாப் பண்ட் அணிக்கு தலைமையேற்க முடிவானது.  23 வயது நிறைந்த பண்ட் அணியின் தலைமை பதவியை ஏற்பதுடன், அணியை வழிநடத்தி செல்லும் பொறுப்பும் கூடியுள்ளது.
Editor's Choice
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிட்செல் மார்ஷ் கடந்த ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக களமிறங்கினார். ஆனால், காயம் காரணமாக தொடரிலிருந்து அவர் வெளியேறினார். இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து விலகுவதாக மார்ஷ் அறிவித்தார்.
 
இதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு ராய் சேர்க்கப்பட்டுள்ளார்.
 
ராஜஸ்தான் அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சருக்கு முழங்கை காயத்துக்கு ஆபரேஷன் செய்யப்பட்டு இருப்பதால், ஐ.பி.எல். தொடரில் முதற்கட்ட ஆட்டங்களில் விளையாட வாய்ப்பில்லை. இதனால் கிறிஸ் மோரிசுக்கு பொறுப்பு அதிகரித்துள்ளது. அவர் தான் ஆரம்ப கட்ட தாக்குதலை தொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 12-ந்தேதி பஞ்சாப் கிங்சை மும்பையில் சந்திக்கிறது என  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் மோரிஸ் கூறியுள்ளார்.  
 
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நான் விளையாடிய ஒவ்வொரு அணியிலும் தொடக்கத்திலும், கடைசி கட்டத்திலும் பந்து வீசுவதே எனது பணியாக இருந்துள்ளது. இந்த தடவையும் அதில் மாற்றம் இருக்கப்போவதில்லை. ஒவ்வொரு அணியிலும் எப்போதும் நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு பக்கபலமாக இருக்கும் பணியையும் செய்திருக்கிறேன். எனவே புதிய பந்தில் பவுலிங் செய்வதும், மற்ற பவுலர்களுக்கு உதவிகரமாக இருக்கும் வகையில் செயல்படுவதும் எனக்கு புதிது அல்ல. அதற்கு தயாராகவே இருக்கிறேன். ஆனால் பந்து வீச்சுக்கு தலைமை தாங்கி புதிய பந்தில் வீசும் போது கொஞ்சம் பொறுப்பு அதிகரித்து விடும். இது நிச்சயம் இழப்பு தான். விரைவில் குணமடைந்து அணிக்கு திரும்புவார் என்று நம்புகிறேன்.
 
இந்த ஐ.பி.எல்.-ல் நான் பெரிய தொகைக்கு ஏலம் போயிருக்கிறேன். இது போன்ற அதிக தொகை கிடைக்கும் போது இயல்பாகவே சற்று நெருக்கடி வந்து விடும். எனக்கு நெருக்கடி இல்லை என்று சொன்னால் அது பொய்யாகத் தான் இருக்கும். அதிர்ஷ்டவசமாக ஐ.பி.எல்.-ல் இதற்கு முன்பும் நான் பெரிய தொகை முத்திரையுடன் விளையாடிய அனுபவத்தை பெற்றிருக்கிறேன். எது எப்படியோ களத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் அது தான் மிகவும் முக்கியம் என கிறிஸ் மோரிஸ் கூறினார். 
Editor's Choice

இந்தியாவின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி இப்போது 150 கோடி ரூபாய் வருமானத்துடன், அதிக ஊதியம் பெறும் கிரிக்கெட் வீரராக முன்னணியில் இருக்கிறார்.  

இந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், அவர் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம் பிடிக்கிறார்.

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2021 சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனுக்கு 15 கோடி ரூபாய் மதிப்புள்ள மற்றொரு ஐபிஎல் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.   பணம் நிறைந்த போட்டியின் வரலாற்றில் அதிக வருமானம் ஈட்டிய வீரர் என்ற பெருமையை தோனி பெற்றார்.

இப்போது ஐபிஎல் போட்டிகளில் அதிக வருமானம் ஈட்டிய வீரர்களான, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை 150 கோடி ரூபாய் சம்பாதித்த முன்னாள் இந்திய கேப்டன் முந்திவிட்டார்.

2008 ஆம் ஆண்டில் ஐபிஎல்  (IPL) தொடங்கியதிலிருந்து மகேந்திர சிங் தோனி தனது ஐபிஎல் ஒப்பந்தங்களின் ஒரு பகுதியாக சம்பாதித்த அனைத்து பணமும் மொத்தத் தொகையில் அடங்கும்.

ஐ.பி.எல்லில் இருந்து அதிக பணம் சம்பாதிக்கும் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா இரண்டாவது இடத்தில் உள்ளார். மொத்தம் 146.6 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் விராட் கோஹ்லி  2008 ஆம் ஆண்டில், ஐபிஎல் தொடங்கியபோது கோஹ்லி அவ்வளவு சம்பளம் பெறவில்லை, இப்போது அதிக சம்பளம் வாங்கும் வீரராக இருந்தபோதிலும் அவர் மூன்றாவது இடத்தில் இருப்பதற்கு இதுவே காரணம். விராட் கோலியின் மொத்த வருவாய்143.2 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளார்.

உட்பிரிவுகள்

பக்கம் 1 / 2