ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிட்செல் மார்ஷ் கடந்த ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக களமிறங்கினார். ஆனால், காயம் காரணமாக தொடரிலிருந்து அவர் வெளியேறினார். இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து விலகுவதாக மார்ஷ் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு ராய் சேர்க்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சருக்கு முழங்கை காயத்துக்கு ஆபரேஷன் செய்யப்பட்டு இருப்பதால், ஐ.பி.எல். தொடரில் முதற்கட்ட ஆட்டங்களில் விளையாட வாய்ப்பில்லை. இதனால் கிறிஸ் மோரிசுக்கு பொறுப்பு அதிகரித்துள்ளது. அவர் தான் ஆரம்ப கட்ட தாக்குதலை தொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 12-ந்தேதி பஞ்சாப் கிங்சை மும்பையில் சந்திக்கிறது என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் மோரிஸ் கூறியுள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நான் விளையாடிய ஒவ்வொரு அணியிலும் தொடக்கத்திலும், கடைசி கட்டத்திலும் பந்து வீசுவதே எனது பணியாக இருந்துள்ளது. இந்த தடவையும் அதில் மாற்றம் இருக்கப்போவதில்லை. ஒவ்வொரு அணியிலும் எப்போதும் நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு பக்கபலமாக இருக்கும் பணியையும் செய்திருக்கிறேன். எனவே புதிய பந்தில் பவுலிங் செய்வதும், மற்ற பவுலர்களுக்கு உதவிகரமாக இருக்கும் வகையில் செயல்படுவதும் எனக்கு புதிது அல்ல. அதற்கு தயாராகவே இருக்கிறேன். ஆனால் பந்து வீச்சுக்கு தலைமை தாங்கி புதிய பந்தில் வீசும் போது கொஞ்சம் பொறுப்பு அதிகரித்து விடும். இது நிச்சயம் இழப்பு தான். விரைவில் குணமடைந்து அணிக்கு திரும்புவார் என்று நம்புகிறேன்.
இந்த ஐ.பி.எல்.-ல் நான் பெரிய தொகைக்கு ஏலம் போயிருக்கிறேன். இது போன்ற அதிக தொகை கிடைக்கும் போது இயல்பாகவே சற்று நெருக்கடி வந்து விடும். எனக்கு நெருக்கடி இல்லை என்று சொன்னால் அது பொய்யாகத் தான் இருக்கும். அதிர்ஷ்டவசமாக ஐ.பி.எல்.-ல் இதற்கு முன்பும் நான் பெரிய தொகை முத்திரையுடன் விளையாடிய அனுபவத்தை பெற்றிருக்கிறேன். எது எப்படியோ களத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் அது தான் மிகவும் முக்கியம் என கிறிஸ் மோரிஸ் கூறினார்.













