மை டியர் இந்தியா - நியூசிலாந்து கேப்டன் டிவிட்டரில் உருக்கம்

SOCIAL SHARE
Pin It

கொரோனா தொற்றால் தற்போது இந்தியாவில் நிலைமை தீவிரமாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சைமன் டவுல் (Simon Doull)  இந்திய மக்களுக்காக மிகவும் உணர்ச்சிகரமான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சைமன் டவுல் ஐபிஎல் 2021  இன் ஒரு பகுதியாக இருந்தார். ஐ.பி.எல் இன் வர்ணனைக் குழுவில் சைமன் இடம்பெற்றிருந்தார். ஐ.பி.எல் ஒத்திவைக்கப்பட்ட பின்னர், சைமன் தனது நாட்டுக்கு திரும்பியுள்ளார்.

இந்த கடினமான நேரத்தில் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சைமன் ட்விட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"அன்பான இந்தியா, உங்களிடமிருந்து இத்தனை ஆண்டுகளில் எனக்கு ஏராளமான அன்பு கிடைத்துள்ளது. இந்த கடினமான நேரத்தில் உங்களை விட்டு அங்கிருந்து வெளியேறியதற்கு வருந்துகிறேன். இந்த நோயுடன் போராடுபவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த பிரார்த்தனை. பாதுகாப்பாக இருக்க உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். உங்களை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்" என்று எழுதியுள்ளார்.

 

ARUNACHALAM