Editor's Choice

தமிழ்நாடு அரசு மீன்வளத் துறையின் மூலம் உள்நாட்டு நீர்நிலைகளில் மிதவைக் கூண்டுகளில் மீன் வளர்த்தல், மீன் விதை வங்கிகள் உருவாக்குதல், பாசனக் குளங்களில் தீவிர மீன் வளர்ப்பினை மேற்கொள்ளுதல், பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்ப்பு ஆகிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. மீன் வளர்ப்போர் மற்றும் மீன் வளர்ப்பு சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு பல்வேறு மானிய உதவிகளையும் தமிழ்நாடு அரசு வழங்கி வருகின்றது

மீன்வளத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு

தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம், 2020-2021-ன் கீழ் ரூ.5.21 கோடி மதிப்பில் நீர்ப்பாசன குளங்களில் மிதவை கூண்டுகளில் மீன் வளர்த்தல், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறைக்கு சொந்தமான குளங்களில் மீன் விரலிகள் இருப்பு செய்தல் மற்றும் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்களுக்கு உள்ளட்டு மானியம் வழங்குதல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம், 2020-2021-ன் கீழ் ரூ.12.42 கோடி மதிப்பில் பாசனக் குளங்களில் மீன் விரலிகள் இருப்பு செய்தல், பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்ப்பு, மிதவைக் கூண்டுகளில் மீன் வளர்த்தல், மீன் வளர்ப்புப் பண்ணை அமைத்தல், நவீன மீன் விற்பனை அங்காடி அமைத்தல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

புதிய மீன்வளத் திட்டங்கள்

மத்திய அரசு பிரதம மந்திரி மத்சிய சம்பட யோஜனா 2020-2021 திட்டத்தின் கீழ் உள்நாட்டு மீனவர்களுக்கு புதிய மீன் வளர்ப்புப் பண்ணை அமைத்தல், மீன்குஞ்சு பொரிப்பகங்கள் அமைத்தல், மீன் குஞ்சு வளர்த்தெடுக்கும் பண்ணைகள் அமைத்தல், உள்ளட்டு மானியம், மீன் விதைப் பண்ணை அமைத்தல், நீரினை மறுசுழற்சி முறையில் மீன் வளர்ப்பு மற்றும் உயிர் கூழ்மம் முறையில் மீன் வளர்ப்பு ஆகிய தொழில்நுட்பத்துடன் அதிக வருமானம் ஈட்டக்கூடிய மீன் வளத் திட்டங்களை அறிவித்துள்ளது.

மானிய விபரங்கள்

இத்திட்டங்களின் கீழ் மீன் வளர்ப்பு மேற்கொள்ள பொதுப்பிரிவினருக்கு 40 சதவீதம் மற்றும் மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவினருக்கு 60 சதவீதம் மானியம் வழங்கப்படும். இத்திட்டங்களில் சேர விரும்பும் மீன் வளர்ப்போர், அந்தந்த மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Editor's Choice

வேளாண் பொறியியல் துறை சார்பில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ், டிராக்டர், பவர் டில்லர், புதர் அகற்றும் கருவிகள் உள்ளிட்ட வேளாண் கருவிகள் வாங்க சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 40 சதவீதமும் மானியமாக வழங்கப்படும்.

உழவன் செயலி(Uzhavan App)

இதனை விவசாயிகள் மானிய விலையில் பெறுவதற்கு முதலில் உங்களின் Mobile-லில் play store அல்லது App Store-ல் இருந்து உழவன் செயலியை (Uzhavan APP) பதிவிறக்கம் செய்யவேண்டும்.

  • வேளாண் இயந்திரத்தை தேர்வு செய்தல்

  • பின்னர் அதில் இடுபொருள் முன்பதிவு என்பதை தேர்வு செய்யவேண்டும்.

  • அதன் பின்னர் வகை என்பதின் கீழ் பண்ணை இயந்திரங்கள் (பொறியியல் துறை) என்பதை தேர்வு செய்யுங்கள்

  • அதன் பின்னர் உழவன் செயலியில் அவரது விண்ணப்பம் பதிவு செய்யப்படும்.

  • பின் அவரது விண்ணப்பம் மத்திய அரசின் இணையதளமான www.agrimachinery.nic.in உடன் இணைக்கப்படும்.

  • பின்னர் உரிய விவரங்களைப் பதிவு செய்தவுடன் அவருக்கு ஒரு அடையாள மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும்

தேவையான ஆவணங்கள்

இதன்பின்னர், விவசாயிகள் மத்திய அரசின் இணைய தளத்தில் தங்கள் நிலம் சம்பந்தமான விபரங்கள், வங்கி கணக்கு விபரங்கள், தங்கள் குடும்பத்தாரைப் பற்றிய விபரங்கள் அகியவற்றினை அளிக்கவேண்டும்.

மேலும் தனது புகைப்படம், அடையாள அட்டை இருப்பிடச் சான்று, பாஸபோர்ட், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, பான் அட்டை உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்று, வங்கி பாஸ்புக் அல்லது ரத்து செய்யப்பட்ட வங்கி காசோலை, சாதி மற்றும் சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ் அகிய அனைத்தையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும்.

பின்னர் தனக்கு தேவைப்படும் வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகளை இணையதளத்தின் மூலம் தேர்வு செய்திட வேண்டும் அப்போது அவருக்கு 6 இலக்க இரகசிய குறியீட்டு எண் PIN No அளிக்கப்படும்.

நிபந்தனைகள்

இணையதளத்தில் விவசாயி தனக்கு தேவையான வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகளின் முகவரை தேர்வு செய்திட வேண்டும் இவ்வாறு 15 நாட்களுக்குள் உரிய முகவரை தேர்வு செய்யாத பட்சத்தில் அவரின் விண்ணப்பம் தனாகவே நிராகரிக்கப்படும்.

மேலும் 1 மாதத்திற்கு அவ்விவசாயியால் திரும்பவும் அதே வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகளுக்கு விண்ணப்பிக்க இயலாது.

அவ்வாறு தேர்வு செய்த முகவரை நேரில் சந்தித்து ஆவணங்களையும் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட 6 இலங்கு இரகசிய குறீயீட்டு எண்ணையும் அளித்திட வேண்டும்.

விவசாயி தேர்வு செய்த முகவரிடம் வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகளுக்கு முகவரின் விற்பனை விலைக்குண்டான மொத்த தொகையினை வரைவோலையாகவோ, ரொக்கமாகவோ, வங்கி காசோலையாகவோ, வங்கி இணையதளம் மூலமாகவோ அளித்திடவேண்டும்.

முகவரின் விற்பனை விலையானது வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவியின் அடிப்படை விலை, போக்குவரத்து கட்டணம், மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி அகிய அனைத்தையும் உள்ளடக்கியது குறிப்பிடத்தக்கது.

Editor's Choice

திண்டுக்கல் மாவட்டத்தில் மக்காச்சோளத்தை மூலப் பொருளாக கொண்டு செயல்படும் அமைப்புசாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை வலுப்படுத்துவதற்காக,  35 சதவீதம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :

ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் (Atma Nirbhar Bharat Abhiyan) ஒரு பகுதியாக அமைப்புசாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை வலுப்படுத்துவதற்காக, பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

2020-21 முதல் 2024-2025 வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டம் மத்திய அரசின் 60 சதவீத மற்றும் மாநில அரசின் 40 சதவீத நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.

ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள் என்ற அணுகுமுறையில் செயல்படுத்தப்படும். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திற்கு மக்காச்சோளம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் தனிநபர் அடிப்படையில், ஏற்கெனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்கள் தொடங்குதல், குழு அடிப்படையில் பொது உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில்நுட்ப பயிற்சி போன்றவற்றிற்கு நிதி உதவி வழங்கப்படும்.

மேலும், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சுய உதவி குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவைகளுக்கும் நிதி உதவி வழங்கப்படும். ஒரு சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனத்துக்கு, தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் மானியம் வழங்கப்படும். மேலும் நிறுவனங்களுக்கு தேவைப்படும் தொழில் கடன் தொகை, வங்கி மூலம் ஏற்பாடு செய்து தரப்படும்.

இது தொடர்பான விவரங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வேளாண்மை துணை இயக்குநரை (வேளாண் வணிகம்) நேரிலோ அல்லது 91235 01559 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Editor's Choice

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது மனையையோ அளக்க முற்படும் பொழுது ..
பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை
குறிப்பாக நிலவரைபடம் FMB பற்றி தெளிவாக நமக்குத் தெரிவதில்லை
அது நமக்கு புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது
எனவே ஒரு நிலத்தை எப்படி அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்
FMB எனப்படும் புல வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்..

சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :

1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.

2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE).

3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள்.

4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும்.

5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப் பிடிப்பர்.

6. மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள்.

7. ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும், மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும்.

நிலத்தை அளக்கும் அளவு முறைகள்
**************
நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.

1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா,

2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை

3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்

ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.

நில அளவீடுகள்
*******
1 சென்ட் – 40.47 சதுர மீட்ட‍ர்
1 ஏக்க‍ர் – 43,560 சதுர அடி
1 ஏக்க‍ர் – 40.47 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்ட‍ர்
1 சென்ட் – 435.6 சதுர அடி
1 ஏர்ஸ் – 100 சதுர மீட்ட‍ர்
1 குழி – 144 சதுர அடி
1 சென்ட் – 3 குழி
3 மா – 1 ஏக்க‍ர்
3 குழி – 435.6 சதுர அடி
1 மா – 100 குழி
1 ஏக்க‍ர் – 18 கிரவுண்டு
1 கிரவுண்டு – 2,400 சதுர அடிகள்

ஏக்கர்

1 ஏக்கர் – 100 சென்ட்
1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்
1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்
1 ஏக்கர் – 43560 ச.அடி
1 ஏக்கர் – 4046 ச மீ

செண்ட்

1 செண்ட் – 001 ஏக்கர்
1 செண்ட் – 0040 ஹெக்டேர்
1 செண்ட் – 0.405 ஏர்ஸ்
1 செண்ட் – 435.54 ச.அடி
1 செண்ட் – 40.46 ச மீ

ஹெக்டேர்

1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்
1 ஹெக்டேர் – 247 செண்ட்
1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி
1 ஹெக்டேர் – 10,000 ச மீ

ஏர்ஸ்

1 ஏர் – 2.47 செண்ட்
1 ஏர் – 100 ச.மீ
1 ஏர் – 1076 ச.அடி

100 குழி = ஒரு மா
20 மா = ஒரு வேலி
3.5 மா = ஒரு ஏக்கர்
6.17 ஏக்கர் = ஒரு வேலி

1 ஏக்கரின் நீளம் = 1 பர்லாங், 40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்
1 ஏக்கரின் அகலம் = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்
நீட்டலளவை

• 10 கோண் = 1 நுண்ணணு

• 10 நுண்ணணு = 1 அணு

• 8 அணு = 1 கதிர்த்துகள்

• 8 கதிர்த்துகள் = 1 துசும்பு

• 8 துசும்பு = 1 மயிர்நுனி

• 8 மயிர்நுனி = 1 நுண்மணல்

• 8 நுண்மணல் = 1 சிறு கடுகு

• 8 சிறு கடுகு = 1 எள்

• 8 எள் = 1 நெல்

• 8 நெல் = 1 விரல்

• 12 விரல் = 1 சாண்

• 2 சாண் = 1 முழம்

• 4 முழம் = 1 பாகம்

• 6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)

• 4 காதம் = 1 யோசனை

• வழியளவை

• 8 தோரை(நெல்) = 1 விரல்

• 12 விரல் = 1 சாண்

• 2 சாண் = 1 முழம்

• 4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்

• 2000 தண்டம் = 1 குரோசம் 21/4மைல்

• 4 குரோசம் = 1 யோசனை

• 71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)

நிலவளவை குழிக்கணக்கு வருமாறு

16 சாண் = 1 கோல்

18 கோல் = 1 குழி

100 குழி = 1 மா

240 குழி = 1 பாடகம்

கன்வெர்ஷன்

1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்

1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்

1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்

பிற அலகுகள்1

ஏர் = 100 சதுர மீட்டர்
1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர்
தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.
நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும்.
1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்

நில அளவை

100 ச.மீ - 1 ஏர்ஸ்

100 ஏர்ஸ் - 1 ஹெக்டேர்

1 ச.மீ - 10 .764 ச அடி

2400 ச.அடி - 1 மனை

24 மனை - 1 காணி

1 காணி - 1 .32 ஏக்கர்

144 ச.அங்குலம் - 1 சதுர அடி

435 . 6 சதுர அடி - 1 சென்ட்

1000 ச லிங்க்ஸ் - 1 சென்ட்

100 சென்ட் - 1 ஏக்கர்

1லட்சம்ச.லிங்க்ஸ் - 1 ஏக்கர்

2 .47 ஏக்கர் - 1 ஹெக்டேர்

1 ஹெக்டேர் = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் )

1 ஏக்கர் = 4840 குழி (Square Yard)

100 சென்ட் = 4840 சதுர குழிகள்

1 சென்ட் = 48.4 சதுர குழிகள்

1 ஏக்கர் = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter )

1 ஏக்கர் = 43560 சதுர அடி...

 

அட்வகேட் ஆனந்தன்.

Editor's Choice

NEED திட்டம் என்றால் என்ன?

படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு உறிய பயிற்சி அளித்து அவர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்க தமிழக அரசு (New Entrepreneur cum Enterprise Development Scheme) என்ற புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தொழில் முனைவோர்களாக மாற்றம் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டமானது, மாவட்ட தொழில் மையம் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்திற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு மாத காலம் தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுக்கு தொழில் திட்டம் தயாரிக்க தேவையான உதவிகளையும் மாவட்ட தொழில் மையம் செய்து தருகிறது.

திட்டத்தில் பயன் பெறுவதற்கான தகுதிகள்

  • பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / ஐடிஐ / அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் தொழில்சார் பயிற்சி பெற்றவர்கள் இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற தகுதியுடையவர்கள்.

  • இதில் ஆண்டு வருமானம் ஏதுமில்லை

  • முதல் தலைமுறையினர் மட்டுமே இதில் விண்ணப்பிக்கலாம்

நிபந்தனைகள்

வயது வரம்பு :

  • பொது பிரிவினருக்கு 21 வயதிற்கு மேல் அதிகபட்சமாக 35 வரை இருத்தல் வேண்டும்.

  • சிறப்பு பிரிவினர்களான மகளிர், பட்டியலினத்தோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு அதிகபட்ட வயது வரம்பு 45 என நிர்னயிகப்பட்டுள்ளது.

திட்டத்தின் பயனை பெறுவதற்கான நடைமுறைகள்

இத்திட்டத்தின் கீழ், திட்ட மதிப்பீடு குறைந்த பட்சம் ரூ.10 லட்சத்திற்கு மேல் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை அனைத்து உற்பத்தி சார்ந்த தொழில்கள் (எதிர்மறை பட்டியல் நீங்கலாக) மற்றும் சேவை தொழில் துவங்கலாம்.

பொது பயனாளி தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10% செலுத்த வேண்டும். சிறப்பு பிரிவு பயனாளிகள் திட்ட மதிப்பீட்டில் 5% செலுத்த வேண்டும்.

வணிக வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் அல்லது பல்லவன் கிராம வங்கிகள் மூலம் கடனுதவி பெற பரிந்துரை செய்யப்படும்.
கடனுக்கு மானியமும் உண்டு

இத்திட்டத்தின் கீழ் தொழில் துவங்கும் தொழில் முனைவோருக்கு தொழில் திட்ட மதிப்பீட்டில் 25% அதிக பட்சமாக ரூ.25 லட்சம் வரை முதலீட்டு மானியமும் 3% வட்டி மானியமும் அளிக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடைய பயனாளிகள் http://www.msmeonline.tn.gov.in/needs/ இணையதள முகவரியில் விண்ணப்பிக்கவேண்டும். மேலும் விபரங்களுக்கு உங்கள் மாவட்ட தொழில் மையத்தினை அணுகி விளக்கம் பெறலாம்.

Editor's Choice

பாரத தேசத்தின் மக்களை பேணிக்காக்கும் பொருட்டு தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷன் எனும் திட்டத்தை பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் இன்று துவக்கி வைத்தார். இதற்கான அறிவிப்பை சுதந்திர தின உரையில் அவர் வெளியிட்டார்.

இன்று முதல் நமது நாடு தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷனை நோக்கி செல்ல உள்ளது. இந்தியாவின் சுகாதாரத் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தப் போகும் இந்த தேசிய டிஜிட்டல் சுகாதார மிஷனை நான் இன்று துவக்கி வைக்கிறேன். மருத்துவத் துறையில் இது புரட்சிகர திட்டமாகும்.

மருத்துவ அட்டை பலன் தேசிய டிஜிட்டல் சுகாதார மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து இந்தியர்களும் சுகாதார அடையாள அட்டைகளை பெறுவார்கள். ஒவ்வொரு முறை, மருத்துவரையோ, அல்லது மருந்தகங்களையோ நீங்கள் அணுகும்போது, பதிவு செய்யப்படும் அனைத்து விவரங்களும், இந்த சுகாதார அட்டையில் பதிவேற்றமாகிவிடும். நாட்டின் எந்த மருத்துவமனை அல்லது மெடிக்கலை நீங்கள் அணுகினாலும், அனைத்து விவரமும் இதில் பதிவாகும். டாக்டர் அப்பாயின்மென்ட், மருந்து குறிப்பு உள்ளிட்ட எல்லா விவரமும் இதில் இருக்கும். அவசர காலத்தில் எளிதாக அனைத்து மருத்துவ விவரங்களையும், மருத்துவர்கள் அறிந்து கொள்ள இந்த அட்டை உதவும்.


 

பக்கம் 45 / 49