Editor's Choice

பிறந்த பெண் குழந்தைகளைக் கொண்டாட வைக்கும் ஒரு முயற்சியாக தமிழ்நாடு அரசு, ‘சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்’ என்கிற பெயரில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் அரசு வழங்கும் நிதியான 50 ஆயிரம் ரூபாயைப் பெற எப்படி விண்ணப்பிப்பது, யாரை அணுகுவது என்பது போன்ற A to Z தகவல்களை சமூக நலத்துறை சார்பாக நமக்குத் தந்திருக்கிறார்கள். இதோ…

விண்ணப்பம் :

ஒவ்வொரு மாவட்ட சமூக நல அலுவலகத்திலும் இதற்கான விண்ணப்பங்களைப் பெறலாம். அல்லது

http://cms.tn.gov.in/.../forms/socialwelfareschemes.pdf

என்ற இணையதள முகவரியில் தரவிறக்கம் (டவுன்லோட்) செய்துகொள்ளலாம்

(தரவிறக்கம் செய்யும்போது பெண்கள் தொடர்பான அனைத்து திட்டங்களுக்கான விண்ணப்பங்களும் வரும்.
அதில் நீங்கள் சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்துக்கான விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்).

தரவிறக்கம் செய்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அப்படிவத்தில் இருக்கும் உறுதிமொழிச்சான்றிதழை இணைத்து உங்கள் மாவட்டத்தில் இருக்கும் சமூக நல அலுவலரிடம் கொடுக்க வேண்டும்.

நிதி விவரம் :

உங்களுக்கு ஒரு பெண் குழந்தை மட்டும் இருப்பின், அந்தக் குழந்தையின் பெயரில் நிரந்தர வைப்பீடாக ரூ.50 ஆயிரமும், இரண்டு பெண் குழந்தைகள் எனில், ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் தலா ரூ.25 ஆயிரமும் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் 18 ஆண்டு காலத்துக்கு முதலீடு செய்யப்படும்.

நீங்கள் தரவிறக்கம் செய்யும்போது இங்கே சொல்லப்பட்டிருக்கும் தொகையைவிட குறைவாக அதில் சொல்லப்பட்டிருக்கும். அவை பழைய தகவல். தற்போது சலுகைகளை அரசு உயர்த்தியிருக்கிறது.

இணைக்க வேண்டியவை :

=> குடும்ப அட்டை,
=> வருமானச் சான்று,
=> சாதிச் சான்று,
=> பெற்றோரின் வயதுச் சான்று,
=> கருத்தடை அறுவை சிகிச்சை சான்று,
=> குழந்தைகளின் பிறப்புச்சான்று (பெயர்களுடன்),
=> குடும்பப் புகைப்படம் – 1.
=> ஆண் வாரிசு இல்லை என வட்டாட்சியர் வழங்கும் உறுதிச்சான்று,
=> இருப்பிடச் சான்று (விண்ணப்பதாரர் 10 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்நாட்டில் வசிப்பவர் என்று வட்டாட்சியர் குறிப்பிட்டு வழங்குவது)

தகுதி :

1.8.2011-க்கு பிறகு பிறந்த பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இத்திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும். பெற்றோரில் ஒருவர் 35 வயதுக்குள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக்கூடாது. பின்னாளில் ஆண் குழந்தையை தத்து எடுக்கவும் கூடாது.

எப்போது விண்ணப்பிப்பது..??

குழந்தை பிறந்த 3 ஆண்டுக்குள் விண்ணப்பிப்பது அவசியம்.

உங்கள் குழந்தைகளில் யார் பெயருக்கு நீங்கள் விண்ணப்பித்தீர்களோ, அவர்களுக்கான தொகை அந்த குழந்தை 10-ம் வகுப்பு தேர்வு எழுதி முடித்த பிறகே அரசு முதிர்வுத் தொகையாக வழங்கும். அவ்வாறு இல்லையெனில் வட்டியுடன் வைப்புத் தொகை அரசுக் கணக்கில் செலுத்தப்படும்.

பெற்றோரின் ஆண்டு வருமானம் :

பெண் குழந்தை நலத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் பெற்றோரின் ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடாது.

தரகர்களைத் தவிர்க்கலாம் :

இத்திட்டத்துக்கு விண்ணப்பிப்பதில் இருந்து அந்த தொகை முதிர்வுபெற்று பெறும்வரை நீங்களே அனைத்து வேலைகளையும் மேற்பார்வையிடுவது நல்லது. இடைத் தரகர்களை நம்பி வீணாக பணத்தை இழக்க வேண்டாம்.

மேலும் அதிக தகவல் பெற…இது தொடர்பான மேலதிக தகவல்களைத் தெரிந்துகொள்ள உங்கள் மாவட்ட சமூகநலத் துறையை அணுகவும்

Editor's Choice

நாடு முழுவதும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வழங்குதல் மற்றும் உபயோகித்தல் தொடர்பாக, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

அதன்படி, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் அனைத்தும் இந்தியாவில் உள்ள ஏ.டி.எம் மற்றும் பாயிண்ட் ஆப் சேல் இயந்திரகளில் மட்டுமே உபயோகிக்க முடியும். வெளிநாடுகளில் பயன்படுத்த வங்கியில் அனுமதி பெற வேண்டும்.

பணம்பரிவர்த்தனை வரம்பை வாடிக்கையாளர்களே அமைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய சேவைகளை தேர்வு செய்வது, அல்லது விலகுவது, ஆன்லைன் பரிவர்த்தனைகள், சர்வதேச பரிவர்த்தனைகள் மற்றும் தொடர்பு இல்லாத பரிவர்த்தனைகளுக்கான வரம்புகள் உள்ளிட்டவற்றிற்கும் வாடிக்கையாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

Editor's Choice

எதிர்பாராத வேளையில் நம்மைத் தாக்கித் துவட்டி எடுக்கும் நோய் மற்றும் விபத்து காலங்களில் நமக்கு கைகொடுத்து உதவுவது இன்சூரன்ஸ் பாலிசி.

அதிலும் தரமான சிகிச்சை பெறமுடியாமல், ஏழைகள் தங்கள் இன்னுயிரை இழக்கக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டமே ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம் (Ayushman Bharat Yojana )

மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் தவிக்கும் ஏழைகளுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும், சிறந்த மற்றும் விலைஉயர்ந்த மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் உன்னத நோக்கம். ஆனால் இந்த திட்டம், யாரும் எதிர்பார்த்திராத பலன்களை அள்ளித் தந்தது கொரோனா நெருக்கடி காலத்தில். இந்தத்திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான ஏழை எளியோர் பயனடைந்தனர்.

அளிக்கப்படும் சிகிச்சைகள்

  • மனநலம் பாதிப்புக்கு சிகிச்சை

  • முதியோருக்கு அவசரகால சிகிச்சை

  • மகப்பேறு காலத்தில் அத்தனை சிகிச்சைகளும் அடங்கும்.

  • பல் சிகிச்சை

  • குழந்தைகளுக்கான சிகிச்சைகள்

  • குறிப்பாக முதியோர், குழந்தைகள், பெண்கள் ஆகியோரின் உடல்நலத்தில் சிறப்பு கவனம்

  • மகப்பேறு காலத்தில் ரூ.9ஆயிரம் வரை

இந்தத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கு மத்திய அரசு ரூ.600 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்த காப்பீட்டின் மூலம் நாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல், டிஸ்சார்ஜ் வரை ஆகும் அத்தனை சிகிச்சைகளுக்கான தொகையையும், மத்திய அரசே செலுத்தும்.

தகுதி (Qualify)

  • குடிசை வீட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

  • குடும்பத்தலைவர் பெண்ணாக இருக்க வேண்டியது அவசியம்.

  • குடும்பத்தில் யாராவது ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருக்க வேண்டியது கட்டாயம்.

  • கூலித்தொழில் செய்பவராக இருக்க வேண்டும்.

  • மாத வருமானம் ரூ.10 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

  • சொந்தமாக நிலம் இருக்கக்கூடாது

  • இணைவது எப்படி? (How to join)

இணைய விரும்புபவர்கள் https://pmjay.gov.in/ என்ற இணையதளத்திற்குள் சென்று Am I Eligible என்ற Optionயைக் click செய்ய வேண்டும். அங்கு உங்கள் செல்போன் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்.

தொடர்ந்து Generate OTP buttonனை Click செய்யவும். அப்போது உங்கள் செல்போனில் வரும் OTP யைப் பதிவு செய்யவும். பின்னர் உங்களது ரேஷன் அட்டை எண், பயனாளியின் பெயர் மற்றும் செல்போன் எண்ணைப் பதிவு செய்யவும். நீங்கள் தகுதி உடையவராக இருந்தால் உங்கள் பெயர் பயனாளி லிஸ்ட்டில் (List) சேர்ந்துவிடும்.

Editor's Choice

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண் சாகுபடியில் காய்கறிகள் மற்றும் கொடி வகைகளுக்கு விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்  என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் தோட்டக்கலை துறை துணை இயக்குநர் இந்திரா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :

  • விழுப்புரம் மாவட்டத்திற்கு தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் 2020-21ம் ஆண்டு திட்டத்தின் கீழ் தக்காளி, கத்தரி, வெண்டை மற்றும் அவரை, பாகல் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 1 எக்டருக்கு ரூ.3750 மானியம் வழங்கப்படும்.

  • இதேபோல் கீரை வகைகளுக்கு ரூ.2500 ஊக்கதொகை வழங்கப்படுகிறது.

  • இத்திட்டத்தில் விவசாயி அதிகபட்சமாக 2 எக்டர் வரை பயன் பெறலாம்.

  • மேலும், இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அங்கக சான்று பதிவு செய்ய கட்டணமாக ரூ.500 வழங்கப்பட்டு அங்கக சான்றளிப்பு துறையுடன் இணைந்து சான்றிதழ் பெற வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

  • இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களில் நிலத்திற்கான கணினி சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கிக்கணக்கு புத்தக நகல் (Nationalized Bank) மற்றும் 2 போட்டோ ஆகியவற்றுடன் அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

     

Editor's Choice

கால்நடை வளர்ப்பாளர்கள், எந்த அடமானமும் இல்லாமல் வங்கிகளில் குறைந்த வட்டியில் ரூபாய் 1.60 லட்சம் வரை கடனாக பெற, கால்நடை உழவர் கடன் அட்டை திட்டம் (Pashu Kisan Credit Card Scheme) உதவுகிறது. இந்த கால்நடை உழவர் கடன் அட்டையைப் பெற எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து இதில் தெரிந்துகொள்ளலாம்.

கால்நடை வளர்ப்பு என்பது வேகமாக வளர்ந்து வரும் விவசாயத் துறைகளில் ஒன்றாக இருந்து வருகிறது, பெரும்பாலான விவசாயிகள் தங்கள் வருமானத்தை அதிகரிப்பதற்காக விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கால்நடை துறையை மேம்படுத்தவும் கால்நடை துறையில் ஈடுபட விரும்புவர்களுக்கு உதவும் வகையிலும் கால்நடை உழவர் கடன் அட்டை திட்டம் (Pashu Kisan Credit Card Scheme) கடந்த 2019 ஆண்டு தொடங்கப்பட்டது.

கால்நடை விவசாயிகளுக்கான பயன்கள்

இந்த கால்நடை உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ், கால்நடை வளர்ப்பாளர்கள் எந்த அடமானமும் இல்லாமல் வங்கியிலிருந்து ரூபாய் 1.60 லட்சம் வரையிலான தொகையை கடனாக பெறலாம்

இந்த கடன் அட்டைக்கு ஆண்டுக்கு 7 சதவிகிதம் என்ற குறைந்த வட்டி விகிதத்தில் வங்கி கடன் வழங்கப்படுகிறது.

கடன் தொகையை முறையாக செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீத வட்டியினை மத்திய அரசு மானிய மூலம் வழங்கும். இதன் மூலம் விவசாயிகளுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 4 சதவீதமாக குறையும்.

கால்நடை உழவர் கடன் அட்டை வைத்திருப்பவர்கள் ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் வரை கடன் பெற முடியும்

விண்ணப்பிக்கும் முறை

இந்த கடன் அட்டையை பெற கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் விண்ணப்பிக்க வேண்டும்.

கடன் அட்டை விண்ணப்பப் படிவத்துடன் , பூர்த்தி செய்து நில ஆவணம் ஆதார் அட்டை மற்றும் புகைப்படம் ஆகியவற்றை வழங்க வேண்டும்.

கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டதும், கால்நடை உரிமையாளர்களுக்கு இரண்டு எருமைமாடுகளை வாங்க கடன் வழங்கப்படும். அதனுடன் கடன் அட்டையும் சேர்த்து வழங்கப்படும்.

இந்த திட்டம் மூலம் எருமை மாடு, பசு மாடு மற்றும் ஆடு போன்றவற்றை வாங்கவும் கடன் உதவி வழங்கப்படுகிறது.

 கால்நடை காப்பீடு திட்டம்

நோய் மற்றும் இயற்கை சீற்றங்கள் காரணமாக இறக்கும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு பண இழப்பு ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு கால்நடைகளுக்கான காப்பீட்டு திட்டத்தையும் மத்திய மத்திய மாநில அரசுகள் நடத்தி வருகிறது. இதன் படி

வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ள விவசாயிகளுக்கும் 50 சதவிகித மானியத்தையும், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு 70 சதவிகித மானியத்தையும் காப்பீடாக அரசு வழங்கி வருகிறது.

காப்பீடு செய்யப்பட்ட கால்நடைகள் இறந்தால் 24 மணி நேரத்திற்குள் காப்பீட்டு நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டியது அவசியம்.

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் துவக்கம்!

காப்பீடு மானிய விதிமுறைகள்

இரண்டரை வயது முதல் 8 வயது வரை உள்ள பசு மற்றும் எருமை மாடுகளுக்கு காப்பீடு செய்யலாம். ஒன்று முதல் மூன்று வயதுடைய வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் இந்த காப்பீடு திட்டத்தின் மூலம் காப்பீடு செய்யலாம்.

அதிகபட்சமாக ரூ.35,000 மதிப்புள்ள கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய மானியம் வழங்கப்படுகிறது. ஓராண்டு காப்பீடு கட்டனமாக கால்நடையின் மதிப்பில் 2% நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரூபாய் 35 ஆயிரத்துக்கும் மேல் காப்பீடு செய்யப்படும் கால்நடைகளுக்கு அதிகப்படியான மதிப்புக்கான காப்பீடு கத்தணத்தை கால்நடை உரிமையாளரே செலுத்த வேண்டும்

ஒரு குடும்பத்திற்கு அதிக பட்சமாக 5 கால்நடைகள் இத்திட்டத்தில் காப்பீடு செய்யலாம். மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையை அனுகி தெரிந்துகொள்ளுங்கள்.

Editor's Choice

நாட்டின கோழிகள் வளா்ப்புத் திட்டத்தின் கீழ் கோழிகள் வளா்க்க விரும்பும் பெண் பயனாளிகள் செப்டம்பா் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாட்டின கோழி இறைச்சி மற்றும் நாட்டுக் கோழி முட்டைகள் குறித்த விழிப்புணா்வின் காரணமாக கிராமங்களில் தற்போது நாட்டினக் கோழி வளா்ப்பு அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2020- 21ஆம் ஆண்டில் கிராமப்புறப் பெண்களிடையே நாட்டினக் கோழி வளா்ப்பை ஊக்கப்படுத்தும் விதமாக கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஒரு ஒன்றியத்துக்கு தலா ரூ.400 பெண்கள் வீதம் 4,800 கிராமப்புறப் பெண்களுக்கு கோழிக் குஞ்சுகள் வழங்கத் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

மானிய விதிமுறைகள் - Subsidy Guideliness 

  • கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஒரு பெண் பயனாளிக்கு 4 வார வயதுடைய 25 அசில் இனக் கோழிக் குஞ்சுகள் வழங்கப்படும்.

  • தோ்வு செய்யப்படும் பயனாளிகள் அந்தந்த கிராம ஊராட்சியில் நிரந்தர குடியிருப்பைக் கொண்டவா்களாகவும், ஏற்கனவே வழங்கப்பட்ட விலையில்லா கறவைப் பசுக்கள், ஆடுகள் மற்றும் கோழி வளா்ப்புத் திட்டத்தில் பயன் பெறாதவா்களாகவும் இருக்க வேண்டும்.

  • சுயஉதவிக் குழுவில் உறுப்பினா்களாக உள்ள பெண்கள், விதவைகள், ஆதரவற்றோா், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

  • தோ்வு செய்யப்படும் பயனாளிகளில் 30 சதவீதம் பெண்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவராக இருக்க வேண்டும்.


விண்ணப்பிப்பது எப்படி? - How to Apply 

இத்திட்டத்தின் கீழ் நாட்டின கோழிகள் வளா்க்க விரும்பும் பெண் பயனாளிகள் அருகில் உள்ள கால்நடை மருத்துவ நிலையங்களை அணுகி செப்டம்பா் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்கம் 43 / 49