ஐசிசி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி20 மற்றும் ஒருநாள் போட்டி கிரிக்கெட்டின் கனவு அணியில் கேப்டனாக தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த 10 ஆண்டுகளில் சிறந்த டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரோஹித் சர்மா, விராட் கோலி, டோனி (கேப்டன்), பும்ரா உள்ளிட்ட 4 இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். மேலும், கிறிஸ் கெயில், ஆரோன் பிஞ்ச், டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல், பொல்லார்ட், ராஷித் கான், மலிங்கா உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.மூன்று விதமான போட்டிகளுக்கும் இந்திய வீரர்களே கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டி 20, ஒரு நாள் போட்டிகளில் டோனி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் டெஸ்ட் போட்டி கோலி கேப்படனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐசிசி கனவு அணியில் மூன்று விதமான போட்டிகளிலும் இடம்பெற்றுள்ள ஒரே வீரர் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.ஒரு நாள் மற்றும் டி20அணியின் கேப்டனாக டோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மூன்று அணியிலும் விராட் கோலி இடம் பிடித்தார். டி20 அணியில் 4 பேரும், ஒரு நாள் அணியில் 3 பேரும், டெஸ்ட் அணியில் 2 பேரும் இடம் பிடித்துள்ளனர்.
ஐசிசியின் ஒரு நாள் போட்டி அணி அறிவிப்பு
ஒரு நாள் போட்டிகளில் கடந்த 10 ஆண்டுக்கான சிறந்த அணியில் இந்திய வீரர்கள் 3 பேர் இடம் பெற்றுள்ளனர். டோனி (கேப்டன்) , விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ரோஹித் சர்மா, வார்னர், கோலி, டிவில்லியர்ஸ், ஷாகிப் உல் ஹசன், டோனி (கேப்டன்), ஸ்டோக்ஸ், ஸ்டார்க், பெல்ட், இம்ரான் தாஹிர், மலிங்கா இடம் பெற்றுள்ளனர்.