Editor's Choice

நாம் காலையில்எழுந்த உடன் கேட்பது டீ தான். ஆனால், நாம் யாரும் யோசித்து பார்ப்பதில்லை ஏனென்றால், நாம் வாழும் உலகம் மிக வேகமானது அதில் நமக்கு நிற்கக்கூட நேரமில்லை என்பதே மகத்தான உண்மை. நம் உடலுக்கு நன்மைதரும் உணவுகளை உண்ண வேண்டும் என்று நினைக்கின்றோம். ஆனால், ஒரு சில காரணங்களால் அது முடிவதில்லை. இனி நாம் உண்ணும் உணவு
சுவையானதா என்று பார்பதற்கு முன் பாதுகாப்பானதா என்று பார்த்து உண்ணலாம்.

ப்ளு டீயின் பயன்கள்  

1. உடலில் உள்ள அதிகபடியான நச்சை நீக்குகிறது.
2.ப்ளு டீயை தினமும் குடிப்பது வருவதன் மூலம் உண்ணும் உணவை எளிதில் செரிமானம் செய்கிறது.
3.ப்ளு டீயை தினமும் குடிப்பதன் மூலம் உடல் சுருக்கத்தை தடுத்து இளமையாக சருமத்தை வைக்க உதவுகிறது.
4.காய்ச்சல் வருவதை தடுத்து, நம் உடலுக்கு தேவையான சக்த்தியை அளிக்கிறது.
5.நமது உடல் மற்றும் உள்ளம் புத்துணர்ச்சியாக இருக்க ப்ளு டீ உதவுகிறது.
6.சர்க்கரை நோயாளிகள் ப்ளு டீயை தொடர்ந்து குடித்து வருவதன் மூலம், நீரிழிவை கட்டுபாட்டில் வைக்க இது உதவுகிறது.
7.இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன், இதயத்தில் ஏற்படும் நோய்களையும் குறைக்க ப்ளு டீ உதவுகிறது.
8.ப்ளு டீயை தொடர்ச்சியாக குடித்து வருவதனால் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து கூந்தலை வளர செய்கிறது.

ப்ளு டீ

சங்கு பூ        =  4
தண்ணீர்       = 11/2 டம்ளர்
எலுமிச்சை  = பாதி
தேன்            = தேவையான அளவு

செய்முறை

முதலில் வாணலியை அடுப்பில் வைத்து அதில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விட வேண்டும். பிறகு எடுத்து வைத்துள்ள 4 சங்கு பூக்களை அதில் போட்டு சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். பிறகு அதனை வடிகட்டி ஒரு கப்பில் ஊற்றி 2 சொட்டு எலுமிச்சை சாற்றை கலக்க வேண்டும். அதனுடன் தேவையான தேனை கலந்து பருகலாம். புத்துணர்ச்சியை தரும் ப்ளு டீ தயார்.

Editor's Choice

உலகிலேயே அதிக எடையுள்ள பழங்களை தரவல்லது பலாமரம். ஒரு கிலோவிலிருந்து நூறு கிலோவிற்கு மேலான எடையுள்ள பழங்களை கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி பகுதியில் விளைகின்றது. நட்ட 3 ஆண்டுகள் முதல் 300 ஆண்டுகளுக்கு மேல் பலன் தரும். ஒரு வளர்ந்த பெரிய மரம் 750 பழங்களுக்கு மேலாக காய்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. முதிர்ந்த ஒரு மரம் சுற்றளவினை பொறுத்து. அதிகபட்சமாக இரண்டு லட்சம் ரூபாய் வரை விலையாகிறது. பலா, பஞ்சு நிலையிலும்,  முற்றாத நிலையிலும், கறி உணவாகவும், முற்றிய பின் பழமாகவும்,  கொட்டை உணவுப் பண்டங்களை தயாரிக்கவும் உதவுகிறது. சுவையான பலாச்சுளையை சாப்பிட ஆரம்பித்தால் நம்மை அறியாமலே அரை கிலோ (10) சுளைவிற்கு மேல் சாப்பிடத் தூண்டும்.

ஏழைகளில் உணவாகிறது பிற பழங்களை விட பன்மடங்கு சத்துக்கள் செறிந்தது. நூற்றுக்கும் மேலான உணவுப் பண்டங்கள்  செய்திட ஆதாரமாக உள்ளது. பலா, அல்வா, சிப்ஸ், ஐஸ்கிரீம், வற்றல்கள், ஊறுகாய், பழவற்றல், வருவல்கள், பழச்சாறு, பலாமிட்டாய், பலா புட்டு, பலா பாயாசம், பலா ஒயின், பலா பொறியல், பலா கொழுக்கட்டை எனும் இனிப்பு பண்டம் என பல நூறாகிறது. பலாப் பழத்தினை
இனிப்புக்காகவும், நிறத்திற்காகவும், வாசனைக்காகவும், தகுந்த அளவில் சேர்த்து செயற்கை வாசனைப் பொருட்கள் செய்யவும் பயன்படுக்கிறது.

பலாவின் புரதம், கொழுப்பு, மாவுச் சத்துடன், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் எச், செறிந்ததாக உள்ளது. இது பல்வேறு உடல் உபாதைகளுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளது. பலா தொழில் முனைவோருக்கு பிரகாசமான வாய்ப்பினையும், தரக்கூடியது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு தரும், உணவுப் பாதுகாப்பு தரும். இயற்கை இடர்பாடுகளை தாங்கி வளரும், ஏழைகளின் பாதுகாவலன், பலா என்றால் மிகையாகாது.

தமிழ்நாட்டில் பலா , பாலூர் 1, பாலூர் 2, பர்லியார் 1, பேச்சிப்பாறை 1, சிங்கப்பூர் பலா , அவற்றுள் , பலூர் 1, பர்லியார் 1, பேச்சிப்பாறை1 மற்றும் சிங்கப்பூர் பலா ஆண்டிற்கு அதிக மகசூல் தருவதிலும் அதிக லாபம் தருவதிலும். சத்து செறிந்த பழங்களை தருவதிலும், விலை மதிப்புள்ள மற்றும் அறுவடை மிகுந்த சந்தை வாய்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எழைகளின் உணவு ஆதாரமாக இருப்பதிலும், பலா மரத்திற்கு ஈடு இணை ஏதும் இல்லை என்பது வெளிச்சம்.
 
பலாப்பழம் மார்ச் மாதம் முதல் ஜீன் மாதம் வரை அதிக அளவில் அறுவடை தரும் பருவம். பின் பருவ அறுவடை ஆகஸ்டு வரை நீடிக்கும். தற்போது ஆண்டுக்கு இரண்டு முறை காய்த்து பலன் தரக்கூடிய ரகங்கள் சாகுபடியில் உள்ளது. பண்ருட்டி பகுதியில் சில மரங்கள் பருவத்திற்கு முன்னதாகவே காய்க்கும் குணாதியங்களை கொண்டுள்ளது. சில மரங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை ஆகஸ்டு மாதங்களில் தான் முற்றிய காய்களைத் தரும் குணத்தை கொண்டு உள்ளது. இவ்வாறு ஒரு தோப்பில்
ஏதாவது ஒரு மரத்தில் பிஞ்சு, காய் என ஆண்டு முழுவதும்  பலாக்காய் கிடைப்பதை காண்கிறோம்

 பலாப்பழம் ஆண்டு முழுவதும் கிடைக்கச் செய்திடும் வகையில் ஆகஸ்டு செப்டம்பர் மாதங்களில் முற்றிய பழங்களைத் தரும். பின் பருவ வெளிவர வேண்டும் அதற்கான ஆராய்ச்சிகளை அரசு முன்னெடுக்க வேண்டும்.

Editor's Choice

புற்றுநோய், ஞாபகமறதி நோய் (அல்சைமர்)  மற்றும் நடுக்க வாதம் (பார்கின்சன்) நோய்கள் போன்ற பல நோய்களை முன்கூட்டியே கண்டறிவதில் டி.என்.ஏ மாற்றங்களை அளவிட விஞ்ஞானிகள் ஒரு புதிய நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். டி.என்.ஏ.வில் ஏற்படும் மாற்றம், அவற்றின் வெளிப்பாடு மற்றும் செயல்பாடுகளை பாதிக்கிறது. டி.என்.ஏ,  மரபணு குறியீட்டின் மூலமாகவும் அதன் கட்டமைப்பில் மாற்றங்கள் மூலமாகவும் உயிரணுக்களின் வாழ்வைக் கட்டுப்படுத்துகிறது.

டி.என்.ஏ கட்டமைப்புகளின் இத்தகைய மாற்றங்களை அளவிடுவதற்கும், அரிய நோய்களைக் கண்டறியவும் அதனுடன் தொடர்புடைய மூலக்கூறு வழிமுறைகளை புரிந்து கொள்வதற்கு மிக உயர்ந்த தெளிவுத்திறன் கொண்ட நுட்பங்கள் தேவைப்படுகிறது. விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள  மிகச்சிறிய நுண்துளை அடிப்படையிலான  தொழில்நுட்பம் மூலம், அத்தகைய மாற்றங்களை அல்லது  டி.என்.ஏ. க்களின் பண்புகளை, ஒற்றை-மூலக்கூறு தெளிவுத்திறனுடன் நேரடியாக அளவிட முடியும்.

இந்த தொழில்நுட்பத்தை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் தன்னாட்சி மையமான ராமன் ஆராய்ச்சி மைய பேராசிரியர் கவுதம் சோனி தலைமையிலான விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

Editor's Choice

பூக்கள் என்றாலே நம் மனதில் ஒருவித மகிழ்ச்சி தான். நறுமணத்தை தரக்கூடியதாகவும், அழகை மெருகூட்டி காட்ட கூடிய பொருளாகவும் உள்ளது. இவ்வளவு பயன்கள் இருந்தாலும் நம் உடலை பாதுகாக்க கூடியதாகவும் உள்ளது. நம் ஆயுளை அதிகரிக்க வைக்கும் பூக்களுள் மிக முக்கியமானதாக இந்த வாழைப்பூ உள்ளது.

இன்றைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே பாதிக்க கூடிய ஒரு பெரிய நோய் தான் சர்க்கரை நோய் இந்த நோய் உள்ளவர்கள் வாழைப்பூவைப் சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி, அத்துடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகாய், சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால், கணையத்தை வலு பெற செய்து உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்க செய்து,
சுரக்க செய்து சர்க்கரை நோயை கட்டுபடுத்துகிறது. சிலருக்கு மலம் கழிக்கும் போது இரத்தம் வெளியேறும். இந்த நோய் உள்ளவர்கள் வாரம் ஒரு முறை வாழைப்பூவை உணவில் சேர்ந்து வந்தால் இது விரைவில் குணமாகிவிடும்.

சிலருக்கு பிறந்ததில் இருந்து உடல்  சூடு இருக்கும். சிலருக்கும் கோடை காலத்தில் ஏற்படும் உடல் சூடு ஆகியவற்றை குறைக்க. வாழைப்பூவுடன் பாசிப்பருப்பை சேர்த்து கடைந்து வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வரலாம்.சீதபேதி மற்றும் வாய் நாற்றம் உள்ளவர்கள் வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு  வந்தாலே போதும். இவை அனைத்தும் படிப்படியாக குறைய தொடங்கும்.

பெண்களுக்கு இந்த வாழைப்பூ ஒரு வரபிரசாதமாகும். பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில், அதிக உதிரப்போக்கு உண்டாகும். அந்த காலங்களில் வாழைப்பூவில் உள்ள வெள்ளை பாகத்தை நசுக்கி சாறு பிழிந்து அதனுடன் மிளகு சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் இரத்த போக்கு கட்டுப்படும். மாதவிடாய் காலத்தில் வயிற்று வலியும் குறைய தொடங்கும்.
இதேபோல் பெண்களுக்கு ஏற்படும் மற்றொரு பிரச்னை வெள்ளைப்படுதல் ஆகும். இதனால் உடல் எடை குறையவும் அதிக வாய்ப்புள்ளது. எனவே இந்த பிரச்னை உள்ளவர்கள் வாழைப்பூவை ரசம் செய்து  சாப்பிட்டு வர வெள்ளைபடுதல்  குறைவதோடு வறட்டு இருமலும் குறைய தொடங்கும்.

கை, கால் வலி உள்ளவர்கள் வாழைப் பூவை இடித்து சாறு பிழிந்து அதனுடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து வலி உள்ள இடத்தில் தேய்த்து, சுடு நீரால் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நிவாரணம் கிடைக்கும். குழந்தையின்மையால் அவதிபடுவர்களுக்கு இது ஒரு வரமாகும். ஏனென்றால், மலட்டுத்தன்மை உள்ளவர்கள் அடிக்கடி வாழைப்பூவை உணவில்
சேர்த்து கொள்வதன் மூலம் குழந்தைப்பேறு கிடைக்கும். நம் குலம் தழைக்க, குலைத்தள்ளும் வாழையின் பூவை உண்டு வந்தாலே போதும்.

வாழைப்பூ கஞ்சி

தேவையான பொருட்கள்

வாழைப்பூ இதழ்       15
இஞ்சி                        ஒரு தேக்கரண்டி
சீரகம்                         ஒரு டீஸ்பூன்
அரிசி                         கால் கப்
பாசிப்பருப்பு              2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம்  6 (நறுக்கியது)
தக்காளி                    1 (நறுக்கியது)
கொத்தமல்லி           சிறிது
நல்லெண்ணெய்      ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு                          தேவைக்கு

செய்முறை
வாழைப் பூவை சுத்தம் செய்து நறுக்கி மோரில் போடவும் குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், இஞ்சி துருவல் சேர்த்து தாளித்து, அதனுடன் வெட்டி வைத்துள்ள வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

பின், வாழைப்பூவையும் சேர்த்து வதக்கி கொள்ளவும். நீரில் ஊற வைத்த அரிசியையும், பாசிபருப்பையும் சேர்த்து கிளறி, இதனுடன் சிறிது உப்பையும், தேவையான தண்ணீரையும் சேர்த்து இரண்டு விசில் வந்த பிறகு இறக்கி அதன் மீது கொத்தமல்லித் தழையை தூவி பரிமாறலாம்.

ஆரோக்கியமான வாழைப்பூ கஞ்சி தயார். வாரத்திற்கு ஒரு முறை இந்த கஞ்சியை குடித்து வந்தாலே போதும், எப்போதும் ஆரோக்கியத்துடன் இருக்கலாம்.

Editor's Choice

இந்த பூமியில் நிறைந்துள்ள பலவித மூலிகையின் பயன்களை நம் முன்னோர்கள் தெளிவாக விளக்கி சென்றுள்ளனர். மூலிகை என்றாலே சித்தர்கள் தான் என்கிற அளவிற்கு அதிக நெருக்கம் உள்ளது. நமக்கு தெரிந்த மூலிகையின் பெயர்கள் மிக சில தான். ஆனால், நமக்கு தெரிந்த மூலிகையின் பெயர்கள் ஏராளம். ஒவ்வொரு, மூலிகைக்கும் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. அவற்றை நாம் பயன்படுத்துவதன் மூலம் உடலில் ஏற்பட கூடிய பலவித நோய்களுக்கும் தீர்வு கிடைக்கும். இன்றும்
எண்ணற்ற விஞ்ஞானிகள் இந்த பூமியில் உள்ள மூலிகைகளை அதிகம் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். பலவித மருந்துகள்  இந்த மூலிகைகளில் இருந்து தான் தாயரிக்கப்பட்டுள்ளது.
 
பெருங்காஞ்சொறி =  இதன் பெயர் சற்றே வித்தியாசம்  கொண்டதுதான். அதே போல இவற்றின் பயன்களும் வித்தியாசமான முறையில் நமக்கு உதவுகிறது. முடி சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வை தர இந்த மூலிகை உதவுகிறது. குறிப்பாக, பொடுகு தொல்லையை நிறுத்தி முடி உதிராமல் பார்த்து கொள்கிறது.

அஸ்வகந்தா = மூலிகைகளின் அரசன்  என்றே இதனை சித்தர்கள் கூறுகின்றனர். அவ்வளவு மகத்துவங்களை இது தனக்குள்ளே மறைத்து வைத்துள்ளது. கொஸ்ட்ரால், சீரற்ற ரத்த ஓட்டம், ஆண்மை குறைவு, சர்க்கரை நோய் போன்ற பல பிரச்சனைகளுக்கு இது தீர்வை தருகிறது.

கண்டங்கத்திரி = இந்த மூலிகையின் பூ, காய், வேர் என எல்லாமே மூலிகை தன்மை வாய்ந்தவை. சிறுநீர் பிரச்சனை, நுரையீரல் கோளாறு, மலச்சிக்கல் போன்றவற்றிற்கு உதவும். இந்த மூலிகை அதிக ஆற்றலை கொண்டது என்றே சித்தர்களும் குறிப்பிடுகின்றனர்.

அமுக்ரா கிழங்கு = நரம்பு தளர்ச்சிக்கு அற்புத மூலிகையாக இது விளங்குகிறது. அத்துடன் அதிக உடல் உழைப்பால் சோர்வு இது குணப்படுத்தி விடும். இதனை பாலில் கலந்து குடித்தால் பலன் அதிகம் கிடைக்கும்.
 
அதிமதுரம் = அதிமதுரம் சிறந்த மூலிகை தன்மை கொண்டது. இவை தொண்டையில் ஏற்பட கூடிய பிரச்சனைகளுக்கு முற்றுபுள்ளி வைத்துவிடும். அத்துடன் உடலின் ஏற்பட கூடிய வீக்கங்களையும் குணப்படுத்த கூடும். இதன் வேரை டீ போட்டு குடித்தால் பலன் அதிகம்.

ஜின்செங் = ஏராளமான மகத்துவம் இந்த மூலிகையில் ஒளிந்துள்ளது. மன அழுத்தம், ஆற்றல் குறைவு, சோர்வு, எதிர்ப்பு சக்தி குறைபாடு, விந்தணு பிரச்சனை ஆசியவற்றிற்கு இந்த மூலிகை சிறந்த மருந்தாக விளங்குகிறது.

பிராண்டை = ரத்த ஒட்ட பிரச்சனை, சர்க்கரை நோய், செரிமான கோளாறு, நரம்பு தளர்ச்சி போன்ற பல நோய்களுக்கு தீர்வை இந்த அருமருந்து தருகிறது. இதனை துவையலாகவோ அல்லது பொடி போன்றோ செய்து சாப்பிட்டால் உடலின் நோய்கள் வராமல் பார்த்து கொள்ளலாம்.

பூனைக்காலி = ஆண்களின் அனைத்துவித பிரச்சனைகளுக்கு தீர்வை தரும் குணம் கொண்டது இந்த பூனைக்காலி விதை. இன்று பல ஆண்கள் ஆண்மை குறைவால் அவதிப்படுகின்றனர். இவர்களின் குறைபாட்டை சரி செய்ய இந்த மூலிகை உதவுகிறதாம்.

ஆடாதோடை = நமது உடலின் தசைகளில் ஏற்பட கூடிய வலிகளை காணாமல் போய்விட செய்யும் மகத்துவம் இந்த மூலிகையில் உள்ளது. அத்துடன் சுவாச பிரச்சனைக்கும் இது நல்ல தீர்வை தரும். மேலும், ஆஸ்துமா, இரும்பல், சளி போன்றவற்றை விரட்டி அடிக்க கூடியது.

Editor's Choice

சந்தையில் போலி இஞ்சி வருவதாக கூறப்படுகிறது. போலி இஞ்சி உங்கள் ஆரோக்கியத்திற்கு பயனளிப்பதற்கு பதிலாக உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே எச்சரிக்கையுடன், இருக்க வேண்டியது அவசியம். 

இந்திய சமையலறைகளில் இஞ்சி பல விஷயங்களில் பயன்படுத்தப்படுகிறது. உணவில் இஞ்சி பயன்படுத்தப்படுகிறது, அதே போல் டீ தயாரிக்கும் போது இஞ்சி அதில் சேர்க்கப்படுகிறது. இஞ்சி டீ அனைவருக்கும் பிடிக்கும்.  இஞ்சியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பல வகையான நோய்களைத் தவிர்க்கலாம். இந்த நாட்களில் போலி இஞ்சியும் சந்தையில் கிடைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா, இது உங்களுக்கு பயனளிப்பதற்கு பதிலாக உங்கள் ஆரோக்கியத்திற்கு, தீங்கு விளைவிக்கும். அத்தகைய சூழ்நிலையில், இஞ்சி உண்மையானதா அல்லது போலியானதா என்பதை வாங்கும் போது பார்த்து வாங்குவது முக்கியம். அதை எப்படி தெரிந்து கொள்வது என்பதைப் பார்க்கலாம்

மலை வேருக்கும் இஞ்சிக்கும் இடையில் வேறுபாடு - ஒரு வகை மலை வேர் இஞ்சி பார்ப்பதற்கு நிஜ இஞ்சியை போலவே இருக்கும். ஆனால், உண்மையான இஞ்சியில் மணம் அதிக அளவில் இருக்கும்.  அதேசமயம் போலி இஞ்சியில் வாசனை இல்லை. அதனை நீங்கள் முகர்ந்து பார்த்து அடையாளம் காணலாம்

தோலின் மூலம் அடையாளம் காணவும் - இஞ்சி வாங்குவதற்கு முன், அதன் தோலின்  மீது கவனம் செலுத்துங்கள். உண்மையான இஞ்சியில் நகங்களைத் வைத்து அழுத்தி பார்க்கலாம். உண்மையான இஞ்சி என்றால், நகங்கள் எளிதாக உள்ளே செல்லும். மேலும் அதன் வாசனை உங்கள் கைகளில் நீண்ட நேரம் இருக்கும். ஆனால் இஞ்சியின் தோல் மிகவும் கடினமாக இருந்தால், அதை  மறந்தும் வாங்காதீர்கள்.

பார்ப்பதற்கு சுத்தமாக இருக்கும் இஞ்சியை வாங்காதீர்கள்  - இஞ்சி பார்ப்பதற்கு சுத்தமாக இருக்க கடைக்காரர்கள் இஞ்சியை அமிலத்தைப் பயன்படுத்தி சுத்தம் செய்கிறார்கள். அதனால், அது போன்ற இஞ்சியை வாங்க வேண்டாம்.

பக்கம் 31 / 49