Editor's Choice

வளர்ந்துவரும் நவீன உலகில் இதய நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 30 வயதை தாண்டியவர்களுக்கு கூட தற்போது மாரடைப்பு ஏற்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் இறப்புகளுக்கு இதய நோய்கள் முக்கிய காரணங்களில் ஒன்றாகும். சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற நாட்பட்ட நோய்களால் பாதிக்கபடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இவை இதய நோய்களுக்கு காரணமாக இருக்கின்றன.

மாரடைப்புக்கும் உங்கள் இரத்த வகைக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா? என்று நீங்கள் யோசித்ததுண்டா? சமீபத்திய ஆய்வு இரண்டுக்கும் சம்பந்தம் உள்ளது என்று கூறுகிறது.
 
எந்தெந்த இரத்தக் வகையை சேர்ந்தவர்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகம் உள்ளது என்பதை காணலாம்.
 
சமீபத்திய ஆய்வின்படி, ஓ அல்லாத இரத்த வகை கொண்டவர்கள் உண்மையில் அதிக மாரடைப்பு அபாயத்தில் உள்ளனர். இரத்த வகைகள் மாரடைப்பு அபாயத்தை எவ்வாறு அதிகரிக்கும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
 
ஆய்வின் கண்டுபிடிப்புகள் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (AHA) ஆர்ட்டெரியோஸ்கிளிரோசிஸ், த்ரோம்போசிஸ் மற்றும் வாஸ்குலர் பயாலஜி ஆகியவற்றில் வெளியிடப்பட்டன. இந்த ஆய்வில் 400,000 க்கும் அதிகமானவர்களை பகுப்பாய்வு செய்ததோடு, இரத்த வகை A அல்லது B உடையவர்களுக்கு இரத்த வகை O ஐ விட 8 சதவிகிதம் மாரடைப்பு ஆபத்து இருப்பதைக் கண்டறிந்துள்ளது.
 
இதேபோன்ற மற்றோரு ஆய்வு 2017ஆம் ஆண்டில் ஐரோப்பிய சொசைட்டி ஆஃப் கார்டியாலஜியால் செய்யப்பட்டது. இந்த ஆய்வில், ஓ அல்லாத இரத்த வகை உள்ளவர்கள் கரோனரி மற்றும் இருதய நிகழ்வுகள், குறிப்பாக மாரடைப்பு அபாயத்தில் 9 சதவீதம் அதிகம் பாதிப்படைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
 
ஆய்வாளர்கள் இரத்த வகை A மற்றும் B-ஐ இரத்த வகை O உடன் ஒப்பிட்டனர். B இரத்த வகை உள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பது கண்டறியப்பட்டது. ஆய்வின் படி, ஓ இரத்த வகை நபர்களுடன் ஒப்பிடும்போது பி இரத்த வகை கொண்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆபத்து 15 சதவீதம் அதிகரித்துள்ளது.
 
இரத்த வகை O உடன் ஒப்பிடும்போது  இரத்த வகை A கொண்டவர்களுக்கு இதய செயலிழப்பு ஆபத்து 11 சதவீதம் அதிகரித்துள்ளது. மாரடைப்பு மற்றும் இதய செயலிழப்பு இரண்டும் இதய நோய்களின் வடிவங்கள், ஆனால் இதய செயலிழப்பு படிப்படியாக உருவாகும்போது மாரடைப்பு திடீரென நிகழ்கிறது. இதய செயலிழப்பு காலப்போக்கில் மாரடைப்பாக ஏற்படலாம்.
 
ஐரோப்பிய இருதயவியல் சங்கத்தின் கூற்றுப்படி, ஓ-வகை அல்லாத இரத்தக் குழுக்களுக்கு இடையில் மாரடைப்பு அல்லது மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாக இருக்கலாம். ஏனெனில் அவை இரத்தக் கட்டிகளை உருவாக்க அதிக வாய்ப்புள்ளது. ஓ-அல்லாத இரத்தக் குழு மக்கள் வில்பிரான்ட் அல்லாத காரணி, இரத்த உறைவு புரதத்தின் அதிக செறிவு த்ரோம்போடிக் நிகழ்வுகளுடன் தொடர்புடையது என்று 2017 ஆய்வில் விளக்கப்பட்டது.
 
இரத்த வகை A மற்றும் B வகை உள்ளவர்கள் இரத்த உறைவு உருவாகும் த்ரோம்போசிஸை அனுபவிக்க 44 சதவீதம் அதிகம். மாரடைப்பில் இரத்தக் கட்டிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை கரோனரி தமனியைத் தடுக்கலாம் மற்றும் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களின் இதய தசையை உருவாக்கலாம். இதன் விளைவாக மாரடைப்பு ஏற்படுகிறது.
Editor's Choice

உலகம் முழுவதும், 190க்கும் மேற்பட்ட நாடுகளில், கொரோனா வைரசால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 12 கோடியை நெருங்குகிறது. இதற்கிடையே, வைரசுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகள், உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி, மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. சில ஐரோப்பிய நாடுகளில், பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு மற்றும் ஆஸ்ட்ரஜெனகா நிறுவனம் இணைந்து தயாரித்த தடுப்பூசியை, மக்களுக்கு போடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசி மருந்தை செலுத்திக் கொண்ட சிலருக்கு, ரத்தம் உறைதல் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டென்மார்க்கில், இந்த பிரச்னையை சுட்டிக்காட்டி, அடுத்த இரண்டு வாரங்களுக்கு, தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து, டென்மார்க் சுகாதாரத் துறை அமைச்சர் மாக்னஸ் ஹியுனிக் கூறுகையில், ''முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. முழு ஆய்வுக்குப் பின், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். இதேபோல், ஐஸ்லாந்து, ஸ்பெயின் மற்றும் நார்வேயிலும் தடுப்பூசி போடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Editor's Choice

வெளிக்காது. நடுக்காது. உட்காது என்று மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. காது வலிக்கு காரணங்கள் பல உண்டு. சைனஸ், நோய்த்தொற்று, காது குழாய், டான்சில் சதை வளர்ச்சி, கழுத்தெழும்பு தேய்மானம், வாய்ப்புண்கள், நாக்கில் உண்டாகும் புண், பற்சொத்தை கடைவாய்ப்பல் வலி போன்ற காரணங்களால் காதுவலி உண்டாகக்கூடும். அதோடு காதில் அழற்சி, புண், சீழ், இரைச்சல் போன்ற கோளாறுகளையும் உண்டாக்குகின்றன. 

பூண்டு இருந்தாலே போதும் பெரும்பாலான வைத்தியங்களை செய்துவிடலாம் என்று சொல்வார்கள் பெரியவர்கள். வெள்ளை பூண்டை நாட்டு பூண்டை ( ரோஸ் நிறத்தில் இருக்கும்) எடுத்து நசுக்கி சாறை எடுக்கவும்.

இரண்டு சொட்டு சாறை எடுத்து எந்த காதில் வலி இருக்கிறதோ அந்த காதில் உள்ளே போகும் படி சாறு விடவேண்டும். அரைமணி நேரம் அசைக்காமல் இருந்தால் வலி படிப்படியாக குறையும்.

காதில் கும்மென்று அடைப்பு, அல்லது இரைச்சல் சத்தம் போன்று இருந்தால் பூண்டு சாறை காட்டிலும் இவை பலன் கொடுக்கும். வெள்ளை பூண்டை பெரிய பல்லாக இருக்கும் படி எடுத்து, வலி இருக்கு காதுபகுதியில் பஞ்சு போன்று அடைத்து வைக்கவும். உள்ளே செல்லாமல் இருக்கும் படி கவனமாக வைக்கவேண்டும். 30 நிமிடங்கள் கழித்து அதை வெளியே எடுத்தால் சத்தம் குறைந்திருக்கும். அடைப்பு நீங்கியிருக்கும்.

கடுகு எண்ணெயில் பூண்டு, கிராம்பு இரண்டையும் நசுக்கி சேர்த்து சிறிய வாணலியில் கலந்து சூடேற்றவும். எண்ணெயில் கிராம்பும் பூண்டும் கருப்பு நிறமாகும் வரை அதை சூடேற்றவும். பிறகு அதை இறக்கி குளிரவைத்து நன்றாக ஆறியதும் சில துளிகள் எடுத்து காதை சுற்றி நன்றாக தடவி கொள்ளவும். அதிலிருந்து இரண்டு துளிகள் எடுத்து காதுக்குள் விடவேண்டும்.

சைனஸ் பிரச்சனையால் காதுக்குள் வலி இருப்பவர்கள் நீண்ட நாள் வலி உபாதை அனுபவிப்பவதுண்டு. இவர்கள் தொடர்ந்து இந்த எண்ணெயை தடவினால் காதுவலிக்கு நல்லா நிவாரணம் கிடைக்கும்.

திருநீற்று பச்சிலை என்னும் மூலிகை ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் பயன்படுத்தியவர்கள் நம் முன்னோர்கள். திருநீற்றுபச்சிலையுடன் கல் உப்பு சேர்த்து செய்யும் வைத்தியம் காதுவலியோடு காது உள்ளே இருக்கும் சீழையும் வெளியேற்றகூடியது.

திருநீற்று பச்சிலையை நீர் விடாமல் அரைத்து அதன் சாறை எடுத்து இரண்டு அல்லது மூன்று துளிகள் விட்டால் காதுவலி நிச்சயமாக குறையும். சிறு பிள்ளைகளுக்கு வைக்கும் போது கல் உப்பு வெறும் வாணலியில் சில நிமிடங்கள் வறுத்து அதனுடன் திருநீற்றுப்பச்சிலை சேர்த்து விழுதாக மைய அரைக்கவும்.

இந்த விழுதை காதை சுற்றிலும் இளஞ்சூடாக இருக்கும் போது போட வேண்டும். இந்த பற்று போடுவதால் உப்பு காதில் உள்ளே இருக்கும் சீழ் வெளியேற்றுகிறது. காதுக்குள் இருக்கும் வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது. திருநீற்று பச்சிலை சாறை காதினுள் விடலாம். ஆனால் உப்பு நீரை காதில் விடக்கூடாது.

Editor's Choice

டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸானது கொசுக்கள் மூலமாக மனிதனுக்கு பரவுகிறது. ஏடிஸ் எஜிப்டி என்ற கொசுக்கள் கடிப்பதால் டெங்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்த காய்ச்சல் உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைகின்றனர். இத்தகைய டெங்கு காய்ச்சல் பாலியல் உறவாலும் பரவும் என்பதுதான் தற்போது தெரிய வந்திருக்கிறது.

ஸ்பெயினில் உள்ள மேட்ரிட் பகுதியைச் சேர்ந்த 41 வயது பெண் ஒருவர், கடந்த செப்டம்பரில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு டெங்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த தனது ஆண் துணையுடன் அவர் பாலியல் ரீதியிலான உறவில் ஈடுபட்டது தெரிய வந்தது.

டெங்கு எப்படி பாலியல் உறவால் பரவும் என்பதை நம்பாத ஆய்வாளர்கள், அந்த பெண்ணின் ஆண் துணையையும் பரிசோதித்தார்கள். அவர் கியூபா மற்றும் டொமினிக் குடியரசு உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று திரும்பி இருந்தார். மருத்துவர்கள் அவரது விந்தணுவை பரிசோதனை செய்தபோது, அதில் அவருக்கு டெங்கு இருந்தது மட்டுமல்லாமல் கியூபாவில் பரவும் அதே வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் பிறகே உடலுறவு மூலமும் டெங்கு பரவும் என்பதை அறிவித்துள்ளனர்.

Editor's Choice

பொதுவாக ஒருவரின் கையெழுத்து நன்றாக இருந்தால் தலையெழுத்து நன்றாக இருக்காது என்பார்கள்.

ஒரு நகைச்சுவைக்காக சொல்லுவது என்றால் டாக்டரின் கையெழுத்து நன்றாக இருக்காது ஆனால் அவுங்க நல்லா சிறப்பாக இருப்பார்கள்.

ஒருவர் எழுதும் கையெழுத்தை வைத்தும், கூட அவரது வாழ்க்கை முறையை, எதிர் காலத்தை துல்லியமாக அறிய முடியும் என்பதை மிகச் சிலரே தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஒருவர் தனது கையெழுத்தின் மூலம் தனது செல்வாக்கான வாழ்க்கையை இழந்திருக்கிறார்.

அதுபோல ஒருவர் தனது கையெழுத்தின் மூலம் செல்வந்தர் ஆகியிருக்கிறார்.

இந்த கலைக்கு ஆங்கிலத்தில் ‘கிராபாலஜி’ (Graphology) என்று பெயர்.

நாம் நமது கையினால் எழுதுவதால் அதன் பெயர் கையெழுத்து என்றாகிறது. ஆனால் அந்த கையெழுத்து, ஒவ்வொருவரின் மூளை இடும் கட்டளைப்படிதான் அமைகிறது என்கிறது விஞ்ஞானம். இந்தக் கையெழுத்து இப்படித்தான் அமைய வேண்டும் என்பதை தீர்மானிப்பது ஒவ்வொருவரின் மூளைதான். அதற்கு ஏற்ற வகையில்தான் கை செயல்படுகிறது.

ஒருவர் தங்களது கையெழுத்தை எந்த மொழியில் எழுதினாலும், அந்த எழுத்துகளின் வடிவங்களை வைத்து, அந்த நபரின் இயல்பான குணாதிசயங்களையும், அவரது எதிர்காலத்தையும் வெகு துல்லியமாக கண்டறிய முடியும்.

மேலே குறிப்பிட்டுள்ள நிலைகளுக்குள் தான் ஒருவரது கையெழுத்து இருக்கும். இவ்வாறு அவர்கள் எழுதும் நிலையை வைத்தே ஒருவரின் தலையெழுத்தை கூறிவிடுவதே இந்தக் கலையின் சிறப்பம்சம். ஒருவரது கையெழுத்து சரியில்லை என்றால், அதை மாற்றி அமைத்து, சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளவும் இங்கு வழி இருக்கிறது.

பொதுவாக அரிசாண்டில் (Horizantal) என்ற நிலையில் தங்களது கையெழுத்தை தெளிவற்ற நிலையில் வரைந்தால், அவர்கள் வெற்றிகரமான வாழ்க்கையை மேற்கொள்வார்கள். இதே பலன் 15 டிகிரி என்ற நிலையில் எழுதுபவர்களுக்கும் உண்டு.

இந்த பலன், ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும். கையெழுத்தை 30 டிகிரி கோணத்தில் எழுதுபவர்கள் பெண் பாலராக இருப்பின், அவர்கள் புகழ்பெற்ற வாழ்க்கையை அடைவார்கள்.

ஆனால் ஆண்களுக்கு அது துன்பங்களைத்தான் கொடுக்கும். அதே நேரத்தில் 45 டிகிரி கோணத்தில் பெயர் தெரியும்படி கையெழுத்திடும் நபர்களுக்கு, அவர்களின் வாழ்வு சிறப்பானதாக அமையும்.

கையெழுத்திடும் ஒருசிலர், அதன் கீழே நீளமான அடிக்கோடு வரைவார்கள். அது அவ்வளவு நல்லதல்ல. இதை அறவே தவிர்ப்பதுதான் நல்லது. வேண்டுமானால் 1 செ.மீட்டருக்கும் குறைவான அடிக்கோட்டை வரையலாம்.

கையெழுத்திற்கும் ஒருவித சக்தி உண்டு. பலன் உண்டு. அதனை உணர்ந்து அதற்கேற்றாற்போல் நமது கையெழுத்தை மாற்றி அமைத்துக்கொண்டால், நமது தலையெழுத்தும் நல்ல விதமாக அமையும்.

பொதுவாக பல மதத்தினர் தங்கள் கடவுள் பெயரை ஆயிரம் முறை என எழுதி வேண்டுவார்கள். இதுவும் அவர்களின் கையெழுத்தின் சிறப்பைக்கொண்டே அவர்களின் வேண்டுதலில் நன்மை/தீமை அமைகின்றது என கையெழுத்து வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

கண்டிப்பாக கையெழுத்து ஒருவரின் தலையெழுத்தை மாற்றும் என 100% சொல்லுகிறார்கள்  கையெழுத்து ஆராய்ச்சியாளர்கள்.

 

Editor's Choice

கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து கண்டறிய இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது உலக நாடுகள் அனைத்திலும் தன் பிடியை இறுக்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலுக்கு முடிவுகட்ட தடுப்பூசி ஒன்றே  நிலையான தீர்வு என மருத்துவ விஞ்ஞானிகள் உணர்ந்ததும், உலகம் முழுவதும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன. பல நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் எவ்வாறு பரவ தொடங்கியது என்பதை கண்டறிய உலக சுகாதார அமைப்பை சேர்ந்த நிபுணர்கள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு குறித்து லண்டனில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பை சேர்ந்த நிபுணரான பீட்டர் டாஸ்ஸாக், வூஹானில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட ஆய்வு குறித்த அறிக்கை அடுத்தவாரம் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.

கொரோனா தொற்று ஏற்பட்ட விலங்கில் இருந்து மனிதர்களுக்கு வைரஸ் தொற்று பரவியது குறித்து தொடர்ச்சியான ஆய்வுகளின் மூலம் கண்டறிய முடியும் என தெரிவித்த அவர், கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து முழுமையாக அறிய ஒரு சில ஆண்டுகள் ஆகலாம் என தெரிவித்தார். வூஹானில் தொடக்கத்தில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட பலருக்கு வனவிலங்கு வர்த்தகத்துடன் தொடர்பு உள்ளதாகவும் பீட்டர் டாஸ்ஸாக் தெரிவித்தார்.

பக்கம் 27 / 49