Editor's Choice

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது போல் தினம் ஒரு நெல்லிக்காயினை சாப்பிடலாம். காரணம் அதில் பலதரப்பட்ட மருத்துவ பலன்கள் உள்ளது. அதிலும் தேனில் ஊறவைத்துள்ள நெல்லிக்கனியினை சாப்பிடும் போது கல்லீரல் சுத்தமாகும். கல்லீரலில் உள்ள டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி, கல்லீரல் சிறப்பாக செயல்பட்டு, ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். மேலும் இது மஞ்சள் காமாலைக்கு சிறந்த சிகிச்சையளிக்கும்.

ஆஸ்துமா மற்றும் றும் இதர சுவாச பிரச்னையால் கஷ்டப்படுபவர்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை உட்கொண்டு வர, அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், டாக்ஸின்கள் மற்றும் நுரையீரலை ப்ரி - ராடிக்கல்களிடமிருந்து பாதுகாக்கும். இதனால் சுவாசம் சம்பந்தமான பிரச்னைகள் வராமல் தடுக்கும். சளி, இருமல் மற்றும் தொண்டைக்கட்டு தேனில் ஊற வைத்த நெல்லிக்காயுடன் சிறிது இஞ்சி சாற்றினை சேர்த்து உட்கொண்டு வந்தால், மருத்துவ குணங்களால் கிருமிகள் அழிக்கப்பட்டு, விடுதலை கிடைக்கும்.

தினமும் ஒன்று சாப்பிட்டு வர, உண்ணும் உணவுகள் எளிதில் செரிக்கப்படுவதோடு, மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் பிரச்னைகள் நீங்கும். நச்சுக்கள் வெளியேறும் உடலில் தினமும் சேரும் நச்சுக்களை வெளியேற்ற அன்றாடம் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட வேண்டும். இதன்மூலம் உடலில் தீங்கு விளைவிக்கும் ப்ரீ-ராடிக்கல்கள் முழுமையாக வெளியேற்றப்படும். மலட்டுத்தன்மைக்கு சிகிச்சையளிக்கும் தினமும் ஆண்கள் மற்றும் பெண்கள் இதனை உட்கொண்டு வந்தால், கருவுறுதலில் ஏற்படும் பிரச்னையைத் தடுக்கலாம். அதுமட்டுமின்றி, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி மற்றும் மாதவிடாய் சுழற்சியும் சீராக்கப்படும்.

அல்சர் பிரச்னையால் கஷ்டப்படுபவர்கள், தினமும் வெறும் வயிற்றில் உட்கொண்டுவர வேண்டும். அதன் பிறகு ஒரு மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடக்கூடாது. இப்படி தினமும் தொடர்ந்து செய்துவர, விரைவில் அல்சர் குணமாகும். ரத்தணுக்கள் அதிகரிக்கும் தினமும் சாப்பிடுவதால், உடலில் ரத்தணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை வராமல் இருப்பதோடு, உடலின் அனைத்து உறுப்புக்களும் ஆரோக்கியமாக செயல்படும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் உட்கொண்டு வர, அதில் உள்ள வைட்டமின் சி கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்.

உடலுக்கு ஆற்றலை வழங்கி, உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ளும். மேலும் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் முதுமைக் கோடுகளையும் நீக்கும்.

Editor's Choice
1. இருமல் சளி குணமாக::

சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.

2. தலை சுற்றல் குணமாக:

சுக்கு, மிளகு, திப்பிலி, விலாமிச்சை வேர், சீரகம் ஆகியவைகளை 5 கிராம் வீதம் பவுடராக்கி தினசரி காலை, மாலை அரை கரண்டி சாப்பிட தலை சுற்றல் குணமாகும்.

3. இருமல் குணமாக:

ஜலதோஷம், காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.

4. வறட்டு இருமல் குணமாக:

கருவேலமரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும். வெள்ளை முதலான நோய்களும் குணமாகும்.

5. ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக:

முசுமுசுக்கை இலையை அரித்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாகும்.

6. சளிகட்டு நீங்க:

தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை, கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட இறைப்பு, சளிகட்டு நீங்கும்.

7. தலைபாரம் குறைய:

நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.

8. மார்புச்சளி நீங்க:

ஏலப்பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட மார்புச்சளி குணமாகும்.

9. மூக்கடைப்பு நீங்க:

ரோஜா மலரை முகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கி விடும்

10. ஜலதோஷம் குணமாக:

முருங்கை பிஞ்சுகளை நசுக்கி சாறெடுத்து அதில் தேன் கலந்து 2 வேளை வீதம் 3 நாட்கள் சாப்பிட குணமாகும்.

11. வாந்தி நிற்க:

துளசி சாறு, கல்கண்டு சேர்த்து காய்ச்சலின் போது கொடுக்க வாந்தி நிற்கும்.

12. குமட்டல்:

கசப்பான மருந்து உட்கொண்டவுடன் வெற்றிலை காம்பை வாயிலிட்டு சுவைத்தால் குமட்டல் இருக்காது.

13. பித்தம் நீங்க:

மாதுளம்பழம் சாப்பிட்டு வர அறிவு விருத்தி, ஞாபக சக்தி எலும்பு வளர்ச்சி, பித்த சம்பந்தமான வியாதி நீங்கும்.

14. நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க:

முசுமுசுக்கை இலையை பொடியாக நறுக்கி மாதம் 2 தடவை சாப்பிட வேண்டும்.

15. அம்மை நோயைத் தடுக்க:

10 கிராம் வெந்தயம், மிளகு 5 தட்டி பொடி செய்து தண்ணீர் விட்டு காய்ச்சி காலை, மாலை 3 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் அம்மை நோய் பரவாது.

16. பித்தவெடிப்பு மறைய:

காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள். தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

17. தொண்டை வலிக்கு:

பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்.

18. இருமல் தொல்லைக்கு:

தூங்க போகும் முன் 1 கப் சூடான தண்ணீ­ரில் 1 ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும். இது இருமல் தொல்லையையும் நீக்கும்.

19. கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்:

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து காட்டுங்கள். ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும். அதற்கு முன் காயத்தை நன்றாக வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும்.

20. இருமல் சளிக்கு:

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்­ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

Editor's Choice

முகப் பொலிவுக்கான சில எளிய வழிமுறைகள்

எலுமிச்சை

எலுமிச்சையை பாதியாக வெட்டி, அதனை சாறு எடுத்து, அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து, பின் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமையானது நீங்கிவிடும்.

எலுமிச்சை + தயிர்

எலுமிச்சை சாற்றில் தயிர் சிறிது சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை முகத்திற்கு மாஸ்க் போட்டால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

எலுமிச்சை + முட்டை

எலுமிச்சை சாற்றுடன், ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலந்து முகத்தில் தடவி உலர வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி 3 நாட்களுக்கு ஒருமுறை மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமம் வெள்ளையாவதைக் காணலாம்.

எலுமிச்சை + தேன்

ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

எலுமிச்சை + பால்

பாலில் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை விட்டு நன்கு கலந்து, அந்த கலவையை முகத்தில் மற்றும் கருமையாக உள்ள இடங்களில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், சரும வெள்ளையாக மாறும்.

எலுமிச்சை + மில்க் க்ரீம்

வெள்ளையான சருமம் வேண்டுமானால், இரவில் படுக்கும் போது எலுமிச்சை சாற்றுடன் மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் முகத்தில் தடவ வேண்டும். இப்படி செய்து வர விரைவில் சருமத்தின் நிறம் அதிகரிப்பதைக் காணலாம்.

எலுமிச்சை + ஆலிவ்

ஆலிவ் ஆயிலுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சருமத்தில் உள்ள தேவையற்ற தழும்புகளும் மறைந்துவிடும்.

பால் பவுடர் மற்றும் எலுமிச்சை சாறு

பால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரிப்பதை உங்களால் உணர முடியும்.

ஓட்ஸ் மற்றும் புளித்த தயிர்

ஓட்ஸை முதல் நாள் இரவிலேயே ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, புளித்த தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலனை விரைவில் காணலாம்.

உருளைக்கிழங்கு

எலுமிச்சையைப் போலவே, உருளைக்கிழங்கிலும் ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது. ஆகவே உருளைக்கிழங்கை பேஸ்ட் செய்து, அதனை தினமும் முகத்தில் தடவி நன்கு ஊற வைத்து கழுவினால், முகம் பொலிவோடு மின்னும்.

துளசி

துளசியில் உள்ள ஆன்டி – ஆக்ஸிடன்ட் மற்றம் இதர ஊட்டச்சத்துக்கள், சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சருமத்தை பொலிவோடும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும். முக்கியமாக துளசி முகப்பரு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும். அதற்கு துளசியை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

குங்குமப்பூ

குங்குமப்பூவை பாலுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவ, குங்குமப்பூவில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால், சருமத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் மேம்பட்டு காணப்படும். அதிலும் இந்த செயலை தினமும் ஒருவர் பின்பற்றினால், சீக்கிரம் வெள்ளையாவதைக் காணலாம்.

மஞ்சள் மற்றும் தக்காளி

மஞ்சள் மற்றும் தக்காளி சாற்றினை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மாஸ்க் போட்டு வந்தால், அது சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, முகத்தில் தடவி மசாஜ் செய்து நன்கு ஊற வைத்தால், முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முகம் பிரகாசமாக இருக்கும்.

கடலை மாவு

கடலை மாவில் மோர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி அன்றாடம் செய்து வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

புதினா

புதினாவில் புத்துணர்ச்சியூட்டும் தன்மை அதிகம் உள்ளது. மேலும் சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றும் சக்தி உள்ளது. அதற்கு புதினா இலையை அரைத்து சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

வாழைப்பழ ஃபேஸ் பேக்

வாழைப்பழத்திற்கும் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் தன்மை உள்ளது. அதற்கு நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அதில் தேன் மற்றும் 1 டீஸ்பூன் புளித்த தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மாஸ்க் போட வேண்டும்.

சந்தன மாஸ்க்

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், சந்தனப் பொடியை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதை நன்கு காணலாம். மேலும் இந்த மாஸ்க் முகத்தை புத்துணர்ச்சியுடன் வெளிக்காட்டும்.

சந்தனத்தில் உள்ள உட்பொருட்கள், முகப்பரு, தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளைப் போக்கும். ஆகவே சந்தன பொடியை பால் அல்லது நீரில் கலந்து பேஸ்ட் செய்து, தினமும் முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவி வர நல்ல மாற்றத்தைக் காணலாம்.

Editor's Choice
இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 7-ல்  ஒருவருக்குக் குறைந்தது 12 வாரங்களுக்கு நீடித்த கொரோனா நோய்த்தொற்றின் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு லாங் கோவிட் என்று பெயரிடப்பட்டுள்ளது. நோய் அறிகுறிகளின் பட்டியலில் உடல் சோர்வு, தசை வலி, கவனம் செலுத்துவதில் சிரமம் மற்றும் சுவை மற்றும் வாசனை இழப்பு ஆகியவை அடங்கும். மேலும் இதில் ஆண்களை விடப் பெண்களே அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
 
35-49 வயதுடையவர்கள் குறைந்தது ஐந்து வாரங்களுக்கு அறிகுறிகளை கொண்டிருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
 
 தற்பொழுது அதிகரித்து வரும் லாங் கோவிடை இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. மேலும் இனி வரும் காலங்களில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு விரைவில் அதற்கான தீர்வுகள் கண்டறியப்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
 
கொரோனா நோய்த் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில் , கிட்டத்தட்ட 1,27,000 இறப்புகளையும் 43,50,266 புதிதாகப் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கைகளையும் பதிவு செய்துள்ளது.இருப்பினும், வலுவான தடுப்பூசி திட்டத்தினால் தினசரி இறப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கை சீராக குறைந்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில வாரங்காளாக கொரோனா தொற்று பாதிப்பு அதிக்ரித்துள்ளது. கடந்த வாரம், தேசிய அளவிலான கொரோனா பாதிப்பு சராசரி விகிதம் 5.65 சதவீதமாக இருந்தது. ஆனால், மராட்டிய மாநிலத்தில் 23 சதவீதமாக இருந்தது. எல்லா மாநிலங்களிலுமே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, அனைத்து மாநிலங்களும் கொரோனா பரிசோதனைகளை கணிசமாக அதிகரிக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

Editor's Choice

தொப்பையை குறைக்க இன்றைய இளைஞர்கள் படும்பாடு பெரும்பாடாக இருக்கிறது. சில குறிப்புகளை இடைவெளியின்றி பின்பற்றிவந்தால் தொப்பையை சீக்கிரமே குறைத்துவிடலாம்.

அன்னாச்சிப்பழம்

தினமும் இரவில் தூங்க போகும் போது அன்னாச்சிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமம் பொடி இரண்டு ஸ்புன் இவை இரண்டையும் தண்ணீரில் விட்டு கொதிக்க விட வேண்டும் அவை நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடிவைத்துவிட வேண்டும். காலை 5 மணிக்கு எழுந்து அதனை நன்காக கரைத்து குடிக்க வேண்டும். இவ்வாறு 30 நாட்கள் செய்து வந்தால் உங்களுக்குள் உள்ள தொப்பை காணாமல் போய்விடும்.

இஞ்சிசாறு

இஞ்சிசாறு ஒரு டம்ளர் மற்றும் தேன் இரண்டு டம்ளர் இதனை இரண்டையும் நன்றாக கொதிக்க வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனை காலை உணவிற்கு முன் வெறும் வயிற்றில் ஒரு ஸ்புன் மற்றும் மாலை நேரம் ஒரு ஸ்புன் குடித்து வரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து 40 நாட்கள் செய்ய நல்ல மாற்றத்தை உணரலாம்.

இஞ்சியை சாறெடுத்து அதில் நெல்லிக்காய் சாறை கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

தண்ணீர்

தினமும் குறைந்தது 7-8 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் பெல்லியும் குறைந்துவிடும்.

உப்பு

உப்பை தவிர்க்கவும் உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உப்பை அதிகம் சேர்த்தால், உடலில் தண்ணீரானது வெளியேறாமல், அதிகமாக தங்கிவிடும். எனவே உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் அதற்கு பதிலாக உணவில் சுவையைக் கூட்டுவதற்கு மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

தேன்

வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வந்தால் உடல் மெலியும். வயிற்றைச் சுற்றி தொப்பையை ஏற்படுவதற்கு, சர்க்கரையும் ஒரு காரணம். எனவே உண்ணும் உணவுப் பொருளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொண்டால், தொப்பையை குறைவதோடு, உடல் எடையும் குறையும்.

பட்டை

தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். மேலும் உடல் எடையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.

நட்ஸ்

உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் உடனே கொழுப்புள்ள உணவுப் பொருட்கள் அனைத்தையும் நிறுத்திவிடுவோம். உண்மையில் அது தவறான கருத்து. ஏனெனில் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புக்கள் கிடைக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது. அத்தகைய கொழுப்புக்கள் நட்ஸில் அதிகம் உள்ளது. எனவே ஸ்நாக்ஸ் நேரத்தில் வால்நட், பாதாம், வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது.

அவகேடோ

அவகேடோவிலும் உடலுக்கு வேண்டிய கொழுப்பானது அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதனை சாப்பிட்டால், அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், வயிற்றை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும்.

சிட்ரஸ்

பழங்கள் பழங்களில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும். இதனால் அழகான உடலை பெற முடியும்.

தயிர்

தினமும் உணவில் தயிரை சேர்த்து வந்தால், அதில் உள்ள குறைவான கலோரி மற்றும் ஊட்டசசத்துக்களால், எடை குறைவதோடு, தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.

க்ரீன் டீ

அனைவருக்குமே க்ரீன் டீ குடித்தால், உடல் எடை குறையும் என்பது தெரியும். மேலும் பலரும் இந்த க்ரீன் டீயின் பலனைப் பெற்றுள்ளனர். எனவே தினமும் ஒரு டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள்.

சால்மன் மீன்

சால்மன் மீனில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. இது உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாத ஒரு கொழுப்பாகும். ஆகவே இந்த மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், நாள் முழுவதும் வயிறு நிறைந்திருப்பதோடு, தொப்பை வராமலும் தடுக்கும்.

பெர்ரிப் பழங்கள்

பெர்ரிப் பழங்கள் கொழுப்பைக் குறைக்கும் ஒரு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் அதில் வைட்டமின் சி என்னும் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால், பெல்லியால் அவஸ்தைப்படுபவர்கள், பெர்ரிப் பழங்களை அதிகம் சாப்பிட்டால், நல்ல பலனை விரைவில் பெறலாம்.

ப்ராக்கோலி

ப்ராக்கோலியிலும், மன அழுத்தத்தை அதிகரிக்கும் கார்டிசோலின் அளவைக் கட்டுப்படுத்தும் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புக்களை ஆற்றலாக மாற்றும் பொருளானது உள்ளதால், பெல்லி பிரச்சனை உள்ளவர்கள் ப்ராக்கோலியை அதிகம் சாப்பிடுவது நல்லது.

எலுமிச்சை சாறு

வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை குறைக்க ஒரே சிறந்த வழியென்றால், தினமும் காலையில் எலுமிச்சை ஜுஸ் போட்டு குடிப்பது தான். அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் தேன் சேர்த்து குடித்தால், நிச்சயம் தொப்பை குறையும். அதிலும் இந்த செயலை தொடர்ந்து 1 மாதம் செய்து வந்தால், இதற்கான பலன் உடனே தெரியும்.

பூண்டு

எலுமிச்சை சாற்றினை விட இரண்டு மடங்கு அதிகமான சக்தியானது பூண்டில் உள்ளது. எனவே காலையில் 1 பல் பூண்டு சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.

இஞ்சி

உணவுகளில் இஞ்சியை அதிகம் சேர்த்தால், அது தொப்பையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளானது நிறைந்திருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

மேற்கூறிய அனைத்தையும் நம்பிக்கையுடன் மேற்கொண்டால், நிச்சயம் தொப்பையை மற்றும் உடல் எடை விரைவில் குறையும். ஆனால் நம்பிக்கையின்றி மேற்கொண்டால், அதற்கான பலன் நிச்சயம் கிடைக்காது.

Editor's Choice
கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் மாகாணத்தில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தொற்று நோய் கண்டறியப்பட்டது. அதன் பிறகு அது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு பரவி வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது.
 
இந்த நோய் பரவல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் தங்கள் பொருளாதார நடவடிக்கைகளை நிறுத்தி விட்டு ஊரடங்கிற்குள் சென்றன. தற்போது பல நாடுகள் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்தாலும், சில நாடுகளில் கொரோனா பரவல் இன்னும் குறையாமல் இருந்து வருகிறது.
 
இதற்கிடையில் கொரோனாவிற்கு எதிராக பல மருந்து நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பூசிகள், தற்போது பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த தடுப்பூசிகளால் பக்க விளைவுகள் ஏற்படுவதாக ஆங்காங்கே சில செய்திகள் வந்தாலும், தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என மருத்துவ நிபுணர்கள் பலர் கூறுகின்றனர். 
 
அனைவரும் பயமின்றி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என உலக நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தடுப்பூசிகளின் பயன்பாட்டால் 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் உலகம் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என மைக்ரோசாப்ட் துணை நிறுவனர் பில்கேட்ஸ் கூறியுள்ளார்.
 
“கொரோனா பேரிடர் என்பது ஒரு நம்பமுடியாத சோகம்” என்று குறிப்பிட்டுள்ள அவர், தடுப்பூசி பயன்பாட்டால் 2022 இறுதிக்குள் உலகம் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்” என்று கூறியுள்ளார். உலகம் ஒரு மிகப்பெரிய தொற்று நோய் அபாயத்திற்கு உள்ளாக வாய்ப்பிருப்பதாக பில்கேட்ஸ் சில ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பக்கம் 24 / 49