1. இருமல் சளி குணமாக::
சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.
2. தலை சுற்றல் குணமாக:
சுக்கு, மிளகு, திப்பிலி, விலாமிச்சை வேர், சீரகம் ஆகியவைகளை 5 கிராம் வீதம் பவுடராக்கி தினசரி காலை, மாலை அரை கரண்டி சாப்பிட தலை சுற்றல் குணமாகும்.
3. இருமல் குணமாக:
ஜலதோஷம், காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.
4. வறட்டு இருமல் குணமாக:
கருவேலமரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும். வெள்ளை முதலான நோய்களும் குணமாகும்.
5. ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக:
முசுமுசுக்கை இலையை அரித்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாகும்.
6. சளிகட்டு நீங்க:
தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை, கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட இறைப்பு, சளிகட்டு நீங்கும்.
7. தலைபாரம் குறைய:
நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.
8. மார்புச்சளி நீங்க:
ஏலப்பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட மார்புச்சளி குணமாகும்.
9. மூக்கடைப்பு நீங்க:
ரோஜா மலரை முகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கி விடும்
10. ஜலதோஷம் குணமாக:
முருங்கை பிஞ்சுகளை நசுக்கி சாறெடுத்து அதில் தேன் கலந்து 2 வேளை வீதம் 3 நாட்கள் சாப்பிட குணமாகும்.
11. வாந்தி நிற்க:
துளசி சாறு, கல்கண்டு சேர்த்து காய்ச்சலின் போது கொடுக்க வாந்தி நிற்கும்.
12. குமட்டல்:
கசப்பான மருந்து உட்கொண்டவுடன் வெற்றிலை காம்பை வாயிலிட்டு சுவைத்தால் குமட்டல் இருக்காது.
13. பித்தம் நீங்க:
மாதுளம்பழம் சாப்பிட்டு வர அறிவு விருத்தி, ஞாபக சக்தி எலும்பு வளர்ச்சி, பித்த சம்பந்தமான வியாதி நீங்கும்.
14. நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க:
முசுமுசுக்கை இலையை பொடியாக நறுக்கி மாதம் 2 தடவை சாப்பிட வேண்டும்.
15. அம்மை நோயைத் தடுக்க:
10 கிராம் வெந்தயம், மிளகு 5 தட்டி பொடி செய்து தண்ணீர் விட்டு காய்ச்சி காலை, மாலை 3 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் அம்மை நோய் பரவாது.
16. பித்தவெடிப்பு மறைய:
காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள். தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
17. தொண்டை வலிக்கு:
பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்.
18. இருமல் தொல்லைக்கு:
தூங்க போகும் முன் 1 கப் சூடான தண்ணீரில் 1 ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும். இது இருமல் தொல்லையையும் நீக்கும்.
19. கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்:
கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து காட்டுங்கள். ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும். அதற்கு முன் காயத்தை நன்றாக வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும்.
20. இருமல் சளிக்கு:
தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.













