Editor's Choice
கொரோனாவுக்கு எதிராக, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. சீனாவிலும், சில தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. 2ம் தேதி நிலவரப்படி, 3.40 கோடி பேருக்கு, இரண்டு, டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அதைத் தவிர, 6.50 கோடி பேருக்கு, ஒரு, டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக, அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் 12 வரை சீனா 17.19 கோடிடோஸ் கொரோனா தடுப்பூசிகளை வழங்கியுள்ளது
 
மற்ற நாடுகளில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை பயன்படுத்த சீனா அனுமதி தரவில்லை. தற்போதைக்கு, சைனோவேக் என்ற தனியார் நிறுவனம் மற்றும் 'சைனோபார்ம்' என்ற அரசு நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
 
மெக்சிகோ, துருக்கி, இந்தோனேசியா, ஹங்கேரி, பிரேசில், துருக்கி உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்த தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. சீன தடுப்பூசியின் செயல்திறன், 50.4 சதவீதமாக உள்ளதாக, பிரேசில் கூறியுள்ளது. 
 
இந்த நிலையில் சீனாவின்  கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறன் குறைவாக இருப்பதாக சீனாவின் உயர் நோய் கட்டுப்பாட்டு அதிகாரி ஒப்புக்ககொண்டுள்ளார். பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்ட நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான சீன மையத்தின் தலைவர் காவ் பூ கூறியதாவது:-
 
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிராக பெரிய அளவிலான பாதுகாப்பை வழங்கவில்லை. தடுப்பூசிகளின் செயல்திறனை அதிகரிக்க தடுப்பூசிகளை கலப்பது தொடர்பில் சீனா ஆலோசனை நடத்தி வருகிறது. தடுப்பூசி செயல்முறையை மேம்படுத்த டோஸ்கள் மற்றும் இடைவெளி நாட்களை மாற்றியமைப்பது உட்பட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
 
உலகிலுள்ள அனைத்து தடுப்பூசிகளின் பாதுகாப்பு அளவு சில சமயம் அதிகமாகவும், சில சமயம் குறைவாகவும் இருக்கும் என அவர் கூறினார். அவற்றின் செயல்திறனை எவ்வாறு மேம்படுத்துவது என்பது உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளால் பரிசீலிக்கப்பட வேண்டிய ஒரு கேள்வி.

 

Editor's Choice

தயிரில் உள்ள அதிக அளவு புரதமானது, பழங்கள் சாப்பிட்ட பின்னர் இது செரிமானத்தினை குறைக்கிறது. மேலும் ஒவ்வாமை போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்திவிடும். அதற்குக் காரணம் பழங்களில் உள்ள அமிலத் தன்மையாகும்.

பால், தயிர், மோர், நெய், வெண்ணெய் இவற்றுடன் வாழைப்பழம் , கீரை போன்றவைகளை எடுத்துக் கொள்ளுதலைக் குறைத்த்ல் வேண்டும், ஏனெனில் இது செரிமானமாக அதிக நேரம் பிடிக்கும். அதிலும் இரவு நேரங்களில் கூடவே கூடாது என்னும் அளவு தடா போட்டு விடவேண்டும்.

அதே சமயத்தில் அசைவ உணவுகளான சிக்கன், மட்டன், மீன், காடை, கவுதாரி என எந்தவொரு அசைவ உணவுடனும் தயிரை சாப்பிடகூடாது. அதிலும் மிக முக்கியமாக மீனையும் தயிரையும் ஒன்றாக சாப்பிட்டால் தோல் வியாதிகளான வெண் குஷ்டம் போன்றவை ஏற்படும்.

 தயிரைவிட மோரினை எடுத்துக் கொள்வதை பழக்கமாக்குவது நல்லது. ஏனெனில் மோர் தயிருடன் ஒப்பிடும்போது கூடுதலான ஜீரண சக்தி கொண்டது.
Editor's Choice

உலகம் முழுக்க கிட்டத்தட்ட 29 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கி உள்ள கொரோனா வைரஸின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை தற்போது இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. இதன்காரணமாக தற்போது தடுப்பு மருந்துகள் உலகெங்கிலும் அதிகமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. 13 கோடியே 65 லட்சம்பேர் தற்போதுவரை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். உலகம் முழுவதும் தற்போது 780 மில்லியன் டோஸ் தடுப்பு மருந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தாக்கத்தின் அழிவில் இருந்து உலகம் வெகு தொலைவில் உள்ளது என்று தெரிவித்துள்ளார் டெட்ரோஸ் அதனோம் கெப்ரயேசஸ். உலக மக்களின் முழு ஆதரவுடன் கொரோனாவின் தாக்கத்தை நாம் படிப்படியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

கடந்த ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் படிப்படியாக குறைந்து வந்த கொரோனாவின் தாக்கம், இரண்டாவது அலை காரணமாக பல ஆசிய மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகளில் மீண்டும் அதிகரித்தது. அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ, முகக் கவசம் அணிய மக்களை வலியுறுத்துதல், சமூக விலகலை பின்பற்றுதல், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல், தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை அளித்தல், தடுப்பு மருந்தை விரைவில் பொதுமக்களுக்கு செலுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலமாக உலக நாடுகள் தற்போது தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் பரவும் வேகத்திற்கு தற்போது உலகில் தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் வேகம் குறைவாகவே உள்ளது என்று அவர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களுக்கு அவர்கள் வாழ்நாளில் என்னென்ன மாதிரியான பிரச்னைகள் வரும் என்று இன்னும் சரியாகத் தெரியவில்லை.

இது இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளது. இறப்பு சதவீதம் கணிசமாகக் குறைந்துள்ளது, மனிதகுலத்துக்கு சாதகமான விஷயம். ஒரு கட்டத்தில் இந்த வைரஸ் தாக்கத்தை முற்றிலுமாக நிறுத்தி விடலாம் என்ற நம்பிக்கையை இது தருகிறது என்று அவர் மேலும் கூறியுள்ளார். ஜெனிவாவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் உலக சுகாதார அமைப்பு தனது கோவாக்ஸ் திட்டத்தின் மூலமாக பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு தடுப்பு மருந்துகளை இலவசமாக விநியோகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Editor's Choice

காஃபிக் கொட்டை ஃபேஸ்பேக் ஆனது முகத்தின் அழகினைக் கூட்டும் என்பது அனைவரும் அறிந்ததே. இது வறட்சி, சிவப்பழகு போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கின்றது.

தேவையானவை:

1. காபிக் கொட்டை- 10

2. ஆலிவ் ஆயில் – 2 ஸ்பூன்

3. கற்றாழை ஜெல்- 3 ஸ்பூன்

4. நல்லெண்ணெய்- 1 ஸ்பூன்
செய்முறை:

  1. காஃபிக் கொட்டையினை லேசாக வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.
  2. அடுத்து காஃபித் தூளுடன் ஆலிவ் ஆயில், நல்லெண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  3. இப்போது காஃபிக் கொட்டை ஃபேஸ்பேக் ரெடி.

இந்த காஃபிக் கொட்டை ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்யவும், மேலும் முகத்தைக் குளிர்ந்த நீர் கொண்டு கழுவவும். முகம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளும் சரியாகிவிடும் என்பது உறுதி.

வெண்ணெய் ஃபேஸ்பேக்

தேவையானவை:
ஆலிவ் எண்ணெய்- 2 ஸ்பூன்
வெண்ணெய்- ½ ஸ்பூன்
கிரீன் டீ- தேவையான அளவு

 செய்முறை:

1.    ஒரு பாத்திரத்தில் கிரீன் டீத் தூளைப் போட்டு நன்கு கொதிக்க விடவும்.
2.    அடுத்து வெண்ணெயினைப் போட்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும்.
முக அழகினைக் கூட்டும் இந்த ஃபேஸ்பேக்கினை தினமும் இரவு அப்ளை செய்து குளிர்ந்த நீரால் கழுவினால் முக அழகு கூடும்.

பப்பாளிப் பழம் ஃபேஸ்பேக்

தேவையானவை:

பப்பாளிப் பழம்- ½

பால்- ½ கப்

முந்திரி- 4

பாதாம் பருப்பு- 4

செய்முறை:

  1. பப்பாளிப் பழத்தினை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  2. அடுத்து பாலில் முந்திரி மற்றும் பாதாம் பருப்பினை பாலில் ஊறவைத்துக் கொள்ளவும்.
  3. அடுத்து ஊறவைத்த முந்திரி, பாதாம் பருப்பு, பப்பாளிப் பழத்தினை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

 இந்த பப்பாளிப் பழம் ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்து கழுவினால் நிச்சயம் சிவப்பழகினைப் பெற முடியும்.

Editor's Choice

மண்பானை இன்று அதிகமாக கிராம புறங்களில் தான் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு காரணம் இதில் சமைத்த உணவின் ருசியும், ஆரோக்கியமும் தான். பொங்கல் பண்டிகை, மக்களுடன் மண் பானை தொடர்பை ஏற்படுத்தி, பாரம்பரியத்தை காக்க செய்கிறது.

கோடைகாலம் தொடங்கி உள்ளது. கோடைகாலம் என்றாலே மக்கள் உண்ணும் உணவு மற்றும் குடிக்கும் பானங்கள் அனைத்துமே குளிர்ச்சியாக இருக்க  விரும்புவார்கள். கோடைகாலத்தில் குளிச்சியான உணவுகள் மற்றும் பானங்களை அருந்துவது நல்லது தான்.

ஆனால், உணவு மற்றும் பானங்களின் குளிர்ச்சி இயற்கையானதாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான், அந்த குளிர்ச்சியை நமது உடல் ஏற்றுக் கொள்ளும் போது, அதனால் எந்த தீமைகளும், ஆரோக்கிய கேடுகளும் ஏற்படாது.

நாம் பயன்படுத்தும் தண்ணீர் முதற்கொண்டு அனைத்தும், செயற்கையானதாக தான் இருக்கிறது. என்று நாம் இயற்கையை மறந்து செயற்கையான உணவுகளுக்கு மாறினோமோ அன்றே நமது கலாச்சாரமும் சீர்கெட்டு விட்டது, உடல் ஆரோக்கியமும் சீர்கெட்டு விட்டது.

முற்காலத்தில் நாம் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் பயன்படுத்தியது நிலத்தடி நீர் தான். இந்த நீரை நாம் பயன்படுத்தியதால், நமக்கு நிலத்தடியில் இருந்து கிடைக்கும் நீரால், நம் உடலுக்கு தேவையான தாதுப் பொருட்களும் கிடைத்து விடுகிறது.

ஆனால், நாம் இன்று பயன்படுத்தும் மினரல் வாட்டரில், சாதாரண நீரில் உள்ள சத்துக்கள் கிடைப்பதில்லை.

மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண்பானை உறிஞ்சிக் கொண்டு, அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது.

மண் பானையில் தண்ணீர் ஊற்றி வைத்து குடித்தால், தண்ணீரில் உள்ள கெட்ட பொருட்களை அளிப்பதோடு, நமது உடலுக்கு தேவையான சக்திகளையும் அளிக்கிறது. மேலும், இது நமது உடலுக்கு தேவையான பிராண சக்தியையும் அளிக்கிறது.

மண்பானை சமையல், நாம் நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும், இயற்கையான உணவான மண்பானை உணவில், இருந்து பெற முடியும். நமது முன்னோர்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்ததற்கு காரணமும் இந்த மண்பானை சமையல் தான்.

ஏனென்றால், மண்பானையை போல் பயன் அளிக்ககூடிய பித்தலை, செம்பு, வெண்கலம், தங்கம், வெள்ளி என்ற ஐந்து வகையான உலோகங்களை சமையல் பாத்திரங்களாக பயன்ப்படுத்தி உள்ளனர். இது நமது உடலுக்கு தேவியான அனைத்து வகையான சத்துக்களையும் அளிக்கிறது.

மண்பானை சமையல் மிகவும் ருசியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். மண்பானையில் தயிர் ஊற்றி வைத்தால் நீண்ட நாட்கள் புளிக்காமல் இருக்கிறது. மண் பாண்டத்தில் சமைத்து சாப்பிட்டால் வயிற்று பிரச்சனைகள், அல்சர் போன்ற வயிற்று பிரச்சனைகள் குணமாகிறது. மேலும், இது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்கிறது. அதுமட்டுமல்லாமல், இந்த உலகில் நாம் நீண்ட நாள் வாழ ஆயுளையும் தருகிறது.

Editor's Choice
கோடை வெயில் தமிழக மக்களை வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. இதனால் உடலுக்கு குளிர்ச்சியான மற்றும் இயற்கையான உணவுகளை 
மக்கள் அதிகளவு வாங்கி சாப்பிட தொடங்கியுள்ளனர். அந்த வகையில்,அவல் மோர்க்கூழ் செய்வது எப்படி என காணலாம்.

அவல் மோர்க்கூழ் செய்யத்தேவையான பொருட்கள்: 

அவல் - ஒரு கிண்ணம்
சின்ன வெங்காயம் தோலுரித்து, பொடியாக நறுக்கியது - கால் கிண்ணம்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - அரை கரண்டி
உளுந்து - ஒரு கரண்டி
சீரகம் - அரை கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு கரண்டி
இஞ்சி துருவியது - ஒரு கரண்டி
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
புளித்த தயிர் - ஒரு கிண்ணம்
தேங்காய்த்துருவல் - 3 கரண்டி
எண்ணெய் மற்றும் உப்பு - தேவைக்கேற்ப.

அவல் மோர்க்கூழ் செய்முறை

முதலில் எடுத்துக்கொண்ட வானலியில் அவலை வறுத்து மிக்சியில் மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் தயிரில் தண்ணீர் மற்றும்
உப்பு சேர்த்து கடைந்து மோராக எடுத்துக்கொள்ள வேண்டும். 

வானலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், உளுந்து ஆகியவற்றை சேர்த்து அவை வறுபட்டதும், கடலை பருப்பு, சின்ன வெங்காயம்,
பச்சை மிளகாய், கறிவேப்பில்லை, இஞ்சி, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி விட வேண்டும். 

அடுப்பில் நெருப்பை குறைந்த தீயில் வைத்து கடைந்த மோரினை அதில் சேர்த்து, அவல் மாவினை போட்டு உப்பு மற்றும் தேங்காய் துருவல்
சேர்த்து கொதிக்க விட வேண்டும். நன்றாக வெந்ததும் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கினால் சுவையான மற்றும் உடலுக்கு குளிர்ச்சியை
தரும் அவல் மோர்க்கூழ் தயார்.

 

பக்கம் 21 / 49