காஃபிக் கொட்டை ஃபேஸ்பேக் ஆனது முகத்தின் அழகினைக் கூட்டும் என்பது அனைவரும் அறிந்ததே. இது வறட்சி, சிவப்பழகு போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கின்றது.
தேவையானவை:
1. காபிக் கொட்டை- 10
2. ஆலிவ் ஆயில் – 2 ஸ்பூன்
3. கற்றாழை ஜெல்- 3 ஸ்பூன்
4. நல்லெண்ணெய்- 1 ஸ்பூன்
செய்முறை:
- காஃபிக் கொட்டையினை லேசாக வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.
- அடுத்து காஃபித் தூளுடன் ஆலிவ் ஆயில், நல்லெண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
- இப்போது காஃபிக் கொட்டை ஃபேஸ்பேக் ரெடி.
இந்த காஃபிக் கொட்டை ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்யவும், மேலும் முகத்தைக் குளிர்ந்த நீர் கொண்டு கழுவவும். முகம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளும் சரியாகிவிடும் என்பது உறுதி.
வெண்ணெய் ஃபேஸ்பேக்
தேவையானவை:
ஆலிவ் எண்ணெய்- 2 ஸ்பூன்
வெண்ணெய்- ½ ஸ்பூன்
கிரீன் டீ- தேவையான அளவு
1. ஒரு பாத்திரத்தில் கிரீன் டீத் தூளைப் போட்டு நன்கு கொதிக்க விடவும்.
2. அடுத்து வெண்ணெயினைப் போட்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும்.
முக அழகினைக் கூட்டும் இந்த ஃபேஸ்பேக்கினை தினமும் இரவு அப்ளை செய்து குளிர்ந்த நீரால் கழுவினால் முக அழகு கூடும்.
பப்பாளிப் பழம் ஃபேஸ்பேக்
தேவையானவை:
பப்பாளிப் பழம்- ½
பால்- ½ கப்
பாதாம் பருப்பு- 4
செய்முறை:
- பப்பாளிப் பழத்தினை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
- அடுத்து பாலில் முந்திரி மற்றும் பாதாம் பருப்பினை பாலில் ஊறவைத்துக் கொள்ளவும்.
- அடுத்து ஊறவைத்த முந்திரி, பாதாம் பருப்பு, பப்பாளிப் பழத்தினை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
இந்த பப்பாளிப் பழம் ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்து கழுவினால் நிச்சயம் சிவப்பழகினைப் பெற முடியும்.













