கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறன் குறைவாக உள்ளது - சீனா

SOCIAL SHARE
Pin It
கொரோனாவுக்கு எதிராக, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. சீனாவிலும், சில தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. 2ம் தேதி நிலவரப்படி, 3.40 கோடி பேருக்கு, இரண்டு, டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அதைத் தவிர, 6.50 கோடி பேருக்கு, ஒரு, டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக, அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் 12 வரை சீனா 17.19 கோடிடோஸ் கொரோனா தடுப்பூசிகளை வழங்கியுள்ளது
 
மற்ற நாடுகளில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை பயன்படுத்த சீனா அனுமதி தரவில்லை. தற்போதைக்கு, சைனோவேக் என்ற தனியார் நிறுவனம் மற்றும் 'சைனோபார்ம்' என்ற அரசு நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
 
மெக்சிகோ, துருக்கி, இந்தோனேசியா, ஹங்கேரி, பிரேசில், துருக்கி உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்த தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. சீன தடுப்பூசியின் செயல்திறன், 50.4 சதவீதமாக உள்ளதாக, பிரேசில் கூறியுள்ளது. 
 
இந்த நிலையில் சீனாவின்  கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறன் குறைவாக இருப்பதாக சீனாவின் உயர் நோய் கட்டுப்பாட்டு அதிகாரி ஒப்புக்ககொண்டுள்ளார். பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்ட நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான சீன மையத்தின் தலைவர் காவ் பூ கூறியதாவது:-
 
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிராக பெரிய அளவிலான பாதுகாப்பை வழங்கவில்லை. தடுப்பூசிகளின் செயல்திறனை அதிகரிக்க தடுப்பூசிகளை கலப்பது தொடர்பில் சீனா ஆலோசனை நடத்தி வருகிறது. தடுப்பூசி செயல்முறையை மேம்படுத்த டோஸ்கள் மற்றும் இடைவெளி நாட்களை மாற்றியமைப்பது உட்பட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
 
உலகிலுள்ள அனைத்து தடுப்பூசிகளின் பாதுகாப்பு அளவு சில சமயம் அதிகமாகவும், சில சமயம் குறைவாகவும் இருக்கும் என அவர் கூறினார். அவற்றின் செயல்திறனை எவ்வாறு மேம்படுத்துவது என்பது உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளால் பரிசீலிக்கப்பட வேண்டிய ஒரு கேள்வி.

 

ARUNACHALAM