Editor's Choice
அபுதாபியில் பொது சுகாதார மையத்தின் சார்பில் சினோபார்ம் தடுப்பூசி மருந்தின் விளைவுகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த ஆய்வின் முடிவுகளில் சினோபார்ம் மருந்தை உடலில் செலுத்திக் கொண்டவர்களுக்கு நோய் தொற்று காரணமாக லேசான அறிகுறிகள் மட்டுமே தென்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தில் சினோபார்ம் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக புதிய நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவது புள்ளி விவரங்களில் சேகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த ஆய்வில் சினோபார்ம் தடுப்பூசியை போட்டுக்கொண்டால் நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது 93 சதவீதம், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்வது 95 சதவீதமும் தடுக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக இதுவரை சினோபார்ம் தடுப்பூசி மருந்தை உடலில் செலுத்திக் கொண்டவர்களில் இறப்பு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
 
சினோபார்ம் தடுப்பூசி கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தி, உடலில் அதிக நாட்கள் ஒட்டிக்கொள்வதன் மூலம் சிறந்த எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இதில் அந்த தடுப்பூசியானது 90 சதவீதம் நோய் தொற்றை தடுப்பதில் அதிக ஆற்றல் உடையது. எனவே இந்த தடுப்பூசி மருந்து கொரோனா பரவலை தடுப்பதில் மிகவும் பாதுகாப்பானதாக உள்ளது.
 
சினோபார்ம் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் தற்போதுள்ள கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகளில் சினோபார்ம் உலகின் மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.
 
Editor's Choice

தோல் என்பது உடலின் மிகப்பெரிய உறுப்பு ஆகும். இது மொத்த உடல் உறுப்புகளையும் வெளிப்புற சூழலில் இருந்து பாதுகாக்கும் முதன்மை கவசமாக செயல்படுகிறது. மேலும் தீங்கு விளைவிக்கும் கூறுகள், நுண்ணுயிரிகளிலிருந்து பாதுகாக்க மற்றும் உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் தான் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மற்றும் அதன் நோய் எதிர்ப்பு சக்தியைப் பராமரிப்பது மிகவும் முக்கியமானது.

உங்கள் சருமத்தில் பாதுகாப்பு குறைந்துவிட்டால் பின்னர் தொற்றுகளின் விளைவுகளை சந்திக்க நேரிடும். உங்கள் சருமத்தில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் எந்த வித பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து செழித்து வருவதை உறுதிசெய்ய, சில எளிய தோல் பராமரிப்பு உதவிக்குறிப்புகள் இருக்கின்றன. அதை பின்பற்றினாலே போதும் உங்கள் சருமம் வெளிப்புற சூழலால் பாதிக்கப்படாதவாறு பார்த்து கொள்ளலாம்.

உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தின் முதல் படியாக கிளீன்சிங் இருக்க வேண்டும். எந்தவொரு ஒப்பனை, அழுக்கு அல்லது அதிகப்படியான எண்ணெயை அகற்ற உங்கள் முகத்தை கவனமாக சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு PH-நடுநிலை அல்லது சோப்பு இல்லாத முகம் சுத்திகரிப்பான் (face purifier) ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும். அதாவது இவை உங்கள் சருமத்தின் இயற்கையான எண்ணெயை அகற்றாமல் தோலில் உள்ள மாசுபாட்டை மட்டும் நீக்கும். எனவே, உங்கள் சருமத்திற்கு ஏற்றாற்போல சரியான முக சுத்தப்படுத்தியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பொதுவாக உங்கள் சருமம் அதிகப்படியான வெளிப்புற அழுத்தங்களைக் கையாளுகிறது. அதனால் தான் வாரத்திற்கு ஒரு முறை எக்ஸ்போலியேசன் செய்வது அவசியம். இது சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்தவும், அழுக்கு மற்றும் இறந்த சரும செல்களை அகற்றவும் உதவுகிறது. எண்ணெய் மற்றும் வறண்ட சருமத்திற்கு, லேசான ஸ்க்ரப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

ஒரு நல்ல மாய்ஸ்சரைசர் சருமத்தை இயற்கையான ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் சரும செல்களை நீரேற்றமாக வைக்கிறது. நீரேற்றம் உங்கள் சருமத்தில் நீர் அளவை பராமரிக்கிறது.

தற்போது நிலவி வரும் கோடைகால வெயிலால், நாம் வீட்டிற்குள்ளே இருப்பதாலும் மற்றும் ஏ.சி.யை அதிகம் பயன்படுத்துவதாலும் சருமம் வறண்டு, ஈரப்பதம் இல்லாமல் போகிறது. எனவே 8 மணி நேர இடைவெளியில் இரண்டு முறை உங்கள் சருமத்தை மாய்ஸ்சரைசர் செய்வது அவசியம். இது சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் அது வறண்டு காணப்படாது. இலகுரக, காமெடோஜெனிக் அல்லாத அல்லது அவகேடோ பழத்தின் ஹைட்ரேட்டிங் குணங்களைக் கொண்ட ஒன்றைத் தேர்வுசெய்து சருமத்தின் அமைப்பை ஈரப்பதமாக்க வைத்திருங்கள்.

சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் வைட்டமின்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வைட்டமின் சி பயன்பாடு தீவிரமான சேதத்தை எதிர்த்துப் போராட சருமத்திற்கு உதவுகிறது மற்றும் சருமத்திற்கு ஒரு  எதிர்ப்பு (Anti-Ageing) முகவராக செயல்படுகிறது.

வீட்டில் இருந்து வெளியே சென்றாலும், வீட்டிற்குள் இருந்தாலும் சரி உங்கள் சருமத்திற்கு சன்ஸ்கிரீன் அவசியம். உங்கள் சருமம் முழுவதும் சன்ஸ்கிரீன் தடவினால் அது ஒரு கவசமாக செயல்பட்டு சருமத்தை கதிர்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும். உங்கள் கழுத்தின் பின்புறம் மற்றும் உங்கள் கைகள் ஆகியவை சூரிய ஒளியால் எளிதில் பாதிக்கப்படுவதால் சன்ஸ்கிரீனை பயன்படுத்த மறக்காதீர்கள்.

Editor's Choice

உலக அளவில் உருமாறிய கொரோனா அதிகம் கண்டறியப்பட்டுள்ள நாடு பிரேசில். கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல நாடுகள் போராடு வரும் சூழலில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க பிரேசில் போராடி வருகிறது. உருமாறிய கொரோனாவின் பாதிப்பு அதிதீவிரமாக உள்ளதால் அந்நாட்டில் நாள்தோறும் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர். இதுவரை மூன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக பிறக்கும் பச்சிளம் குழந்தைகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றன. இதனால் அந்நாட்டு சுகாதாரத்துறை பெண்களுக்கு புதிய அறிவுரையை வழங்கி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் கருவுருவதை தள்ளிப்போடுமாறு பிரேசில் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மருத்துவமனைகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும் இந்த சூழலில் பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளும் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். கடந்த ஆண்டு பிரசவத்தின் போது மட்டுமே பாதிக்கப்பட்ட பெண்கள் தற்போது கருவுற்று சில நாட்களிலேயே கொரோனா தாக்குதலுக்கு ஆளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உருமாறிய கொரோனாவால் கருவுற்றோர் அதிகம் பாதிக்கப்படுவதாக பிரேசில் நாட்டு சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. 2 மடங்கு வேகமாக தற்போது கொரோனா பரவி வருவதால் கர்ப்பிணிகள் பாதிக்கப்படுவது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பரவல் குறையும் வரை சில காலத்திற்கு கருவுருவதால் தள்ளிப்போடுமாறு இளம் தலைமுறைக்கு பிரேசில் அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

Editor's Choice

துளசிக்கு என்று பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. துளசியில் ஏராளமான மருத்துவ குணங்கள் பொதிந்து கிடப்பதால் தான் மக்கள் அதை பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்து மதத்தின் படி இந்த துளசி இலைகளை புனித துளசி என்று அழைக்கின்றனர். இந்த துளசி பெரும்பாலும் தேநீரில் சுவையை சேர்க்க பயன்படுகிறது. இது ஆரோக்கியத்திற்கென்று பல நன்மைகளை வழங்க கூடியது. இதைக் கொண்டு பல வீட்டு வைத்தியங்கள் செய்யப்படுகிறது.

துளசி குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது. துளசி இலைகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, இரும்பு மற்றும் நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இவை உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தொற்று நோய்களை தடுக்கவும் உதவுகிறது. துளசி இலைகளை வெறும் வயிற்றில் உட்கொள்வது உங்களுக்கு நன்மை அளிக்கும்.

துளசி இலைகளில் அடாப்டோஜன்கள் நிறைந்துள்ளன. அவை உங்கள் உடலில் உள்ள மனஅழுத்த அளவைக் குறைக்க உதவும். இது உங்கள் நரம்பு மண்டலத்தை தளர்த்த உதவுகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது புலன்களை அமைதிப்படுத்துகிறது. மன அழுத்தத்தைக் குறைப்பதில் பங்களிக்கிறது.

துளசி குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. செரிமானத்தை எளிதாக்குகிறது. இது அமில ரிஃப்ளக்ஸை சமப்படுத்துகிறது மற்றும் உங்களுக்கு ஆரோக்கியமான செரிமானம் இருப்பதை உறுதி செய்ய pH அளவை பராமரிக்க உதவுகிறது.

துளசியில் கணைய உயிரணுக்களின் செயல்பாட்டை ஆதரிக்கும் மூலக்கூறுகள் உள்ளன. இது இன்சுலினை மேலும் வெளியிடுகிறது. எனவே இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. துளசி கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகளின் வளர்சிதை மாற்றத்தை எளிதாக்குகிறது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையை ஆற்றலாக மாற்ற உதவுகிறது.

துளசியில் ஆன்டி மைக்ரோபியல் தன்மை காணப்படுகிறது. இது மழைக்கால தொற்றுக்களான சலதோஷம், இருமல் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது. எனவே இதை கஷாயம் போட்டு குடித்து வரலாம்

துளசியில் உள்ள ஆன்டி பாக்டீரியல் தன்மை வாய்துர்நாற்றம் போன்றவற்றை நீக்குகிறது. எனவே காலையில் எழுந்ததும் துளசி இலைகளை வாயில் போட்டு மென்று வாருங்கள். நல்ல புத்துணர்ச்சியை கொடுக்கும்.

இதில் ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் உள்ளன. இது வேறுபட்ட தொற்றுக்களை நீக்க பயன்படுகிறது. இது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்து போராட தேவையான நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.

துளசியில் வாய்வழி மற்றும் மார்பக புற்றுநோய்க்கு வழிவகுக்கும் புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தும் புற்றுநோய்க்கான மூலக்கூறுகள் இதில் உள்ளன.

எனவே உங்க ஆரோக்கியத்தை பராமரிக்க வெறும் வயிற்றில் துளசி இலைகளை சாப்பிட்டு வரலாம். முடிந்தால் துளசி டீ கூட போட்டு குடித்து வரலாம். இரவில் தூங்குவதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீரில் 5-7 துளசி இலைகளை ஊற வைத்து காலையில் எழுந்ததும் அந்த துளசி நீரை குடித்து வரலாம். நல்ல பலன் கிடைக்கும்.

Editor's Choice

கொடிய கொரோனா வைரஸுக்கு எதிரான போரில், தற்போதைய நெருக்கடிக்கு எதிராக மிகவும் பயனுள்ள தடுப்பு நடவடிக்கைகளைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்களும் விஞ்ஞானிகளும் நாள்தோறும் உழைத்து வருகின்றனர்.

தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் மாஸ்க் அணிவது காட்டாயம் என வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் எந்த வகை மாஸ்க் சிறந்தது என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழுந்திருக்கலாம்.

சமீபத்திய ஆய்வில், ஐந்து அடுக்கு மாஸ்க் போட்டுக்கொள்வதன் மூலம் நீர்த்துளியின் குறைந்தபட்ச கசிவு வெளியேறுவதால் அவை மிகவும் பயனுள்ளதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. IIT புவனேஸ்வர் மேற்கொண்ட இந்த ஆய்வில், உட்புற சூழல்களில் அதாவது மூடப்பட்ட அறையில் கொரோனா பரவலைத் தடுக்க முகக்கவசங்களும் மற்றும் போதுமான காற்றோட்டம் இருப்பது முக்கியம் என்பதைக் சுட்டிக்காட்டியுள்ளது.

“சுவாசத்தின்” போது முகக்கவசங்கள் மற்றும் பேஸ் ஷீல்டு போன்ற பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளிலிருந்து ஏரோசல் துளிகளின் வெளியீட்டை குழு ஆராய்ந்தது. ஆய்வில் உருவகப்படுத்தப்பட்ட சுவாச முறைகள் வழக்கமான சுவாச அதிர்வெண்களைப் பின்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சாதாரணமாக ஓய்வில் இருக்கும் போது ஏற்படும் சுவாசம் மற்றும் நடைபயிற்சி போன்ற மிதமான செயல்பாட்டில் ஈடுபடும் ஆரோக்கியமான பெரியவர்களில் இருக்கும் நீண்ட சுவாசம் ஆகியவை அடங்கும்.

"சுவாசத்தின் போது வெளியேற்றப்பட்ட சிறிய நீர்த்துளிகள் 5 வினாடிகளில், 4 அடி வரை பயணித்தது. எனவே சாதாரண உரையாடல்களின் போது சர்ஜிக்கல் மாஸ்க்குகளை பயன்படுத்த வேண்டாம் என்று ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் "சமூக விலகலை பின்பற்ற சற்று கடினமாக இருக்கும் இடங்களான மருத்துவமனை மற்றும் பிற பகுதிகளில் சர்ஜிக்கல் மாஸ்க் மற்றும் பேஸ் ஷீல்டு அணிவது காட்டாயமாக பாதுகாப்பாக இருக்காது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வணிக N -95 முகக்கவசங்களை அணியும் போது அவை முன்னோக்கி இருப்பதால் நீர்த்துளிகள் கசிவதை முற்றிலும் தடுக்கிறது. இருப்பினும், முகக்கவசத்திற்கும் மூக்கிற்கும் இடையிலான இடைவெளிகளில் இருந்து நீர்த்துளிகள் கசிவு குறிப்பிடத்தக்கதாகக் காணப்படுகிறது,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே, 5 அடுக்கு முகக்கவசங்கள், நீர்த்துளிகளின் குறைந்தபட்ச கசிவையே வெளிப்படுத்துவதால், அவை மிகவும் பயனுள்ள பாதுகாக்கும் நடவடிக்கையாகக் காணப்படுகிறது என்று ஆய்வறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

Editor's Choice

சீரான இடைவெளியில் மூச்சு விட இயலாதவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு சீரான இடைவெளியில் மூச்சு விட முடியாதவர்களுக்கு ஏற்பட அதிகளவு வாய்ப்புள்ளதாக சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும், மூச்சு சரியாக விட முடியாதவர்களுக்கு தொற்று துகள்கள் நுரையீரலுக்கு அதிகளவில் செல்ல வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.  'நுரையீரலில் தொற்றின் துகள்கள் எவ்வாறு செல்கின்றன என்பதை இந்த ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளோம். மேலும், ஏரேசல் துகள்கள் நுரையீரலின் ஆழமான பகுதிக்குக் கொண்டுசெல்லப்படும் செயல்முறையையும் விளக்குகிறது. மேலும், சுவாச நோய்த் தொற்றுகளைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த சிகிச்சைகள், மருந்துகளை உருவாக்குவதற்கும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன."

பக்கம் 18 / 49