கொடிய கொரோனா வைரஸுக்கு எதிரான போரில், தற்போதைய நெருக்கடிக்கு எதிராக மிகவும் பயனுள்ள தடுப்பு நடவடிக்கைகளைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்களும் விஞ்ஞானிகளும் நாள்தோறும் உழைத்து வருகின்றனர்.
தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் மாஸ்க் அணிவது காட்டாயம் என வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் எந்த வகை மாஸ்க் சிறந்தது என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழுந்திருக்கலாம்.
சமீபத்திய ஆய்வில், ஐந்து அடுக்கு மாஸ்க் போட்டுக்கொள்வதன் மூலம் நீர்த்துளியின் குறைந்தபட்ச கசிவு வெளியேறுவதால் அவை மிகவும் பயனுள்ளதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. IIT புவனேஸ்வர் மேற்கொண்ட இந்த ஆய்வில், உட்புற சூழல்களில் அதாவது மூடப்பட்ட அறையில் கொரோனா பரவலைத் தடுக்க முகக்கவசங்களும் மற்றும் போதுமான காற்றோட்டம் இருப்பது முக்கியம் என்பதைக் சுட்டிக்காட்டியுள்ளது.
“சுவாசத்தின்” போது முகக்கவசங்கள் மற்றும் பேஸ் ஷீல்டு போன்ற பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளிலிருந்து ஏரோசல் துளிகளின் வெளியீட்டை குழு ஆராய்ந்தது. ஆய்வில் உருவகப்படுத்தப்பட்ட சுவாச முறைகள் வழக்கமான சுவாச அதிர்வெண்களைப் பின்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சாதாரணமாக ஓய்வில் இருக்கும் போது ஏற்படும் சுவாசம் மற்றும் நடைபயிற்சி போன்ற மிதமான செயல்பாட்டில் ஈடுபடும் ஆரோக்கியமான பெரியவர்களில் இருக்கும் நீண்ட சுவாசம் ஆகியவை அடங்கும்.
"சுவாசத்தின் போது வெளியேற்றப்பட்ட சிறிய நீர்த்துளிகள் 5 வினாடிகளில், 4 அடி வரை பயணித்தது. எனவே சாதாரண உரையாடல்களின் போது சர்ஜிக்கல் மாஸ்க்குகளை பயன்படுத்த வேண்டாம் என்று ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் "சமூக விலகலை பின்பற்ற சற்று கடினமாக இருக்கும் இடங்களான மருத்துவமனை மற்றும் பிற பகுதிகளில் சர்ஜிக்கல் மாஸ்க் மற்றும் பேஸ் ஷீல்டு அணிவது காட்டாயமாக பாதுகாப்பாக இருக்காது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வணிக N -95 முகக்கவசங்களை அணியும் போது அவை முன்னோக்கி இருப்பதால் நீர்த்துளிகள் கசிவதை முற்றிலும் தடுக்கிறது. இருப்பினும், முகக்கவசத்திற்கும் மூக்கிற்கும் இடையிலான இடைவெளிகளில் இருந்து நீர்த்துளிகள் கசிவு குறிப்பிடத்தக்கதாகக் காணப்படுகிறது,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே, 5 அடுக்கு முகக்கவசங்கள், நீர்த்துளிகளின் குறைந்தபட்ச கசிவையே வெளிப்படுத்துவதால், அவை மிகவும் பயனுள்ள பாதுகாக்கும் நடவடிக்கையாகக் காணப்படுகிறது என்று ஆய்வறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.













