சீரான இடைவெளியில் மூச்சு விட இயலாதவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு சீரான இடைவெளியில் மூச்சு விட முடியாதவர்களுக்கு ஏற்பட அதிகளவு வாய்ப்புள்ளதாக சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும், மூச்சு சரியாக விட முடியாதவர்களுக்கு தொற்று துகள்கள் நுரையீரலுக்கு அதிகளவில் செல்ல வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 'நுரையீரலில் தொற்றின் துகள்கள் எவ்வாறு செல்கின்றன என்பதை இந்த ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளோம். மேலும், ஏரேசல் துகள்கள் நுரையீரலின் ஆழமான பகுதிக்குக் கொண்டுசெல்லப்படும் செயல்முறையையும் விளக்குகிறது. மேலும், சுவாச நோய்த் தொற்றுகளைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த சிகிச்சைகள், மருந்துகளை உருவாக்குவதற்கும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன."













