Editor's Choice

COVID-19 நோயை கட்டுப்படுத்த 79.4 சதவீத செயல்திறனைக் கொண்ட ஸ்பூட்னிக் லைட் ஒற்றை டோஸ் தடுப்பூசிக்கு (Sputnik Light vaccine) ரஷ்யா அங்கீகாரம் கொடுத்துள்ளது.

"ரஷ்ய சுகாதார அமைச்சகம், தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் தொடர்பான கமலேயா தேசிய ஆராய்ச்சி மையம் மற்றும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் ஆகியவை ஸ்பூட்னிக் லைட், ஒற்றை டோஸ் கோவிட்19 தடுப்பூசியை ரஷ்யாவில் பயன்படுத்த அங்கீகாரம் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளன.

ஒற்றை டோஸ் ஸ்பூட்னிக் லைட் தடுப்பூசி உட்செலுத்தப்பட்ட 28 நாட்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட பகுப்பாய்வு செய்யப்பட்ட தரவுகளின்படி, இந்த தடுப்பூசி 79.4 சதவிகித செயல்திறனைக் காட்டியது. பல இரண்டு டோஸ் தடுப்பூசிகளைக் காட்டிலும் அதிகமாக அதாவது 80% க்கு அருகில் செயல்திறன் கொண்டுள்ளது Sputnik Light" என்று RDIF ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 5, 2020 மற்றும் ஏப்ரல் 15, 2021 க்கு இடையில் வெகுஜன தடுப்பூசி திட்டத்தின் போது ஒற்றை தடுப்பூசி போடப்பட்ட ரஷ்யர்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஸ்பூட்னிக் லைட்டின் செயல்திறன் கணக்கிடப்பட்டது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
"ஸ்பூட்னிக் லைட் தடுப்பூசி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான கடுமையான நிகழ்வுகளின் சாத்தியத்தை கணிசமாகக் குறைக்கிறது, ஒரே ஒரு ஊசி மட்டுமே தேவைப்படுகிறது. இது கொரோனா வைரஸ் பரவலின் கடுமையான கட்டத்தில் மிகவும் முக்கியமானது கொரோனா வைரஸின், மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை (herd immunity) விரைவாக அடைகிறது," என்று ஆர்.டி.ஐ.எஃப் இன் தலைமை நிர்வாக அதிகாரி கிரில் டிமிட்ரிவ் கூறினார்.

ஸ்பூட்னிக் லைட் தடுப்பூசி சர்வதேச நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். கொரோனா வைரஸின் தொற்றுநோய் மற்றும் புதிய விகாரங்களுடன் தொடர்ந்து போராடும் நிலையில் பல நாடுகளில் தடுப்பூசிகள் போடுவதை அதிகரிக்க Sputnik Light vaccine உதவும்.

ரஷ்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கானா உள்ளிட்ட பல நாடுகளில் 7,000 பேர் பங்கு கொண்ட மூன்றாம் கட்ட மருத்துவ ஆய்வு நடத்தப்பட்டது. இது பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று ஆர்.டி.ஐ.எஃப் கூறுகிற்து.

Editor's Choice

சுனாமியைப் போல எழுந்திருக்கும் கொரோனா இரண்டாவது அலை இந்தியாவின் சுகாதாரக் கட்டமைப்புகளை முடக்கும் நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது. உடனடியாகச் சிகிச்சை தேவைப்படுவோர் எதையாவது செய்து உயிர் பிழைத்து விட வேண்டும் என விரும்புகிறார்கள்.

வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கொரோனவை விரட்ட உதவுவதாக கூறப்படும் டிப்ஸ்கள் அதிவேகத்தில் பரவி வருகின்றன. வீட்டு வைத்தியம் முதல் ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருந்துகள் மற்றும் ஆடியோ மற்றும் வீடியோ ஆலோசனைகள் வரை எளிமையாக இருப்பதாக கூறி சில நேரங்களில் வைரலாகியும் விடுகின்றன.

இப்படி சமூகவலைத்தளங்களில் வரும் ஆலோசனைகளை நிபுணர்களுடன் கலந்தாலோசித்து சரிபார்த்து கொள்ளாமல் பலரும் தங்களது வீடுகளில் பின்பற்ற துவங்கி விடுகின்றனர். இவை சில நேரங்களில் ஆபத்தாக கூட முடிகின்றன. வெறும் 2 - 3 சொட்டு எலுமிச்சை சாற்றை மூக்கில் விடுவதன் மூலம் கொரோனா வைரஸை உடலில் இருந்து அகற்ற முடியும் என்று ஒரு வீடியோ போஸ்ட் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது.

வீடியோவில் பேசிய நபர் 'எலுமிச்சை சிகிச்சை' ('lemon therapy')ஒரு நபரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆபத்தான கொரோனா வைரஸிலிருந்து அவர்களை காப்பாற்றும் என குறிப்பிட்டார். மேலும் 2 சொட்டு எலுமிச்சை சாறை எடுத்து மூக்கிற்குள் விடுமாறும் அறிவுறுத்தினார். இப்படி செய்வதன் மூலம் கண், காது, மூக்கு மற்றும் இதயம் உள்ளிட்ட அனைத்து முக்கிய உறுப்புகளும் வெறும் ஐந்தே வினாடிகளில் சுத்திகரிக்கப்படும். தவிர இது அனைத்து சளி, இருமல் நோய்களை எதிர்கொள்பவர்களுக்கு இந்த முறை நிவாரணம் அளிக்கும் என்று அந்த நபர் வீடியோவில் கூறுகிறார்.

மூக்கில் எலுமிச்சை சாறு விடுவதன் மூலம் கோவிட்-19 ஐ அழிக்க முடியும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை" என PIB தெரிவித்துள்ளது.

Aspidosperma Q 20 எனப்படும் ஹோமியோ மருந்தை மாற்றாக எடுத்துக் கொள்ளலாம் என்று சமீபத்தில் ஒரு போஸ்ட் வைரலானது. ஆனால் ஆயுஷ் அமைச்சகம் இந்த தகவலை நிராகரித்ததுடன், ஆபத்தான நிலையில் சுய மருந்து செய்ய வேண்டாம் என்று மக்களை எச்சரித்தது. அதே நேரத்தில் ஆக்ஸிஜன் ஆதரவு தேவைப்படும் பாதிக்கப்பட்டவருக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது சிகிச்சை தரும் மருத்துவரின் முடிவாகும்" என்று கூறியது.

இதனிடையே, மூக்கில் எலுமிச்சை சாறு விட்ட நபர் உயிரிழந்தார் என்பது கூடுதல் செய்தியாகும்.

Editor's Choice

அறிவியலும், விஞ்ஞானமும் வளர்ந்திருக்கும் நவீன காலத்திலும் சில பல ஆச்சரியங்கள் எப்போதும் காத்திருக்கிறது. அண்மை அதிசயமாக, கருவுற்றிருந்த ஒரு பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், ஏழு குழந்தைகள் கருவில் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

ஆனால், பிரசவத்தின்போது, பிறந்தது ஏழு அல்ல, ஒன்பது குழந்தைகள்! அல்ட்ரா சவுண்ட் உள்ளிட்ட பல பரிசோதனைகளிலும் 7 குழந்தைகள் மட்டுமே கண்டறியப்பட்டன. இந்த அதிசய சம்பவம் நடைபெற்றது ஆஃப்ரிக்க நாடான மாலியில்... 

மொராக்கோவில் உள்ள ஒரு மருத்துவமனையில்  அந்த பெண்ணுக்கு பிரசவம் ஆனபோது ஐந்து பெண் குழந்தைகளும், நான்கு ஆண் குழந்தைளும் பிறந்தன. அவர்கள் அனைவரும் நன்றாக இருக்கிறார்கள்.

ஸ்கேன்களில் தப்பிய இரண்டு குழந்தைகள் எவை என்பது மருத்துவர்களுக்கும் தெரியாது. 
25 வயதான ஹலிமா சிஸ்ஸே என்ற பெண் தான் ஒன்பது குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றவர். மொராக்கோ மருத்துவமனையில் அறுவைசிகிச்சையில் 9 குழந்தைகளும் பிறந்தன. 

மேற்கு ஆஃபிரிக்க நாட்டின் தலைவர்களின் கவனத்தையும் இந்த தாயும் சேய்களும் ஈர்த்திருக்கின்றனர். சிஸ்ஸேவின் ஏழு குழந்தைகளும் பாதுகாப்பாக பிரசவிக்க வேண்டும் என்பதற்காக அரசு நிர்வாகம் மொராக்கோவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. ஆனால் அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக 7க்கு பதில் ஒன்பது குழந்தைகள் பிறந்தன.  

 
Editor's Choice

ஒரு சி டி ஸ்கேன் எடுப்பது சுமார் 300 எக்ஸ்ரே எடுப்பதற்கு சமம் என்றும் சி டி ஸ்கேன் எடுப்பதால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா பேசிய கருத்து காட்டுத்தீபோல் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.

கொரோனா அறிகுறி இருப்பவர்களில், ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்பட்ட பின்னர், ஒரு சிலருக்கு நெகடிவ் என்ற முடிவு வந்தாலும், அறிகுறிகள் நீடிக்கின்றன. இந்த சிக்கலான சமயத்தில் உண்மையில் கொரோனா தொற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று அறிவதற்காக சி டி ஸ்கேன் செய்யப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆர்டிபிசிஆர் சோதனை மூலம் உறுதியான முடிவு தெரியாத நிலையில், சி டி ஸ்கேன் எடுப்பதற்கு பரிந்துரை செய்வதாக கூறும் மருத்துவர்கள், கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் சிடி ஸ்கேன் பற்றி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா பேசியதற்கு வேறு காரணங்களும் உள்ளன என்கிறார்கள்.

''சி டி ஸ்கேன் எடுப்பதற்கு முதலில் மருத்துவரின் பரிந்துரை தேவை. அதிகபட்ச அபாயத்தை தடுப்பதற்குதான் சி டி ஸ்கேன் எடுக்கவேண்டும். சி டி ஸ்கேன் எடுக்கும்போது கதிர்வீச்சு ஏற்படுவது உண்மை. ஆனால் குலேரியா சொல்வதைபோல 300 எக்ஸ்ரே எடுப்பதற்கு சமம் என்று சொல்வது தவறு. 40 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த நிலைமை இருந்தது. ஒரு வேலை குலேரியா மருத்துவ மாணவராக இருந்தபோது அப்போதிருந்த சிடி ஸ்கேன் இயந்திரம் அத்தகைய கதிர்வீச்சு அளவு கொண்டதாக இருந்திருக்கும்.

தற்போது உள்ள சிடி ஸ்கேன் உபகரணங்கள் குறைந்த அளவு கதிர்வீச்சு கொண்டவை. உயிரை காப்பதற்காக மட்டுமே சி டி ஸ்கேன் எடுக்கிறோம். ஒருமுறை ஸ்கேன் எடுத்துவிட்டால் ஒருவருக்கு புற்றுநோய் வந்துவிடும் என்று புரிந்து கொள்ளகூடாது. புற்றுநோய் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கும். சிடி ஸ்கேன்தான் பிரதான வாய்ப்பு என்று சொல்லமுடியாது,''என்கிறார் ரேடியோலஜி துறை மருத்துவர்.

''தற்போதுள்ள சி டி ஸ்கேன் இயந்திரத்தில் கொரோனாவுக்காக எடுக்கப்படும் ஸ்கேனில் அல்ட்ரா லோ டோஸ் ஸ்கேன் என்ற முறை பின்பற்றப்படுகிறது. அதாவது, ஒரு சி டி ஸ்கேன் என்பது குறைந்தபட்சம் 30 எக்ஸ்ரே எடுப்பதற்கு சமம் என்று சொல்லலாம். அதிலும், தற்போது கொரோனா பாதிப்பை கண்டறிய முடியவில்லை என்ற நிலையில் மக்கள் எடுக்கிறார்கள். தொடர்ந்து சிடி ஸ்கேன் எடுக்கும் நபர்களாக அவர்கள் இருப்பதில்லை. ஒரு சிலர் தங்களது வாழ்நாளில் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே எடுத்திருக்கலாம்,''என்கிறார்.

சி டி ஸ்கேன் எடுத்தவர்கள் ஒவ்வொருவருக்கும் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளது என்று சொல்ல முடியாது, ''அடிப்படையில் குழந்தைகளுக்கு சிடி ஸ்கேன் எடுப்பதற்கு அனுமதி அளிப்பதில்லை. இளம் வயதினர் அதிக பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு எடுப்பதால் அவர்களுக்கு உடனே தீவிரமான சிகிச்சை தேவையா அல்லது மிதமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று தெரிந்துவிடும். ஆனால் தொடர்ந்து சிடி ஸ்கேன் எடுப்பதை எந்த மருத்துவரும் பரிந்துரை செய்வதில்லை,''என்கிறார் அவர்..

கடந்த ஒரு வருட காலத்தில் பணம் கொழிக்கும் இடமாக சிடி ஸ்கேன் மையங்கள் மாறிவிட்டன. சிடி ஸ்கேன் மூலம் அதிகப்படியான கதிர்வீச்சு ஏற்படுவது உண்மை. குறைவான கொரோனா பாதிப்புள்ளவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள சிடி ஸ்கேன் எடுப்பதை தவிர்ப்பது நல்லது,''என்கிறார் மற்றொரு மருத்துவர்.

''மூச்சுதிணறல் அதிகமாக உள்ளவர்கள், மருந்துகள் எடுத்துக்கொண்ட பின்னரும் அந்த பிரச்னை தொடர்கிறது என்றால் எடுக்கலாம். ஆக்சிஜன் செறிவு நிலை குறைவாக உள்ள நபர்களுக்கு சிடி ஸ்கேன் பரிந்துரை செய்யப்படுகிறது. கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், அந்த நபருக்கு முன்னேற்றம் ஏற்படவில்லை, கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தொடர்ந்து நீடிக்கின்றன என்ற சமயத்தில் எடுக்கலாம். தனியார் மருத்துவமனைகளில் வருமானத்தை பெறுவதற்காக அச்சத்தில் உள்ள மக்களிடம் பணம் பிடுங்க சிடி ஸ்கேன் என்ற வலை விரிக்கிறார்கள். குலேரியாவின் கருத்து ஓரளவு இத்தகைய மக்களை உஷாராக்கும். ஆனால் குலேரியா கொரோனா முதல் அலை முடிந்து, இரண்டம் அலையின் உச்சத்தில் இதை சொல்வதற்கு பதிலாக, முன்னதாகவே சொல்லியிருக்கலாம்,''என்கிறார் அவர்.

மேலும், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

எய்ம்ஸ் மருத்துவமனையில் கடுமையான சிக்கல்கள் நீடிக்கின்றன. எங்கு பார்த்தாலும், மக்கள் வெள்ளம். ஆர்டிபிசிஆர் சோதனை முடிவுகள் வர மூன்று நாட்கள் ஆகின்றன.

சிடி ஸ்கேன் எடுத்தால் ஐந்து நிமிடத்தில் முடிவு தெரிந்துவிடும். இதனால், டெல்லியில் ஆயிரக்கணக்கவர்கள் சிடி ஸ்கேன் எடுக்க குவிகிறார்கள். எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள தொற்று நோய் துறை மற்றும் ரேடியோலஜி துறைக்கும் பனிப்போர் நடக்கிறது. மக்கள் கூட்டத்தை ஓரளவாவது குறைக்கவேண்டிய சூழல் இங்குள்ளது.

வடமாநிலங்கள் உள்ள சில மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் கூட நவீன சிடி ஸ்கேன் வசதி இல்லை,''என்கின்றனர் மருத்துவர்கள்.

Editor's Choice

1) பாதாம் பருப்பினை வறுத்து அடிக்கடி உண்டு வர, கண் பிரச்சனை தெளிவு பெறும்.

2) ஒரு டம்பளர் கொதிநீரில் ஒரு ஸ்பூன் தேனை கலந்து குடித்தால் 1/4 மணி நேரத்தில் வயிற்று வலி பறந்து விடும்.

3) வேப்பம் பூவுடன் மிளகு, சீரகம் சேர்த்து சாப்பிட்டு வர பித்தப்பை நோய் குணமாகும்.

4) வில்வபழம் சாப்பிட மூளை தொடர்பான நோய்கள் தீரும்.

5) முளைக்கீரை, அதிமதுரம், மஞ்சள் மூன்றையும் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட இருமலும் குணமாகும்.

6) நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

7) எருக்க இலையின் பின்புறம் விளக்கெண்ணெய் தடவி தணலில் காட்டி கட்டிகள் மீது வைத்துக் கட்டினால் கட்டி பழுத்து உடையும்.

8) தக்காளி, கோஸ், கேரட் ஆகியவற்றை சாப்பிட்டால் முக சுருக்கம் நீங்கும்

9) சப்போட்டா பழம் தினமும் பகல் பொழுதில் உண்டுவர இரவில் நன்றாக தூக்கம் வரும்.

10) காய்ச்சிய வேப்ப எண்ணெய் தடவி வர சேற்றுபுண் குணமாகும்.

11) காய்ந்த நெல்லிக்காயை பொடியாக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வர முடி கருமையாகும். முடி உதிர்வது நிற்கும்.

Editor's Choice
தொடர்ந்து கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மருத்துவ நிபுணர்கள் பலரும், 'கொரோனா பரவலை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கை அமல் படுத்த வேண்டும்' என, வலியுறுத்திவருகின்றனர்.
 
இந்தியாவில் தற்போது நிலைமை மிக மோசமாக உள்ளது. மருத்துவமனையில் படுக்கை வசதிகள் ஆக்சிஜன் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மனதில் அச்சம் எழுந்துள்ளது. இந்த நேரத்தில் இந்தியாவுக்கு தேவையான உதவிகளை அமெரிக்காவை போல மற்ற நாடுகளும் செய்ய வேண்டும் என
தொற்றுநோய் சிகிச்சை நிபுணரான டாக்டர் பாசி தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி வழங்கும் பணியை வேகப்படுத்த வேண்டும்; விரிவுபடுத்த வேண்டும். மற்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளுக்கும் இந்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். இதற்கான பலன் உடனடியாக கிடைக்காவிட்டாலும் வைரஸ் பரவலை எதிர்காலத்தில் தடுக்க முடியும்.
 
உடனடி நிவாரணமாக தன்னிடம் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் இந்தியா பயன்படுத்த வேண்டும். தற்காலிக மருத்துவமனை வசதிகளை ஏற்படுத்த ராணுவத்தை பயன்படுத்த வேண்டும். மேலும் சில வாரங்களுக்கு முழு முடக்கத்தை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
 
மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே விஜயராகவன் கூறும் போது
 
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது, ஆனால் இந்த மூன்றாம் கட்டம் எப்போது அல்லது எந்த நேர அளவில் நிகழும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதற்கு நாம் முன்கூட்டியே தயாராக  வேண்டும் என்றும் எச்சரித்தார்.
 
 இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் 3ம் அலை பரவ வாய்ப்புள்ளதாக, எய்ம்ஸ் மருத்துவ இயக்குனர் ரந்தீப் குலேரியா எச்சரித்துள்ளார்.
 
இந்தியா மிக விரைவில் கொரோனா பெருந்தொற்றின் 3ம் அலையை சந்திக்கவுள்ளது. அதனால் குறைந்தது இரு வாரங்களுக்கு நாடு தழுவிய முழு ஊரடங்கு அவசியம். மருத்துவமனைகளை அதிகரித்தல், போதுமான படுக்கை வசதிகளை ஏற்படுத்துதல், மருத்துவமனைகளில் சிகிக்சை முறையை மாற்றுதல் ஆகியவற்றின் மூலமாக நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும். கொரோனா தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்துவதன் மூலமும், கடுமையான ஊரடங்கினை அமல் படுத்துவதன் மூலமும் கொரோனா சங்கிலியை நம்மால் உடைக்க முடியும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பக்கம் 13 / 49