Editor's Choice

கறுப்பு, வெள்ளையை தொடர்ந்து இப்போது மஞ்சள் நிற பூஞ்சை நோய் தாக்குதல் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட்டிங் ஆனது.
 
'மியூகோர்மைகோசிஸ்' ( Mucormycosis ) என்று அழைக்கப்படுகிற கறுப்பு பூஞ்சை நோய் சைனஸ்கள், மூளை மற்றும் நுரையீரலை தாக்குகிறது. இத்தொற்று ஏற்பட்டால் முகம், கண் கீழ்ப்பகுதியில் வலி, வீக்கம், மூக்கடைப்பு, கண் மங்குதல் போன்ற அறிகுறி காணப்படும். இது குணப்படுத்திவிடக்கூடிய நோய் தான் என்றாலும் நோய் தீவிரமானால் உயிரிழப்பும் ஏற்படும். இந்தியாவின் பிற மாநிலங்களிலும், தமிழகத்திலும் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்நோய் கண்டறியப்பட்டுள்ளது. சிலர் இறக்கவும் செய்துள்ளனர்.

இதையடுத்து பீஹாரில் இன்னும் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வெள்ளை பூஞ்சை நோய் கண்டறியபட்டன.  இதையும் விட ஆபத்தான மஞ்சள் நிற பூஞ்சை நோய், உத்தரபிரதேசத்தின் காஸியாபாத்தில் ஒரு நபருக்கு இத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா உடன் இப்படி கலர் கலரா பாதிப்பை ஏற்படுத்தும் பூஞ்சை நோய் தாக்குதல் இந்திய மக்கள் இடையே ஒரு அச்சத்தை உண்டாக்கி உள்ளது. இன்று மஞ்சள் பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது என்ற செய்தி டுவிட்டரில் வேகமாக பரவியதால் இந்த விஷயம் #YellowFungus என்ற பெயரில் தேசிய அளவில் டாப்பில் டிரெண்ட் ஆனது.

‛‛கறுப்பு, வெள்ளையை தொடர்ந்து இப்போது மஞ்சள் பூஞ்சை நோய் தாக்குதல். எனக்கு என்னம்மோ இது சீனாவின் பயோ வார் போன்று தெரிகிறது''. ‛‛என்னடா இது இந்தியாவுக்கு வந்த சோதனை... கலர் கலரா வந்து மக்களை சாவடிக்கிறது. கறுப்பு, வெள்ளை, மஞ்சள், அடுத்து என்ன பின்க் நிறமா...''. ‛‛இந்தியாவில் நடக்கும் மனித அழிவுக்கான போட்டி பந்தயத்தில் புதிய போட்டியாளராக மஞ்சள் பூஞ்சை உள்ளே நுழைந்துள்ளார்'' உள்ளிட்ட கருத்துக்கள் பதிவாகி உள்ளன. கறுப்பு, வெள்ளை, மஞ்சள் அடுத்து என்ன கலர்.... என பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Editor's Choice

விளக்கெண்ணெய் முகத்துக்கு பயன்படுத்துவதன் நன்மை குறித்து ஆய்வுகள் குறைவாகவே உள்ளது. ஆனால் விளக்கெண்ணெய் சருமத்துக்கு நன்மைகள் செய்யும் என்று சான்றுகள் தெரிவிக்கிறது.

விளக்கெண்ணெய் என்றால் எல்லோருக்கும் எளிதாக புரியும். முத்துகொட்டையிலிருந்து எடுக்கப்படும் விளக்கெண்ணெய் பாதுகாப்பானது. பாரம்பரியமாகவே கைவைத்தியம், சித்தவைத்தியம், ஆயுர்வேதம் போன்றவற்றில் விளக்கெண்ணெயும் பயன்படுத்தப்படுகிறது. கண் எரிச்சலை போக்க விளக்கெண்ணெயை எகிப்தியர்கள் பயன்படுத்தி வந்தார்கள். முகத்துக்கு இதன் மேற்பூச்சு பயன்படுத்தும் போது உண்டாகும் அறிகுறிகள் குறித்து பார்க்கலாம்.

சருமம் எப்போதும் ஈரப்பதமாக இருக்க வேண்டும். இல்லையெனில் வறட்சியாகி வெடிப்பை உண்டாக்கும். சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க போதுமான தண்ணீர் குடிப்பது அவசியம். அதனோடு பராமரிப்பும் தேவை. சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும் விளக்கெண்ணெய் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்றாலும் மற்ற தாவர எண்ணெயை போலவே விளக்கெண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்கும் என்றும் சான்றுகள் சொல்கிறது.

முகப்பருக்கள் பெரும்பாலும் எண்ணெய்பசை சருமத்தால் வருகின்றன என்றாலும் பராமரிப்பு சரியில்லாத நிலையிலும் இவை வரலாம். முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்தால் முகப்பருவை தடுக்கலாம். விளக்கெண்ணெய் தயாரிக்க பயன்படுத்தும் முத்துகொட்டை விதைகள் புரோட்டின் சாற்றில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கின்றன.

முகத்தில் சிவப்பு தடிப்பு, அரிப்பு போன்றவை சருமத்தை பாதிப்புக்குள்ளாக்கும். அது தீவிரமாகாமல் ஆரம்பகட்டத்தி சிகிச்சை மேற்கொள்ளலாம். பூஞ்சை தொற்று விளக்கெண்ணெய் சரிசெய்யகூடும். கேண்டிடா வளர்ச்சியை விளக்கெண்ணெய் தடுக்க கூடும். இந்த பூஞ்சை வாய் வழி தொற்று, ஆணி பூஞ்சை. கால், டயபர் சொறி போன்றவற்றை உண்டாக்கும். முகத்தில் உண்டாகும் சிவப்பு தடிப்பையும் சரி செய்யகூடும்.

விளக்கெண்ணெய் எலிகள் மீது கொண்ட ஆய்வில் அதில் உள்ள ரிகினோலிக் அமிலத்தின் அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகள் எலிகளின் வீக்கத்தை தடுக்க உதவியது. இந்த ஆய்வு மற்ற கினிப் பன்றிகள் மீதும் செய்யப்பட்டது.

ரிகினோலிக் அமிலம் கொண்ட இந்த ஜெல்கள் வீக்கத்தை குறைத்து வலி நிவாரணத்துக்கு உதவக்கூடும். எனினும் விளக்கெண்ணெய் நன்மைகளை மேலும் உறுதியாக அறிய மனிதர்கள் மீதான ஆய்வுகளும் தேவை.

விளக்கெண்ணெயின் ஈரப்பதமூட்டும் பண்புகள் வெயிலுடன் தொடர்பு கொண்டுள்ள சரும எரிச்சலை போக்க செய்யலாம். இது வலியையும் ஆற்ற உதவும் என்று சான்றுகள் தெரிவிக்கின்றன. விளக்கெண்ணெய் அழற்சி எதிர்ப்பு தான் இந்த பண்புகளுக்கு காராணம் என்று சொல்லப்படுகிறது.

விளக்கெண்ணெய் அடர்த்தியாக இருப்பதால் அது சருமத்தில் சீராக பயன்படுத்துவதில் பலரும் தயங்குகிறோம். ஆனால் இதை சரியான முறையில் எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

விளக்கெண்ணெய் அடர்த்தியானது என்பதால் இதை அப்படியே நேரடியாக பயன்படுத்துவதில் தயக்கம் இருக்கலாம். ஆனால் விளக்கெண்ணெய் இரண்டு டீஸ்பூன் எடுத்து அதில் சுத்தமான பருத்தி உருண்டையை நனைத்து ஊறவைத்து சருமத்தில் முகம், கழுத்து பகுதியில் நேரடியாக துடைத்து விடவும்.

பிறகு வட்ட இயக்கங்களில் 3-5 நிமிடங்கள் எண்ணெயை மசாஜ் செய்யவும். பிறகு இலேசான ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தை கழுவி எடுக்கவும். விளக்கெண்ணெய் அடர்த்தியை விரும்பாதவர்கள் மற்ற தாவர எண்ணெய்களுடன் இதை கலந்து பயன்படுத்தலாம்.

Editor's Choice

கொரோனாவிலிருந்து  மீண்டு வருபவர்களை கருப்பு பூஞ்சை (Black Fungus) என்ற புதிய தொற்று தாக்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த புதிய வகை வைரஸ் காரணமாக  தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் உயர்பலிகளும் நிகழ்ந்துள்ளது. மேலும் இந்த கருப்பு பூஞ்சை நோய் புதிய தொற்று இல்லை. இவை ஏற்கனவே இருக்கும் நோய் தான் என்றாலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களை இது அதிகமாகத் தாக்குகிறது.

இந்நிலையில், கருப்பு பூஞ்சை பாதிப்பு பற்றி எய்ம்ஸ் பேராசிரியர்  கூறுகையில், "நீரிழிவு நோய் அதிகம் உள்ளவர்கள், கொரோனா சிக்சிச்சையின்போது டோசிலிசுமாப் மருந்துகளுடன் ஸ்டீராய்டுகள் எடுத்துக்கொண்டவர்கள், மூச்சுத் திணறல் பிரச்சினை உள்ளவர்கள் ஆகியேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் கருப்பு பூஞ்சை நோயால் எளிதாகப் பாதிக்கப்படுபவர்களுக்கு Posaconazole மருந்தை வழங்க வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருப்பு பூஞ்சையின் அறிகுறிகள் சரியான நேரத்தில் கவனிக்கப்பட்டால், நோயாளியின் உயிரைக் காப்பாற்ற முடியும்:
- கண்களில் அல்லது கண்களைச் சுற்றி சிவப்பாக இருப்பது அல்லது வலி இருப்பது
- அடிக்கடி காய்ச்சல்
- தலையில் கடுமையான வலி
- சுவாசம் மற்றும் மூச்சுத் திணறல்
- இரத்த வாந்தி
- மன நிலையில் மாற்றம் 

நோயாளி ஹைப்பர் கிளைசீமியாவைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். அதாவது நோயாளிகள் தங்களது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். கோவிட் -19 ல் இருந்து மீண்டு, மருத்துவமனையில் இருந்து திரும்பிய பின்னர், வீட்டிற்கு வந்த பிறகும் இரத்த குளுக்கோஸ் அளவை குளுக்கோமீட்டரின் உதவியுடன் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம். ஸ்டெராய்டுகளை அதிகம் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. மருந்துகளுக்கான சரியான அளவுகள் மற்றும் நேர இடைவெளிகளை அறிய வேண்டும். மேலும், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

நோயின் அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள். மூக்கு அடைபட்டால், அது சைனஸ் பிரச்சனை தான் என எண்ணி அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். குறிப்பாக கோவிட் -19 நோயாளிகள் மூக்கடைப்பை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களுக்கு சந்தேகம் வந்தால், உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள். முகோர்மைகாசிஸ் அல்லது கருப்பு பூஞ்சை சிகிச்சையில் தாமதம் ஏற்பட்டால் நோயாளி இறக்க வாய்ப்புள்ளது. ஆரம்பத்தில், அறிகுறிகளைக் கண்டறிந்த பிறகு சரியான நேரத்தில் சிகிச்சை எடுப்பது மிகவும் முக்கியம்.

ஒரே மாஸ்க்கை அதிக முறை பயன்படுத்துவது கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுவதாக எய்ம்ஸ் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

Editor's Choice

இரவு நேரத்தில்  அசைவ உணவு  எடுத்துக்கொள்ள கூடாது. அசைவ உணவு செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் இரவு நேரத்தில் இந்த செரிமானமானது நடைபெறாது. எனவே இரவு நேரங்களில் கண்டிப்பாக அசைவ உணவுகள் எடுப்பதை தவிர்க்கவும். 

இரவு நேரத்தில் வாயு அதிகமாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை உண்ண வேண்டாம். இதற்கு காரணம் வாயுவானது இதயத்திற்கு நேரடியாக சென்று இரத்த குழாயில் அடைப்பை ஏற்படுத்தி விடும். 

இரவு வேலையில் சாதம் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். சாதத்தில் உள்ள கார்போஹைட்ரேட் செரிமானம் ஆவதற்கு கூடுதல் நேரம் எடுத்து கொள்ளும். 

முட்டையில் வாயுச்சத்து அதிகமாக உள்ளதால் இரவு நேரங்களில் முட்டை சாப்பிடுவதை தவிருங்கள். அதிலும் முக்கியமாக வயதானவர்கள் இரவு வேலையில் முட்டையை அறவே ஒதுக்க வேண்டும். 

மைதா மாவினால் ஆன எந்த ஒரு பண்டத்தையும் இரவு நேரத்தில் எடுக்க வேண்டாம். மைதா மாவின் இழுப்பு தன்மை காரணமாக அது குடலில் சென்று சிக்கிக் கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. எனவே பரோட்டா போன்றவற்றை இரவு நேரத்தில் சாப்பிட கூடாது. 

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பலவிதமான உணவு கட்டுப்பாட்டில் இருந்து வருவார்கள். அவர்களுக்கு சரியான நேரங்களில் சரியான உணவை சாப்பிட்டு வர வேண்டிய என்ற ஒரு கட்டாயம் இருந்துகொண்டே இருக்கும். அந்த சூழலில் உள்ளவர்கள் இரவு நேரங்களில் எந்த வகையான உணவை சாப்பிடலாம் என்று குழப்பத்துடன் இருக்கிறார்கள். பலரும் இரவு நேர உணவுகளை தவிர்த்து வருகிறார்கள். இரவு நேரங்களில் உணவு சாப்பிட்டால் சில பேருக்கு சரியான செரிமானம் ஆவதில்லை. அதனால் இரவு நேர உணவு வகைகளை பலரும் தவிர்த்து வருகிறார்கள். பருப்பு வகைகள் நல்ல சத்துக்கள் கொண்டதாக இருக்கிறது.

அனைத்து உணவு நிபுணர்களும் பருப்பு வகை உணவு உண்பதற்கு எந்த கட்டுப்பாடும் பெரிய அளவில் விதிப்பதில்லை. ஆனால் பருப்பு வகைகளில் அதிகமான கலோரிகள் இருப்பதால் இரவில் பருப்பு வகைகளை சாப்பிடலாமா என்று பலருக்கும் குழப்பங்கள் நீண்டுகொண்டே இருக்கிறது. ஒரு கப் எத்தனை கலோரிகள் இருக்கிறது அதை சாப்பிடலாமா என்று பலருக்கும் சந்தேகங்கள் இருந்துகொண்டே இருக்கிறது. வட இந்தியாவில் பலரும் பருப்பு ஒரு உணவாகவே சாப்பிட்டு வருவார்கள். தென்னிந்தியாவில் பருப்பை சாம்பார் வகைகள் வடிவில் சாப்பிடுகிறோம்.

இட்லி, தோசை, மதிய உணவு போன்ற அனைத்திற்கும் சாம்பார் உபயோகம் செய்கிறோம். அதிலும் பருப்பு இருக்கின்றது எனவே அனைத்து இந்தியர்கள் உணவிலும் பருப்பு இருந்து கொண்டே இருக்கிறது. ஆந்திராவில் சாப்பாட்டில் பருப்பு பொடி கலந்து சாப்பிடுவார்கள். இப்படி பருப்பு பலவகைகளில் நன்மை செய்தாலும் அதில் அதிகமான கலோரி உள்ளது. உடல் எடை குறைப்பவர்களுக்கு அது தடையாக இருக்குமா என்று சந்தேகம் இருக்கிறது.

இரவில் பருப்பு சாப்பிடலாம் ஆனால் சிறிய அளவில் சாப்பிட வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள் நிபுணர்கள். அதிலும் முக்கியமாக பாசிப்பருப்பை சேர்த்துக் கொள்ளலாம் என்று குறிப்பிடுவார். பாசிப்பருப்பு ஓரளவுக்கு எளிதாக ஜீரணம் ஆகக் கூடியது. இரவு நேரங்களில் அனைத்து விதமான உணவு வகைகளையும் சாப்பிடலாம். இரவு தூங்குவதற்கு மூன்று மணி நேரங்களுக்கு முன்பு சாப்பிட்டுவிட வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

இரவு நேர உணவை மிகவும் லேசான உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். பருப்புடன் சேர்த்து மிகவும் அதிகமான உணவை உட்கொள்வதே குறைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்ற உணவுகளை இரவு குறைத்துக் கொள்ள வேண்டும். இரவில் குறைவாக சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்.

ஆயுர்வேதம் என்பது மூன்று தூண்களை கொண்டது. வாதம், பித்தம், கபம் எனப்படும். சில பருப்பு வகைகள் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். எளிதில் ஜீரணம் ஆவதில் சிக்கலாக இருக்கும் ஒருசில பருப்பு வகைகள் லேசானதாக இருக்கும். இரவில் எளிதாக ஜீரணம் ஆகிவிடும். அதிகமாக இரவில் பருப்பு எடுத்துக் கொள்வது நம் இரவு நேரங்களை இடைஞ்சல் செய்யும். சரியான ஜீரணம் ஆகாமல் அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.. மேலும் தோசை போன்ற உணவிற்கு பருப்பை இலேசாக எடுத்துக் கொள்வதில் எந்தவித தவறும் இல்லை.

இரவில் பருப்பு சாப்பிடுவது தவறு இல்லை, ஆனால் மிகவும் குறைந்த அளவில் சாப்பிட வேண்டும். பின்பு பொரித்த உணவுகள், பாதாம், சீஸ் பனீர், பட்டர், நெய் போன்ற உணவுகளை இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அப்படியே சாப்பிட்டாலும் மிகவும் குறைந்த அளவில் சாப்பிட வேண்டும் தூங்குவதற்கு சரியாக மூன்று மணி நேரங்களுக்கு முன்பு சாப்பிட வேண்டும்.

இரவு பருப்பு சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் பாசிப்பருப்பு உபயோகம் செய்யலாம். பாசிபருப்பு சாம்பார் போன்றவையை நாம் எடுத்துக் கொள்ளலாம். பாசிப்பருப்பு எளிதாக ஜீரணம் ஆகக் கூடியதாக இருக்கிறது.

Editor's Choice

வீட்டில் வளரும் கற்றாழையைக் கொண்டு கைவைத்தியம் செய்து, சிறு சிறு நோய்களைக் குணப்படுத்தலாம்

வறண்ட சூழலிலும் பல ஆண்டுகள் வாழும் சிறு செடி இது. சதைப்பற்றுள்ள மடல்களை அழுத்திப் பிழிந்தால் கசப்புச் சுவை கொண்ட திரவம் வெளியாகும். இதன் உட்பகுதியில் இருக்கும் கூழ் போன்ற பகுதியே ‘கற்றாழைச் சோறு’ எனப்படுகிறது. Aloe barbadensis எனும் தாவரவியல் பெயர் கொண்ட கற்றாழை லிலியேசி (Liliaceae) குடும்பத்தைச் சேர்ந்தது. அலோசின் (Aloesin), அலோ-எமோடின் (Aloe-emodin), Aloin, Isobarbaloin, லிக்னின்ஸ், அமினோ அமிலங்கள் ஆகிய தாவர வேதிப்பொருட்கள் கற்றாழையின் உள்ளன.

உணவாக: தோல் சீவிய பின், உள்ளிருக்கும் பனிக்கூழ் போன்ற பகுதியை ஆறேழு முறை நீரிலிட்டுச் சுத்தம்செய்து, பின் மோருடன் கலந்து, உப்பும் சீரகத்தூளும் சேர்த்து மத்து கொண்டு நன்றாகக் கடைந்து எடுத்தால், குளுகுளு கற்றாழைப் பானம் தயார். பனிக்கட்டி இல்லாமலே குளிர்ச்சியைத் தரக்கூடிய இந்தப் பானத்தை வேனிற்காலத்தில் குடித்துவர, உடல் வெப்பத்தைக் குறைக்கும்.

வயிற்றுப் புண்களைக் குறைப்பதற்கான சிறந்த பானம் இது. கற்றாழைக் கூழுடன் சிறிது கடுக்காய்ப் பொடி தூவி, ஒரு பாத்திரத்தில் வைக்க சில மணி நேரத்தில் வடியும் சாற்றைப் பானமாகவும் மருந்தாகவும் பயன்படுத்தலாம். விந்தின் தரத்தை அதிகரிக்க, பாலில் ஊறவைத்த காற்றாழைச் சோற்றைச் சாப்பிட்டும் வரலாம்.

மருந்தாக: கற்றாழையில் உள்ள கொலாஜென், எலாஸ்டின் போன்றவை புரதங்களின் உற்பத்தியை அதிகரித்து, தேகத்தில் உண்டாகும் வயோதிக மாற்றத்தைத் தள்ளிப்போடுவதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றன. வீக்கமுறுக்கி செய்கையுடைய Cglycosyl chromone எனும் பொருள் கற்றாழையிலிருந்து சமீபத்தில் பிரித்தெடுக்கப்பட்டது. வலி உண்டாக்கும் பிராடிகைனினுடைய (Bradykinin) செயல்பாட்டைத் தடுத்து, உடனடி வலிநிவாரணியாக இது செயல்படுவதையும் ஆய்வு உறுதிப்படுத்துகிறது.

மார்பகப் புற்றுநோய் வராமல் பாதுகாக்கும் தன்மை கற்றாழைக்கு இருப்பதாக ஆய்விதழ் கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது. கற்றாழையை நன்றாக உலரவைத்து வற்றலாகவோ பொடியாகவோ உணவில் சேர்த்துவந்தால், ‘முதுமையிலும் இளமை காணலாம்’ எனும் காயகல்ப முறையைப் பற்றி சித்தர் தேரையர் வலியுறுத்துகிறார்.

வீட்டு மருந்தாக: கற்றாழையோடு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சித் தயாரிக்கப்படும் எண்ணெய்யைத் தேய்த்துத் தலை முழுக, நல்ல உறக்கத்தைக் கொடுக்கும். தலைமுடி வளர்ச்சிக்கும் நல்லது. வாரம் ஒருமுறை கற்றாழைக் கூழோடு சிறிது உப்பு சேர்த்து வாய்க் கொப்பளித்து வர பற்கள் பலமாகும்.

ஈறுகளிலிருந்து வடியும் குருதியும் நிற்கும். நெருப்பு சுட்ட புண்களுக்கு வாழை இலையோடு சேர்த்து, கற்றாழையைப் பயன்படுத்தலாம். கை, கால் எரிச்சல், சிறுநீர் எரிச்சலைக் குறைப்பதிலும் கற்றாழையைக்கொண்டு தயாரிக்கும் மருந்துகள் பலன் தரக்கூடியவை.

அழகு தர: முகப் பொலிவை மெருகேற்ற வேதியியல் கலவைகள் நிறைந்த செயற்கை கிரீம்களுக்கான சிறந்த மாற்று கற்றாழை. மேல்தோலைச் சீவிவிட்டு உள்ளிருக்கும் பனிக்கூழ் போன்ற பகுதியை முகத்தில் நாள்தோறும் தடவிவர, கற்றாழையைப் போல விரைவில் முகமும் பொலிவடையும். கிரீம்கள், சோப்பு போன்ற செயற்கை அழகுசாதனப் பொருட்கள், கற்றாழையின் சத்து இல்லாமல் முழுமையடையாது.

நேரடியாக சூரிய ஒளியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க (Sun screen) காற்றாழைக் கூழைப் பூசிக்கொள்ளலாம். உடலில் தேய்த்துக் குளிக்கவும் கற்றாழையைப் பயன்படுத்தலாம். வறண்ட சருமம் கொண்டவர்கள் கற்றாழையைப் பூசிவர, தோல் நீர்த்தன்மை பெற்று தேகம் புத்துணர்ச்சி பெறும். தோலில் சுருக்கங்கள் உருவாவதைத் தடுக்கும்.

கருப்பையில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கொடுப்பதால், கற்றாழை ‘பெண்களுக்கான வரப்பிரசாதம்!’. மாதவிடாய் காலத்தில் உண்டாகும் அடிவயிற்று வலியைக் குறைக்க, கற்றாழைச் சாற்றில் சிறிது பனங்கற்கண்டு சேர்த்துக் கொடுப்பது வழக்கம்.

கர்ப்பிணிகளின் உடற்சூட்டைத் தணிக்க, சுகப்பிரசவத்தைத் தூண்ட உதவும் ‘பாவனபஞ்சாங்குல தைல’த்தில் கற்றாழை சேர்க்கப்படுகிறது. கற்றாழையைக் கொண்டு தயாரிக்கப்படும் பெண்களுக்கான சித்த மருந்துகளின் எண்ணிக்கையோ அதிகம்.

ஆசனவாய் சார்ந்த நோய்களைத் தடுக்க உதவும் ‘குமரி எண்ணெய்’, கருப்பைக்கு வலுவூட்டும் ‘குமரி லேகியம்’ என சித்த மருந்துகளில் கற்றாழையின் பங்கு அதிகம். அதிவெப்பம் காரணமாகக் கண்களில் உண்டாகும் எரிச்சலைக் குறைக்க, சிறுதுண்டு கற்றாழையைக் கண்களின் மீது வைத்துக் கட்டலாம்.

கற்றாழை மடல்களுக்கு இடையில் இரவு முழுவதும் வைத்து முளைகட்டிய வெந்தயத்தைச் சாப்பிட்டுவர வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும். கற்றாழையின் உலர்ந்த பாலுக்குக் கரியபோளம், மூசாம்பரம் போன்ற பெயர்கள் உள்ளன. கருப்பையில் உண்டாகும் தொந்தரவுகளுக்கு முக்கிய மருந்தாக கரியபோளம் பயன்படுகிறது.

ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயமாக இருக்க வேண்டிய மூலிகைப் பட்டியலில் கற்றாழையும் ஒன்று. வளமான மண்ணும் சிறிது நீர் வளமும் இருந்தால், கற்றாழைகள் செழிப்பான வளர்ச்சியைக் கொடுக்கும். விரைவில் தாய்க் கற்றாழையைச் சுற்றி உருவெடுக்கும் பல அழகான ‘கற்றாழைக் குழந்தை’களை ரசிக்க இருகண்கள் போதாது.

கற்றாழையில் ஆன்டி-செப்டிக் குணங்கள் அதிகமாக உள்ளது. அதனால் காயங்கள், புண்கள் மற்றும் பூச்சிக் கடிகள் போன்றவற்றிற்கு இதனைப் பயன்படுத்தலாம். அதற்கு இந்த செடியின் உட்புறத்தில் உள்ள ஜெல் போன்ற பகுதியை காயம் பட்ட இடத்தில் தடவ வேண்டும். இது எரிச்சலை குறைத்து புண்களை செரிசெய்யும்.

கற்றாழையில் உள்ள நார்ச்சத்துக்கள், மலச்சிக்கலை நீக்கி செரிமானத்திற்கு உதவும். அதிலுள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலுக்கு தீர்வாக அமையும். மேலும் இது மலச்சிக்கல் ஏற்படும் போது, அதனால் உண்டாக்கும் எரிச்சலையும் நீக்கும்.

கற்றாழையை பருக்களை நீக்க பயன்படுத்தலாம். ஆனால் கற்றாழையை கொண்டு பருக்களை முழுமையாக நீக்க முடியாது. அழற்சியையும், சருமம் சிவந்திருப்பதையும் தடுக்கலாம். மேலும் பருக்கள் உடைவதையும் தடுக்கும்.

கற்றாழை நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. அது சருமத்தை புதுப்பித்து ஆரோக்கியமாக வைத்து அதன் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் செயல்பாடுகள் மூலம் சருமத்தை இளமையாக மாற்ற உதவுகிறது.

Editor's Choice

 தடுப்பூசி (Vaccine) போட்டுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால், எந்த தடுப்பூசியை போட்டுக்கொள்வது நல்லது என்ற கேள்வியும் பலரது மனதிலும் உள்ளது. மூன்றாவது தடுப்பூசியான ஸ்பூட்னிக் வி இப்போதுதான் பொது மக்களுக்கு, அதுவும் சில இடங்களில் மட்டுமே கிடைக்கத்துவங்கியுள்ள நிலையில், தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் மட்டுமே கிடைக்கின்றன.

சமீபத்தில், மேதாந்தா மெடிசிட்டியின் தலைவர் டாக்டர் சுஷீல் கடாரியா, இது குறித்த தனது கருத்தை வெளியிட்டார். மக்களிடம் தடுப்பூசி தொடர்பான எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது என அவர் கூறுகிறார். இப்போது தடுப்பூசி போடுவதற்கான நேரமே தவிர, தடுப்பூசியின் பிராண்டை தேர்ந்தெடுப்பதற்கான நேரம் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யார் கோவிஷீல்ட் (Covishield) தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும், யார் கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என்பது குறித்த தகவலையும் டாக்டர் கட்டாரியா வழங்கியுள்ளார்.   '18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களும் தடுப்பூசிக்கு பதிவு செய்வதற்கு முன்னர் தங்கள் உடல நல கூறுகளை மனதில் கொள்ள வேண்டும். இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளை உட்கொள்ளும் வயதானவர்கள் கோவாக்சின் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்' என்று அவர் கூறினார்.

'கோவிஷீல்ட் முக்கியமாக வயதானவர்களுக்கு அல்லது கடுமையான இணை நோய் உடையவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவை தவிர, சில அறிக்கைகளின்படி, ஒவ்வாமை உள்ளவர்கள், காய்ச்சல் உள்ளவர்கள், நோயெதிர்ப்பு அமைப்பு தொடர்பான மருந்துகளை எடுத்துக்கொள்கிறவர்கள் ஆகியோர் கோவாக்சின் செலுத்திக்கொள்ள வேண்டாம் என்றும் கூறப்படுகிறது.'

'ஆக்ஸ்போர்டு-ஏக்ஸ்ட்ராஜெனெகா (Oxford-Astrazeneca jab) தடுப்பூசியைத் தேர்ந்தெடுக்கும் இள வயதினரில், கோவாக்சினை ஒப்பிடும்போது அதிக பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. கோவிஷீல்ட் அதிக நோயெதிர்ப்பு சக்தியைக் காட்டுகிறது என்றும் இதனால், இதில் அதிக பக்கவிளைவுகள் இருப்பதாகவும் பல அறிக்கைகள் மூலம் தெரிய வந்துள்ளது. எனவே, இளைஞர்கள் கோவாக்சினை செலுத்திக்கொள்வது நல்லது' என்றார்.

தடுப்பூசியின் நன்மைகளைப் பற்றி பேசிய டாக்டர் கட்டாரியா, 'கோவிஷீல்ட்டின் டோஸ் கோவாக்சினைக் காட்டிலும் உடலுக்குள் அதிக ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. ஆகையால், நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக உள்ளவர்கள், கோவாக்சினைத் தவிர்த்து கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம்' என்று தெரிவித்தார்.

பக்கம் 8 / 49