Editor's Choice

கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொடர்பான பல்வேறுவிதமான ஆராய்ச்சிகளும் உலகெங்கிலும் முன்னெடுக்கப்படுகின்றன.
 
ஆராய்ச்சிகளின் ஒருபகுதியாக, கொரோனா வைரஸை (SARS-CoV-2) மோப்ப நாய்கள் அடையாளம் காணுமா என்ற ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதில், 90 சதவிகிதத்திற்கும் அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்களை அடையாளம் காண, நாய்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட முடியும் என்று தெரியவந்துள்ளது.

அறிகுறிகள் இல்லாத கொரோனா பாதிப்பையும்ம் நாய்களால் கண்டறிய முடியும் என அந்த ஆய்வு கூறுகிறது. 

இது கொரோனா பாதிப்பு உள்ளவர்களை கண்டறிய மிகச் சிறந்த உதவியாக இருக்கும். அதிலும், மோப்ப நாய்களின் உதவியைப் பயன்படுத்தி ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வருபவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை சுலபமாக கண்டறியலாம். தொற்று இல்லாதவர்களை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

புற்றுநோய், மலேரியா போன்ற நோய்களை  நாய்களால் கண்டறிய முடியும் என்பது ஏற்கனவே நிரூபணமாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.  

COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வெளியாகும் வாடையை நாய்களால் கண்டறிய முடியுமா என்றா ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வை London School of Tropical Medicine அமைப்பைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்டனர்.

இதன் அடிப்படையில், வெளிநாடுகளில் இருந்து விமான நிலையங்களில் வந்து இறங்குபவர்களில் 91 சதவிகிதத்தினரை மோப்ப நாய்கள் கண்டறியும் என்று கண்டுபிடிக்கப்பட்டது.  இந்த ஆராய்ச்சியின் முடிவு நம்பிக்கை அளித்துள்ளது.

பிற  பரிசோதனைகளைக் காட்டிலும், நாய்களால் விரைவாகக் கிருமித்தொற்றைக் கண்டறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இந்த ஆய்வை, பிற ஆய்வாளர்கள் இன்னும் மதிப்பீடு செய்யவில்லை. மதிப்பீடுகள் செய்யப்பட்டு, முடிவுகள் சாதகமாக வந்தால், கொரோனா பாஸிடிவ் நோயாளிகளை நாய்களே கண்டுபிடித்துவிடும்.

மோப்ப நாய்கள், மனிதர்கள் அணியும் சாக்ஸ் போன்றவற்றை நுகர்ந்து  “கொரோனா வாசனையை” கண்டறியும் என்று பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

Editor's Choice

சுரைக்காய் ஒரு காய் என்று தெரியும். இது உண்ணும் காயாக மட்டுமல்ல, நீரை சேமித்து வைக்கும் கலனாகவும் பயன்படுத்தப்பட்டது.

சுரைக்காயின் உள்ளிருக்கும் சதைப் பகுதிகளை அகற்றிவிட்டு, காயை காய வைத்தால், அது குடுவையாக மாறிவிடும். அதில் நீர் சேமித்து வைப்பார்கள். பார்ப்பதற்கு நாம் பயன்படுத்தும் கூஜா போல இருக்கும் சுரைக்காயில் இருந்து தயாரிக்கப்படும் Water Bottle பெயர் சுரைக்காய் குடுவை.
 
கிராமப்புறங்களில் வீட்டு தோட்டங்களில் விளைவிக்கப்படும் சுரைக்காய் உடலுக்கு சத்து தருவதோடு மருத்துவகுணம் நிறைந்துள்ளது.

முற்றின காய்ந்த சுரைக்காய், இசைக்கருவியாகவும், மீன்பிடிக்கும் கருவியாகவும் பயன்படுகிறது. சுரைக்காயின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

சுரைக்காயில் சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ்,இரும்புச் சத்து, வைட்டமின் பி போன்றவை உள்ளன. மேலும் இதில் 96.1% ஈரப்பதமும், 0.2% புரதமும், 0.1% கொழுப்பும், 0.5% தாது உப்புகளும், 0.6% நார்ச் சத்தும், 2.5% கார்போஹைடிரேடும் உள்ளது.

விலையில் மலிவான சுரைக்காய், ஊட்டச்சத்துக்களில் மிகவும் சிறந்தது. உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். உடல் சூட்டைத் தணிப்பதோடு, உடலுக்கு மினுமினுப்பையும் கொடுக்கும் காய் சுரைக்காய்.  

சிறுநீரை நன்றாக பிரித்து, சிறுநீரக நோய்கல் ஏற்படாமல் காக்கிறது சுரைக்காய். எனவே, சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பழுத்த சுரைக்காயை ரசமாக்கி, அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை ரசத்தையும் சேர்த்து அருந்தினால், படிப்படியாக கோளாறுகள் சரியாகும்.

உடல் பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் சிறந்தது. சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலைப்படும்.

சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து உடலை வலுப்படுத்தும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தி பெண்களுக்கு உண்டாகும் ரத்தசோகையைப் போக்கும். குடல் புண்ணை ஆற்றும். மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து.

ஒரு துண்டு சுரைக்காய், விதை நீக்கிய ஒரு நெல்லிக்காய் இவற்றை நீர்விட்டு அரைத்து சாறு பிழிந்து வாரம் இருமுறை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.  

இத்தனை நன்மைகளைக் கொண்டுள்ள சுரைக்காயை சமைக்காமல் பச்சையாக உண்டால், வயிறும், குடலும் பாதிக்கப்படும். 

Editor's Choice

உடலில் உள்ள ஹார்மோன் மாற்றங்களினால் சில பெண்களுக்கு அதிகமான ரோம வளர்ச்சி ஏற்படும். பெரும்பாலும் உதட்டுக்கு மேல், காதுகளுக்கு அருகில் மற்றும் தாடை பகுதிகளில் அதிகமாக வளரும் இத்தகைய ரோமைங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவது சற்று கடினம் தான் என்றாலும் முறையான குறிப்புகளை பயன்படுத்தி இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

முகத்திலிருக்கும் தேவையற்ற ரோமங்களை அகற்ற இதோ சில எளிய டிப்ஸ்…

சிறிதளவு சக்கரை, எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு கலவையை தயார் செய்து கொள்ளவும். இந்த ஸ்கரப்பை முகத்தில் ரோமங்கள் இருக்கும் இடத்தில் கீழிருந்து மேலாக தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்து பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடவும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து செய்து வந்தால், முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சியை தடுக்கலாம். பருக்கள் உள்ளவர்களும் இந்த முறையை பின்பற்றினால் பருக்களை படிப்படியாக மறையும்.

சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் தூளுடன், தேவையான அளவு பால் சேர்த்து நன்றாக குழைத்து ரோமங்களின் மீது பூசவும். இந்த கலவையை சுமார் ஒரு 10 நிமிடங்களுக்கு முகத்தில் தேய்த்து, காய்ந்த பிறகு கழுவினால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடைப்படுவதோடு முகம் பட்டுப்போல் பொலிவடையும். இந்த ஸ்கரப்பை வாரத்திற்கு 3 முறை செய்ய வேண்டும்.

சிறிதளவு எலுமிச்சை சாறுடன், தேவையான அளவு தேன் சேர்த்து நன்றாக குழைத்துகொள்ளவும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் சுத்தமடைவதோடு, தேவையற்ற ரோமங்களின் வளர்ச்சியும் படிப்படியாக குறையும்.

Editor's Choice

சீனாவின் வுஹான் ஆய்வகம் பற்றியும், சீனா மூடி மறைத்த சில விஷயங்கள் பற்றியும் ஒரு சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா தனது முதல் கோவிட் நோயாளியைப் பற்றி முதன் முதலாக அறிவிப்பதற்கு சுமார் ஒரு மாதம் முன்னர், சீனாவில் உள்ள வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி நிறுவனத்தின் 3 ஆராய்ச்சியாளர்கள் 2019 நவம்பரில் நோய்வாய்ப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற முயன்றதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது. ஒரு சீன ஆய்வகத்திலிருந்துதான் கொரோனா வைரஸ் உலகில் பரவியுள்ளது என்ற ஊகம் இதன் மூலம் மேலும் வலுப்பெற்றுள்ளது. கோவிட்-19 எவ்வாறு தோன்றியது என்பது குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் முடிவெடுக்கும் குழுவின் சந்திப்புக்கு முன்னதாக இந்த வெளிப்பாடுகள் வந்துள்ளன. 

பாதிக்கப்பட்ட ஆராய்ச்சியாளர்களின் எண்ணிக்கை, அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த கால அளவு, அவர்கள் மருத்துவமனைகளுக்கு சென்றுவந்த தகவல்கள் ஆகியவை குறித்த புதிய விவரங்களை வெளியிட்டுள்ளது. ஜனவரி மாதம் டிரம்ப் நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வெளியுறவுத்துறை ஃபாக்ட் ஷீட்டில், 2019 இலையுதிர்காலத்தில் சீன ஆராய்ச்சியாளர்கள் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், கோவிட் -19 மற்றும் பொதுவான பருவகால நோய் ஆகிய இரண்டிற்கும் ஒத்த அறிகுறிகள் அவர்களுக்கு காணப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கோவிட் போன்ற அறிகுறிகளைக் கொண்ட முதல் நோயாளி வுஹானில் டிசம்பர் 8, 2019 அன்று பதிவு செய்யப்பட்டதாக சீனா உலக சுகாதார நிறுவனத்திற்கு (WHO) அறிக்கை மூலம் அறிவித்தது. 

"WIV க்குள் பல ஆராய்ச்சியாளர்கள் 2019 இலையுதிர்காலத்தில் நோய்வாய்ப்பட்டார்கள் என்று சந்தேகிக்க அமெரிக்க அரசாங்கத்திடம் பல காரணங்கள் உள்ளன. முதல் கோவிட்-19 நோயாளி பற்றி சீனா அறிவித்தற்கு முன்னரே சீன ஆராய்ச்சியாளர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு தென்பட்ட அறிகுறிகள் கோவிட் -19 மற்றும் பொதுவான பருவகால நோய்களின் அறிகுறிகளுடன் ஒத்திருந்தன" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஆய்வக ஆராய்ச்சியாளர்களைப் பற்றிய உளவுத்துறை விவரங்களைப் பற்றி நன்கு அறிந்த தற்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகள் மதிப்பீட்டிற்கான துணை ஆதாரங்களின் வலிமை குறித்து மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்தியதாக 'டெய்லி' செய்தி வெளியிட்டுள்ளது.

"பல்வேறு ஆதாரங்களில் இருந்து  வந்த தகவல்கள் நேர்த்தியான தரம் வாய்ந்தவை. இவை மிகவும் துல்லியமான தகவல்கள். சீன ஆய்வக ஆராய்ச்சியாளர்கள் ஏன் நோய்வாய்ப்பட்டார்கள் என்பதுதான் இவற்றில் கூறப்படவில்லை" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒரு நிகழ்வின் போது, ​​கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உயர் ஆலோசகரான டாக்டர் ஃபவுசி, “இது இயற்கையில் உருவான வைரஸ் என நான் நம்பவில்லை. சீனாவில்  என்ன நடந்தது என்பதை தெளிவாக தெரிந்துகொள்ளும் வகையில், விசாரணை தொடர வேண்டும் என என்று நான் நினைக்கிறேன்." என்று அவர் கூறினார்.

 

Editor's Choice

கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும். அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும்.குழந்தைகளின் மூளையும் சிறப்பாக வளர்ச்சி அடையும்.

கர்ப்பிணிகளாக இருக்கும்போதே ஆரம்பித்து, பிரசவசத்துக்குப் பின் குழந்தைகளிடமும் இந்த ஆய்வு தொடர்ந்தது. அதில், கர்ப்பத்தின்போது மீன்கள் அதிகம் உண்ட தாய்களின் குழந்தைகளின் புத்திக் கூர்மையும், அவர்களது கை-கண் இணைந்து செயல்படுவதும்,தகவல் தொடர்பும் மிகச் சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.

மூளை வளர்ச்சிக்கு முக்கியமான ஒமேகா-3 fatty acids’ (docosahexaenoic acid) மீன்களில் அதிகமாக காணப்படுவதே இதற்குக் காரணம். தாய், சிசுவின் உடலில் ‘ஒமேகா-3 fatty acids’ அளவு மிகவும் குறைவாக இருந்தால் குழந்தைகளுக்கு புத்தி மழுங்கவும் வாய்ப்புள்ளது.

பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட உணவுகளில் அதிகமாக புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி உள்ளது. இவ்வளவு ஊட்டத்தை அளிக்கிற பாலானது நரம்புத்தசை மண்டலத்தை நன்கு இயக்குவதோடு மற்றும் மூளை செல்களை நன்கு செயல்பட வைக்கிறது. அதுவும் வளரும் குழந்தைகளுக்கு இந்த உணவு நல்ல ஒரு உடல் வளர்ச்சியைத் தருவதோடு, மூளையையும் சுறுசுறுப்பாக வைக்கிறது.

மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் செல்களின் முக்கியமானது தான் கோலைன் சத்து. இது முட்டையில் அதிகம் இருக்கிறது. மேலும் இதை அதிகம் உண்பதால், ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, மூளையானது களைப்படையாமல் சுறுசுறுப்பாக இருக்கும். நட்ஸ் அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் டி அறிவுத்திறனை அதிகரிக்கும்.

வைட்டமின் பி மற்றும் குளுக்கோஸ் அதிகம் உள்ள ஓட்ஸ் மற்றும் சிவப்பு அரிசியை அதிகம் சாப்பிட்டால், மூளையானது ஆரோக்கியமாக இருக்கும். நமது உடலுக்கு தினமும் ஏதேனும் ஒரு தானியத்தை சேர்த்தால் நல்லது. மேலும் வைட்டமின் பி அதிகம் இருப்பதால், உடலில் இரத்த ஓட்டம் அதிகமாக இருப்பதால், உடலில் எல்லா பாகங்களும் சுறுசுறுப்பாக இருக்கும்.

மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இந்த ஃபேட்டி ஆசிட் இதயத்திற்கு மட்டுமின்றி, மூளையின் செயல்பாட்டிற்கும் சிறந்தது. ஏனெனில் மூளையின் செயல்பாட்டிற்கு ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மிகவும் முக்கியமானது. மேலும இது மூளைச் செல்களின் இயக்கத்தை அதிகரிக்கும். அதிலும் குறிப்பாக ஹெர்ரிங், சால்மன், சூரை (Tuna), கானாங்கெளுத்தி, பொத்தல், நெத்தலி, மற்றும் மத்தி போன்றவை மிகவும் சிறந்தது.

இதில் ஒமேக-3 ஃபேட்டி ஆசிட்டான DHA மற்றும் EPA அதிகம் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. மற்ற உணவுப் பொருட்களை மீனிலேயே அறிவுத்திறனை கூர்மைப்படுத்தும் திறன் அதிகமாக உள்ளது.மேலும் மற்ற உணவுப்பொருட்களான காய்கறிகளில் தக்காளி, கேரட், பீன்ஸ், கீரைகள் போன்றவையும் சிறந்தது. ஆகவே மேற்கூறிய உணவுப் பொருட்களை குழந்தைகளுக்கு தினமும் கொடுத்து வந்தால் மூளையானது நன்கு சுறுசுறுப்போடு இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.

க்ரீன் டீயில் மூளைச் செல்கள் பாதிப்படையாமல் தடுக்கும், ஃபாலிபீனால் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. எனவே இதனை குடிப்பதால் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, சோர்வான மனநிலை மாறும்.

பெர்ரிப் பழங்களில் குவர்செடின் என்னும் மூளைச் செல்களில் இயக்கத்தை அதிகரிக்கும் பொருள் உள்ளது. அதுமட்டுமின்றி இதில் ஆந்தோசையனின் என்னும் ஃபோட்டோ கெமிக்கல், அல்சீமியர் என்னும் ஞாபக மறதி நோயை தடுக்கும். அதிலும் சில பெர்ரிப் பழங்களான ராஸ்ப்பெர்ரி, ப்ளூபெர்ரி போன்றவை மிகவும் சிறந்தது.

பொதுவாக கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். அவர்கள் சொன்னது பொய்யல்ல உண்மை தான். அதிலும் பசலைக் கீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் ஸ்புரூட்ஸ் போன்றவற்றில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருள் இருப்பதோடு, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

தேனில் அளவற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. அவற்றில் ஞாபக சக்தியை அதிகரிப்பதும் ஒன்று. எனவே தினமும் காலையில் எழுந்து ஒரு ஸ்பூன் தேனை சாப்பிட்டால், எடை குறைவதோடு, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.

நட்ஸில் மூளையின் சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஈ மற்றும் பி6 இருக்கிறது. எனவே தினமும் ஒரு கை பாதாம், பிஸ்தா போன்றவற்றை சாப்பிடுவது, ஞாபக சக்திக்கு மட்டுமின்றி, முழு உடலுக்கும் நல்லது.

மூளையில் நான்கில் மூன்று பங்கு தண்ணீர் தான் உள்ளது. எனவே தண்ணீர் குறைவானால் மூளையில் செயல்பாடும் குறைந்து, மூளையில் வறட்சி ஏற்பட்டு ஞாபக சக்தியும் குறைந்துவிடும். எனவே அதிகப்படியான தண்ணீர் குடிப்பதால், மூளையில் வறட்சி ஏற்படாமல், மூளைச் செல்கள் சுறுசுறுப்போடு செயல்படும்.

Editor's Choice

இங்கிலாந்து பொது சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில், பைசர் பயோஎன்டெக் தடுப்பூசியின் 2-ம் டோஸை எடுத்துக்கொண்ட இரு வாரங்களுக்கு பின்னர், பி.1.617.2 வகைக்கு எதிராக அத்தடுப்பூசி 88% செயல்படுவதா தெரிவித்துள்ளது.  அதுவே பிரிட்டனில் பரவிய பி.1.1.7 வகைக்கு எதிராக 93% செயல்திறன் கொண்டிருக்கிறது. அஸ்ட்ராசெனகா தடுப்பூசி  இந்தியாவில் பரவியுள்ள வகைக்கு எதிராக 60% செயல்படுகிறது. பிரிட்டனில் பரவியுள்ள வகைக்கு எதிராக 66% செயல்திறன் பெற்றுள்ளது.

மேலும், பைசர் மற்றும் கோவிஷீல்டின் முதல் தடுப்பூசி போட்ட 3 வாரங்களுக்கு பின்னர் இந்தியாவில் பரவியுள்ள வைரஸ் வகை தாக்கினால் 33% செயல்திறன் இருக்கும், பிரிட்டன் வகை வைரஸ் என்றால் 50% செயல்திறன் இருக்கும் என கூறியுள்ளது. இம்முடிவுகளுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரிட்டன் சுகாதார செயலர் மட் ஹன்காக், திட்டத்தின் சரியான பாதையில் செல்கிறோம் என தெரிவித்துள்ளது. இரண்டு டோஸ் எடுத்த பிறகு தடுப்பூசி திறம்பட செயல்படுகிறது என்பதை இந்த தரவுகள் காட்டுகிறது.

இதன் காரணமாக விரைவில் பிரிட்டன்வாசிகளுக்கு 2-ம் கட்ட தடுப்பூசியை போட்டுவிட்டு, ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த திட்டமிட்டுள்ளது. 

பக்கம் 7 / 49