Editor's Choice

2021 மே 1 ஆம் தேதி இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒருவரின் பெயர், வயது, புகைப்பட ஐடி விவரங்களை பதிவு செய்வதன் மூலம் அரசின் கோவின் தளத்தில், தாங்கள் விரும்பும் தடுப்பூசி மையத்தில் தடுப்பூசியை பதிவு செய்ய வேண்டும். 

COVID-19   தடுப்பூசி பெறுவதற்கான பிரத்யேக கோவின் போர்ட்டல் மற்றும் ஆரோக்யா சேது செயலிகளில் இலவச மற்றும் கட்டண தடுப்பூசிகளுக்காக புக்கிங் செய்வது சவாலாகவே உள்ளது.

உங்கள் மொபைல் எண் மற்றும் தேவையான விவரங்களை முதலில் கோவின் போர்ட்டலில் பதிவு செய்யுங்கள். இது  தடுப்பூசியை புக் செய்வதற்கான செயல்முறையையும் மிகவும் எளிதாக்கும். முன் கூட்டீயே இவைகளை செய்து விட்டால், புக் செய்ய உள்நுழையும் போது, கொடுக்கப்பட்ட இடத்தில் உங்கள் 10 இலக்க மொபைல் எண்ணை உள்ளிட்டு, OTP ஐ உள்ளிட்டால் போதும்

கோவின் போர்ட்டலில் 24 மணி நேரமும் தடுப்பூசி இடங்கள் அப்டேட் செய்யப்படுவதில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். வழக்கமாக ஒவ்வொரு நாளும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை தடுப்பூசிக்காக அப்டேட்டுகள் சேர்க்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது. எனவே, நீங்கள் அந்த நேரத்தில் காலியான இடங்களை அறிந்து கொண்டு புக் செய்யலாம்

காலியிடங்கள் உள்ளதா என்பதை அறியும் போது, ​​உங்கள் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுடன் உள்நுழைவதை எப்போதும் உறுதிசெய்து கொள்ளவும், இதன் மூலம் தடுப்பூசிக்கான முன்பதிவை எளிதாகவும் விரைவாகவும் செய்யலாம்.

கோவின் போர்ட்டலில் ஸ்லாட்டுகளுடன் கூடிய தடுப்பூசி மையத்தைக் கண்டறிய இரண்டு வழிகள் உள்ளன - ஒன்று அஞ்சல் குறியீட்டை (PIN code) உள்ளிடுவதன் மூலம் கண்டறியலாம். இரண்டாவது மாநிலம் மற்றும் மாவட்டத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் கண்டறியலாம். இருப்பினும், அஞ்சல் குறியீட்டை (PIN code) உள்ளிடுவதன் தடுப்பூசி மையத்தைத் கண்டறிவது சிறந்த முறையாக கருதப்படுகிறது.

COVID-19 தடுப்பூசிக்கு ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி

கோவின் போர்ட்டலுக்குச் சென்று பதிவு / உள்நுழைவு ஆப்ஷனை க்ளிக் செய்யவும்

மொபைல் எண்ணை உள்ளிட்டு 'Get OTP' ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, பக்கத்தில் OTP ஐ உள்ளிட்டு 'Enter'  க்ளிக் செய்யவும்

தடுப்பூசிக்கான பதிவு பக்கத்தில் கிளிக் செய்து, புகைப்பட ஐடி ஆதாரம், பெயர், பாலினம் மற்றும் பிறந்த ஆண்டு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உள்ளிட்டு, 'பதிவு' என்பதைத் க்ளிக் செய்யவும்

தடுப்பூசி பெறுவதற்கான நாள் மற்றும் நேரம் பதிவுசெய்த நபரின் பெயருக்கு 'Schedule next' என்பதைக் கிளிக் செய்க.

அஞ்சல் குறியீட்டை உள்ளிட்டு தேடல் பட்டனை கிளிக் செய்யவும், வலைத்தளம் அந்த அஞ்சல் குறியீடு உள்ள மையங்களின் பட்டியலை காண்பிக்கும்

தேதி மற்றும் நேரத்தைத் தேர்ந்தெடுத்து 'Confirm' ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.  நீங்கள் நான்கு உறுப்பினர்களுக்கான புக்கிங் செய்ய கோவின் வலைத்தளம் அனுமதிக்கிறது. அதற்கு நீங்கள் அவர்களது விபரங்களையும் கோவின் (CoWIN) தளத்தில் சேர்க்க வேண்டும்.

Editor's Choice

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், கொரோனா வைரசுக்கு எதிர்ப்பு மருந்தாக, மாட்டு சாணம் மற்றும் கோமியத்தை கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு மாட்டு கொட்டகைக்கு வாரம் ஒருமுறை அல்லது இருமுறை சிலர் கூட்டமாக வருகிறார்கள். மாட்டுச் சாணத்தை கரைத்து உடல் முழுவதும் பூசிக் கொள்ளும் இவர்கள் மாட்டுப் பாலை மேலே ஊற்றி குளியல் மேற்கொள்கின்றனர். இதன் மூலம் கரோனா வைரஸ் தங்களை தாக்காது என்று இவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

மாட்டு சாணம் மற்றும் கோமியத்தை வாரத்திற்கு ஒரு முறை உடல் முழுவதும் பூசிக் கொள்வதால் உடலில் கொரோனா தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

இப்படி மாட்டுச்சாண குளியல் எடுத்துக் கொள்பவர்களில் சிலர் மருந்து நிறுவனங்களில் வேலை செய்பவர்களாகவும், சிலர் மருத்துவர்களாகவும் உள்ளனர் என்பதுதான் பெரும் அதிர்ச். ஆனால் இதுபோன்று மாட்டுச் சாணத்தால் குளிப்பதால் கரோனாவை விரட்டலாம் என்பதுபோன்ற எந்த அறிவியல் பூர்வமான நிரூபணமும் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். இதனால் வேறுவிதமான தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றை, தடுப்பூசிகளின் மூலமே கட்டுப்படுத்த முடியும். இது போன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம் என்று இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Editor's Choice
குழந்தை பருவத்திலிருந்தே நமக்கு கற்பிக்கப்பட்ட ஒரு பொதுவான பழக்கம் காலையில் எழுந்தவுடன் பல் துலக்குதல். ஆனால், இதை மாற்றி செய்பவர்களும் இருக்கின்றனர். அவர்கள் காலை உணவை சாப்பிட்ட பிறகு பற்களை சுத்தம் செய்வது அவர்களின் வாயை சுத்தப்படுத்தி மூச்சை புதுப்பிக்கும் என்று நம்புகிறார்கள். இந்த விஷயத்தில் ஒரு நிபுணர்களின் கருத்துக்கள் மிகவும் வேறுபட்டவை. சிலர் காலை உணவுக்கு முன் பல் துலக்குவதை ஆதரிக்கிறார்கள். மற்றவர்கள் அதை பின்னர் செய்ய பரிந்துரைக்கின்றனர். 
 
காலை உணவை உட்கொண்ட பிறகு பல் துலக்குவது உங்கள் பல் பற்சிப்பி மற்றும் ஒட்டுமொத்த வாய்வழி ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சில ஆய்வுகளின்படி, நீங்கள் இரவில் தூங்கும்போது, பிளேக் ஏற்படுத்தும் பாக்டீரியா உங்கள் வாயில் வேகமாகப் பெருகும், இது காலையில் உங்களுக்கு வாய் துர்நாற்றத்தை உண்டாக்குகிறது.
 
காலையில் ஃபுளூரைடு பற்பசையுடன் பற்களைக் கழுவுவது பிளேக் மற்றும் துர்நாற்றத்திலிருந்து விடுபட உதவுகிறது. மேலும், இது ஒரு தடையை உருவாக்குவதன் மூலம் உங்கள் பற்சிப்பினை அமிலத்திற்கு எதிராக பாதுகாக்கிறது. காலையில் துலக்குவது உங்கள் உமிழ்நீர் உற்பத்தியைத் தொடங்குகிறது. இது உணவு சாப்பிடும்போது வாயில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது.

சில பல் வல்லுநர்கள் முதல் உணவுக்குப் பிறகு பற்களை சுத்தம் செய்வதை பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் காலை உணவில் இருந்து உணவுத் துகள்களை உங்கள் வாயில் நீண்ட நேரம் விட்டுவிடுவது பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். உங்கள் காலை உணவை உட்கொண்ட பிறகு பற்களை சுத்தம் செய்ய நீங்கள் தேர்வுசெய்தால், அமில உணவுகளை உட்கொண்ட பிறகு குறைந்தது 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்.

ரொட்டி, உலர்ந்த பழம், சிட்ரஸ் பழம், காபி அனைத்தும் அமிலத்தன்மை கொண்டவை. அவற்றை உட்கொண்டபின் பற்களை சுத்தம் செய்யும் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் பற்கள் மற்றும் பற்சிப்பி ஆகியவற்றைப் பாதுகாக்க சிறிது நேரம் காத்திருப்பது அவசியம்.

நீங்கள் சரியாக செய்யாவிட்டால் இரண்டு முறை பல் துலக்குவது உதவியாக இருக்காது. உங்கள் பற்களை சுத்தம் செய்வதற்கான சரியான வழி பற்றி இங்கே காணலாம்.
 
பிரஷை நனைத்து, அதில் ஒரு சிறிய அளவு பற்பசையைச் சேர்க்கவும்.
மெதுவாக, உங்கள் பற்களின் ஒவ்வொரு மூலையிலும் பிரஷை நகர்த்தவும். 2 நிமிடங்கள் செய்து அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம்.
எஞ்சியிருக்கும் பற்பசையைத் துப்பி, வாயில் தண்ணீரில் ஊற்றி கொப்பளிக்க வேண்டும்.
பாக்டீரியாவை சுத்தம் செய்ய அல்லது நாக்கு ஸ்கிராப்பரைப் பயன்படுத்த உங்கள் நாக்கைத் துலக்குங்கள்.
நன்றாக துலக்கிவிட்ட, பின்னர் மவுத்வாஷைப் பயன்படுத்தவும்.
 
Editor's Choice

'இந்தியாவில் தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்தாவிட்டால், அடுத்தடுத்து கொரோனா அலை உருவாக வாய்ப்பு உள்ளது' என, 'பிட்ச் ரேட்டிங்' நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொருளாதார மதிப்பீடு தர நிர்ணயம் வழங்கும், 'பிட்ச்' ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், மே 5-ம் தேதி நிலவரப்படி இந்திய மக்கள் தொகையில் 9.4 சதவீதம் பேர் மட்டுமே முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். 9-ம் தேதி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 16.94 கோடி பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மெதுவாக நடந்து வருகிறது. தடுப்பூசி பணிகள் மெதுவாக நடந்தால், இந்தியாவில் தற்போதைய 2-வது அலை முடிந்தபின், அடுத்தடுத்து கொரோனா அலைகள் உருவாகும் சாத்தியங்கள் அதிகம் இருக்கிறது.

இரண்டாவது அலையில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகமாக இருந்தபோதிலும் முதல் அலையில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு 2வது அலையில் ஏற்படவில்லை. தற்போதுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கை அமல்படுத்தினாலும், பொருளாதார நடவடிக்கையை பாதிக்காத வகையில் அது இருந்து வருகிறது. ஆனால் அதிகமான மாநிலங்களில் நீண்ட கால லாக்டவுனை நடைமுறைப்படுத்தினால் பொருளாதார பாதிப்பு ஏற்படும்.
இரண்டாவது அலையில் நிலவும் குறியீடுகளின்படி, நாட்டில் உள்ள நிதி நிறுவனங்களுக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால், ரிசர்வ் வங்கி நிதி நிறுவனங்களைச் சிக்கலில் இருந்து மீட்க மேலும் பல்வேறு பொருளாதாரச் சலுகைகளை வழங்கலாம் என பிட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Editor's Choice

ஜாதிக்காய் நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டது, குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது, எலும்பு சதைகளில் உள்ள வலிகளை போக்குகிறது, ஜீரண சுரப்பிகளை தூண்டி குடல் இயக்கத்தினை சரி செய்கிறது, மேலும் வயிற்றில் ஏற்படும் உபவாசம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு இவை வராமல் தடுக்கிறது

ஜாதிக்காய் ஒரு போதைப்பொருள் என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. நரம்பு மண்டலத்தில் வேலை செய்தாலும், போதையூட்டும் பொருள் அல்ல என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜாதிக்காய் பவுடர் பாலில் எடுத்துக்கொள்ளும் போது மன உளைச்சலைப் போக்கி மன அமைதி ஏற்பட்டு தூக்கத்தினை தூண்டுகிறது, Neuro Transmitter ல் உள்ள Dopomine, Serotonin ஆகியவற்றை தூண்டி தூக்கம் தூக்கத்தினை வரவைக்கிறது.

இரத்தத்தில் இருக்கும் கொழுப்புகளைக் குறைக்கிறது. பற்சிதைவு , பற்சொத்தை வராமல் பாதுகாக்கிறது.
படபடப்பிலிருந்து விடுபடச்செய்கிறது, உடல் எடை குறைப்பதற்கு ஜாதிக்காயைப் பயன்படுத்தலாம்

மன உளைச்சல், மன அழுத்தத்தினை போக்கும் நிவாரணியாகவும் ஜாதிக்காய் பயன்படுகிறது.

ஜாதிக்காய் கொடியை மேற்பூச்சாக பயன்படுத்தும்போது முகப்பரு வராமல் தடுத்து முகப்பொலிவைத் தருகிறது.
இதில் Anti Bacteria, Anti Fungal activities ஆகவும் செயல்படுகிறது.

விந்து நஷ்டம் முதலிய வாதங்கள், தலைநோய், இரைப்பு, இருமல், துக்கமின்மை, ஆண்மைக்குறைவு, வயிற்று உபாசம் முதலிய நோய்கள் விலக்கும் தன்மை ஜாதிக்காய்க்கு உண்டு,

சித்த மருத்துவமனைகளிலோ அல்லது நாட்டு மூலிகைக்கடைகளில் ஜாதிக்காய் பொடியை இரண்டு ஸ்பூன் எடுத்து வெந்நீரில் குடிக்க நல்ல பலன் கிடைக்கும்.

Editor's Choice

நமது உடலில் எதிர்ப்பு சக்தி குறையும்போது பூஞ்சைகள் நம்மைத் தாக்குகின்றன. வேறு நோய்க்காக மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்கும்போது பூஞ்சைகளை எதிர்த்துப் போராடும் ஆற்றல் உடலுக்குக் குறைகிறது. அந்த நேரத்தில் பூஞ்சைத் தொற்று ஏற்படுகிறது என ஐசிஎம்ஆர் அமைப்பு தெரிவிக்கிறது.

காற்றில் உள்ள பூஞ்சைத் துகள்களை எதிர்ப்பு ஆற்றல் குறைந்த மனிதர்கள் சுவாசிக்கும்போது அவை உடலுக்குள் புகுந்து சைனஸ்கள் மற்றும் நுரையீரலைப் பாதிக்கிறது. கவனிக்காமல் விட்டால் மரணத்தை ஏற்படுத்தும் ஆபத்தைக் கொண்டது இந்தப் பாதிப்பு.

தீராத சர்க்கரை நோய், ஸ்டீராய்டுகள் மூலம் ஏற்படும் எதிர்ப்பு ஆற்றல் முடக்கம், தீவிர சிகிச்சைப் பிரிவில் நீண்ட காலம் இருப்பது, உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை, வோரிகோனோஸோல் சிகிச்சை ஆகியவை மியூகோர்மைகோசிஸ் நோய் ஏற்படுவதற்குக் காரணம் என்று ஐசிஎம்ஆர் கூறுகிறது.

மூக்குப் பகுதியில் ஏற்படும் இந்த நோய், விரைவிலேயே தொண்டை, கண்கள், மூளை எனப் பரவிவிடும். இந்தத் தொற்று மூளையை எட்டும் நிலையில் உயிருக்கு ஆபத்தான நோயாக மாறிவிடுகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், எதிர்ப்பு ஆற்றல் முடக்கப்பட்டவர்கள் போன்றோருக்கு சில அறிகுறிகளைக் கொண்டு மியூகோர்மைசிஸ் நோய் இருக்கலாம்.

மூக்கடைப்பு, மூக்கின் வழியே கறுப்பாகவோ, ரத்தமாகவோ திரவம் வெளியேறுவது, கன்ன எலும்புகளில் வலி ஏற்படுவது போன்றவதை மியூகோர்மைசிஸ் நோய்க்கான முதன்மையான அறிகுறிகள் என ஐசிஎம்ஆர் பட்டியலிடுகிறது. முகத்தின் ஒரு பகுதியில் வலி ஏற்படுவது, உணர்வின்மை, வீக்கமோ போன்றவையும் இதன் அறிகுறிகளாகும். சிலருக்கு மூக்கிற்கும் மேல்வாய்க்கும் இடைப்பட்ட பகுதி கறுப்பாக மாறும்.

பல் வலி, காட்சிகள் மங்கலாகவும் இரட்டையாகவும் தெரிவது, காய்ச்சல் போன்றவை ஏற்படும். இவை தவிர மார்பு வலி, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்டவையும் மியூகோர்மைசிஸ் அறிகுறிகளாகும்.

மியூகோர்மைசிஸ் இருப்பது கண்டறியப்பட்டால் நிச்சயமாக மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும் உட்கொள்ளக்கூடாது. எந்தச் சிகிச்சையும் எடுக்கக்கூடாது. மியூகோர்மைசிஸை கட்டுப்படுத்துவதற்கு முதலில் ஹைபர்கிளைசீமியா எனப்படும் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிப்பைக் குறைக்க வேண்டும் என மருத்துவ சிகிச்சை நடைமுறையைக் கூறியிருக்கிறது.

நீரிழிவு நோய் இருந்தாலோ, கொரோனாவில் இருந்து குணமடைந்திருந்தாலோ ரத்தத்தின் சர்க்கரை அளவைத் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். ஸ்டீராய்டுகளை சரியான நேரத்தில் சரியான அளவு, சரியான காலத்துக்கு மட்டுமே உட்கொள்ள வேண்டும். ஆன்டிபயாடிக்ஸ், ஆன்டிபங்கல்ஸ் மருந்துகளுக்கும் இது பொருந்தும். ஆக்சிஜன் சிகிச்சை எடுத்துக் கொள்ளும்போது சுத்தமான நீரைப் பயன்டுத்த வேண்டும் எனவும் சிகிச்சைக்கான நடைமுறையை ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.

கொரோனா தொற்று ஏற்ற மருத்துவமனைகளில் சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு நோய் தீவிரமாகும்போது பூஞ்சைத் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. சாதாரண அறிகுறிகளுடன் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு என்கின்றனர் வல்லுநர்கள்.

கொரோனா தொற்று இல்லாமலும் அதிகமாக மருத்துவமனையில் இருக்க வேண்டிய நோய் உடையவர்களுக்கும், நோய் எதிர்ப்பு ஆற்றலைக் குறைப்பதற்கான மருந்துகளை உட்கொள்வோரையும் பூஞ்சை தாக்குகிறது.

பக்கம் 11 / 49