Editor's Choice
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் 3 லட்சத்து 86 ஆயிரத்து 452 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 87 லட்சத்து 62 ஆயிரத்து 976 ஆக அதிகரித்துள்ளது.
 
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 31 லட்சத்து 70 ஆயிரத்து 228 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 கோடியே 53 லட்சத்து 84 ஆயிரத்து 418 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 8 ஆயிரத்து 330 ஆக அதிகரித்துள்ளது.
 
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அடுத்த வாரம் உச்சமடையும் என்று மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. மே மாதம் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை கொரோனா பாதிப்பு உச்சமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Editor's Choice

உலகம் முழுவதும் கொரோனா தன் கோர முகத்தை காட்டி வருகிறது. இதனை தடுக்க மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு தடுப்பு மருந்துகளை கண்டறிந்துள்ளனர். அந்த வகையில் பைசர் நிறுவனமும் தடுப்பூசிகளை கண்டறிந்துள்ளது. இந்த தடுப்பூசிகள் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், வாய்வழியாக உட்கொள்ளும் வகையிலான தடுப்பு மருந்தை கண்டறியும் முயற்சியிலும் பைசர் நிறுவனம் இறங்கியது. அதன்பலனாக, வாய்வழியாக உட்கொள்ளும் வகையிலான கொரோனா தடுப்பு மருந்துகளை பைசர் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இதுகுறித்து பைசர் நிறுவனத்தின் இயக்குனர் ஆல்பர்ட் போர்லா கூறியதாவது: நாங்கள் கொரோனாவுக்கு எதிராக இரண்டு வகையான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் முயற்சியில் இறங்கினோம். ஒன்று தடுப்பூசி, மற்றொன்று வாய்வழியாக உட்கொள்ளும் மருந்து. குறிப்பாக வாய்வழியாக உட்கொள்ளும் மருந்தில் நிறைய நன்மைகள் உள்ளன. அதில் ஒன்று நீங்கள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய தேவையில்லை. வீட்டிலிருந்தே மருந்து எடுத்துக் கொள்ளலாம். எல்லாம் நல்லபடியாகச் சென்றால் இந்த ஆண்டின் இறுதியில் வாய்வழியாக உட்கொள்ளும் கொரோனா தடுப்பு மருந்துகளை எதிர்பார்க்கலாம் என வர் கூறினார்.

Editor's Choice

பெண்கள் மாதவிடாய்க்கு முன் ஐந்து நாட்களும், மாதவிடாய்க்குப் பிறகான ஐந்து நாட்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டாம்" என தகவல் பரவுகிறது. அந்த குறிப்பிட்ட கால கட்டத்தில் மாதவிடாய் காரணத்தினால் பெண்களின் உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் நம் உடலில் எதிர்ப்பு சக்தியை தொடக்கத்தில் குறைக்கும், அதன் பிறகே எதிர்ப்பு சக்தியை மெல்ல அதிகரிக்கும்.

இந்த காலகட்டத்தில் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டால், கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே மேலே குறிப்பிட்ட மாதவிடாய் கால கட்டத்தில் கொரோனா தடுப்பூசியை பெண்கள் செலுத்திக் கொள்ள வேண்டாம்,” என அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் நிலவும் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில், மத்திய அரசின் செய்தி நிறுவனம், தன் ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்திருந்தது.கொரோனா தடுப்பூசியின் செயல் திறன் மாதவிடாயால் பாதிக்கப்படாது என விளக்கமளித்திருக்கிறது.

மேலும் "பெண்கள் மாதவிடாய் காலத்துக்கு முந்தைய ஐந்து நாட்களும், பிந்தைய ஐந்து நாட்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டாம் எனக் கூறுவது தவறான செய்தி. அச்செய்தியை நம்ப வேண்டாம்" என விளக்கம் அளித்திருந்தது.

இதுதொடர்பாக பதிலளித்த பெண் மருத்துவர், "மாதவிடாய் என்பது ஒரு நோய் அல்ல மாதந்தோறும் நடைபெறுகின்ற ஒரு இயற்கையான விஷயம் எனவே இதற்கும் கொரோனா தடுப்பு மருந்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.  இம்மாதிரியான தடுப்பு மருந்து குறித்த தவறான செய்திகள் தடுப்பு மருந்துக்கு எதிரான ஒரு மனப்பான்மையை வேண்டுமென்றே கிளப்புவதாக உள்ளது” என தெரிவித்தார்.

மாதவிடாய் காலத்தில் மட்டுமல்லாமல், பிசிஓடி போன்ற பிரச்னைகள் இருக்கும் பெண்கள் தடுப்பு மருந்து எடுத்து கொள்வதில் சிக்கல் ஏதும் உள்ளதா என்று மகப்பேறு மருத்துவரிடம் கேட்டபோது,"பிசிஓடி போன்ற காரணங்களுக்காக சிகிச்சை எடுத்து கொள்பவர்கள் தடுப்பூசி குறித்து கவலைக் கொள்ள தேவையில்லை. ஆனால் சிலருக்கு இந்த பிசிஓடி பிரச்னைகளுடன் சேர்த்து நீரிழிவு, அதிக உடல் எடை, ஹைபர் டென்ஷன் போன்ற பிரச்னைகள் இருக்கும் சமயத்தில் அது குறித்த பரிசோதனைகளை மேற்கொண்டு தகுந்த ஆலோசனைகள்படி தடுப்பூசிகளை எடுத்துக் கொள்வது நல்லது" என தெரிவித்தார்.

Editor's Choice

கார், பஸ், விமானம் போன்றவற்றில் பயணிக்கும் சிலருக்கு குமட்டல், தலைவலி போன்ற பிரச்னைகள் ஏற்படுவது இயற்கை. இவ்வாறு, பயணங்களின்போது சிலருக்கு ஏற்படும் குமட்டல், தலைவலி ஏற்படுவது போன்ற உணர்வை மோஷன் சிக்னெஸ் என்று குறிப்பிடுகின்றனர்.

நகர்வின்போது ஏற்படும் மாற்றங்களை நம்முடைய உணர்வு உறுப்புகள் ஏற்றுக் கொள்ள இயலாமல் இவ்வாறான உடல் சுகவீனத்தை ஏற்படுத்துகிறது. இந்த பிரச்னை ஏற்படும்போது, சிலர் பயணத்தை ரத்து செய்துவிடும் அளவுக்கு கொண்டு சென்றுவிடும். இதுபோன்று, பயணத்தின்போது ஏற்படும் குமட்டல் மற்றும் உடல் சுகவீனத்தை தவிர்ப்பதற்கான சில எளிய வழிமுறைகள்...

• அருகிலுள்ள பொருட்களை பார்ப்பதை தவிர்த்து, தூரத்தில் உள்ள பொருட்களை பார்க்க முயற்சி செய்யுங்கள். அதேபோன்று, பயணத்தின்போது சிறிய பொருட்களை உன்னிப்பாக பார்ப்பதையும் தவிர்க்கவும். குறிப்பாக, புத்தகம் படிப்பதும் இந்த பிரச்னைக்கு வழிகோலும்.

• சிலருக்கு பெட்ரோல், டீசல் வாடையும், சில கெட்ட வாடையை நுகர்ந்தாலே, பயணத்தின்போது குமட்டல் உணர்வை ஏற்படுத்தும். இதற்கு ஏசி.,யை போட்டு செல்வது ஒரு உபாயமாக இருக்கும். இல்லையெனில், கெட்ட வாடை இல்லாத இடங்களில் இயற்கை காற்றை சுவாசிப்பது பலனை தரும்.

திருமண விழாக்கள் அல்லது விசேஷங்களில் பங்கேற்றுவிட்டு நீண்ட தூரம் பிராயணிக்கும்போது, சிலருக்கு இவ்வாறு பிரச்னை ஏற்படலாம். அதுபோன்ற சமயங்களில் வழியில் ஏதேனும் தங்கும் விடுதியில் ஒரு சில மணிநேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் புறப்படுவது பல பிரச்னைகளை தவிர்க்கும்.

பயணத்தின்போது மூச்சு முட்ட சாப்பிடாமல், அரை வயிறுக்கு சாப்பிடுவதும் இந்த குமட்டல் உணர்விலிருந்து விடுபட உதவும். கார உணவுகளையும் தவிர்க்க வேண்டும். அதேநேரத்தில், சாப்பிடாமல் இருந்தாலும் வெறும் வயிற்றில் இந்த உணர்வு வரும். அத்துடன், சரியான நேரத்தில் சாப்பிடுவதும் அவசியம்.

உடலில் நீர் சத்து குறைந்தாலும் இந்த பயணத்தின்போது உடல் சுகவீன பிரச்னை ஏற்படும். எனவே, அடிக்கடி தண்ணீர் அருந்துவதும் அவசியம்.

பயணத்தின்போது குமட்டல் உணர்வு உள்ளவர்கள் முன்புறம் நோக்கிய இருக்கைகளில் அமர்வது அவசியம். ரயில், பஸ்களில் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தாலும் இந்த பிரச்னையை தவிர்க்கலாம்.

அமைதியாக செல்லாமல் உடன் வரும் நண்பர்கள், குடும்பத்தினருடன் பேசிக் கொண்டே செல்வதன் மூலமாக இந்த பிரச்னையை சமாளிக்கலாம். அதாவது, கவனத்தை மாற்றிக் கொண்டு இந்த பிரச்னையை தவிர்க்க முயல்வதும் ஒரு உபாயம்தான். கார் என்றால் முன்சீட்டில் அமர்ந்து கொண்டு, ஓட்டுபவருடன் பேசிக் கொண்டு செல்லலாம்.

பயணத்திற்கு 30 நிமிடங்கள் முன்னதாக சிறிது நேரம் தியானம் செய்து புறப்படும்போது இந்த பிரச்னையை சமாளிக்க உதவும்.

• குடிபோதையில் பயணிக்கும்போதும் அல்லது முன்தின இரவு மது அருந்திய அயற்சியிலும் சிலருக்கு குமட்டல் உணர்வு ஏற்படும். இதுபோன்றவர்கள் பயணத்திற்கு முன் நன்கு ஓய்வு எடுத்த பின் புறப்படுவது அவசியம். பயணத்தின்போதும், பயணத்திற்கு முன்தின நாளும் மது அருந்துவதை தவிர்த்தாலும் இந்த பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

சிலருக்கு ஏசி அதிகமாக இருந்தாலும் தலைவலியும், குமட்டலும் ஏற்படும். ஏசி.,யை குறைத்து வைத்து செல்வதும், வெளிக்காற்றை சுவாசிப்பதும் இதற்கு தீர்வு தரும்.

பயணத்தின்போது குமட்டல் உணர்வு உள்ளவர்கள் சிறிய இஞ்சி துண்டை மென்று தின்றால் இந்த பிரச்னையிலிருந்து விடுபடலாம். அதேபோன்று, எலுமிச்சை பழத்தை கையில் வைத்துக் கொண்டு நுகர்ந்தாலும் பலன் தரும்.

Editor's Choice

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்க மக்களுக்கான சில அறிவிப்புகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை போட்டுக்கொண்டவர்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணியத் தேவையில்லை என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. 

திறந்த வெளியில், சிறிய அளவு மக்கள் கூடும் இடங்கள், சிறிய கூட்டங்களை உடைய பொது நிகழ்வுகள் ஆகிய இடங்களில், தடுப்பூசியை முழுமையாக போட்டுக்கொண்டவர்கள் முகக்கவசம் இல்லாமல் கலந்துகொள்ளலாம், பாதுகாப்பாக தொற்றுக்கு முன்னர் இருந்தது போன்ற வாழ்வை மீண்டும் துவக்கலாம் என கூறப்பட்டுள்ளது. எனினும், திறந்தவெளி அல்லாத இடங்களிலும், மூடிய வளாகங்கள் மற்றும் அறைகளிலும், அதிக மக்கள் கூடும் இடங்களிலும் முகக்கவசங்கள் கட்டாயம் என்றும் சமீபத்திய தகவல் எச்சரித்துள்ளது.

சி.டி.சியின் புதிய வழிகாட்டுதலின் படி, COVID-19 தடுப்பூசியின் இரண்டு பரிந்துரைக்கப்பட்ட டோஸ்களை செலுத்திக்கொண்ட நபர்கள் இனி நேரடி நிகழ்வுகள்,  இசை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், அணிவகுப்புகள் மற்றும் திறந்தவெளியில் நடக்கும் வேறு விதமான பொது நிகழ்வுகளில் முகக்கவசம் அணியாமல் கலந்து கொள்ள தகுதியுடையவர்களாகிறார்கள். மாடர்னா மற்றும் ஃபைசர் தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களை செலுத்திக்கொண்டு இரண்டு வாரங்கள் ஆனவர்களும், அல்லது, ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியின் ஒரு டோசை செலுத்திக்கொண்டு  இரண்டு வாரங்கள் ஆனவர்களும் இந்த தளர்வுகளுக்கு தகுதி பெறுகிறார்கள் என்று சி.டி.சி அங்கீகரிக்கிறது. ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியை செலுத்திக்கொள்பவர்களுக்கு ஒரு டோஸ் பொதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Editor's Choice

முகத்தில் காணப்படும் தோலைப் போலவே, கைகளின் பின்புறம் காணப்படும் தோலும் மிகவும் மென்மையானது. எனவே, முகத்தைப் போலவே, கைகளுக்கும் அதிக கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டும். குறிப்பாக, கைகளில் ஏற்படும் ஈரப்பதம் இழப்பை ஈடு செய்ய, மாய்ச்சரைசர் கிரீம் போன்றவற்றை பயன்படுத்துவதோடு, ரசாயனங்கள் நேரடியாக கைகளில் படுவதையும் தவிர்க்க வேண்டும்.

*ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும், வெது வெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு கலந்து அதில் கைகளை மூழ்குமாறு, 15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். அதன்பின் கைகளை நன்றாக துடைத்துவிட்டு, கைகளுக்கான கிரீம் தடவ வேண்டும். இது கைகளின் தோலுக்கு ஊட்டமளிக்கும். கிரீம்கள் தடவிய பின், அவற்றின் மேலே கையுறைகள் அணிந்து கொள்வது நல்லது.

*கைகளின் தோல் மிகவும் வறட்சியாக உடையவர்கள், மேலே சொன்ன படி கைகளை கழுவிய பின், ஹேண்ட் கிரீமை அடர்த்தியாக, தடவ வேண்டும். பின், அதன் மேல் மெல்லிய துணியை போர்த்தி, சூடான பாரபின் மெழுகை ஊற்ற வேண்டும். பாரபின் மெழுகின் சூட்டால், ரத்த ஓட்டம் அதிகரித்து, தோலில் காணப்படும் துளைகள் விரிந்து ஹேண்ட் கிரீம் சிறப்பாக உறிஞ்சப்படும்.

* கைகளில், இறந்த செல்களை நீக்க கரகரப்பான கிரீம்கள் தடவி அவற்றை நன்கு தேய்க்க வேண்டும். பின், சிறிது நேரம் கழித்து அவற்றை கழுவிய பின், மிதமான ஹேண்ட் வாஷ் தடவ வேண்டும்.

அவற்றை மிதமான தண்ணீரால் கழுவ வேண்டும். இதனால் கைகளில் ரத்த ஓட்டம் சீராகும். மிருதுவான துணியால் கைகளை துடைத்த பின், ஹேண்ட் லோஷன் தடவ வேண் டும். கைகளை சிறந்த முறையில் பராமரிக்க வாரத்திற்குஒரு முறையாவது இவ்வாறு செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.

மிகவும் குளிர்ந்த பிரதேசத்தில் வசிப்பவர்கள், கைகளுக்கு கம்பளி உறைகள் அணிந்து, கைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

வயதாவதால், தோலில் சுருக்கம் மற்றும் கோடுகள் போன்றவை ஏற்படும். சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் நேரடியாக தோலில்படுவதால், விரைவிலேயே வயதான தோற்றம் ஏற்படுகிறது. இவற்றில் இருந்து சன்ஸ்கிரீன்கள் பாதுகாப்பு அளிக்கின்றன. எனவே, தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால், இவை, தடுக்கப்படும்

பக்கம் 15 / 49