வாய்வழி உட்கொள்ளும் கொரோனா தடுப்பு மருந்து

SOCIAL SHARE
Pin It

உலகம் முழுவதும் கொரோனா தன் கோர முகத்தை காட்டி வருகிறது. இதனை தடுக்க மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு தடுப்பு மருந்துகளை கண்டறிந்துள்ளனர். அந்த வகையில் பைசர் நிறுவனமும் தடுப்பூசிகளை கண்டறிந்துள்ளது. இந்த தடுப்பூசிகள் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், வாய்வழியாக உட்கொள்ளும் வகையிலான தடுப்பு மருந்தை கண்டறியும் முயற்சியிலும் பைசர் நிறுவனம் இறங்கியது. அதன்பலனாக, வாய்வழியாக உட்கொள்ளும் வகையிலான கொரோனா தடுப்பு மருந்துகளை பைசர் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இதுகுறித்து பைசர் நிறுவனத்தின் இயக்குனர் ஆல்பர்ட் போர்லா கூறியதாவது: நாங்கள் கொரோனாவுக்கு எதிராக இரண்டு வகையான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் முயற்சியில் இறங்கினோம். ஒன்று தடுப்பூசி, மற்றொன்று வாய்வழியாக உட்கொள்ளும் மருந்து. குறிப்பாக வாய்வழியாக உட்கொள்ளும் மருந்தில் நிறைய நன்மைகள் உள்ளன. அதில் ஒன்று நீங்கள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய தேவையில்லை. வீட்டிலிருந்தே மருந்து எடுத்துக் கொள்ளலாம். எல்லாம் நல்லபடியாகச் சென்றால் இந்த ஆண்டின் இறுதியில் வாய்வழியாக உட்கொள்ளும் கொரோனா தடுப்பு மருந்துகளை எதிர்பார்க்கலாம் என வர் கூறினார்.

ARUNACHALAM