பெண்கள் மாதவிடாய்க்கு முன் ஐந்து நாட்களும், மாதவிடாய்க்குப் பிறகான ஐந்து நாட்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டாம்" என தகவல் பரவுகிறது. அந்த குறிப்பிட்ட கால கட்டத்தில் மாதவிடாய் காரணத்தினால் பெண்களின் உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் நம் உடலில் எதிர்ப்பு சக்தியை தொடக்கத்தில் குறைக்கும், அதன் பிறகே எதிர்ப்பு சக்தியை மெல்ல அதிகரிக்கும்.
இந்த காலகட்டத்தில் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டால், கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே மேலே குறிப்பிட்ட மாதவிடாய் கால கட்டத்தில் கொரோனா தடுப்பூசியை பெண்கள் செலுத்திக் கொள்ள வேண்டாம்,” என அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் மத்தியில் நிலவும் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில், மத்திய அரசின் செய்தி நிறுவனம், தன் ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்திருந்தது.கொரோனா தடுப்பூசியின் செயல் திறன் மாதவிடாயால் பாதிக்கப்படாது என விளக்கமளித்திருக்கிறது.
மேலும் "பெண்கள் மாதவிடாய் காலத்துக்கு முந்தைய ஐந்து நாட்களும், பிந்தைய ஐந்து நாட்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டாம் எனக் கூறுவது தவறான செய்தி. அச்செய்தியை நம்ப வேண்டாம்" என விளக்கம் அளித்திருந்தது.
இதுதொடர்பாக பதிலளித்த பெண் மருத்துவர், "மாதவிடாய் என்பது ஒரு நோய் அல்ல மாதந்தோறும் நடைபெறுகின்ற ஒரு இயற்கையான விஷயம் எனவே இதற்கும் கொரோனா தடுப்பு மருந்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. இம்மாதிரியான தடுப்பு மருந்து குறித்த தவறான செய்திகள் தடுப்பு மருந்துக்கு எதிரான ஒரு மனப்பான்மையை வேண்டுமென்றே கிளப்புவதாக உள்ளது” என தெரிவித்தார்.
மாதவிடாய் காலத்தில் மட்டுமல்லாமல், பிசிஓடி போன்ற பிரச்னைகள் இருக்கும் பெண்கள் தடுப்பு மருந்து எடுத்து கொள்வதில் சிக்கல் ஏதும் உள்ளதா என்று மகப்பேறு மருத்துவரிடம் கேட்டபோது,"பிசிஓடி போன்ற காரணங்களுக்காக சிகிச்சை எடுத்து கொள்பவர்கள் தடுப்பூசி குறித்து கவலைக் கொள்ள தேவையில்லை. ஆனால் சிலருக்கு இந்த பிசிஓடி பிரச்னைகளுடன் சேர்த்து நீரிழிவு, அதிக உடல் எடை, ஹைபர் டென்ஷன் போன்ற பிரச்னைகள் இருக்கும் சமயத்தில் அது குறித்த பரிசோதனைகளை மேற்கொண்டு தகுந்த ஆலோசனைகள்படி தடுப்பூசிகளை எடுத்துக் கொள்வது நல்லது" என தெரிவித்தார்.













