- மருத்துவம்
- Read Time: 1 min
- படிப்புகள்: 358
சிறுநீர் பையில் பாக்டீரியா தொற்றால் ஏற்படும் எரிச்சல் அல்லது வீக்கத்தால், சிறுநீர்ப்பை அழற்சி ஏற்படுகிறது.
இதனால், அவசரமாக மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்கவும், அத்தகைய சமயங்களில் வலி அல்லது குத்தல், ஆண் அல்லது பெண் இனப்பெருக்க உறுப்பில் அசவுகரியம், ஒரு சிலருக்கு சிறுநீருடன் ரத்தமும் வெளியேறும். பொதுவாக, பெண்களுக்கு சிறுநீர்ப்பையில் அழற்சி ஏற்பட காரணம், குறுகிய அளவிலான சிறுநீர்ப்பை நாளம் கொண்டிருப்பது அல்லது தொற்று ஏற்படுவது தான். பெரும்பாலான பெண்கள், வாழ்க்கையில் ஒருமுறையேனும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான சிகிச்சை அளிக்காவிடில், சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
சிறிய அளவிலான சிறுநீர்ப்பை அழற்சிக்கு, வலி நிவாரணி மற்றும் போதிய அளவிற்கு நீர் அருந்துவதன் மூலம், 4 முதல் 9 நாட்களில் சரியாகிவிடும். மிதமான நிலையிலுள்ள சிறுநீர்ப்பை அழற்சிக்கு, தேவையான சிகிச்சையுடன் 7 நாட்களுக்கு மருந்து உட்கொள்ள கொள்ள வேண்டும். சில சமயம், இது அடிக்கடி நிகழ்ந்தால், எந்த வகை பாக்டீரியாவால் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து, அதற்கேற்றவாறு மருந்து உட்கொள்ள வேண்டும். நிறைய நீர் அருந்துதல், பிறப்புறுப்பைச் சுத்தமாக வைத்திருத்தல் மற்றும் குறித்த காலங்களில் சிறுநீர் கழித்தல் ஆகியவற்றை மேற்கொள்வதன் மூலம், சிறுநீர்ப்பை அழற்சி ஏற்படுவதை குறைக்கலாம்.
சிறுநீர்த்தொற்று பலவகையான பிரச்னைகளுக்கு காரணமாகின்றது. குறிப்பாக, கோடையில் சிறுநீர் பிரச்னை பாடாக படுத்தி விடும். கவனமாக இல்லை என்றால், சிறுநீரகத்தில் கல், அழற்சி பிரச்னைகளால் அவதிப்பட நேரிடும். உதாரணமாக மகப்பேறு, பாலியல் உறவு, உதரவிதானப் பயன்பாடு போன்றவற்றை பாதிக்கவும் வாய்ப்புண்டு. இவை மேலும் விருத்தியடைந்தால் சுக்கிலவழற்சி ஐயும் உருவாக்கும். மற்றும் சிறுநீர்கழித்தல் இலகுவாக இல்லாத சந்தர்ப்பத்தில் அதாவது சிறுநீர் பாதையில் ஏதேனும் அடைப்புக்கள் இருப்பின், சிறு நீர்வடி குழாயில் பழைய தொற்றுக்கள் விளைவாக ஏதும் சுருக்கங்கள் இருத்தல், போன்றவற்றாலும் இது ஏற்படலாம். மாறான கட்டமைப்பு ஏதும் இருப்பின் அது மேலும் சிறுநீர்ப்பை அலர்ஜியை அதிகரிக்கும்.
அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, சிறுநீர் கழித்தபின் சிறுநீர்ப்பை வெறுமையாக இருப்பினும் மீண்டும் சிறுநீர் கழிக்க வேண்டும் போல் தோன்றுதல், அது போல் சிறுநீர் கழிக்கும் போது நோய் ஏற்படுவது, விரும்பத்தகாத மணத்துடன் மேகமூட்டம் போல் தெளிவற்று காணப்படும்.
இவ்வாறான அறிகுறிகளை வைத்து தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறியலாம். குழந்தைகளுக்கு சிறுநீர்ப்பை தொற்றிருப்பின் சிறுநீர் கழிக்கும் வேளைகளில் அடிவயிற்றில் வலி ஏற்படும். சிலசமயம் சிறுநீருடன் ரத்தம் வெளியேறும் தன்மையும் காணப்படும். இத்தொற்றை சரிவர குணப்படுத்தாத நிலையில் அது வேறு சில நோய்க்கும் வழிவகுக்கும்.


















